search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wimbledon 2023"

    • விம்பிள்டன் அமைப்பு வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
    • ஜோகோவிச்சை வீழ்த்தி, ஸ்பெயினை சேர்ந்த 20 வயது வீரரான கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

    விம்பிள்டன் தொடரின் ஆடவர் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி, ஸ்பெயினை சேர்ந்த 20 வயது வீரரான கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

    இந்நிலையில் விம்பிள்டன் அமைப்பு வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸை வாழ்த்தி விம்பிள்டன் அமைப்பு ஒரு போஸ்டரை வடிவமைத்துள்ளது. அதில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மாஸ்டர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை போன்று, கருப்பு நிற சட்டை அணிந்த ஒரு குழுவிற்கு மத்தியில் அல்காரஸ் நின்று அமைதி என்று கூறுவது போல வாய் மீது வைரல் வைத்துள்ளார்.


    அந்த படத்தை டுவிட்டரில் பதிவிட்ட விம்பிள்டன் அமைப்பு, விம்பிள்டனின் புதிய சாம்பியன் எனவும், அல்காரஸை மாஸ்டர் என குறிப்பிட்டுள்ளது. அந்த போஸ்டரை, விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

    • மெட்வெதேவ் முதல் முறையாக விம்பிள்டன் காலிறுதிக்கு முன்னேற்றம்
    • ஜோகோவிச் 3-1 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார்

    விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் நேற்று காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் 5-ம் நிலை வீரரான சிட்சிபாஸ் அமெரிக்காவின் கிறிஸ்டோபர் யுபேங்க்ஸ்-ஐ எதிர்கொண்டார்.

    இதில் சிட்சிபாஸ் முதல் செட்டை 6-3 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் தரம் நிலை பெறாத கிறிஸ்டோபர் 2-வது செட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிட்சிபாஸும் ஈடுகொடுத்து விளையாடினார். இதனால் 2-செட் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் கிறிஸ்டோபர் 7(7)-6(4) என 2-வது செட்டை கைப்பற்றினார.

    3-வது செட்டை சிட்சிபாஸ் 6-3 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 4-வது செட்டை கிறிஸ்டோபர் 6-4 எனக்கைப்பற்ற போட்டி 2-2 என சமநிலை பெற்றது. வெற்றியை தீர்மானிக்கும் 5-வது செட்டிலும் கிறிஸ்டோபர் சிறப்பாக விளையாடி 6-4 எனக் கைப்பற்றினார். இதனால் சிட்சிபாஸ் 2-3 என தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ஜோகோவிச் 7(8)-6(6),7(8)-6(6), 5-7, 6-4 என ஹுபர்ட் ஹர்காஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    முதல் நிலை வீரர் அல்காரஸ் கார்பியா 3-6, 6-3, 6-3, 6-3 என பெரேட்டினியை வீழ்த்தினார். 21-ம் நிலை வீரர் கிரிகோர் டிமிட்ரோவை 6-ம் நிலை வீரர் ஹோல்ஜர் ருனே வீழ்த்தினார். 3-ம் நிலை வீரர் மெட்வெதேவ் 6-4, 6-2 என முன்னிலையில் இருந்தபோது, எதிர் வீரர் காயத்தால் வெளியேறியதால், மெட்வெதேவ் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் கடும் போராட்டத்திற்கு பின் 2-1 என வெற்றி பெற்றார்
    • 3-வது செட்டில் 9-11 என டைபிரேக்கரில் வெற்றி வாய்ப்பை இழந்தார்

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல்நிலை வீராங்கனையான ஸ்வியாடெக் (போலந்து) 4-வது சுற்றில் 14-வது வரிசையில் உள்ள பெலிண்டா பென்சிக்கை எதிர்கொண்டார். இதில் ஸ்வியாடெக் 6-7 (4-7), 7-6 (7-2), 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்று கால்இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் 4-வது வரிசையில் இருக்கும் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) 6-1, 6-3 என்ற நேர்செட் கணக்கில் உக்ரைனை சேர்ந்த லெசியா சுரென்கோவை வீழ்த்தினார்.

    மற்ற ஆட்டங்களில் வான்ட்ரூ சோவா (செக் குடியரசு), சுவிட்டோலினா (உக்ரைன்) ஆகியோர் வெற்றி பெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.

    முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 19-வது வரிசையில் உள்ளவருமான அசரென்கா (பெலாரஸ்) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். அவர் 2-6, 6-4, 6(9)-7(11) என்ற செட் கணக்கில் சுவிட்டோலினாவிடம் தோற்றார்.

    கால்இறுதி ஆட்டத்தில் ஸ்வியாடெக்- சுவிட்டோலினா, பெகுவா- வாண்ட்ரூ சோவா மோதுகிறார்கள்.

    23 கிராண்ட் சிலாம் பட்டம் வென்றவரும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) 4-வது சுற்றில் போலந்தை சேர்ந்த 17-ம் நிலை வீரர் ஹூபர்ட் ஹூர்காசை எதிர்கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 7-6(8-6), 7-6(8-6) என்ற செட் கணக்கில் முன்னணியில் இருந்தபோது ஆட்டம் நிறுத்தப்பட்டது. இரவு 11 மணி ஆனதால் போட்டி நிறுத்தப்பட்டது. இன்று அந்த ஆட்டம் தொடர்ந்து நடைபெறும்.

    8-வது வரிசையில் உள்ள சின்னர் (இத்தாலி) 7-6 (7-4), 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் கொலம்பியாவை சேர்ந்த டேனியல் கேலனை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.

    மற்ற ஆட்டத்தில் ரூப்லெவ், ரோமன் சபியுலின் (ரஷியா), வெற்றி பெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 16வது சுற்றில் ஆண்ட்ரே ரூப்லெவ், அலெக்சாண்டர் பப்லிக்கை எதிர் கொண்டார்.
    • சின்னர் 7-6 (7/4), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்குள் நுழைந்துள்ளார்.

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 16வது சுற்றில் ஆண்ட்ரே ரூப்லெவ், அலெக்சாண்டர் பப்லிக்கை எதிர் கொண்டார்.

    இதில், 7-5, 6-3, 6-7 (6/8), 6-7 (5/7), 6-4 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் பப்லிக்கை வீழ்த்தி ஆண்ட்ரே ரூப் வெற்றி பெற்றார்.

    இதன்மூலம் ஆண்ட்ரே ரூப்லெவ் கால் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    இதேபோல், இத்தாலியின் எட்டாம் நிலை வீரரான ஜானிக் சின்னர், கொலம்பியாவின் டேனியல் எலாஹி காலனை நேர் செட்களில் வென்றுள்ளார்.

    சின்னர் 7-6 (7/4), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்குள் நுழைந்துள்ளார்.

    ×