என் மலர்

  நீங்கள் தேடியது "Thalapathy Vijay"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்னணி நடிகராக இருக்கும் விஜய் நடித்த திரைப்படம் ஒன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அதை உற்சாகமாக கொண்டாடி இருக்கிறார்கள்.
  கொரோனா பரவல் பிரச்னையில் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருந்து வருகிறது கேரளா. நாட்டிலேயே கேரளாவில் தான் அதிகளவில் கோவிட்-19 வைரஸ் தொற்று பதிவாகி வருகிறது.

  இதனால் கடந்த சில மாதங்களாக அங்குள்ள திரையரங்குகள் எதுவும் இயங்காமல் இருந்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 25-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.

  விஜய்

  மீண்டும் திரையரங்குகளுக்கு ரசிகர்களை கொண்டு வரும் நோக்கில், விஜய் நடித்த கில்லி திரைப்படம் மீண்டும் திரையிடப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகளில் கூட்டமாக கூட்டமாக வந்து ரசிகர்கள் குவிந்து கில்லி படம் பார்த்துள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகர் விஜய் மே தினத்தனத்தை முன்னிட்டு ஆட்டோ ஓட்டும் தொழிலார்களுக்கு பரிசுப்பொருட்கள் மற்றும் மதிய உணவு வழங்கியுள்ளார்.
  ஆண்டு தோறும் உழைப்பாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு, நடிகர் விஜய் தொழிலாளர் தோழர்களுக்கு தனது சொந்த செலவில்  விருந்தளித்து பரிசு பொருட்கள் தருவது வழக்கம். 

  இவ்வாண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டமையால், இவ்வாண்டுக்கான விழா, இன்று தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் மே தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.   விஜய் படப்பிடிப்பில் உள்ளதால், அவரது உத்தரவின் பேரில் விழாவினை மாநில பொறுப்பாளர் புஸ்ஸி என் ஆனந்த் தலைமையேற்று  ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு பரிசுகள் மற்றும் மதிய உணவை வழங்கினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அட்லி இயக்கத்தில் நடித்து வரும் விஜய், அடுத்ததாக உருவாக இருக்கும் ‘தளபதி 64’ படத்தை யார் இயக்குவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
  விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

  விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் கதிர், ஜாக்கி ஷெராப், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகாஜான், இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை, ‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் சொன்ன கதை விஜய்க்கு பிடித்து விட்டதாகவும், விரைவில் படத்தின் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது. 

  லோகேஷ் கனகராஜ் தற்போது கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தளபதி 63 படப்பிடிப்பு தளத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செல்வராஜை நடிகர் விஜய் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். #Vijay #Thalapathy63
  அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு தளத்தில் 100 அடி உயரத்தில் கிரேனில் தொங்கவிடப்பட்டிருந்த போக்கஸ் லைட் கீழே விழுந்ததில், அங்கிருந்த தொழிலாளி செல்வராஜ் (52) என்பவருக்கு காயம் ஏற்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் எலக்ட்ரீசன் செல்வராஜை நடிகர் விஜய் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.   அட்லி இயக்கி வரும் ‘தளபதி 63’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். #Thalapathy63 #Vijay #Nayanthara
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய்யை வைத்து ‘தளபதி 63’ படத்தை இயக்கி வரும் அட்லி மீது துணை நடிகை கிருஷ்ண தேவி போலீசில் புகார் அளித்துள்ளார். #Atlee #ThalapathyVijay
  அட்லி தற்போது விஜய்யை வைத்து ‘தளபதி 63’ படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் கதிர், ஜாக்கி ஷெராப், இந்துஜா, யோகி பாபு, விவேக், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். 

  பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. விஜய் இதில் கால்பந்தாட்ட பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

  சென்னை ஈவிபி ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இதன் படப்பிடிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அட்லி மீது துணை நடிகை கிருஷ்ண தேவி போலீசில் புகார் அளித்துள்ளார்.  அவர் அளித்த புகார் மனுவில்,  ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் அட்லியின் திரைப்படத்தில் பணிபுரிய வந்தேன். வேலை செய்து கொண்டிருக்கும் போது, அட்லியும் அவரது உதவியாளர்களும் என்னை தகாத வார்த்தைகளில் பேசி வேலை செய்ய விடாமல் வெளியே அனுப்பி விட்டார்கள். எனவே அட்லி மற்றும் அவரது உதவியாளர்களை விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ படத்தின் பாணியில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் வாக்களித்திருக்கிறார். #Sarkar
  விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த சர்கார் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. இந்த படத்தில் ஒருவர் ஓட்டை மற்றொருவர் கள்ள ஒட்டு போட்டுவிட்டால், 49 பி தேர்தல் விதிப்படி, தேர்தல் அலுவரின் உத்தரவின் பேரில் வாக்களிக்கலாம் என்ற நல்ல செய்தி மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்பட்டது.

  இந்த நிகழ்வு தற்போது நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி வாக்கு சாவடி எண் 48-ல் மணிகண்டன் என்பவர் ஓட்டை மற்றொருவர் கள்ள ஒட்டு போட்டதை தொடர்ந்து, மணிகண்டனுக்கு 49 பி தேர்தல் விதிப்படி வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.   இது இப்படத்திற்கு கிடைத்த உண்மையான வெற்றி என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ கதை என்னுடையது என்று குறும்பட இயக்குனர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். #Thalapathy63 #Vijay
  பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து அட்லி ‘தளபதி 63’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  இந்நிலையில் தளபதி 63 படத்தின் கதை என்னுடையது என்று குறும்பட இயக்குனர் கே.பி.செல்வா எழுத்தாளர் சங்கத்தை அணுகியுள்ளார். இது குறித்து செல்வா தனியார் தொலைக்காட்சி அளித்த பேட்டியில், ‘பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து நான் 265 பக்கங்கள் கொண்ட கதையை எழுதினேன். அந்த கதையை சில தயாரிப்பு நிறுவனத்திடம் தெரிவித்தேன். இந்நிலையில் அட்லி இந்த கதையை இயக்கும் செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இது குறித்து நான் நீதிமன்றத்திற்கு சென்றேன். ஆனால் அவர்களோ எழுத்தாளர்கள் சங்கத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்தனர்.

  பின்னர் அட்லி தரப்பில் என்னை தொடர்புகொண்டு கதை விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம், உங்களின் படத்தை கைவிட்டுவிடுங்கள் என்றார்கள். அதன் பிறகு கதை திருட்டு தொடர்பாக தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தேன்.  சங்க விதிப்படி உறுப்பினராகி 6 மாதம் கழித்த பிறகே கதை திருட்டு குறித்து புகார் அளிக்க முடியும் என்று கூறிவிட்டார்கள். அது தொடர்பாக கடிதமும் அளித்தார்கள்.

  எழுத்தாளர் சங்கத்தில் புகாரை ஏற்க மறுத்த பிறகு நான் மீண்டும் நீதிமன்றம் சென்றுள்ளேன். கதை திருட்டு குறித்த வழக்கு வரும் 23ம் தேதி விசாரணைக்கு வருகிறது. ஏ.ஜி.எஸ். நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது என்றார் செல்வா.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் நடிப்பில் வெளியான `மெர்சல்' படத்தில் இடம்பெற்றிருந்த `ஆளப்போறான் தமிழன்' பாடல் யூடியூப்பில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது. #Mersal #AalaporanThamizhan #Vijay
  ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமான `மெர்சல்' படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள `ஆளப்போறான் தமிழன்' பாடலுக்கு சமூக வலைதளங்களில் ஏகோபத்திய வரவேற்பு கிடைத்திருக்கிறது. 

  கடந்த நவம்பர் மாதம் வெளியாகிய இந்த பாடல் யூடியூப்பில் புதிய சாதனையை படைத்துள்ளது. யூடியூப்பில் இதுவரை இந்த பாடலை பார்த்தவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனை தாண்டியிருக்கிறது.    ஏ.ஆர்.ரகுமான் இசையில், விவேக் வரிகளில் கைலாஷ் கெர், சத்யபிரகாஷ், தீபக், பூஜா இந்த பாடலை பாடியுள்ளனர். தமிழையும், தமிழர்களின் பெருமையையும் சொல்லும் வரிகளில் இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் மாஸ் காட்டி வருகிறது. 

  அட்லி இயக்கிய இந்த படத்தில் விஜய் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Mersal #Vijay #AalaporanThamizhan 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தற்போது நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் விஜய்யின் புகைப்படம் மற்றும் கொடியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. #Vijay
  நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை அவரது ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறார்கள். 2004-ல் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்க அமைப்பாக மாற்றிய விஜய் அதன் மூலம் தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்தார்.

  ஒரு அரசியல் கட்சிக்கு இணையாக விஜய் மக்கள் இயக்கத்துக்கு மாவட்ட, நகர, ஒன்றிய அமைப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளை உருவாக்கி அவற்றுக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். இதன் மூலம் விஜய் மக்கள் இயக்கம் வலுவான அமைப்பாக மாறி இருக்கிறது.  நடிகர் கமல்ஹாசன் புதிய கட்சி தொடங்கி தேர்தலில் குதித்துள்ளார். ரஜினிகாந்த் நதிநீர் இணைப்பை செயல்படுத்தும் கட்சிக்கு ஓட்டுபோடுமாறு ரசிகர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். நடிகர் விஜய் ஆதரவு யாருக்கு? என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவியது.

  இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் தனது படம் மற்றும் மக்கள் இயக்க கொடியை ரசிகர்கள் பயன்படுத்த கூடாது என்றும், பிடித்த வேட்பாளர்களுக்கு வாக்களித்து கொள்ளலாம் என்றும் விஜய் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்மன்ற நிர்வாகிகள் மூலம் இந்த தகவல் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வில்லனாக பல படங்களில் மிரட்டி வந்த டேனியல் பாலாஜி, தளபதி 63 படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து வருகிறார். #DanielBalaji #Thalapathy63
  பல படங்களில் வில்லனாக மிரட்டியவர் டேனியல் பாலாஜி. குறிப்பாக வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், அச்சம் என்பது மடமையடா, பைரவா, வடசென்னை ஆகிய படங்களில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது இவரது நடிப்பில் ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ திரைப்படம் வெளியாக உள்ளது.

  இப்படத்தை தவிர தனுஷுடன் அசுரன் மற்றும் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம், விஜய்யுடன் ‘தளபதி 63’ படத்திலும் நடித்து வருகிறார்.   தளபதி 63 படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து வருகிறார். மேலும் இந்த வில்லன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வில்லனாக இருப்பேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏஜிஎஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தின் கதை சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ளது. #Thalapathy63 #Vijay #ThalapathyVijay
  நடிகர்களும், இயக்குனர்களும் தங்கள் படங்களின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் வெளியாகாமல் இருக்க எச்சரிக்கையாக இருப்பது உண்டு.

  படப்பிடிப்பில் துணை நடிகர்-நடிகைகளையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் செல்போன் பயன்படுத்த அனுமதிப்பது இல்லை. தனியார் பாதுகாவலர்களையும் நிறுத்தி வைப்பார்கள்.

  ஆனால் அதையும் மீறி சில படங்களின் கதைகள் வெளியே கசிந்து விடுவது உண்டு. இப்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 63-வது படத்தின் கதையும் வெளியாகிவிட்டதாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த கதையின் விவரம்:-

  கால்பந்து விளையாட்டு வீரர்களாக இருக்கும் விஜய், கதிர் இருவரும் நெருங்கிய நண்பர்கள். உள்ளூர் போட்டிகளில் விளையாடி பரிசுகள் பெறுகின்றனர். பிறகு கால்பந்து பயிற்சியாளர்களாக மாறுகிறார்கள். ஒரு கட்டத்தில் கதிர் மர்மமாக கொல்லப்படுகிறார். இந்த கொலையை விசாரிப்பதில் போலீசார் மெத்தனம் காட்டுகின்றனர். இதனால் விஜய் கொலைகாரர்களை கண்டுபிடிக்க களம் இறங்குகிறார்.  அப்போது கொலைக்கு பின்னால் பயங்கர சதித்திட்டங்கள் இருப்பது தெரிகிறது. வில்லன்களுடன் மோதி அழிக்கிறார். பின்னர் கதிர் பயிற்சி அளித்த கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக மாறி எப்படி சாம்பியன் கோப்பையை வெல்ல வைக்கிறார் என்பது கதை என்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

  ஏற்கனவே விஜய்யின் கில்லி படமும் விளையாட்டை மையமாக வைத்து வந்தது. அதை விட விறுவிறுப்பான காட்சிகளுடன் இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தில் ஜெய்யுடன் ஜோடி போட்ட நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Thalapathy63
  இந்தியில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் தமிழ் கதாநாயகர்களுக்கு வில்லன்களாக நடிப்பது சமீபகாலமாக நடந்து வருகிறது. அந்த வரிசையில் விஜய் அடுத்து நடித்துவரும் படத்தில் இந்தி நடிகர் வில்லனாக இணைந்துள்ளார்.

  தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான ஆரண்ய காண்டம் படத்தில் சிங்கப் பெருமாள் என்ற கதாபாத்திரத்தில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியவர் ஜாக்கி ஷெராப். சி.வி.குமார் இயக்கத்தில் வெளியான மாயவன் படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவர் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தில் இணைந்துள்ளதாக அதன் தயாரிப்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.  மேலும், நடிகை ரெபா மோனிகா ஜான் இந்தப் படத்தில் நடிப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. ‘ஜருகண்டி’ படத்தில் ஜெய் ஜோடியாக நடித்த இவர், பெண்கள் கால்பந்து அணி வீராங்கனைகளில் ஒருவராக இந்தப் படத்தில் நடிக்கிறார் எனத் தகவல் கிடைத்துள்ளது.

  அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடிக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். யோகி பாபு, டேனியல் பாலாஜி, கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.