என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அட்லி"

    • அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படம் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்தது.
    • அல்லு அர்ஜுன் நடிப்பில் மாபெரும் பொருட்செலவில் உருவாகும் படத்தை அட்லி இயக்கி வருகிறார்.

    இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் உலக அளவில் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

    இதனை தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிப்பில் மாபெரும் பொருட்செலவில் உருவாகும் படத்தை அட்லி இயக்கி வருகிறார்.

    இந்நிலையில், அட்லி விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தமிழசினிமாவில் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், இயக்குனர் சங்கர், ஹன்சிகா, லெஜண்ட் சரவணன் ஆகியோருக்கு அடுத்தபடியாக ரோல்ஸ் ராய்ஸ் காரை அட்லி வாங்கியுள்ளார்.

    இந்த காரின் விலை 7, முதல் 9.5 கோடி வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

    • சீன உணவுப்பொருள் நிறுவனமான சிங் நிறுவன விளம்பரம் ஒன்றை அட்லி இயக்கியுள்ளார்.
    • இந்த விளம்பரத்தில் ரன்வீர் சிங், ஸ்ரீலா, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் உலக அளவில் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

    இந்நிலையில், சீன உணவுப்பொருள் நிறுவனமான சிங் நிறுவன விளம்பரம் ஒன்றை அட்லி இயக்கியுள்ளார். இந்த விளம்பரத்தில் ரன்வீர் சிங், ஸ்ரீலா, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.

    ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த விளம்பரம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படத்தின் டிரெய்லர் போல உள்ளது. பல பாலிவுட் படங்களின் பட்ஜெட்டை விட இந்த விளம்பரத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் இந்த விளம்பரம் அனைவரின் கவனத்தியும் ஈர்த்துள்ளது.

    இந்த விளம்பரத்தில் சிங் நிறுவனத்தின் ஏஜெண்டாக ரன்வீர் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார்.

    ரன்வீர் சிங் இதற்கு முன்பும் சிங் நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்திருந்தார். ரோஹித் ஷெட்டி இயக்கிய இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் விளம்பரத்தில் தமன்னாவுடன் இணைந்து ரன்வீர் சிங் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது.
    • 'காந்தாரா சாப்டர்1' படம் உலக அளவில் இதுவரை ரூ.509.25 கோடி வசூலித்துள்ளது.

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.

    இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.

    'காந்தாரா சாப்டர்1' படம் உலக அளவில் இதுவரை ரூ.509.25 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் வெளியாகி ஒரு வாரத்தில் பாக்ஸ் ஆபிசில் வசூல் குவித்து வருவதால் இனி வரும் நாட்களில் மேலும் வசூலில் சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், காந்தாரா சாப்டர் 1 படத்தை பாராட்டி பேசிய இயக்குனர் அட்லி, "காந்தாரா சாப்டர் 1 படம் வெளியான அன்று நான் ஆம்ஸ்டர்டமில் இருந்தேன். அப்போது 2.5 மணிநேரம் பயணம் செய்து தியேட்டரில் படம் பார்த்தேன். உடனடியாக ரிஷப் ஷெட்டிக்கு போன் செய்து பாராட்டுகளை தெரிவித்தேன். ஒரு இயக்குனராக இந்த மாதிரி படத்தை உருவாக்குவதே மிக கடினம். அனால் ஒரு நடிகராகவும் ஹீரோவாகவும் அந்த ரிதத்தை அவர் கொண்டு வந்துள்ளார். இந்த படத்திற்க்காக ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருது கிடைக்கவேண்டும்" என்று தெரிவித்தார்.

    அட்லி, தற்போது அல்லு அர்ஜூன்-தீபிகா படுகோனே நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

    'ராஜா ராணி', 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' என தமிழ் படங்களில் தொடர் வெற்றி படங்களை கொடுத்த அட்லி, பாலிவுட் சினிமாவில் ஜவான் திரைப்படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்து அசத்தினார். ஷாருக்கான்-நயன்தாரா கூட்டணியில் அவர் இயக்கிய 'ஜவான்' படம் ரூ.1,000 கோடியை தாண்டி வசூல் குவித்து சாதனை படைத்தது.

    அட்லி, தற்போது அல்லு அர்ஜூன்-தீபிகா படுகோனே நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தமாகி இருக்கிறாராம். படத்தில் அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்று தகவல் வெளியான நிலையில் தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர்களை தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் ஜான்வி கபூரும் படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

    • ஜனநாயகன் தான் விஜயின் கடைசி திரைப்படம் என்று கூறப்படுகிறது
    • ஜனநாயகன் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாக உள்ளது.

    எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'.இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் எனவும் அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது.

    மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

    இந்நிலையில், இயக்குனர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் ஆகியோர் ஜனநாயக்ன் படத்தில் கேமியோ ரோலில் ஒரு காட்சியில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அதாவது 3 இயக்குனர்களும் பத்திரிகையாளர்கள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

    விஜய்க்கு மிகவும் நெருக்கமான இயக்குனர்களான அட்லி, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஏற்கனவே இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக ஜனநாயகன் திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆன்ந்த் நடித்துள்ளதாக தகவல் வெளியானது.

    • அட்லி, தற்போது அல்லு அர்ஜூன்-தீபிகா படுகோனே நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார்.
    • அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

    'ராஜா ராணி', 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' என தமிழ் படங்களில் தொடர் வெற்றி படங்களை கொடுத்த அட்லி, பாலிவுட் சினிமாவிலும் அசத்தினார். ஷாருக்கான்-நயன்தாரா கூட்டணியில் அவர் இயக்கிய 'ஜவான்' படம் ரூ.1,000 கோடியை தாண்டி வசூல் குவித்து சாதனை படைத்தது.

    அட்லி, தற்போது அல்லு அர்ஜூன்-தீபிகா படுகோனே நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தமாகி இருக்கிறாராம். படத்தில் அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

    • டூரிஸ்ட் பேமிலி படம் வரும் மே 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
    • டூரிஸ்ட் பேமிலி படத்தின் டைட்டில் டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நந்தன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சசிகுமார் அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார்.

    இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் மே 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகியுள்ள இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி. என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நசரேத் பசலியான், மகேஷ் ராஜ் பசலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

    படத்தின் டைட்டில் டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 2-ஆவது சிங்கிள் கடந்த 16ஆம் தேதி வெளியானது.

    இந்த நிலையில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

    டிரெய்லரை இயக்குனர் அட்லீ அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    டிரெய்லரில், இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து தமிழ்நாட்டில் போலீசிடம் இருந்து தப்பிக்க போராடும் குடும்பத்தின் கதையாக உருவாகியுள்ளது. இந்த படத்தை வேடிக்கையான மற்றும் உணர்ச்சிபூர்வமான கதையாக உருவாகியுள்ளதாக தெரிகிறது.

    • அட்லி அடுத்து இயக்கும் படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ளார்.
    • இப்படம் ஒரு பேரலல் யூனிவர்ஸ் ஆக்ஷன் எண்டர்டெயினர் கதைக்களத்தில் உருவாக உள்ளது.

    தமிழில் வெளியான 'ராஜா ராணி' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. இவர் கடைசியாக இயக்கிய 'ஜவான்' திரைப்படம் உலகளவில் ரூ. 1,100 கோடியை கடந்து அசத்தியது.

    இந்த நிலையில், இயக்குநர் அட்லி அடுத்து இயக்கும் படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அல்லு அர்ஜுன் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் அட்லீ இயக்கிய மெர்சல், பிகில் மற்றும் ஜவான் திரைப்படங்களில் இரு வேடங்களில் கதாநாயகர்கள் நடித்து இருப்பனர். அந்த வகையில் இப்படமும் அமையவுள்ளது.

    இப்படம் ஒரு பேரலல் யூனிவர்ஸ் ஆக்ஷன் எண்டர்டெயினர் கதைக்களத்தில் உருவாக உள்ளது. அல்லு அர்ஜுனின் 22 படத்தையும், அட்லியின் 6-வது படத்தையும் குறிக்கும் வகையில் #AA22xA6 என்ற ஹஸ்டேக்குடன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டிருந்தது.

    இந்த போஸ்டர் பிரபல ஹாலிவுட் படமான டூன் படத்தின் போஸ்டர் போலவே உள்ளது என்று இணையத்தில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

    அட்லி படம் என்றாலே அது பல படங்களின் காப்பியாக தான் இருக்கும் என்று நெட்டிசன்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில், அவருடைய புதிய படத்தின் போஸ்டரும் காப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளது.

    • அட்லி, அல்லு அர்ஜுனை கதாநாயகனாக கொண்டு புதிய படத்தை ஒன்று இயக்க உள்ளார்.
    • ப்ரீயட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.

    ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டில் மற்றுமொரு படத்தை அட்லி இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.

    அதனை தொடர்ந்து அட்லி, அல்லு அர்ஜுனை கதாநாயகனாக கொண்டு புதிய படத்தை ஒன்று இயக்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.

    இதனிடையே, அடுத்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவது தொடர்பான வீடியோவை அட்லி சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். ஆனால் படம் தொடர்பான எந்த தகவலையும் அவர் கூறவில்லை.

    இந்த நிலையில், அல்லு அர்ஜுன் பிறந்தநாளான அன்று புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இயக்குனர் அட்லி எக்ஸ் தள பக்கத்தில், அல்லி அர்ஜுனின் 22 படத்தையும், அட்லியின் 6-வது படத்தையும் குறிக்கும் வகையில் #AA22xA6 என்ற ஹஸ்டேக்குடன் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

    ப்ரீயட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.

    இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பதாக தகவல் வௌியான நிலையில், அந்த தகவல் தற்போது உறுதியாகியுள்ளது.

    இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசைக்கு படங்கள் வரிசைக்கட்டி நிற்கிறது.

    அதன்படி, சூர்யா 45, எஸ்டிஆர் 49, பென்ஸ், பிஆர்04, ஏஏ22Xஏ6 என அடுத்தடுத்து படங்கள் தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பதாக கூறப்படுகிறது.
    • நடிகர்கள் குறித்தான அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டில் மற்றுமொரு படத்தை அட்லி இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.

    அதனை தொடர்ந்து அட்லி, அல்லு அர்ஜுனை கதாநாயகனாக கொண்டு புதிய படத்தை ஒன்று இயக்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. இதனிடையே, அடுத்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவது தொடர்பான வீடியோவை அட்லி சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். ஆனால் படம் தொடர்பான எந்த தகவலையும் அவர் கூறவில்லை.

    இந்த நிலையில், அல்லு அர்ஜுன் பிறந்தநாளான இன்று புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் அட்லி எக்ஸ் தள பக்கத்தில், அல்லி அர்ஜுனின் 22 படத்தையும், அட்லியின் 6-வது படத்தையும் குறிக்கும் வகையில் #AA22xA6 என்ற ஹஸ்டேக்குடன் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.



    ப்ரீயட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பதாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்தான அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    • ஜவான் படம் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாக இருக்கிறது.
    • ஜவான் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர்.

    ஜவான் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவர் நேரில் கலந்து கொள்ளவில்லை. மாறாக வீடியோ மூலம் தோன்றி படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    அட்லி இயக்கி இருக்கும் ஜவான் படத்தில் ஷாரூக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கௌரி கான் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்து இருக்கும் ஜவான் படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகிறது.

    • ஜவான் படத்தை கௌரி கான் தயாரித்துள்ளார்.
    • ஜவான் படம் அடுத்த வாரம் ரிலீஸ் ஆகிறது.

    பாலிவுட் நட்சத்திரம் ஷாரூக் கான் நடித்து இருக்கும் திரைப்படம் ஜவான். இயக்குனர் அட்லி இயக்கி இருக்கும் இந்த படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் அட்லி, "என் அண்ணன் விஜய்தான் ஜவான் உருவாக முக்கிய காரணம். நீ என்ன பண்ணுவனு தெரியாது, இந்த படத்த நீ பண்ணணும்னு விஜய் அண்ணான் சொன்னாரு," என்று தெரிவித்தார்.

    செப்டம்பர் 7-ம் தேதி ரிலீசாக இருக்கும் ஜவான் படத்தில் ஷாரூக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கௌரி கான் தயாரித்துள்ளார்.

    ×