search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elena Rybakina"

    • மியாமி ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் எலீனா ரிபாகினா, டேனியல் காலின்ஸ் மோதினர்.
    • இந்தப் போட்டியில் ரிபாகினா அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

    மியாமி:

    மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.

    இதில் கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரிபாகினா, அமெரிக்காவின் டேனியல் காலின்சுடன் மோதினார்.

    இதில் காலின்ஸ் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • அரை இறுதியில் எலெனா ரைபகினா (கஜகிஸ்தான்) அசரென்கா (பெலாரஸ்) மோதினர்.
    • மற்றொரு அரை இறுதியில் டேனியல் காலின்ஸ் (அமெரிக்கா)-அலெக் சாண்ட்ரோவா (ரஷியா) மோதினர்.

    மியாமி:

    மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் எலெனா ரைபகினா (கஜகிஸ்தான்) அசரென்கா (பெலாரஸ்) மோதினர்.

    இதில் ரைபகினா 6-4, 0-6, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரை இறுதியில் டேனியல் காலின்ஸ் (அமெரிக்கா)-அலெக் சாண்ட்ரோவா (ரஷியா) மோதினர்.

    இதில் காலின்ஸ் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். 31-ந் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் ரைபகினா-காலின்ஸ் பலப்பரீட்சை நடத்து கிறார்கள்.

    நாளை நடக்கும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டங்களில் மெட்வதேவ் (ரஷியா)-ஜானிக் சினெர் (இத்தாலி) , ஸ்வெரேவ் (ஜெர்மனி)-டிமிட்ரோவ் (பல்கேரியா) மோதுகிறார்கள்.

    • இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் ரைபகினா கைப்பற்றினார்.
    • 2-வது செட்டை 6-7 (4-7) என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார்.

    மியாமி:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தானின் எலெனா ரைபாகினா கிரேக்க டென்னிஸ் வீராங்கனையான மரியா சக்காரியை எதிர்கொண்டார்.

    இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய ரைபகினா 2-வது செட்டை 6-7 (4-7) என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது செட் பரபரப்பாக நடைபெற்றது.

    இந்த செட்டில் முன்னணி வீராங்கனையான ரைபகினா 6-4 என்ற புள்ளிக்கணக்கில் மரியா சக்காரியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் ரைபகினா பெலாரசின் விக்டோரியா அசரென்காவை எதிர்கொள்கிறார்.

    • துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
    • காலிறுதியில் ரிபாகினா விலகியதால் பவ்லினி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    துபாய்:

    துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெறுகிறது. 2வது காலிறுதியில் கஜகஸ்தான் வீராங்கனையான எலினா ரிபாகினா, இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவ்லினியும் மோதுவதாக இருந்தது.

    இந்நிலையில், உடல்நலக் குறைவால் ரிபாகினா விலகினார். இதையடுத்து பவுலினி அரையிறுதிக்கு முன்னேறியதாக

    அறிவிக்கப்பட்டார்.

    • துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
    • இன்று நடந்த போட்டியில் ரிபாகினா வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    துபாய்:

    துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தான் வீராங்கனையான எலினா ரிபாகினா, போலந்து வீராங்கனை மக்டலேனாவுடன் மோதினார்.

    இருவரும் தலா ஒரு செட்டை வசப்படுத்தினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை ரிபாகினா கைப்பற்றினார்.

    இறுதியில், எலினா ரிபாகினா 7-6 (7-5), 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • கஜகஸ்தான் வீராங்கனையை ரஷிய வீராங்கனை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
    • கடந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் ரிபாகினா 2-வது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தானைச் சேர்ந்த 3-ம் நிலை வீராங்கனையான எலினா ரிபாகினா, தரவரிசையில் 57-வது இடம் வகிக்கும் ரஷியாவின் அன்ன பிளின்கோவாவுடன் மோதினார்.

    இருவரும் தலா ஒரு செட்டை வசப்படுத்தினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட் டைபிரேக்கர் வரை சென்றது. இருவரும் சளைக்காமல் மல்லுக்கட்டினர்.

    இறுதியில் எதிராளி பந்தை வெளியே அடித்ததன் மூலம் வெற்றிக்குரிய புள்ளியை ஈட்டிய பிளின்கோவா ஒரு வழியாக டைபிரேக்கர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

    ஆட்டத்தின் முடிவில் பிளின்கோவா 6-4, 4-6, 7-6 (22-20) என்ற செட் கணக்கில் ரிபாகினாவை தோற்கடித்து ஆஸ்திரேலிய ஓபனில் முதல் முறையாக 3-வது சுற்றை எட்டினார்.

    • உடல்நலக் குறைவால் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார் ரிபாகினா.
    • இதையடுத்து, சோரிப்ஸ் தோர்மோ நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

    இதில் உலகின் 4-ம் நிலை வீராங்கனையும், விம்பிள்டன் சாம்பியனுமான கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஸ்பெயினின் சாரா சோரிப்ஸ் தோர்மோவுடன் மோத இருந்தார்.

    வைரஸ் காய்ச்சல், தலைவலியால் பாதிக்கப்பட்ட ரிபாகினா நேற்று முன்தினம் இரவு சரியாக தூங்கவில்லை. எனவே உடல்நலம் காரணமாக கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து ரிபாகினா விலகினார்.

    இதையடுத்து, சோரிப்ஸ் தோர்மோ நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    • இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • இந்தத் தொடரில் எலீனா ரிபாகினா சாம்பியன் பட்டம் வென்றார்.

    ரோம்:

    இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரிபாகினாவும், உக்ரைன் வீராங்கனை அன்ஹெலினா கலினினாவும் மோதினர்.

    இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் ரிபாகினா எளிதில் வென்றார். தொடர்ந்து நடைபெற்ற 2வது செட்டில் 1-0 என ரிபாகினா முன்னிலை பெற்றிருந்தபோது கலினினாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.

    கலினினா போட்டியில் இருந்து வெளியேறியதால் ரிபாகினா இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    • எலனா ரைபகினா 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரை இறுதியில் மெட்வதேவ் (ரஷியா)-கச்சனோவ் (ரஷியா), கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்)-ஜன்னிக் சின்னர் (இத்தாலி) மோதுகிறார்கள்.

    மியாமி சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரை இறுதியில் எலனா ரைபகினா (கஜகஸ்தான்)-ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) மோதினார்கள். இதில் எலனா ரைபகினா 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

    இன்று நடந்த கடைசி கால் இறுதி போட்டியில் பெட்ரோ குவிடோவா (செக் குடியரசு)-அலெக் சான்ட்ரோவா (ரஷியா) மோதினர். இதில் குவிடோவா 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். அவர் அரை இறுதியில் ரூமேனியாவின் சர்ஸ்டியாவுடன் மோதுகின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரை இறுதியில் மெட்வதேவ் (ரஷியா)-கச்சனோவ் (ரஷியா), கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்)-ஜன்னிக் சின்னர் (இத்தாலி) மோதுகிறார்கள்.

    • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி நடந்தது.
    • இதில் ரிபாகினா சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவை சந்தித்தார்.

    இதில் 7-6, 6-4 என்ற செட் கணக்கில் ரிபாகினா வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    • நடப்பு விம்பிள்டன் சாம்பியனான எலெனா ரைபகினா அரையிறுதியில் அசரென்காவை வென்றார்.
    • சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி சனிக்கிழமை நடைபெற உள்ளது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில், நடப்பு விம்பிள்டன் சாம்பியனான கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபகினா, பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா மோதினர்.

    இப்போட்டியில் 7-6 (4), 6-3 என்ற செட்கணக்கில் ரைபகினா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் ரைபகினா.

    மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பெலாரஸ் நாட்டின் அரினா சபலெங்கா, 7-6, 6-2 என்ற செட்கணக்கில் போலந்தின் மட்கா லினட்டை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

    சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதில், எலெனா ரைபகினா, 5ம் தரநிலை வீராங்கனையான அரினா சபலெங்காவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார். 

    • மணிக்கு அதிகபட்சமாக 190 கிலோமீட்டர் வேகத்தில் சர்வீஸ் போட்டு மிரட்டிய ரைபகினா முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வசப்படுத்தினார்.
    • அவரது தற்காப்பு யுக்தியும் சிறப்பாக இருக்கும். அதனால் முதல் வினாடியில் இருந்தே ஆக்ரோஷமாக விளையாட வேண்டியது அவசியமாக இருந்தது.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருந்த 'நம்பர் ஒன்' வீராங்கனையும், கடந்த ஆண்டில் இரு கிராண்ட்ஸ்லாம் வென்றவருமான இகா ஸ்வியாடெக் (போலந்து), 25-ம் நிலை வீராங்கனையும், விம்பிள்டன் சாம்பியனுமான எலினா ரைபகினாவுடன் (கஜகஸ்தான்) பலப்பரீட்சை நடத்தினார்.

    மணிக்கு அதிகபட்சமாக 190 கிலோமீட்டர் வேகத்தில் சர்வீஸ் போட்டு மிரட்டிய ரைபகினா முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வசப்படுத்தினார். 2-வது செட்டில் தொடக்கத்தில் 3-0 என்று முன்னிலை கண்ட ஸ்வியாடெக் அதன் பிறகு கோட்டை விட்டார். முடிவில் ரைபகினா 6-4, 6-4 என்ற நேர் செட்டில் 89 நிமிடங்களில் ஸ்வியாடெக்கை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபனில் முதல்முறையாக கால்இறுதியில் கால்பதித்தார்.

    இகா ஸ்வியாடெக்

    இகா ஸ்வியாடெக்

    தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள வீராங்கனையை ரைபகினா தோற்கடித்தது இதுவே முதல் முறையாகும். 23 வயதான ரைபகினா கூறுகையில், 'நம்பர் ஒன் வீராங்கனைக்கு எதிராக விளையாடும் போது நாம் இழப்பதற்கு எதுவும் இல்லை. அவர் பந்தை வேகமாக ஓடி திருப்பி அடிக்கக்கூடியர்.

    அவரது தற்காப்பு யுக்தியும் சிறப்பாக இருக்கும். அதனால் முதல் வினாடியில் இருந்தே ஆக்ரோஷமாக விளையாட வேண்டியது அவசியமாக இருந்தது. அதனால் தொடக்கம் முதலே அதிரடியாக மட்டையை சுழற்றினேன். இந்த முயற்சிக்கு உண்மையிலேயே பலன் கிடைத்தது' என்றார்.

    ×