search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Real Madrid"

    • பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்பின் தூண்களான மெஸ்ஸி, நெய்மர் வெவ்வேறு கிளப்களுக்கு சென்றுவிட்டனர்.
    • தற்போது மற்றொரு நட்சத்திரமான எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய பல அணிகளும் முயற்சித்து வருகின்றன.

    பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்பின் தூண்களான மெஸ்ஸி, நெய்மர் வெவ்வேறு கிளப்களுக்கு சென்றுவிட்ட நிலையில், தற்போது மற்றொரு நட்சத்திரமான எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய பல அணிகளும் முயற்சித்து வருகின்றன.

    இந்த நிலையில் ரியல் மாட்ரிட் அணி 120 மில்லியன் யூரோக்களுக்கு (1,086 கோடி) எம்பாப்பேயை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    எம்பாப்பே ரியல் மேட்ரிட் அணிக்கு மாறினால், ஸ்ட்ரைக்கராக வினிசியல் ஜூனியருடன் இணைந்து மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் நீடிப்பதே எம்பாப்பேயின் விரும்பம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • பிஎஸ்ஜி அணியில் ஒப்பந்தத்தை நீட்டிக்க எம்பாப்வே விரும்பவில்லை
    • சவுதி அரேபிய அணி எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய விருப்பம்

    பிரான்ஸ் கால்பந்து வீரர் கேப்டன் எம்பாப்பே, உலகளவில் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருகிறார். அவர் தற்போது பிரான்சில் உள்ள பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார். இந்த அணியுடன் இரண்டு ஆண்டு ஒப்பந்தம் மீதமுள்ளது.

    மேலும், ஒரு வருடத்திற்கான ஒப்பந்தத்தை நீட்டிக்க பிஎஸ்ஜி விரும்பியது. ஆனால், எம்பாப்வே ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல விரும்புகிறார். இதனால் பிஎஸ்ஜி-யின் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை. ஃப்ரீ டிரான்ஸ்பராக செல்ல வாய்ப்புள்ளது.

    இதற்கிடையே சவுதி அணியான அல்-ஹிலால் பிஎஸ்ஜி-யுடன் பேச்சுவார்த்தை நடத்தி 332 மில்லியன் டாலர் (இந்திய பண மதிப்பில் 2700 கோடி ரூபாய்) டிரான்ஸ்பர் ஃபீஸ் செலுத்த முன்வந்தது. எந்தவித ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறினால் பணம் கிடைக்காது என்பதால், பிஎஸ்ஜி விருப்பம் தெரிவித்தது.

    இந்த நிலையில்தான் அல்-ஹிலால் அணி எம்பாப்பேவை சந்திக்க பிரான்ஸ் சென்றுள்ளனர். ஆனால், எம்பாப்வே அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார் எனத்தகவல் வெளியாகியுள்ளது.

    ஏற்கனவே அல்-ஹிலால் மெஸ்சியை ஒப்பந்தம் செய்ய விரும்பியது. ஆனால், அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்கு மெஸ்சி சென்றுவிட்டார்.

    ரியல் மாட்ரிட் அணி வெல்லும் 14-வது ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
    மாட்ரிட்:

    கிளப் அணிகள் இடையேயான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), லிவர் பூல் (இங்கிலாந்து) அணிகள் மோதின.

    பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 59வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    இறுதியில், ரியல் மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் லிவர் பூல் அணியை வீழ்த்தி ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

    ரியல் மாட்ரிட் அணியின் ரசிகர்கள் வெற்றியை கொண்டாடியபோது அவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஜெர்மனி அணியின் மிட்பீல்டரான டோனி குரூஸ் ரியல் மாட்ரிட் அணியுடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள்ளார்.
    ஜெர்மனி கால்பந்து அணியின் மிட்பீல்டர் டோனி குரூஸ். இவர் லா லிகா புகழ் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு யூரோ சாம்பியன் கோப்பையை வென்ற ரியல் மாட்ரிட், இந்த ஆண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    இதனால் ரியல் மாட்ரிட் 14 வீரர்களை வெளியேற்ற இருப்பதாக தகவல் வெளியானது, இதில் டோனி குரூஸ் பெயரும் இருந்தது. இந்நிலையில் குரூஸ் ரில் மாட்ரிட் உடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள்ளார்.

    பேயர்ன் முனிச் அணியில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்கு டிரான்ஸ்பர் ஆனார். இதுவரை 233 போட்டிகளில் விளையாடி 11 கோப்பைகளை முத்தமிட்டுள்ளார்.
    லா லிகா கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட் மீண்டும் சிறப்பான அணியை கட்டமைக்க 14 வீரர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது.
    ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் லா லிகா கால்பந்து தொடரில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று ரியல் மாட்ரிட். கிறிஸ்டியானோ ரொனால்டோ, பயிற்சியாளர் ஷினேடின் ஷிடேன் ஆகியோர் வெளியேறிய பின், அந்த அணி தடுமாற ஆரம்பித்தது.

    இதனால் ஷிடேனை மீண்டும் பயிற்சியாளராக நிமியத்துள்ளது. கடைசி கட்டத்தில் அவரால் சிறப்பான ஆணியை உருவாக்க முடியவில்லை.

    தற்போது 2018-19 சீசன் முடிவடைந்துள்ளது. ஒவ்வொரு அணிகளும் வீரர்கள் டிரான்ஸ்பர் பணியில் ஈடுபட தொடங்கியுள்ளது.  ரியல் மாட்ரிட் மீண்டும் சிறப்பான அணியை கட்டமைக்க 14 வீரர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது. இதில் காரேத் பெலே, ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ், கெய்லர் நவாஸ் ஆகியோர் முன்னணி வரிசையில் உள்ளனர்.
    சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட்டை 3-0 என சிஎஸ்கேஏ மாஸ்கோ பந்தாடி அதிர்ச்சி அளித்துள்ளது. #ChampionsLeague
    சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ‘ஜி’ பிரிவில் இடம் பிடித்துள்ள ரியல் மாட்ரிட் தனது கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கேஏ மாஸ்கோவை எதிர்கொண்டது. ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிஎஸ்கேஏ மாஸ்கோ அணி ஆச்சர்யம் அளிக்கும் வகையில் விளையாடியது.

    ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் சாலோவ், 43-வது நிமிடத்தில் ஜியோர்ஜி ஆகியோர் கோல் அடித்து அசத்தினர். இதனால் முதல் பாதி நேரத்தில் சிஎஸ்கேஏ மாஸ்கோ 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

    2-வது பாதி நேரத்திலும் சிஎஸ்கேஏ மாஸ்கோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரியல் மாட்ரிட் அணியை ஒரு கோல் கூட அடிக்கவிடாமல் சிறப்பான வகையில் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் அர்னோர் ஒரு கோல் அடிக்க சிஎஸ்கேஏ மாஸ்கோ 3-0 என ரியல் மாட்ரிட்டை துவம்சம் செய்தது.



    ரியல் மாட்ரிட் தோல்வியடைந்தாலும் ‘ஜி’ பிரிவில் 6 போட்டிகளில் நான்கு வெற்றி, இரண்டு தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்ததோடு, நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ரோமா 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 9 புள்ளிகள் பெற்று நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
    ஸ்பெயின் நாட்டில் மட்டுமே விளைாடினால் போதுமா? இத்தாலிக்கு வாருங்கள் என்று மெஸ்சிக்க ரொனால்டோ சவால் விடுத்துள்ளார். #Messi #Ronaldo
    கால்பந்து போட்டியில் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக மெஸ்சி, ரொனால்டோ, நெய்மர் ஆகியோர் கருதப்படுகிறார்கள். இதில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த மெஸ்சிக்கும், போர்ச்சுக்கலை சேர்ந்த ரொனால்டோவிற்கும் எதிராகத்தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. லி லிகா தொடரில் மெஸ்சி பார்சிலோனாவிற்காகவும், ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடினார்கள். அப்போது இருவரும் எதிரும் புதிருமாகத்தான் இருப்பார்கள். கடும் போட்டி நிலவும்.

    ரொனால்டோ போர்ச்சுக்கல் தேசிய அணிக்காகவும், அங்குள்ள கிளப், இங்கிலாந்து பிரிமீயர் லீக், ஸ்பெயின் லா லிகா தொடர்களிலும் விளையாடியுள்ளார். தற்போது இத்தாலி செரி ஏ கிளப்பில் யுவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    ஆனால் அர்ஜென்டினா தேசிய அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி, ஸ்பெயின் நாட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்நிலையில் இத்தாலிக்கு வாருங்கள் என்று மெஸ்சிக்கு ரொனால்டோ சவால் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து ரொனால்டோ கூறுகையில் ‘‘ஒருநாள் மெஸ்சி இத்தாலிக்கு வருவதை நான் கட்டாயம் விரும்புவேன். என்னுடைய சவாலை அவர ஏற்பார் என்று நம்புகிறேன். ஆனால், ஸ்பெயினில் அவர் மகிழ்ச்சியாக இருந்தால், அதற்கு நான் மதிப்பு அளிக்கிறேன்.



    அவர் வாழ்நாள் முழுவதும் பார்சிலோனாவிற்காக விளையாடினால், நான் அவரை இழக்கவில்லை. அவர்தான் என்னை இழக்கிறார். நான் இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுக்கலில் விளையாடியுள்ளேன். அவர் இன்னும் ஸ்பெயினிலேயே இருக்கிறார். ஒருவேளை அவருக்கு நான் தேவைப்பட்டால், எனக்கு வாழ்க்கை சவாலாக இருக்கும். அதை நான் விரும்புவேன். ரசிகர்கள் மகிழ்ச்சியாக மாற்ற விரும்புவேன்.

    மெஸ்சி மிகவும் சிறந்த வீரர் மற்றும் சிறந்த மனிதர். ஆனால், இங்கே நான் எதையும் தவறவிடவில்லை. இது என்னுடைய புதிய வாழ்க்கை. நான் மகிழ்ச்சியாக உள்ளேன். என்னுடைய வசதியாக இடத்தை விட்டு, இத்தாலியில் இந்த சவாலை எடுத்துள்ளேன். இங்கு எல்லாம் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. நான் இன்னும் வியக்கத்தக்க வீரர்தான் என்பதை நிரூபித்திருக்கிறேன்’’ என்றார்.
    தொடர் தோல்வி காரணமாக ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளரான ஜுலேன் லோபெட்டேகுய் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். #RealMadrid
    ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து கிளப் அணி ரியல் மாட்ரிட் அணி. உலகிலேயே மிக பிரபலமான கிளப் கால்பந்து தொடரான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையை தொடர்ந்து 3 முறை வென்று சாதனை படைத்தது ரியல் மாட்ரிட். அதன்பின், அந்த அணியின் வெற்றி பயிற்சியாளர் ஷிடேனின் ஷிடேன் அணியை விட்டு விலகுவதாக தெரிவித்தார். அத்துடன் ரியல் மாட்ரிட்டின் நட்சத்திர வீரரான ரொனால்டோ அதிரடியான யுவான்டஸ் அணிக்குச் சென்றார்.

    அதன்பின் ஸ்பெயின் தேசிய அணியின் பயிற்சியாளராக இருந்த ஜுலேன் லோபெட்டேகுய், ரியல் மாட்ரிட் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டார். உலகக் கோப்பைக்கு முன்னதாக ரியல் மாட்ரிட் அணியுடன் ரகசிய ஒப்பந்தம் போட்டுக் கொண்டதால் ஆத்திரமடைந்த ஸ்பெயின் கால்பந்து ஆணையம் லோபெட்டோகுய்-ஐ அதிரடியாக பணி நீக்கம் செய்தது.



    லோபெட்குயிவின் கீழ் 2018-19 கால்பந்து சீசனில் ரியல் மாட்ரிட் 3 வெற்றிகளுடன் நல்ல துவக்கம் பெற்றாலும், அதன்பின் தொடர்ந்து தோல்வியடைந்து வந்தது. சிறிய அணிகளுடனும் தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற போட்டியில், முதல் இடத்தில் இருக்கும் பரம எதிரியான பார்சிலோனாவிடம் 5-1 என படுதோல்வி அடைந்தது.

    இந்நிலையில் ரியல் மாட்ரிட் அணி பயிற்சியாளர் ஜுலேன் லோபெட்டேகுய்-ஐ அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது. தற்காலிகமாக சான்டியாகோ சோலரியை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.
    எல் கிளாசிகோ போட்டியில் சுவாரஸ் ஹாட்ரிக் கோலால் ரியல் மாட்ரிட்டை 5-1 என துவம்சம் செய்தது பார்சிலோனா. #Laliga #Barcelona #RealMadrid
    எல் கிளாசிகோ என்று அழைக்கப்படும் பார்சிலோனா - ரியல் மாட்ரிட் இடையிலான லா லிகா லீக் ஆட்டம் நேற்றிரவு நடைபெற்றது. பார்சிலோனாவிற்கு சொந்தமான மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது.

    ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் பார்சிலோனாவின் கவுட்டினோ முதல் கோலை பதிவு செய்தார். 30-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி சுவாரஸ் கோல் அடிக்க பார்சிலோனா முதல் பாதி நேரத்தில் 2-0 என முன்னிலை பெற்றது.



    2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும் ரியல் மாட்ரிட் அணியின் மார்சிலோ கோல் அடித்தார். அதன்பின் பார்சிலோனா வீரர்கள் நம்பமுடியாத வகையில் விளையாடினார்கள். சுவாரஸ் 75-வது நிமிடத்தில் தலையால் முட்டி கோல் அடித்தார். 83-வது நிமிடத்தில் எளிதாக மேலும் ஒரு கோல் அடித்தார்.




    சுவாரஸ் ஹாட்ரிக் கோலால் பார்சிலோனா 4-1 என முன்னிலைப் பெற்றிருந்தது. 87-வது நிமிடத்தில் விடால் தலையால் முட்டி கோல் அடிக்க 5-1 என ரியல் மாட்ரிட்டை துவம்சம் செய்தது பார்சிலோனா.
    லா லிகா கால்பந்து லீக்கில் ரியல் மாட்ரிட் - அட்லெடிகோ டி மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. #LaLiga #RealMadrid
    லா லிகா கால்பந்து லீக்கில் ரியல் மாட்ரிட் - அட்லெடிகோ டி மாட்ரிட் இடையிலான ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ‘மாட்ரிட் டெர்பி (Madrid Derby)’ என்று அழைக்கப்படும்.

    இதில் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று இரு அணி வீரர்களும் களம் இறங்குவார்கள். ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் ஆட்டம் நடைபெற்றதால், ரியல் மாட்ரிட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

    ஆனால் ரியல் மாட்ரிட் அணியால் கடைசி வரை கோல் அடிக்க இயலவில்லை. அதேபோல் அட்லெடிகோ டி மாட்ரிட் அணியும் கோல் அடிக்காததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.



    மற்றொரு ஆட்டத்தில் பார்சிலோனா - அத்லெடிக் கிளப் அணிகள் மோதின. ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் அத்லெடிக் கிளப் அணியின் டி மார்கோஸ் கோல் அடித்து பார்சிலோனாவிற்கு அதிர்ச்சி அளித்தார்.

    2-வது பாதி நேரத்தில் கோல் அடிக்க பார்சிலோனா கடும் முயற்சி எடுத்தது. 84-வது நிமிடத்தில் முனிர் கோல் அடிக்க ஸ்கோர் 1-1 என சமநிலைப் பெற்றது. அதன்பின் இரு அணிகளம் கோல் அடிக்காததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. முதல் பாதி நேரத்தில் மெஸ்சி விளையாடவில்லை. 55-வது நிமிடத்தில்தான் களம் இறங்கினார்.
    லா லிகா கால்பந்து தொடரில் எஸ்பான்யல் அணியை 1-0 என வீழ்த்திய ரியல் மாட்ரிட் 4 வெற்றி, ஒரு டிராவுடன் முதல் இடம் வகிக்கிறது. #LaLiga #RealMadrid
    லா லிகா கால்பந்து தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ரியல் மாட்ரிட் - ஆர்சிடி எஸ்பான்யல் அணிகள் மோதின.

    ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான சான்டியாகோ பெர்னாபு மைதானத்தில் நடைபெற்றது. சொந்த மைனதாத்தில் விளையாடினாலும் ரியல் மாட்ரிக் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. எஸ்பான்யல் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ரியல் மாட்ரிட் தடுமாறியது.

    ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் அசென்சியோ ஒரு கோல் அடிக்க ரியல் மாட்ரிட் 1-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரு அணி வீரர்களும் ஆட்டம் முடியும் வரை கோல் அடிக்கவில்லை. இதனால் ரியல் மாட்ரிட் 1-0 என வெற்றி பெற்றது.



    இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட் 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று 13 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. பார்சிலோனா 4 போட்டிகளில் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
    கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் அணி வீக்கானது என்று பார்சிலோனா புகழ் மெஸ்சி குறிப்பிட்டுள்ளார். #Messi #Barcelona
    கால்பந்து போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ - மெஸ்சி இடையே கடும் போட்டி நிலவும். இருவரும் பரம எதிரிகளாகவே சித்தரிக்கப்பட்டு வருகிறது.

    கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காகவும், மெஸ்சி பார்சிலோனா அணிக்காகவும் விளையாடிய போது இருவரும் எதிரெதிராக விளையாடும்போது அனல் பறக்கும். தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து இத்தாலியின் யுவான்டஸ் அணிக்கு மாறியுள்ளார்.



    இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் அணி வீக்கானது என்று பார்சிலோனா புகழ் மெஸ்சி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மெஸ்சி கூறுகையில் ‘‘சிறந்த வீரர்களை கொண்ட ரியல் மாட்ரிட் அணி உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. ஆனால், கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் சற்று தரம் குறைந்த அணியாக இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.



    யுவான்டஸ் அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக மாறியுள்ளது’’ என்றார்.
    ×