search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "novak djokovic"

    • 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.
    • உலகக்கோப்பையை வென்றதும் மைதானத்தின் புற்களை ரோகித் சுவைத்து பார்ப்பார்.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி ஸ்டைலில் டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா வாங்குவார். இது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

    இந்நிலையில் மெஸ்ஸி ஸ்டைலில் ரோகித் சர்மா உலகக்கோப்பை வாங்கும் புகைப்படத்தை FIFA உலகக்கோப்பை அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த இன்ஸ்டா பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    பிபாவை தொடர்ந்து பிரபல டென்னிஸ் போட்டியான விம்பிள்டன் தனது இன்ஸ்டகிராம் பக்கமும் ரோகித் - நோவக் ஜோகோவிச் படத்தை பகிர்ந்துள்ளது.

    உலகக்கோப்பையை வென்றதும் மைதானத்தின் புற்களை ரோகித் சுவைத்து பார்ப்பார். அந்த புகைப்படத்துடன் டென்னிஸ் மைதானத்தின் புற்களை நோவக் ஜோகோவிச் சுவைக்கும் படத்தோடு இணைத்து விம்பிள்டன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த புகைப்பாம் தற்போது வைரலாகி வருகிறது.

    • கால்இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்- கேஸ்பர் ரூட்டுடன் இன்று மோத இருந்தார்.
    • காயத்தன்மை தீவிரமாக இருப்பது தெரிய வந்துள்ளதையடுத்து ஜோகோவிச் பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகினார்.

    'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கலந்து கொண்ட நடப்பு சாம்பியனும், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான செர்பிய வீரர் ஜோகோவிச் வலது கால்முட்டியில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் 4-வது சுற்றில் போராடி வெற்றிக்கனியை பறித்தார். இதனால் கால்இறுதியில் ஜோகோவிச்- கேஸ்பர் ரூட்டுடன் இன்று மோத இருந்தார்.

    இந்த நிலையில் ஸ்கேன் பரிசோதனையில் அவரது காயத்தன்மை தீவிரமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஜோகோவிச் பிரெஞ்சு ஓபனில் இருந்து நேற்று விலகினார். நம்பர் ஒன் இடத்தை தக்க வைப்பதற்கு பட்டத்தை வென்றாக வேண்டிய நெருக்கடியில் இருந்த ஜோகோவிச் கால்இறுதிக்கு முன்பாக வெளியேறி விட்டதால், நம்பர் ஒன் இடத்தையும் இழக்கிறார்.

    2-வது இடத்தில் இருக்கும் இத்தாலியின் ஜானிக் சினெர் முதல்முறையாக 'நம்பர் ஒன்' இடத்தை பிடிக்கிறார். வருகிற 10-ந்தேதி வெளியாகும் புதிய தரவரிசையில் 22 வயதான சினெர் 'நம்பர் ஒன்' அரியணையில் ஏறுவார். டென்னிஸ் தரவரிசையில் 'நம்பர் ஒன்' இடத்தை அலங்கரிக்க போகும் முதல் இத்தாலி வீரர் இவர் தான்.

    • மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது.
    • இந்தத் தொடரில் இருந்து விலகுவதாக நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில், மியாமி ஓபன் போட்டியில் இருந்து விலகுவதாக நம்பர் ஒன் வீரரான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச் அறிவித்தார்.

    இதுதொடர்பாக, ஜோகோவிச் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வணக்கம் மியாமி. துரதிர்ஷ்டவசமாக இந்த ஆண்டு நான் மியாமி ஓப்பனில் விளையாட மாட்டேன். எனது தொழில் வாழ்க்கையின் இந்த கட்டத்தில் எனது தனிப்பட்ட மற்றும் தொழில் அட்டவணையை நான் சமநிலைப்படுத்துகிறேன். உலகில் உள்ள சில சிறந்த மற்றும் மிகவும் ஆர்வமுள்ள ரசிகர்களை நான் அனுபவிக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

    • முதல் அரையிறுதியின் முதல் 2 செட்டை சின்னர் எளிதில் வென்றார்.
    • மூன்றாவது செட்டை ஜோகோவிச் போராடி கைப்பற்றினார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதிச் சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலி வீரர் ஜானிக் சின்னருடன் மோதினார்.

    இதில் சின்னர் முதல் இரு செட்களை எளிதில் வென்றார். மூன்றாவது செட்டை ஜோகோவிச் போராடி கைப்பற்றினார்.

    இறுதியில், சின்னர் 6-1, 6-2, 6-7 (6-8), 6-3 என்ற செட் கணக்கில் நம்பர் ஒன் வீரரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஆண்ட்ரே ரூப்லெவ்- செபாஸ்டியன் கோர்டாவுடன் மோதினார்.
    • 3-வது சுற்று ஒன்றில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச்- தாமஸ் மார்ட்டின் எட்செவரியுடன் மோதினார்.

    மெல்போர்ன்:

    ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவுடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய ரூப்லெவ் 6-2, 7-6 ( 8-6), 6-4 என்ற செட் கணக்கில் செபாஸ்டியன் கோர்டாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். வரும் 21ம் தேதி நடைபெறும் 4வது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை ரூப்லெவ் எதிர்கொள்ள உள்ளார்.

    மற்றொரு 3-வது சுற்று ஒன்றில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் (செர்பியா), தாமஸ் மார்ட்டின் எட்செவரி (அர்ஜென்டினா) உடன் மோதினார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 6-3 மற்றும் 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச்சின் 100-வது போட்டியாக அமைந்துள்ளது. 100 போட்டிகளில் விளையாடியுள்ள ஜோகோவிச் அதில் 92-ல் வெற்றி பெற்றுள்ளார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நாளை தொடங்க உள்ளது.
    • ஜோகோவிச் கிரிக்கெட் விளையாடினார்.

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் மெல்போர்ன் பூங்காவில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சுடன் நட்புரீதியான டென்னிஸ் விளையாடி அசத்தினார்.

    இரு நட்சத்திரங்களுக்கு இடையேயான டென்னிஸ் போட்டியானது ஆஸ்திரேலிய ஓபன் 2024- க்கு ஒரு முன்னோடியாக திகழும்.

    ஸ்மித் கிரிக்கெட்டில் பெயர் பெற்றவர் என்றாலும், அவர் ஜோகோவிச்சின் ஒரு சர்வீஸை தாக்கு பிடிப்பாரா என்ற கோணத்தில் ரசிகர்கள் எதிர் நோக்கி இருந்தனர். அனைவரின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அவரது சர்வீஸை ஸ்மித் கோர்ட்டிற்குள் திருப்பி அனுப்பினார். இது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனை கண்ட ஜோகோவிச் கூட அதிர்ச்சியடைந்தார். கூட்டத்தில் இருந்த ரசிகர்களின் பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் ஸ்மித்க்கு தலைவணங்கி தனது பாராட்டை ஜோகோவிச் வெளிப்படுத்தினார்.

    அதன்பிறகு ஜோகோவிச் கிரிக்கெட் விளையாடினார். அவர் முதல் பந்தை அடிக்க முற்பட்டார். அது பேட்டில் படவில்லை. உடனே அடுத்து பந்து போடப்பட்டது. பேட் நமக்கு செட் ஆகாது என தெரிந்து கொண்ட ஜோகோவிச் மறைத்து வைத்திருந்த டென்னிஸ் மட்டையால் பந்தை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

    இவர்கள் இருவரும் டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் விளையாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டி நடைபெற்றது.
    • இதில் செர்பிய வீரர் ஜோகோவிச், இங்கிலாந்து வீரர் கேமரூன் நூரியை வீழ்த்தினார்.

    லண்டன்:

    டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச், இங்கிலாந்து வீரர் கேமரூன் நூரியுடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    போட்டியின் போது ஜோகோவிச் விளையாடுகையில் இங்கிலாந்து ரசிகர்கள் டிரம்ஸ் கொட்டி வெறுப்பேற்றினர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஜோகோவிச், போட்டிக்கு பிறகு பேசுகையில், வாயை மூடுங்கள், அமைதியாக இருங்கள். விளையாட்டு வீரர்களை மதியுங்கள் என காட்டமாக கூறினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

    • அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் சின்னர், ரஷிய வீரரான மேத்வதேவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
    • ஜோகோவிச் ஸ்பெயின் வீரரான கார்லஸ் அல்காரசை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

    துரின்:

    தரவரிசையில் முதல் 8 இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே கலந்துகொண்ட ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்றிருந்த வீரர்கள் ரெட், கிரீன் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டிருந்தனர்.

    ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 'ரவுன்ட்-ராபின்' முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிப்போர் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள். அதன்படி நடைபெற்ற லீக் ஆட்டங்களின் முடிவில் 'கிரீன்' பிரிவில் ஜோகோவிச் மற்றும் சின்னர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். 'ரெட்' பிரிவில் கார்லஸ் அல்காரஸ் மற்றும் டேனியல் மேத்வதேவ் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

    அதன்படி நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் சின்னர், ரஷிய வீரரான மேத்வதேவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். தரவரிசையில் நம்பர் 1 வீரர் செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் ஸ்பெயின் வீரரான கார்லஸ் அல்காரசை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

    இறுதி போட்டியில் சின்னர் மற்றும் ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்தினர். இதில் ஜோகோவிச் 6-3 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் சின்னரை எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். ஜோகோவிச் இந்த பட்டத்தை வெல்வது இது 7-வது முறையாகும்.

    • ஜோகோவிச் 7-6, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.
    • இவர் தனது அரையிறுதி ஆட்டத்தில் 'ரெட்'பிரிவில் முதலிடம் பிடிக்கும் வீரருடன் மோத உள்ளார்.

    துரின்:

    தரவரிசையில் முதல் 8 இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள வீரர்கள் ரெட், கிரீன் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

    ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 'ரவுன்ட்-ராபின்' முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிப்போர் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள். இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸ் உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 7-6, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஜோகோவிச் 'கிரீன் பிரிவில் 2-வது இடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இவர் தனது அரையிறுதி ஆட்டத்தில் 'ரெட்'பிரிவில் முதலிடம் பிடிக்கும் வீரருடன் மோத உள்ளார்.

    'கிரீன்' பிரிவில் சின்னர் முதலிடமும், ஜோகோவிச் 2-வது இடமும் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். அதேவேளையில் 'ரெட்' பிரிவில் டேனியல் மெத்வதேவ் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். மற்றொரு வீரருக்கான இடத்திற்கு அல்காரஸ் மற்றும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இடையே போட்டி நிலவுகிறது.

    • அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை மார்கரெட் கோர்ட்டுடன் சமநிலையில் உள்ளார்.
    • விளையாட்டு வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும்.

    நியூயார்க்:

    உலகின் 'நம்பர் ஒன்' டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க ஓபனை கைப்பற்றி கிராண்ட்ஸ்லாம் பட்டத்தின் எண்ணிக்கையை 24 ஆக உயர்த்தினார். அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை மார்கரெட் கோர்ட்டுடன் சமநிலையில் உள்ளார். 36 வயதான ஜோகோவிச் இந்த ஆண்டில் நடந்த 4 கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விம்பிள்டனை தவிர மற்ற மூன்றிலும் கோப்பையை வென்று தனது ஆதிக்கத்தை நிலை நாட்டினார்.

    இந்த நிலையில் அவரது எதிர்கால திட்டம் குறித்து அவரது பயிற்சியாளர் கோரன் இவானிசெவிச் அளித்தபேட்டியில், '24 கிராண்ட்ஸ்லாம் வென்ற ஜோகோவிச் சாதனை உண்மையிலேயே வியப்புக்குரியது. அவர் தொடர்ந்து சாதிக்கும் வேட்கையில் இருக்கிறார். இன்னும் சாதனைகளை உடைக்கிறார். நம்ப முடியாத ஒரு டென்னிசை விளையாடிக்கொண்டு இருக்கிறார். விளையாட்டு வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும். நான் டென்னிஸ் குறித்து மட்டும் பேசவில்லை. பொதுவாக எல்லா விளையாட்டையும் சேர்த்து தான் சொல்கிறேன். அவர் ஒரு வின்னர். தனக்கு தானே உத்வேகம் அளிப்பதில் ஜோகோவிச்சும் ஒருவர்.

    25-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றதும் அவர் ஓய்வு பெறுவாரா? என்று கேட்கிறீர்கள். இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. 2028-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடக்கும் ஒலிம்பிக் போட்டி வரை விளையாட வேண்டும் என்பதே அவரது திட்டம்' என்றார்.

    • 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ஜோகோவிச் கைப்பற்றினார்.
    • 2020-ல் உயிரிழந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் பிரையன்ட்டுக்கு தனது அஞ்சலியை ஜோகோவிச் செலுத்தினார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி இன்று நடந்தது. இந்தப் போட்டியில் 6-3, 7-6(5), 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார். இதன் மூலம் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ஜோகோவிச் கைப்பற்றினார்.

    2008-ம் ஆண்டு முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றிய இவர் ஆஸ்திரேலியா ஓபன் பட்டம் 10, விமிள்டன் ஓபன் பட்டம் 7, அமெரிக்க ஓபன் பட்டம் 4 பிரெஞ்சு ஓபன் பட்டம் 3 என ஆக மொத்தம் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி உள்ளார்.

    பட்டம் வென்றதும் உடனடியாக தான் அணிந்திருந்த ஜெர்ஸியை மாற்றி கடந்த 2020-ல் உயிரிழந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் பிரையன்ட்டுக்கு தனது அஞ்சலியை ஜோகோவிச் செலுத்தினார். அவரது ஜெர்ஸி எண் 24 என்பது குறிப்பிடத்தக்கது. தனது 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றது குறித்து அந்த எண்ணை சுட்டிக்காட்டி குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




    • நியூயார்க் நகரில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது.
    • 84ம் நிலை வீரரான அலெக்சாண்டர் முல்லெரை (பிரான்ஸ்) வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான 'கிராண்ட்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான 143-வது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்நிலையில், முதல் நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-0,6-2, 6-3 என்ற நேர்செட்டில் 84ம் நிலை வீரரான அலெக்சாண்டர் முல்லெரை (பிரான்ஸ்) வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இந்த வெற்றியின் மூலம் 36 வயதான ஜோகோவிச், கார்லஸ் அல்காரஸ்சை (ஸ்பெயின்) பின்னுக்கு தள்ளி உலக ஒற்றையர் தரவரிசையில் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார்.

    இந்த போட்டி தொடரில் ஜோகோவிச் அடுத்த சுற்றில் தோற்றாலும் கூட முதல் இடத்திற்கு பிரச்சினை இல்லை.

    ×