என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Carlos Alcarez"

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்தது.
    • இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் அல்காரஸ் வெற்றி பெற்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், பிரான்சின் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார். இந்தப் போட்டி சுமார் 50 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
    • தற்போது இரண்டாவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்சாண்டர் வுகிக் உடன் மோதினார்.

    இதில் கார்லோஸ் 7-6 (7-5), 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபே, குரோசியாவின் போர்னா கோரிக்குடன் மோதினார். இதில் தியாபே 7-6 (7-5), 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
    • இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அல்காரஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    லண்டன்:

    ஒவ்வொரு ஆண்டும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் மிகவும் கவுரவமிக்கதாகக் கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், செர்பியா வீரர் மியோமிர் உடன் மோதினார்.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சின்னர் 6-1, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபேவை எதிர்கொண்டார். முதல் மற்றும் 3வது செட்டை தியாபே கைப்பற்றினார். சுதாரித்து ஆடிய அல்காரஸ் 2,4 மற்றும் 5வது செட்டை கைப்பற்றினார்.

    இறுதியில் அல்காரஸ் 5-7, 6-2, 4-6, 7-6 (7-2), 6-2 என்ற செட் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
    • இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    ஒவ்வொரு ஆண்டும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் மிகவும் கவுரவமிக்கதாகக் கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், பிரான்ஸ் வீரர் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.

    முதல் இரு செட்டை அல்காரஸ் கைப்பற்றினார். சுதாரித்து ஆடிய ஹம்பர்ட் 3வது செட்டை கைப்பற்றினார். 4வது செட்டை அல்காரஸ் வென்றார்.

    இறுதியில் அல்காரஸ் 6-3, 6-4, 1-6, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 2 வீரரான அல்காரஸ் காலிறுதிக்குள் நுழைந்தார்.

    பீஜிங்:

    பல முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினைச் சேர்ந்த கார்லஸ் அல்காரஸ், டச்சு வீரரான கிரீக்ஸ்பூர் உடன் மோதினார்.

    இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். இவர் நாளை நடைபெறும் காலிறுதியில் கரேன் கச்சனோவ் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

    மற்றொரு போட்டியில் ரஷிய வீரர் காரென் கச்சனாவ், அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோவை எதிர்கொண்டார். இதில் கச்சனாவ் 7-6 (7-4), 7-6 (11-9) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    ×