என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UEFA"

    • இங்கிலாந்து 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
    • 2-வது அரைஇறுதியில் ஜெர்மனி-ஸ்பெயின் அணிகள் இன்று மோதுகின்றன.

    ஜெனீவா:

    14-வது ஐரோப்பிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடந்த முதல் அரைஇறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-இத்தாலி அணிகள் மோதின.

    போட்டியின் 33-வது நிமிடத்தில் இத்தாலி அணிக்காக பார்பரா போனான்சியா கோல் அடித்தார். ஆட்டம் முடியும் தருவாயில் அதாவது 96-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை மிச்செல் அகேமாங் பதில் கோல் அடித்து சமன் செய்தார்.

    1-1 என்ற சமநிலை ஏற்பட்டதால் கூடுதல் நேரம் கடைபிடிக்கப்பட்டது. இதில் கோல் அடித்து இங்கிலாந்து வெற்றி பெற்றது. 119-வது நிமிடத்தில் அந்த அணி சோலி கெல்லி கோல் அடித்தார். ஆட்டம் முடியும் வரை இத்தாலி அணியால் மேலும் கோல் எதுவும் அடிக்க இயலவில்லை. இதனால் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணி 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரைஇறுதியில் ஜெர்மனி-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. 

    • இறுதிப்போட்டியில் பி.எஸ்.ஜி. அணியும், இன்டர் மிலன் அணியும் மோதின.
    • இப்போட்டியில் பி.எஸ்.ஜி அணி 5 கோல்கள் அடித்து அசத்தியது.

    ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் முதன்மையாக கால்பந்து தொடர் UEFA சாம்பியன்ஸ் லீக்.

    இந்த தொடரின் இறுதிப்போட்டியில் பி.எஸ்.ஜி. அணியும், இன்டர் மிலன் அணியும் மோதின. இப்போட்டியின் முதல் பாதியில் 2 கோல்கள் அடித்து அசத்திய பி.எஸ்.ஜி அணி இரண்டாவது பாதியில் மேலும் 3 கோல்கள் அடித்தது. கடைசி வரை போராடிய இன்டர் மிலன் அணியால் ஒரு கொல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் 5 - 0 என்ற கோல் கணக்கில் பி.எஸ்.ஜி அணி அபார வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.

    • ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கு இதய UEFA சாம்பியன்ஸ் லீக் நடைபெறுகிறது.
    • இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் யுனைடட் மற்றும் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் மோதின.

    ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் முதன்மையாக கால்பந்து தொடர் UEFA சாம்பியன்ஸ் லீக்.

    இதன் அரையிறுதி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அரையிறுதி 2 லெக் ஆட்டங்களாக நடத்தப்படும். இரு அணிகளும் தலா ஒரு முறை தங்களுடைய சொந்த மைதானத்தில் மோதும். இரண்டு போட்டிகளிலும் சேர்த்து அதிக கோல் அடிக்கும் அணி வெற்றிபெறும்.

    அதன்படி முதல் அரையிறுதியில் அத்லெடிக் கிளப் அணிக்கு எதிராக 7 கோல்கள் அடித்து மான்செஸ்டர் யுனைடட் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    மற்றொரு அரையிறுதியில் போடோ/கிளிம்ட் அணிக்கு எதிராக 5 கோல்கள் அடித்து டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் யுனைடட் மற்றும் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் மோதின. இப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் ஜான்சன் அடித்த கோல் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தது

    இதன்மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு UEFA ஐரோப்பா லீக் கோப்பையை டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

    • இத்தாலி மற்றும் அல்பேனியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
    • அலெசாண்ட்ரோ பஸ்டோனி போட்டியின் 11 ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார்.

    ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடர் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஐரோப்பியாவை சேர்ந்த 24 அணிகள் விளையாடுகின்றன. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் இத்தாலி மற்றும் அல்பேனியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இந்த போட்டி தொடங்கிய 23 நொடியிலேயே அல்பேனிய வீரர் நெடிம் பஜ்ராமி தனது அணிக்காக முதல் கோலை அடித்து அசத்தினார். இது ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அதிவேகமாக அடிக்கப்பட்ட கோல் என்ற சாதனையாக அமைந்தது.

    இதைத் தொடர்ந்து இத்தாலி அணியின் அலெசாண்ட்ரோ பஸ்டோனி போட்டியின் 11 ஆவது நிமிடத்தில் தனது அணிக்காக கோல் அடித்தார். இது ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அடிக்கப்பட்ட மூன்றாவது அதிவேக கோல் என்ற சாதனையானது.

    இந்த போட்டியில் இத்தாலி அணி 2-1 என்ற கணக்கில் அல்பேனியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர்களில் இத்தாலி அணி இரண்டாவது முறையாக பத்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    முன்னதாக ஜூன் 1968 முதல் ஜூன் 1988 வரையிலான காலக்கட்டத்தில் இத்தாலி அணி தனது முதல் பத்து போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.

    முறைகேடு செய்தால் சாம்பியன்ஸ் லீக் தொடரில் இருந்து தூக்கி எறியப்படுவீர்கள் என்று லா லிகா லீக்கின் தலைவர் பிஎஸ்ஜி-க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். #PSG #Laliga
    கால்பந்து கிளப் அணிகளில் ஸ்பெனில் உள்ள பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் உலகின் தலைசிறந்த அணியாக திகழ்ந்து வருகிறது. அதேபோல் பிரான்ஸில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணி பணக்கார கிளப்பாக திகழ்ந்து வருகிறது.

    பார்சிலோனா அணியில் இடம்பிடித்திருந்த நெய்மரை பிஎஸ்ஜி 222 மில்லியன் யூரோவிற்கு கால்பந்து வரலாற்றில் இதுவரை இல்லாத தொகைக்கு வாங்கியது. அத்துடன் மட்டுமல்லாம் மொனாக்கோ அணியில் விளையாடிய கிலியான் மப்பேவை 180 மில்லியன் யூரோவிற்கு வாங்கியது.



    இது கால்பந்து சங்கங்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நெய்மர் டிரான்ஸ்பரில் பிஎஸ்ஜி விதிமுறையை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளன.

    இதற்கிடையே பிஎஸ்ஜி அணி குறித்த விமர்சனங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று லா லிகா தலைவர் சேவியர் டெபாஸிடம் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கேட்டுக்கொண்டது. ஆனார், சேவியர் டெபாஸ் அந்த கோரிக்கையை நிராகரித்து ‘‘முறைகேடு செய்தால் நீக்கப்படுவீர்கள்’’ என்ற எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    ஐரோப்பா நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில் குரோசியாவை 6-0 என துவம்சம் செய்தது ஸ்பெயின். #uefanationsleague
    ஐரோப்பா கால்பந்து கூட்டமைப்பு சார்பில் புதிதாக நேஷன்ஸ் லீக் என்ற தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொடர் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. நவம்பர் 20-ந்தேதி வரை நடக்கிறது. இறுதிப் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இதில் முன்னணி வகிக்கும் அணிகள் 2020 யூரோ கோப்பைக்கு தகுதிபெறும். ஐரோப்பா கால்பந்து கூட்டமைப்பில் உள்ள 55 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. லீக் ஏ, பி, சி, டி என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு உட்பிரிவுகள் உள்ளன..



    முன்னணி அணிகள் லீக் ‘ஏ’-வில் இடம்பிடித்துள்ளன. நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் குரூப் ஏ4-ல் இடம்பிடித்துள்ள உலகக்கோப்பையில் 2-ம் இடம் பிடித்த குரோசியா- ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் ஸ்பெயின் 6-0 என குரோசியாவை துவம்சம் செய்தது.
    சாம்பியன்ஸ் லீக், யூரோப்பா லீக் கால்பந்து தொடரில் கூடுதல் நேரத்தில் நான்கு மாற்று வீரர்களை களம் இறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. #UEFA
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக் மற்றும் நாக்அவுட் சுற்றுகள் முடிவடைந்து நாளை காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன.

    நாக்அவுட் சுற்று போட்டிகளில் ஆட்டத்தின் 90 நிமிடத்தில் போட்டி சமநிலையில் இருந்தால் கூடுதல் நேரம் வழங்கப்படும். இரு அணிகளுக்கும் தலா 15 நிமிடங்கள் கொடுக்கப்படும். முதல் 15 நிமிடத்தில் சமநிலையாக இருந்தால், 2-வது 15 நிமிடம் வழங்கப்படும். இந்த 30 நிமிடங்களிலும் இரு அணிகளும் சமமான வாய்ப்பு பெற்றிருந்தால் பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்படும்.



    இந்த உலகக்கோப்பை தொடருக்கு முன் மூன்று வீரர்களுக்குப் பதில் மாற்று வீரர்களை ஒரு அணி களம் இறக்கலாம் என்ற விதிமுறை இருந்தது. தற்போது இந்த உலகக்கோப்பையில் 90 நிமிடத்திற்குப் பிறகு கூடுதல் நேரம் ஆட்டம் நடைபெற்றால் நான்கு வீரர்களை மாற்றிக்கொள்ளலாம் என்று பிபா விதிமுறையை மாற்றியுள்ளது.

    இந்நிலையில் ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் சாம்பியன்ஸ் லீக் மற்றும் யூரோப்பா லீக் தொடரின் நாக்அவுட் சுற்றில் இதுபோன்று நான்கு வீரர்களை மாற்ற சம்மதம் தெரிவித்துள்ளது. #UEFA #ChampionsLeague #EuropaLeague
    நெய்மரை 2480 கோடி ரூபாய் கொடுத்து வாங்க விருப்பம் தெரிவித்ததாக வந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என ரியல் மாட்ரிட் தெரிவித்துள்ளது. #Neymar
    பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வருபவர் நெய்மர். இவர் 2017 வரை பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார். அவர் ரியல் மாட்ரிட் அணிக்கு மாற விரும்பினார். இதற்கு பல பிரச்சினைகள் இருந்ததால் பிரான்ஸ் நாட்டின் முன்னணி அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு கடந்த சீசன் போது மாறினார். இதற்காக பிஎஸ்ஜி அணி 222 மில்லியன் யூரோ டிரான்ஸ்பர் தொகையாக வழங்கியது. கால்பந்து வரலாற்றில் ஒரு வீரருக்கான அதிகப்படியான டிரான்ஸ்பர் தொகை இதுவாகும்.

    இந்நிலையில் ஓராண்டு முடிந்துள்ள நிலையில், ரியல் மாட்ரிட் அணி நெய்மரை வாங்க விருப்பம் தெரிவிப்பதாக தகவல் வெளியானது. ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரெனால்டோ, பென்சிமா போன்ற வீரர்கள் வெளியேற இருப்பதாக கூறப்பட்ட தகவலே காரணம்.



    நெய்மரை ரியல் மாட்ரிட் வாங்குவது எளிதான காரியம் அல்ல. அவருக்காக சுமார் 310 மில்லியன் யூரோ ரியல் மாட்ரிட் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. நேற்று பிரேசில் அணி வெற்றி பெற்றதும் இந்த செய்தி தீயாக பரவியது. இந்த மதிப்பில் 2480 கோடி ரூபாயாகும். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே யூரோப்பா கால்பந்து அசோசியேசனும் பிஎஸ்ஜிக்கு நெருக்கடி கொடுத்தது.

    இந்நிலையில் நெய்மருக்கு நாங்கள் 2480 கோடி ரூபாய் கொடுக்க விருப்பம் தெரிவித்ததாக வந்த செய்தியில் துளியளவும் உண்மையில்லை என்று ரியல் மாட்ரிட் தெரிவித்துள்ளது.
    ×