என் மலர்
டென்னிஸ்
- சபலென்காவுக்கு, பிரேசிலை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜியஸ் உடன் 2024-ம் ஆண்டில் பழக்கம் ஏற்பட்டது.
- சபலென்கா-ஜார்ஜியஸ் ஜோடிக்கு அல்காரஸ், ஜோகோவிச், அனிசிமோவா உள்ளிட்ட டென்னிஸ் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நியூயார்க்:
உலகின் 'நம்பர் ஒன்' டென்னிஸ் வீராங்கனை அரினா சபலென்கா (பெலா ரஸ்) இதுவரை 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். ஆஸ்திரேலிய ஓபனில் இறுதி ஆட்டத்தில் தோல்வியை தழுவிய அவர் அடுத்து பிரெஞ்சு ஓபனுக்கு குறி வைத்துள்ளார்.
27 வயதான சபலென்காவுக்கு, பிரேசிலை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜியஸ் பிராங்கலிசுடன் 2024-ம் ஆண்டில் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. இருவரும் ஒன்றாக பல இடங்களில் சுற்றினர்.
இந்த நிலையில் சபலென்கா- ஜார்ஜியஸ் திருமண நிச்சயதார்த்தம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. சபலென்கா முன் முட்டிப்போட்டு வைரமோதிரத்தை நீட்டி தன்னை ஏற்றுக்கொள்வாயா? என ஜார்ஜியஸ் அன்புடன் கேட்க, சபலென்கா வெட்கத்துடன் சம்மதித்தார்.
பிறகு அவரை ஆரத்தழுவி முத்தமிட்ட ஜார்ஜியஸ் மோதிரம் அணிவித்து தனது வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டார். சபலென்கா-ஜார்ஜியஸ் ஜோடிக்கு அல்காரஸ், ஜோகோவிச், அனிசிமோவா உள்ளிட்ட டென்னிஸ் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீராங்கனை இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில் ஸ்பெயின் வீராங்கனையான பவுலா படோசாவும், கஜகஸ்தானின் யூலியா புடின்சேவாவும் மோதினர்.
இதில் சிறப்பாக ஆடிய கஜகஸ்தான் வீராங்கனை 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
ஸ்பெயின் வீராங்கனையான பவுலா படோசா முதல் சுற்றோடு வெளியேறினார்.
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது.
- இறுதிச்சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், நெதர்லாந்தின் கிரீக்ஸ்பூர் உடன் மோதுவதாக இருந்தது.
இந்நிலையில், உடல்நலம் சரியில்லாத காரணத்தால் போட்டியில் இருந்து விலகுவதாக கிரீக்ஸ்பூர் அறிவித்தார். இதன்மூலம் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் பெற்றார்.
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
- அரையிறுதிச் சுற்றில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லெவ், நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கிரீக்ஸ்பூர் 7-5, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் கிரீக்ஸ்பூர், மெத்வதேவ் உடன் மோதுகிறார்.
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
- அரையிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய மெத்வதேவ் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிச்சுற்றில் மெத்வதேவ் ரூப்லெவ் அல்லது கிரீக்ஸ்பூர் உடன் மோதுகிறார்.
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
- காலிறுதி சுற்றில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லெவ் வெற்றி பெற்றார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லெவ், பிரான்சின் ஆர்தர் ரின்டர்நெக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரூப்லெவ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் அரையிறுதியில் ரூப்லெவ், நெதர்லாந்தின் கிரீக்ஸ்பூர் உடன் மோதுகிறார்.
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
- காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதி சுற்றில் மெத்வதேவ், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் உடன் மோதுகிறார்.
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
- 2வது சுற்றில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லெவ் வெற்றி பெற்றார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லெவ், பிரான்சின் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரூப்லெவ் 6-4 என முதல் செட்டை வென்றார். இதற்கு பதிலடியாக யூகோ ஹம்பர்ட் 2வது செட்டை 7-6 (7-5) என போராடி வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 6-3 என்ற கணக்கில் வென்ற ரூப்லெவ், காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
- 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய மெத்வதேவ் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று, காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதி சுற்றில் மெத்வதேவ் அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பி உடன் மோதுகிறார்.
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது.
- இதில் கிரீஸ் வீரர் ஸ்டெபனஸ் சிட்சிபாஸ் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் கிரீசின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பிரான்சின் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய யூகோ ஹம்பர்ட் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று, 2வது சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் சிட்சிபாஸ் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது.
- இதில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், சீனாவின் ஷான் ஜுன்செங் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று, 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் 2வது சுற்றில் மெத்வதேவ் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா உடன் மோதுகிறார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்தது.
- இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் அல்காரஸ் வெற்றி பெற்றார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், பிரான்சின் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார். இந்தப் போட்டி சுமார் 50 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.