search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Qatar Open"

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரில் நடைபெற்றது.
    • நேற்று நடந்த போட்டியில் ரஷியாவின் கச்சனாவ் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.

    கத்தார்:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது.

    இதில் ரஷிய வீரர் கச்சனாவ், செக் நாட்டு வீரர் ஜாக்குப் மென்சிக்குடன் மோதினார். இதில் கச்சனாவ் 7-6 (14-12), 6-4 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரில் நடந்து வருகிறது.
    • நேற்று நடந்த போட்டியில் ரஷியாவின் கச்சனாவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    கத்தார்:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று நடந்தன.

    முதல் அரையிறுதியில் ரஷிய வீரர் கச்சனாவ், ஆஸ்திரேலிய வீரர் அலெக்சி பாப்ரியனுடன் மோதினார். இதில் கச்சனாவ் 7-6 (14-12), 6-2 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் செக் நாட்டு வீரர் ஜாக்குப் மென்சிக், பிரெஞ்சு வீரர் மான்பில்சுடன் மோதினார். இதில் மென்சிக் 6-4, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிக்கு முன்னேறினார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரில் நடந்து வருகிறது.
    • நேற்று நடந்த போட்டியில் ரஷிய வீரர் ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    கத்தார்:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடந்தன. இரண்டாவது காலிறுதியில் ரஷிய வீரர் ஆண்ட்ரூ ரூப்லெவ், செக் நாட்டு வீரர் ஜாக்குப் மென்சிக்குடன் மோதினார்.

    இதில் ரூப்லெவ் 4-6, 6-7 (6-8) என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினார்.

    • மெத்வதேவ் 6-4, 6-4 என்ற நேர் செட்கணக்கில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தினார்
    • சில நேரங்களில் இருவரும் மோசமாக விளையாடியதாக மெத்வதேவ் கூறினார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ரஷியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் டேனில் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

    தோஹா நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரேவை, மெத்வதேவ் எதிர்கொண்டார். போட்டியின் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய மெத்வதேவ், 6-4, 6-4 என்ற நேர் செட்கணக்கில் எளிதில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

    இதுபற்றி மெத்வதேவ் கூறுகையில், 'இன்றைய போட்டி மிகவும் கடினமான போட்டியாக இருந்தது, ஏனெனில் காற்று அதிகம் வீசியது. இன்று கடுமையான போராட்டமாக இருந்தது. சில நேரங்களில் நாங்கள் இருவரும் மோசமாக விளையாடினோம், சில சமயங்களில் இருவரும் நன்றாக விளையாடினோம்' என்றார்.

    ×