search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paris Saint Germain"

    பிரான்ஸ் கோப்பைக்கான இறுதிப் போட்டியை கேலரியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த நெய்மர், ரசிகரின் முகத்தில் குத்து விட்டதால் மூன்று போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    பிரான்ஸ் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் பாரிஸ் ஜெயின்ட் ஜெர்மைன் - ரென்னெஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்ததால் ‘பெனால்டி’ சூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ரென்னெஸ் அணி வெற்றி பெற்றது.

    காயத்தால் தற்போது வெளியில் இருக்கும் பிஎஸ்ஜி அணியின் முன்னணி வீரரான நெய்மர், கேலரியில் இருந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார். தனது அணி தோல்வியடைந்த விரக்தியில் இருந்த நெய்மரை, ரென்னெஸ் ரசிகர் ஒருவர் படம் பிடித்ததாக தெரிகிறது.

    இதனால் கோபம் அடைந்த நெய்மர், அந்த ரசிகரின் முகத்தில் குத்து விட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி, நெய்மருக்கு மூன்று போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    யூரோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முதல் ஆட்டத்தில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை 3-2 என வீழ்த்தியது லிவர்பூல். #ChampionsLeague #PSG #LiverPool
    ஐரோப்பா கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கிளப் அணிகளுக்கு இடையில் சாம்பியன்ஸ் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2018-19-ம் ஆண்டிற்கான தொடர் நேற்றிரவு தொடங்கியது.

    இதில் 32 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளது. இந்த அணிகள் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா இரண்டுமுறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.



    ஒரு ஆட்டத்தில் குரூப் ‘சி’யில் இடம்பிடித்துள்ள பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் - லிவர்பூல் அணிகள் மோதின. இரண்டு முன்னணி அணிகள் மோதியதால் இந்த ஆட்டம் மிகவும் எதிர்பார்ப்பு மிகுந்ததாக அமைந்தது.

    ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் டேனியல் ஸ்டர்ரிட்ஜ் முதல் கோலை பதிவு செய்தார். அடுத்த 6-வது நிமிடத்தில் லிவர்பூலுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி ஜேம்ஸ் மில்னர் கோல் அடித்தார். இதனால் லிவர்பூல் 2-0 என முன்னிலைப் பெற்றது.



    லிவர்பூல் அணிக்கு பதிலடியாக பிஎஸ்ஜி அணியின் தாமஸ் மெயுனியர் 40-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் லிவர்பூல் 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது.

    2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியது. இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால் பலன் கிடைக்கவில்லை. ஆட்டத்தின் 83-வது நிமிடத்தில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் கிலியான் மப்பே கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 2-2 என சமநிலை ஆனது.

    90 நிமிடம் வரை இதே ஸ்கோர் நிலவியதால் ஆட்டம் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்ஜூரி நேரத்தில் 92-வது நிமிடத்தில் ரொபெர்ட்டோ ஃபேர்மினோ கோல் அடிக்க லிவர்பூல் த்ரில் வெற்றி பெற்றது.
    இத்தாலியைச் சேர்ந்த தலைசிறந்த கோல் கீப்பரான பஃபோன் 17 வருடங்களுக்குக் பிறகு யுவான்டஸ் அணியில் இருந்து பிஎஸ்ஜிக்கு மாறியுள்ளார். #Buffon #PSG #Juventus
    இத்தாலி தேசிய கால்பந்து அணிக்காக 1997-ம் ஆண்டில் இருந்து 2018 வரை 21 வருடமாக விளையாடியவர் கோல்கீப்பர் பஃபோன். உலகின் தலைசிறந்த கோல்கீப்பராக கருதப்படும் இவர், இத்தாலிக்காக 176 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்றில் இத்தாலி தோல்வியடைந்ததால் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.



    இத்தாலியின் முன்னணி கிளப் அணியான யுவான்டஸிற்காக 2001-ல் இருந்து 2018 வரை 17 சீசனில் விளையாடியுள்ளார். 2017-18 சீசனோடு யுவான்டஸ் அணியில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் பிரான்ஸ் கிளப் அணியான பிஎஸ்ஜியுடன் ஒரு வருடம் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    ‘‘பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் இணைவது சிறந்த உணர்வாக இருக்கிறது. எனது கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக இத்தாலியில் இருந்து வெளியேற இருக்கிறேன்’’ என்றார்.
    நெய்மரை 2480 கோடி ரூபாய் கொடுத்து வாங்க விருப்பம் தெரிவித்ததாக வந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என ரியல் மாட்ரிட் தெரிவித்துள்ளது. #Neymar
    பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வருபவர் நெய்மர். இவர் 2017 வரை பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார். அவர் ரியல் மாட்ரிட் அணிக்கு மாற விரும்பினார். இதற்கு பல பிரச்சினைகள் இருந்ததால் பிரான்ஸ் நாட்டின் முன்னணி அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு கடந்த சீசன் போது மாறினார். இதற்காக பிஎஸ்ஜி அணி 222 மில்லியன் யூரோ டிரான்ஸ்பர் தொகையாக வழங்கியது. கால்பந்து வரலாற்றில் ஒரு வீரருக்கான அதிகப்படியான டிரான்ஸ்பர் தொகை இதுவாகும்.

    இந்நிலையில் ஓராண்டு முடிந்துள்ள நிலையில், ரியல் மாட்ரிட் அணி நெய்மரை வாங்க விருப்பம் தெரிவிப்பதாக தகவல் வெளியானது. ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரெனால்டோ, பென்சிமா போன்ற வீரர்கள் வெளியேற இருப்பதாக கூறப்பட்ட தகவலே காரணம்.



    நெய்மரை ரியல் மாட்ரிட் வாங்குவது எளிதான காரியம் அல்ல. அவருக்காக சுமார் 310 மில்லியன் யூரோ ரியல் மாட்ரிட் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. நேற்று பிரேசில் அணி வெற்றி பெற்றதும் இந்த செய்தி தீயாக பரவியது. இந்த மதிப்பில் 2480 கோடி ரூபாயாகும். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே யூரோப்பா கால்பந்து அசோசியேசனும் பிஎஸ்ஜிக்கு நெருக்கடி கொடுத்தது.

    இந்நிலையில் நெய்மருக்கு நாங்கள் 2480 கோடி ரூபாய் கொடுக்க விருப்பம் தெரிவித்ததாக வந்த செய்தியில் துளியளவும் உண்மையில்லை என்று ரியல் மாட்ரிட் தெரிவித்துள்ளது.
    சொந்த மைதானத்தில் வெற்றியை கொண்டாட நினைத்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் ஆசைக்கு தடைபோட்டது ரென்னெஸ். #PSG
    பிரான்ஸில் நடைபெற்று வரும் லீக் 1 கால்பந்து தொடரில் ஏற்கனவே பாரிஸ் செயின்ட்-ஜெரமைன் அணி அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது. இந்நிலையில் கடைசி லீக் ஆட்டத்திற்கு முந்தைய ஆட்டம் பிஎஸ்ஜிக்கு  சொந்தமான பார்க் டெஸ் பிரின்செஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பிஎஸ்ஜி ரென்னெஸ் அணியை எதிர்கொண்டது.

    சொந்த மைதானத்தில் ரென்னெஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதை ரசிகர்கள் மத்தியில் பிரமாண்டமாக கொண்டாடவும், அதன்பின் மிகப்பெரிய பார்ட்டியில் கலந்து கொள்ளவும் முடிவு செய்தது. ஆனால் பிஎஸ்ஜி அதிர்ச்சிகரமாக 0-2 எனத் தோல்வியை சந்தித்தது. இதனால் சொந்த ரசிகர்கள் முன் வெற்றியை கொண்டாட முடியாமல் கவலையோடு வெளியேறினார்கள்.



    பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அடுத்த போட்டியில் எஸ்எம் கேயன் அணியை எதிர்கொள்கிறது. தற்போது பிஎஸ்ஜி 37 போட்டிகள் முடிவில் 92 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மொனாகோ 77 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. 
    ×