என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cristiano Ronaldo"

    • சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்தார்.
    • இந்த நிகழ்ச்சியில் டிம் குக், எலான் மஸ்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அவர் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்தார். அப்போது, சவுதி அரேபியா பட்டத்து இளவரசருக்கு விருந்து அளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    இதில் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் கலந்து கொண்டார். சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இவரை அழைத்துச் சென்றுள்ளார்.

    இந்த விருந்தில் கலந்து கொண்டதற்காக ரொனால்டோவிற்கு டிரம்ப் நன்றி தெரிவித்தார். மேலும், தன்னுடைய மகன் பரோன் தங்களுடைய மிகப்பெரிய ரசிகர். vனத் தெரிவித்தார்.

    இந்த விருந்து நிகழ்ச்சியல் ஆப்பிள் சிஇஓ டிம் குக், டெஸ்டா நிறுவனர் எலான் மஸ்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கடந்த 2022-ம் ஆண்டு கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியா லீக்கில் உள்ள அல்-நாசர் கிளப்பில் விளையாட ஒப்பந்தம் ஆனார். அதில் இருந்து சவுதி கால்பந்து லீக்கின் முகமாக அறியப்படுகிறார். 40 வயதான போர்ச்சுக்கலை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனல்டோ, அல்-நாசர் கிளப் உடனான ஒப்பந்தத்தை மேலும் இரண்டு வருடத்திற்கு நீட்டித்துள்ளார்.

    • ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் மொத்தம் 438 போட்டிகளில் விளையாடி 450 கோல்கள் அடித்தார்.
    • மேட்ரிட் மக்கள் இன்னும் ரொனால்டோவை மறக்கவில்லை.

    கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) ரியல் மாட்ரிட் அணியில் விளையாடிய காலத்தில் உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அவர் ரியல் மாட்ரிட் அணியில் 2009 முதல் 2018 வரை விளையாடினார்.

    2009-ம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து ரூ.94 மில்லியன் கொடுத்து வாங்கப்பட்டார். அப்போது இது உலக சாதனை தொகையாக இருந்தது.

    2018-ம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணியில் இருந்து ஜுவென்டஸ் அணிக்கு சென்றார். அவரை அந்த அணி ரூ.100 மில்லியன் கொடுத்து வாங்கப்பட்டார்.

    ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் மொத்தம் 438 போட்டிகளில் விளையாடி 450 கோல்கள் அடித்தார். இது அந்த அணியின் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் ரொனால்டோ, ரியல் மாட்ரிட் அணியின் முகமாகவே திகழ்கிறார் என அந்த அணி நட்சத்திர வீரர் எம்பாப்வே புகழாரம் சூட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கால்பந்து ஜாம்வான் ரொனால்டோ, தற்போது சவுதியின் அல் நாசர் கால்பந்து கிளப்பில் இருந்தாலும் இன்றும் ரியல் மாட்ரிட் அணியின் முகமாகவே திகழ்கிறார். மேட்ரிட் மக்கள் இன்னும் ரொனால்டோவை மறக்கவில்லை.

    என்று அவர் கூறினார்.

    எம்பாப்வே ரியல் மாட்ரிட் அணியில் 2024-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • போர்ச்சுகீசிய கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ
    • அவரது நிகர சொத்து மதிப்பு $1.4 பில்லியன் என அதிகரித்துள்ளதாக Bloomberg நிறுவனம் கூறியுள்ளது.

    போர்த்துகீசிய கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் ஒரு பில்லியன் டாலர் சொத்து மதிப்பை அடைந்த முதல் கால்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    அவரது நிகர சொத்து மதிப்பு $1.4 பில்லியன் என அதிகரித்துள்ளதாக Bloomberg நிறுவனம் கூறியுள்ளது. சவுதி கிளப் அல்-நாஸ்ருடனான அவரது லாபகரமான ஒப்பந்தம், நைக் மற்றும் ஆர்மானி போன்ற பிராண்டுகளுடனான விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் பிற வணிக முயற்சிகளால் இத்தகைய பெருமையை அவர் அடைந்துள்ளார்.

    இந்த விஷயத்தில் அவர் லயோனல் மெஸ்ஸி போன்ற பிற கால்பந்து ஜாம்பவான்களை மிஞ்சியுள்ளார். இதனால் அவர் விளையாட்டின் முதல் பில்லியனரானார். பிரேசிலிய கால்பந்து வீரரான ரொனால்டோ நாசாரியோவின் (R9 என அழைக்கப்படுபவர்) 2025 ஆம் ஆண்டு வரை அவரது நிகர மதிப்பு சுமார் $160 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    • ரொனால்டோ REAL MADRID அணிக்காக 450 கோல்கள் அடித்துள்ளார்.
    • போர்ச்சுக்கல் அணிக்காக ரொனால்டோ 138 கோல்கள் அடித்துள்ளார்.

    கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை போர்ச்சுகல் அணியை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்வசம் வைத்துள்ளார்.

    இந்நிலையில், 4 வெவ்வேறு கால்பந்து க்ளப்கள் மற்றும் நாட்டுக்காக 100+ கோல்கள் அடித்த ஒரே வீரர் என்ற அபார சாதனையை ரொனால்டோ.படைத்துள்ளார்

    ரொனால்டோ REAL MADRID அணிக்காக 450 கோல்களும் MAN UTD அணிக்காக 145 கோல்களும் PORTUGAL அணிக்காக 138 கோல்களும் JUVENTUS அணிக்காக 101 கோல்களும் AL NASSR அணிக்காக 100 கோல்களும் அடித்து இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

    • பெனால்டி அல்லாமல் மெஸ்ஸி 764 கோல்களும், ரொனால்டோ 763 கோல்களும் அடித்துள்ளனர்.
    • ரொனால்டோவை விட 167 போட்டிகளுக்கு முன்பாகவே இந்த மைல்கல்லை மெஸ்ஸி எட்டியுள்ளார்.

    வாஷிங்டன்

    கால்பந்து வரலாற்றில் பெனால்டி அல்லாமல், அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோவை (போர்ச்சுகல்) பின்னுக்குத் தள்ளி மெஸ்ஸி (அர்ஜென்டினா) முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். பெனால்டி அல்லாமல் மெஸ்ஸி 764 கோல்களும், ரொனால்டோ 763 கோல்களும் அடித்துள்ளனர். குறிப்பாக, ரொனால்டோவை விட 167 போட்டிகளுக்கு முன்பாகவே இந்த மைல்கல்லை மெஸ்ஸி எட்டியுள்ளார்.

    நேற்று முன்தினம் நடைபெற்ற இன்டர்மியாமி மற்றும் என்.ஒய் ரெட் புல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், மெஸ்ஸி 2 கோல்கள் அடித்ததன் மூலம் இந்த சாதனையை முறியடித்துள்ளார்.

    மெஸ்ஸி கிளப் போட்டிகளில் இன்டர்மியாமி அணிக்காகவும், ரொனால்டோ அல் நசர் அணிக்காகவும் விளையாடி வருகின்றனர். 

    • ரொனால்டோவை விட 167 போட்டிகளுக்கு முன்பாகவே இந்த மைல்கல்லை மெஸ்ஸி எட்டியுள்ளார்.
    • ஒட்டுமொத்தமாக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ தான் முதலிடத்தில் உள்ளார்

    கால்பந்து வரலாற்றில் பெனால்டி அல்லாமல், அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோவை பின்னுக்குத் தள்ளி மெஸ்ஸி முதலிடத்திற்கு முன்னேறினார்

    குறிப்பாக, ரொனால்டோவை விட 167 போட்டிகளுக்கு முன்பாகவே இந்த மைல்கல்லை மெஸ்ஸி எட்டியுள்ளார்.

    அதே சமயம் ஒட்டுமொத்தமாக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ தான் முதலிடத்தில் உள்ளார் என்பது குற்றிப்பிடத்தக்கது. 

    • இப்போதுதான் போர்ச்சுகல் அணிக்காக ஒன்றாக விளையாடினோம்.
    • ஜோட்டாவின் குடும்பத்தினருக்கும், மனைவிக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார் விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

    லிவர்பூல் கிளப் மற்றும் போர்ச்சுகல் தேசிய அணியின் முக்கிய முன்கள வீரராக டியோகோ ஜோட்டா இருந்தவர். 28 வயதான அவர் 2019 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் UEFA நேஷன்ஸ் லீக்கை வென்ற போர்ச்சுகல் அணியில் இடம் பெற்றிருந்தார்.

    இந்நிலையில் சக வீரர் மறைவுக்கு பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இப்போதுதான் போர்ச்சுகல் அணிக்காக ஒன்றாக விளையாடினோம். இப்போதுதான் திருமணமும் செய்து கொண்டார். ஜோட்டாவின் குடும்பத்தினருக்கும், மனைவிக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் உங்களை மிஸ் செய்வோம்.

    என கூறினார்.

    • 2022ஆம் ஆண்டு இறுதியில் அல்-நாசர் அணியுடன் ஒப்பந்தம் செய்தார்.
    • தற்போது ஒப்பந்தத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளார்.

    உலகின் நட்சத்திர கால்பந்து வீரராக திகழ்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இவர், சவுதி அரேபியாவின் அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். ரொனால்டோவின் ஒப்பந்தம் முடிவடையும் நிலையில், மேலும் இரண்டு வருடத்திற்கு நீட்டித்துள்ளார். இதனால் 42 வயது வரை கால்பந்து விளையாடி இன்னும் பல்வேறு சாதனைகள் படைக்க இருக்கிறார்.

    இது தொடர்பாக ரொனால்டோ தனது சமூக வலைத்தளத்தில் "புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. அதே பேரார்வம், அதே கனவு. இணைந்து சதனைப் படைப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

    ஐந்து முறை பலோன் டிஆர் விருது வென்ற ரொனால்டோ, கடந்த 2022ஆம் ஆண்டு இறுதியில் அல்-நாசர் அணிக்கு சென்றார். இவருக்கு வருடத்திற்கு 20 கோடி அமெரிக்க டாலர் சம்பளமாக வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • ரியல் மாட்ரிட் அணிக்காக அறிமுக சீசனில் இதுவரை 31 கோல்கள் அடித்துள்ளார்.
    • கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிமுக சீசனில் 33 கோல்கள் அடித்திருந்தார்.

    பிரான்ஸ் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரரான கிலியான் எம்பாப்பே ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் இருந்து கடந்த ஆண்டு ரியல்மாட்ரிட் அணிக்கு டிரான்ஸ்பர் ஆனார்.

    2024-25 அவருடைய அறிமுக சீசன். முதல் ஒன்றிரண்டு போட்டிகளில் சறுக்கினாலும் அதன்பின் அபாரமாக விளையாடி வருகிறார். அந்த அணியின் நட்சத்திர முன்கள வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அறிமுக சீசனில் இதுவரை ரியல்மாட்ரிட் அணிக்காக 31 கோல்கள் அடித்துள்ளார்.

    கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக நீண்ட காலம் விளையாடியவர். இவர் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய அறிமுக சீசனில் 33 கோல்கள் அடித்திருந்தார். இந்த சாதனையை முறியடிக்க எம்பாப்பேவுக்கு இன்னும் 3 கோல்கள் தேவை. இதனால் ரொனால்டோ சாதனையை முறியடித்து விடுவார். ஏற்கனவே பிரேசில் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோ நசோரியா (30 கோல்- 2002-03) சாதனையை முறியடித்துள்ளார்.

    இது தொடர்பாக எம்பாப்வே கூறுகையில் "நான் ரொனால்டோ, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரைவிட அதிக கோல்கள் அடித்தாலும், நான் சிறந்த வீரர் என்று அர்த்தம் கிடையாது. என்னுடைய முதல் சீசன் சிறப்பாக இருந்தது அவ்வளவுதான்.

    கோல் அடிப்பது முக்கியமானது. ஆனால் அதைவிட லா லிகா, சாம்பியன்ஸ் லீக் மற்றும் கோபா டெல் ரே ஆகியவற்றை வெல்வது சிறந்தது. ரியல் மாட்ரிட் அணிக்காக தன்னை மாற்றிக் கொள்வதற்கான காலம் முடிவடைந்துவிட்டது. தற்போது என்னுடைய திறனை வெளிக்காட்டும் நேரம் இது. இங்கே சிறப்பாக விளையாட விரும்புகிறேன். இந்த சீசனில் முத்திரை பதிக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு எம்பாப்வே தெரிவித்துள்ளார்.

    எம்பாப்வே இந்த சீசனில் இன்று 12 போட்டிகளில் விளையாட உள்ளார். சிலியை சேர்ந்த ஜமோரானோவின் 37 கோல் சாதனையை முறியடிக்கவும் வாய்ப்புள்ளது. இவர் 1992-ல் செவியா அணியில் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு மாறினார். அறிமுக சீசனில் 37 கோல்கள் அடித்திருந்தார்.

    • பலருக்கு நான் இந்த அணியில் இருப்பது பிடிக்கவில்லை.
    • மேலாளர் எரிக் எனக்கு உரிய மரியாதையை வழங்குவதில்லை. எனவே, அவருக்கு மரியாதை தர நானும் விரும்பவில்லை.

    போர்சுகலை சேர்ந்த உலகின் மிகவும் பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்தாட்ட உலகில் இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது. இவர் கிளப் போட்டிகளில் கடந்த 2003-ம் ஆண்டு, முதல் முறையாக மான்செஸ்டர் யுனைட்டெட் அணியில் விளையாடினார்.

    பின்னர் 2009 ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட் ரொனால்டோ , 2018-ம் ஆண்டு யுவெண்டஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். மூன்று ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடிய அவர், கடந்த ஆண்டு மான்செஸ்டர் அணியில் இணைந்தார்.

    தற்போது அணியின் பயிற்சியாளருக்கும் ரொனால்டோவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கிறிஸ்டியானோ ரொனால்டோ, தலைமை பயிற்சியாளர் எரிக் டென் குறித்தும், அணியில் தனக்கு செய்யப்பட்ட துரோகம் குறித்தும், ரூனி குறித்தும் வெளிப்படையாக பேசி இருந்தார்.

    அதுதொடர்பாக பேட்டியளித்த "அவர் ஏன் என்னை மிகவும் மோசமாக விமர்சிக்கிறார் என எனக்கு தெரியவில்லை. மேலாளர் எரிக் எனக்கு உரிய மரியாதையை வழங்குவதில்லை. எனவே, அவருக்கு மரியாதை தர நானும் விரும்பவில்லை. பலருக்கு நான் இந்த அணியில் இருப்பது பிடிக்கவில்லை.

    இவ்வாறு மனவருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்தப் பேட்டிக்கு பிறகு ரொனால்டோவை உடனடியாக மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அணியின் மேலாளர் டெடி ஷெரிங்ஹாம் தெரிவித்தார். அதன்படி, தற்போது மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து ரொனால்டோ வெளியேறியுள்ளார். இதனை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

    பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப்பை விட்டு வெளியேறுவார் என்று மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அறிவித்துள்ளது. மான்செஸ்டர் அனிக்காக விளையாடிய ரொனால்டோவுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த அணி குறிப்பிட்டுள்ளது.

    • கிறிஸ்டினா ரொனால்டோ மான்செஸ்டரில் இருந்து விலகியுள்ளார்
    • தன்னை சவுதி அரேபியா லீக்கில் விளையாட கேட்டுக் கொண்டதாக ரொனால்டோ தகவல்

    உலகின் தலைசிறந்த, இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கருதப்படுபவர் கிறிஸ்டியானா ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இவர் மான்செஸ்டர் யுனைடெட், ரியால் மாட்ரிட் கிளப் அணிகளுக்கான பல வருடங்கள் விளையாடி பல்வேறு சாதனைப் படைத்துள்ளார்.

    ரியல் மாட்ரிட் கிளப்பில் இருந்து விலகி, யுவென்டஸ் கிளப்பிற்கு சென்றார். பின்னர், மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு திரும்பினார். ஒரு சீசன் கூட முழுமையாக விளையாடாத நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மான்செஸ்டர் யுனைடெட்டில் இருந்து விலகியுள்ளார்.

    டிரான்ஸ்பர் ஃபீஸ் இல்லாமல் வேறு கிளப்பிற்கு செல்ல இருப்பதால் அவரை ஒப்பந்தம் செய்ய பல்வேறு கிளப்புகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

    இதற்கிடையே மான்செஸ்டர் யுனைடெட் உடனான பிரச்சினை குறித்து பேசும்போது ரொனால்டோ, ''சவுதி அரேபியா கிளப் ஒன்று 360 மில்லியன் டாலரில் இரண்டு வருட ஒப்பந்தத்திற்கான தன்னை அணுகியது. எனினும், தான் அதை மறுத்துவிட்டார்'' என்ற செய்தி வெளியானது.

    இதுகுறித்து சவுதி அரேபியாவின் விளையாட்டுத்துறை மந்திரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விளையாட்டு மந்திரி இளவரசர் அல் பைசல் ''ரொனால்டாவை அணுகியது குறித்து தனக்கு ஏதும் தெரியாது. இதுதான் எனது நேரடி பதில். நீங்கள் எவ்வாறு இந்த செய்தியை தெரிந்தீர்களோ? அதேபோல்தான் நானும் அறிந்து கொண்டேன். அவருடைய எதிர்கால திட்டம் என்ன? என்பது எனக்குத் தெரியாது.

    சவுதி அரேபியா கிளப்பில் ரொனால்டா விளையாடுவதை பார்க்க விரும்புகிறீர்களா? என்ற கேள்விக்கு, ஏன் இல்லை? எங்களிடம் வலுவான லீக் உள்ளது. ஒவ்வொரு அணியும் தலா ஏழு வெளிநாட்டு வீரர்களை பெற்றுள்ளது. அதை அதிகப்படுத்த பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆசியாவில் எங்கள் அணி டாப் லெவலில் விளையாடுகிறது. சவுதியில் கால்பந்து வலிமையாக உள்ளது. ஆகவே, ஏன் அவர் விளையாடுவதை விரும்பக் கூடாது? என்றார்.

    தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் சவுதி அரேபியா அர்ஜென்டினாவை 2-1 என வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.

    • கானாவுடனான ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
    • நட்சத்திர வீரர் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார்.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற குரூப் எச் பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல், கானா அணிகள் மோதின.

    முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 0-0 என சமனில் இருந்தது.

    இறுதியில், கானாவுக்கு எதிரான போட்டியில், 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் அணி வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியில், போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ 65-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

    இந்நிலையில், 5 உலக கோப்பைகளில் (2006, 2010, 2014, 2018, 2022) கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.

    ×