search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Champions League"

    ரியல் மாட்ரிட் அணி வெல்லும் 14-வது ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
    மாட்ரிட்:

    கிளப் அணிகள் இடையேயான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), லிவர் பூல் (இங்கிலாந்து) அணிகள் மோதின.

    பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 59வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    இறுதியில், ரியல் மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் லிவர் பூல் அணியை வீழ்த்தி ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

    ரியல் மாட்ரிட் அணியின் ரசிகர்கள் வெற்றியை கொண்டாடியபோது அவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட்டை 3-0 என சிஎஸ்கேஏ மாஸ்கோ பந்தாடி அதிர்ச்சி அளித்துள்ளது. #ChampionsLeague
    சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ‘ஜி’ பிரிவில் இடம் பிடித்துள்ள ரியல் மாட்ரிட் தனது கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கேஏ மாஸ்கோவை எதிர்கொண்டது. ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிஎஸ்கேஏ மாஸ்கோ அணி ஆச்சர்யம் அளிக்கும் வகையில் விளையாடியது.

    ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் சாலோவ், 43-வது நிமிடத்தில் ஜியோர்ஜி ஆகியோர் கோல் அடித்து அசத்தினர். இதனால் முதல் பாதி நேரத்தில் சிஎஸ்கேஏ மாஸ்கோ 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

    2-வது பாதி நேரத்திலும் சிஎஸ்கேஏ மாஸ்கோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரியல் மாட்ரிட் அணியை ஒரு கோல் கூட அடிக்கவிடாமல் சிறப்பான வகையில் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் அர்னோர் ஒரு கோல் அடிக்க சிஎஸ்கேஏ மாஸ்கோ 3-0 என ரியல் மாட்ரிட்டை துவம்சம் செய்தது.



    ரியல் மாட்ரிட் தோல்வியடைந்தாலும் ‘ஜி’ பிரிவில் 6 போட்டிகளில் நான்கு வெற்றி, இரண்டு தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்ததோடு, நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ரோமா 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 9 புள்ளிகள் பெற்று நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
    சாம்பியன்ஸ் லீக், யூரோப்பா லீக் கால்பந்து தொடரில் கூடுதல் நேரத்தில் நான்கு மாற்று வீரர்களை களம் இறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. #UEFA
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக் மற்றும் நாக்அவுட் சுற்றுகள் முடிவடைந்து நாளை காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன.

    நாக்அவுட் சுற்று போட்டிகளில் ஆட்டத்தின் 90 நிமிடத்தில் போட்டி சமநிலையில் இருந்தால் கூடுதல் நேரம் வழங்கப்படும். இரு அணிகளுக்கும் தலா 15 நிமிடங்கள் கொடுக்கப்படும். முதல் 15 நிமிடத்தில் சமநிலையாக இருந்தால், 2-வது 15 நிமிடம் வழங்கப்படும். இந்த 30 நிமிடங்களிலும் இரு அணிகளும் சமமான வாய்ப்பு பெற்றிருந்தால் பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்படும்.



    இந்த உலகக்கோப்பை தொடருக்கு முன் மூன்று வீரர்களுக்குப் பதில் மாற்று வீரர்களை ஒரு அணி களம் இறக்கலாம் என்ற விதிமுறை இருந்தது. தற்போது இந்த உலகக்கோப்பையில் 90 நிமிடத்திற்குப் பிறகு கூடுதல் நேரம் ஆட்டம் நடைபெற்றால் நான்கு வீரர்களை மாற்றிக்கொள்ளலாம் என்று பிபா விதிமுறையை மாற்றியுள்ளது.

    இந்நிலையில் ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் சாம்பியன்ஸ் லீக் மற்றும் யூரோப்பா லீக் தொடரின் நாக்அவுட் சுற்றில் இதுபோன்று நான்கு வீரர்களை மாற்ற சம்மதம் தெரிவித்துள்ளது. #UEFA #ChampionsLeague #EuropaLeague
    ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் அணி லிவர்பூல் அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. #2018UEFAChampionsLeague
    ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் கீவ் நகரில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) அணியும், லிவர்பூல் (இங்கிலாந்து) அணியும் மோதின.

    போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் அபாரமாக ஆடின. இதனால் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.



    இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் கரிம் பென்சிமா முதல் கோல் அடித்தார். இதற்கு  பதிலடி கொடுக்கும் வகையில் லிவர்பூல் அணியின் சாடியோ மேன் 54-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன.

    தொடர்ந்து ரியல் மாட்ரிட் அணி சிறப்பாக ஆடியது. அந்த அணியின் கரேத் பாலே 63 மற்றும் 82 வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்தார். இதனால் ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக கைப்பற்றி அசத்தியது. #2018UEFAChampionsLeague
    ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரியல்மாட்ரிட் - லிவர்பூல் அணிகள் இன்று இரவு கீவ் நகரில் மோதுகின்றன. #2018UEFAChampionsLeague
    இந்த சீசனுக்கான ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரியல்மாட்ரிட் (ஸ்பெயின்)- லிவர்பூல் (இங்கிலாந்து) அணிகள் இன்று இரவு கீவ் நகரில் மோதுகின்றன. ரியல்மாட்ரிட் அணியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆட்டம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. உலக கோப்பைக்கு முன்பாக நடக்கும் மிகப்பெரிய போட்டி இதுவாகும். இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டென்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. #2018UEFAChampionsLeague
    சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட்டிற்கு எதிராக பதற்றம் இல்லாமல் விளையாடினால் லிவர்பூல் அணிக்கே வெற்றி என அலோன்சா தெரிவித்துள்ளார். #UCL
    சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி சனிக்கிழமை நள்ளிரவு நடைபெறுகிறது. இதில் ஸ்பெயின் அணியான ரியல் மாட்ரிட் - இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் லிவர்பூல் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரண்டு முறை தொடர்ச்சியாக கோப்பையை கைப்பற்றியுள்ள ரியல் மாட்ரிட் ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க துடிக்கிறது.

    அதேவேளையில் லிவர்பூல் அணி சமீப காலமாக ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. லிவர்பூல் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை ருசித்து வருகிறது. இதனால் ரியல் மாட்ரிட் அணிக்கு கடும் சவாலாக விளங்கும் என லிவர்பூல் அணிக்காகவும், ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடிய சேபி அலோன்சோ தெரிவித்துள்ளார்.



    லிவர்பூல் அணி 2005-ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்லும்போதும், ரியல் மாட்ரிட் 2014-ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக்கையும் வெல்லும்போது இரண்டு அணியிலும் இடம்பிடித்திருந்தவர் அலோன்சோ. இரு அணிகளுக்காகவும் தலா ஐந்தாண்டுகள் விளையாடியுள்ளார்.

    சாம்பயின்ஸ் லீக் இறுதிப் போட்டி குறித்து சேபி அலோன்சா கூறுகையில் ‘‘அனைத்து லிவர்பூல் அணி வீரர்களுக்கும் இதுதான் முதல் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி. லிவர்பூல் எமோசனல் சைடு. கால்பந்துக்கு இது முக்கியமானது. அவர்கள் சரியான உற்சாகம் மற்றும் உத்வேகத்தை பெற்றால், சரியான வழியில் இறுதிப் போட்டியை அனுக முடியும்’’ என்றார்.
    ×