என் மலர்
கால்பந்து
- நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் அணி ரியல் மாட்ரிட்டை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
- வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் பாரிஸ் செயிண்ட் மற்றும் செல்சி அணிகள் மோதுகின்றன.
கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது.
நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் அணி ரியல் மாட்ரிட்டை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இதனை தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் பாரிஸ் செயிண்ட் மற்றும் செல்சி அணிகள் மோதுகின்றன.
- இப்போதுதான் போர்ச்சுகல் அணிக்காக ஒன்றாக விளையாடினோம்.
- ஜோட்டாவின் குடும்பத்தினருக்கும், மனைவிக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார் விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
லிவர்பூல் கிளப் மற்றும் போர்ச்சுகல் தேசிய அணியின் முக்கிய முன்கள வீரராக டியோகோ ஜோட்டா இருந்தவர். 28 வயதான அவர் 2019 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் UEFA நேஷன்ஸ் லீக்கை வென்ற போர்ச்சுகல் அணியில் இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில் சக வீரர் மறைவுக்கு பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இப்போதுதான் போர்ச்சுகல் அணிக்காக ஒன்றாக விளையாடினோம். இப்போதுதான் திருமணமும் செய்து கொண்டார். ஜோட்டாவின் குடும்பத்தினருக்கும், மனைவிக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் உங்களை மிஸ் செய்வோம்.
என கூறினார்.
- லிவர்பூல் கிளப் மற்றும் போர்ச்சுகல் தேசிய அணியின் முக்கிய முன்கள வீரராக டியோகோ ஜோட்டா இருந்தவர்.
- 2019 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் UEFA நேஷன்ஸ் லீக்கை வென்ற போர்ச்சுகல் அணியில் இடம் பெற்றிருந்தார்.
போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார் விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் இருவரும் உயிரிழந்துள்ளனர். ஜோட்டாவின் மரணம் கால்பந்து உலகை உலுக்கியுள்ளது. ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஜோட்டா மற்றும் அவரது சகோதரர் ஆண்ட்ரேவின் மறைவுக்குப் பிறகு போர்ச்சுக்கல் கால்பந்து கூட்டமைப்பு ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ளது.
கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டாவுக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.
லிவர்பூல் கிளப் மற்றும் போர்ச்சுகல் தேசிய அணியின் முக்கிய முன்கள வீரராக டியோகோ ஜோட்டா இருந்தவர். 28 வயதான அவர் 2019 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் UEFA நேஷன்ஸ் லீக்கை வென்ற போர்ச்சுகல் அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மீண்டும் போராடி ஸ்கோரை 1-1 என சமன் செய்தது.
- 52வது நிமிடத்தில் அவரின் கோல் கிளப்பின் 300வது சர்வதேச கோலாக மாறியது.
FIFA கிளப் உலகக் கோப்பை போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ஜுவென்டஸை 5-2 என்ற கணக்கில் வீழ்த்தி மான்செஸ்டர் சிட்டி அணி குரூப் ஜி பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது.
இது குரூப்பில் மான்செஸ்டர் சிட்டியின் தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியாகும்.

அமெரிக்காவின் கேம்பிங் வேர்ல்ட் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியின் ஒன்பதாவது நிமிடத்தில் கோல் அடித்த ஜெர்மி டோகு மூலம் மான்செஸ்டர்சிட்டி முன்னிலை பெற்றது.
ஆனால் மூன்று நிமிடங்களுக்குள், மான்செஸ்டர் சிட்டி கோல்கீப்பர் எடர்சனின் தவறைப் பயன்படுத்திக் கொண்ட ஜுவென்டஸ் அணி, மீண்டும் போராடி ஸ்கோரை 1-1 என சமன் செய்தது.
26வது நிமிடத்தில், பியர் கலுலு கோல் அடித்ததால் மான்செஸ்டர் சிட்டி மீண்டும் முன்னிலை பெற்றது. மாற்று வீரர் எர்லிங் ஹாலண்ட் இரண்டாவது பாதியின் ஏழு நிமிடங்களில் மூன்றாவது கோலை அடித்தார்.
பின்னர் பில் ஃபோடன் மூன்று நிமிடங்களுக்குள் மற்றொரு கோல் அடித்தார். அதைத் தொடர்ந்து சவின்ஹோவின் நீண்ட தூர ஸ்ட்ரைக் மான்சஸ்டர் சிட்டியின் வெற்றியை உறுதி செய்தது.

பில் ஃபோடன்
போட்டியின் போது எர்லிங் ஹாலண்ட் தனது வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டினார். 52வது நிமிடத்தில் அவரின் கோல் கிளப்பின் 300வது சர்வதேச கோலாக மாறியது.
டுசன் விளாஹோவிக் 84வது நிமிடத்தில் ஜுவென்டஸின் ஆறுதல் கோலை அடித்தார். இறுதியில் 5-2 என்ற கணக்கில் மான்சஸ்டர் சிட்டி வெற்றியைப் பதிவு செய்தது.
- இன்டர் மிலன் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
- டார்ட்மென்ட் (ஜெர்மனி) 1-0 என்ற கோல் கணக்கில் உல்சானை (கொரியா) தோற்கடித்தது.
சா்வதேச கால்பந்து கூட்டமைப்பு சாா்பில் கிளப் அணிகளுக்கான 21-வது உலககோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்திய நேரப்படி இன்று காலை 'இ' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் இன்டர்மிலன் (இத்தாலி) -ரிவர் பிளேட் ( அர்ஜென்டினா) அணிகள் மோதின. இதில் இன்டர் மிலன் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் மோன்டேரி (மெக்சிகோ) 4-0 என்ற கோல்கணக்கில் உர்வாவை (ஜப்பான்) தோற்கடித்தது. இந்த பிரிவில் இன்டர்மிலன் 7 புள்ளிகளுடனும், மோன்டேரி 5 புள்ளிகளுடனும் முதல் 2 இடங்களை பிடித்து 2-வது சுற்றுக்கு தகுதிபெற்றன.
எப் பிரிவில் நடந்த ஆட்டங்களில் டார்ட்மென்ட் (ஜெர்மனி) 1-0 என்ற கோல் கணக்கில் உல்சானை (கொரியா) தோற்கடித்தது. புளூமிமெனன்ஸ் ( பிரேசில்) -மாமெலோடி சன்டவுண்ஸ் (தென் ஆப்பிரிக்கா ) அணிகள் மோதிய ஆட்டம் கோல் எதுவுமின்றி டிரா ஆனது. இந்த பிரிவில் டார்ட்மென்ட் 7 புள்ளிகளுடனும், புளூமிமெனன்ஸ் 5 புள்ளிகளுடனும் முதல் 2 இடங்களை பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
- கிளப் அணிகளுக்கான 21-வது உலக கோப்பை போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
- ‘டி’ பிரிவில் பிளமென்கோ 7 புள்ளியுடனும், செல்சியா 6 புள்ளியுடனும் 2-வது சுற்றுக்கு முன்னேறின.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சாா்பில் கிளப் அணிகளுக்கான 21-வது உலக கோப்பை போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 'டி' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் செல்சியா (இங்கிலாந்து), 3-0 என்ற கோல் கணக்கில் எஸ்பெரன்ஸ் ஸ்போட்டிவ்வை (துனிசியா) தோற்கடித்தது. பிளமென்கோ (பிரேசில்)-லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா) மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இந்த பிரிவில் பிளமென்கோ 7 புள்ளியுடனும், செல்சியா 6 புள்ளியுடனும் 2-வது சுற்றுக்கு முன்னேறின.
'சி' பிரிவில் இருந்து பெனிபிகா (போர்ச்சுக்கல்) பேயர்ன் முனிச் (ஜெர்மனி) முதல் 2 இடங்களை பிடித்து 'நாக் அவுட்' சுற்றுக்கு தகுதி பெற்றன. பெனிபிகா அணி 1-0 என்ற கணக்கில் பேயர்ன் முனிச்சை வீழ்த்தியது. ஆக்லாந்து சிட்டி-போகா ஜானியார்ஸ் மோதிய ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது.
- கிளப் அணிகளுக்கான 21-வது உலககோப்பை போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது
- இதில் பங்கேற்று உள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டன.
புளோரிடா:
சா்வதேச கால்பந்து கூட்டமைப்பு சாா்பில் கிளப் அணிகளுக்கான 21-வது உலககோப்பை போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று உள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்திய நேரப்படி இன்று காலை 'ஏ' பிரிவில் நடந்த ஆட்டத்தில் லியோனல் மெஸ்சி தலைமையிலான இண்டர்மியாமி (அமெரிக்கா)-பால்மீராஸ் (பிரே சில்) அணிகள் மோதின. இந்த போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. இதே பிரிவில் போர்டோ (போர்ச்சுக்கல்)-அல்-அஹ்லி (எகிப்து) மோதிய ஆட்டமும் 4-4 என்ற கணக்கில் 'டிரா' ஆனது.
பால்மிராஸ், இண்டர்மியாமி அணிகள் 1 வெற்றி, 2 டிராவுடன் 4 புள்ளிகள் பெற்று முதல் இடங்களை பிடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறின.
'பி' பிரிவில் நடந்த ஆட் டத்தில் பி.எஸ்.ஜி.(பிரான்ஸ்) 2-0 என்ற கணக்கில் சியாட்டில் சவுண்டர்சையும் (அமெரிக்கா), அட்லெடிகோ மாட்ரீட் (ஸ்பெயின்) 1-0 என்ற கணக்கில் போட்டா போகோவும் (பிரேசில்) தோற்கடித்தன.
பி.எஸ்.ஜி., போடா போகோ அணிகள் 6 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. கோல்கள் அடிப்படையில் அட்லெடிகோ மாட்ரீட் வாய்ப்பை இழந்து வெளியேறியது.
- நடுகள வீரரான அவர் அந்த கிளப் அணிக்காக 197 ஆட்டங்களில் ஆடி 57 கோல்கள் அடித்துள்ளார்.
- இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை புளோரியன் பெற்றார்.
லிவர்பூல்:
ஜெர்மனி கால்பந்து அணியின் இளம் நட்சத்திர வீரரான புளோரியன் விர்ட்ஸ் கிளப் போட்டிகளில் அங்குள்ள பேயர் லெவர்குசென் அணிக்காக விளையாடி வந்தார். நடுகள வீரரான அவர் அந்த கிளப் அணிக்காக 197 ஆட்டங்களில் ஆடி 57 கோல்கள் அடித்துள்ளார். அவரை இங்கிலாந்து பிரிமீயர் லீக் போட்டியில் அங்கம் வகிக்கும் முன்னணி கிளப்பான லிவர்பூல் தன்வசப்படுத்த முயற்சித்து வந்தது.
இரு கிளப் நிர்வாகத்துக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இதன்படி பேயர் லெவர்குசென் கிளப்பிடம் இருந்து 22 வயதான புளோரியனை ரூ.1,351 கோடிக்கு லிவர்பூல் கிளப் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன் மூலம் இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை புளோரியன் பெற்றார். அத்துடன் ஒட்டுமொத்தத்தில் அதிக தொகைக்கு வசப்படுத்தப்பட்ட 4-வது வீரர் ஆவார். அவர் 5 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- ‘சி’ பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் இன்டர்மிலன் இத்தாலி-உர்வா ரெட் டயமண்ட் (ஜப்பான்) அணிகள் மோதின.
- இதில் இன்டர்மிலன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
கிளப் அணிக்களுக்கான 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகளும் 8 பிரிவாக பரிக்கப்பட்டுள்ளன. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'நாக் அவுட்' சுற்றுக்கு தகுதி பெறும்.
'சி' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் இன்டர்மிலன் இத்தாலி-உர்வா ரெட் டயமண்ட் (ஜப்பான்) அணிகள் மோதின. இதில் இன்டர்மிலன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி பெற்ற முதல் வெற்றியாகும். முதல் ஆட்டத்தில் மான்டெரி அணியை 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. இதே பிரிவில் ரிவர் பிளேட்-மான்டெரி அணிகள் மோதிய ஆட்டம் கோல் எதுவுமின்றி டிரா ஆனது.
'இ' பிரிவில் உர்வா அணி 2 தோல்வியுடன் வெளியேறியது. ரிவர் பிளேட் (அர்ஜடென்னா) இன்டர்மிலன் அணிகள் தலா 4 புள்ளிகளுடனும், மான்டெரி 2 புள்ளிகளுடனும் உள்ள கடைசி லீக் ஆட்டத்தில் இன்டர்மிலன்-ரிவர் பிளேட், மான்டெரி (மெக்சிகோ)-உர்வா அணிகள் மோதுகின்றன.
எப் பிரிவில் பிரேசிலின் புளுமென்சி அணி 4-2 என்ற கோல் கணக்கில் உல்சான் அணியை (கொரியா) வீழ்த்தியது.
இேத பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் டார்ட்மெண்ட் (ஜெர்மனி) 4-3 என்ற கோல் கணக்கில் மாமெலோடி தென் ஆப்பிரிக்கா அணியை தோற்கடித்தது.
புளுமென்சி, டார்ட்மென்ட் தலா 4 புள்ளிகளும், மாமெலோடி 3 புள்ளியுடன் உள்ள உல்சான் அணி வெளியேற்றப்பட்டது.
- பிபா உலக கோப்பைக்கான கிளப் கால்பந்து போட்டி அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் இன்று தொடங்கியது.
- லியோனல் மெஸ்சியின் இண்டர்மியாமி-அல்-அஹ்லி (குரூப் ‘ஏ’) அணிகள் முதல் ஆட்டத்தில் விளையாடினர்.
பிபா உலக கோப்பைக்கான கிளப் கால்பந்து போட்டி அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை தொடங்கியது. இதில் 32 கிளப்புகள் பங்கேற்கின்றன.
நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்சியின் இண்டர்மியாமி-அல்-அஹ்லி (குரூப் 'ஏ') அணிகள் முதல் ஆட்டத்தில் விளையாடினர். இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. இண்டர்மியாமி வெற்றி முடியாமல் டிரா செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மெஸ்சி உள்ளிட்ட இண்டர்மியாமி வீரர்கள் அடித்த கோல் வாய்ப்பை அல் அஹ்லி கோல்கீப்பர் தடுத்து விட்டார்.
இன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பேயன்-ஆக்லார்ப் சிட்டி அணிகள் மோதுகின்றன. நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் பி.எஸ்.ஜி. அட்லெடிகோ மார்ட்ரீட் அணிகளும் அதிகாலை 3.30 மணிக்கு போர்ட்போ-பால்மிராஸ் அணிகளும் காலை 7.30 மணிக்கு பாடோ போர்சோ-சியாட்டில் சவுண்டர்ஸ் அணிகளும் மோதுகின்றன.
- புளோரியன் விர்ட்ஸ் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்.
- பேயர் லெவர்குசன் அணிக்காக விளையாடி வருகிறார்.
இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று லிவர்பூல். இந்த அணி ஜெர்மனியை சேர்ந்த அட்டாக் மிட்பீல்டர் புளோரியன் விர்ட்ஸை 157 மில்லியன் டாலர் கொடுத்து வாங்க ஒப்புக்கொண்டுள்ளது.
தற்போது புளோரியன் விர்ட்ஸ் பேயர் லெவர்குசன் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணிக்கு டிரான்ஸ்பர் கட்டணமாக இந்த தொகையை செலுத்த இருக்கிறது லிவர்பூல். இதன் மூலும் 100 மில்லியன் பவுண்ட்ஸ்க்கும் அதிகமான விலைக்கு டிரான்ஸ்பர் ஆன வீரர்கள் பட்டியலில் புளோரியன் விர்ட்ஸ் இணைய இருக்கிறார்.
செல்சி அணி என்சோ பெர்னாண்டஸை கடந்த 2023-ல் 106.7 பவுண்ட்ஸ்க்கு ஒப்பந்தம் செய்தது. பின்னர் 115 மில்லியன் பவுண்ட்ஸ்க்கு மொய்சஸ் கெய்சிடோவை ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.
- மார்ச் 26, 2026 அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது.
- 2026 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டம் உட்பட ஐந்து போட்டிகள் நடத்தும்.
மெக்சிகோ நகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கோப்பைக்காக நவீனப்படுத்தப்பட்டு மார்ச் 26, 2026 அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது.
மேம்பட்ட காற்றோட்டம் உள்ளிட்ட அமைப்புடன் கூடிய புதிய ஹைபிரிட் ஆடுகளம் அமைக்கப்படுகிறது.
மைதானத்தில் புதிய லாக்கர் அறைகள் கட்டப்படுகின்றன. லிஃப்ட், விருந்தோம்பல் பகுதிகள், பெரிய LED திரைகள், மேம்படுத்தப்பட்ட ஓய்வறைகள், CCTV கண்காணிப்பு மற்றும் புதிய ஒலி அமைப்பு ஆகியவை நிறுவப்பட உள்ளன.

மேலும் மைதானத்தின் இருக்கைகள் அதிகரிக்கப்பட உள்ளன. இந்த மைதானத்தில் 2026 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டம் உட்பட ஐந்து போட்டிகள் நடத்தும்.
இந்த புதுப்பித்தல்கள் அஸ்டெகா மைதானத்தை உலகத் தரம் வாய்ந்த மைதானமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.