என் மலர்tooltip icon

    பிரேசில்

    • பராகுவே-பிரேசிலை இணைக்கும் பாலம் 2022-ல் கட்டி முடிக்கப்பட்டது.
    • இரு நாடுகளின் உறவில் நிலவிய சிக்கலால் இப்பாலம் திறக்கப்படவில்லை.

    பிரேசிலியா:

    தென் அமெரிக்க நாடுகளான பராகுவே மற்றும் பிரேசிலை இணைக்கும் விதமாக 2022-ம் ஆண்டு பாலம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இரு நாடுகளின் உறவில் நிலவிய சிக்கல் காரணமாக இந்தப் பாலம் திறக்கப்படவில்லை.

    இந்நிலையில், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா கலந்த்கொண்டு இந்தப் பாலத்தை தற்போது திறந்து வைத்தார்.

    பரானா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் ஃபோஸ் டு லுகா மற்றும் பிரெசிடென்ட் பிரான்கோ நகரங்களை இணைக்கிறது.

    பழைய பாலத்தின் நெரிசலில் இருந்து கனரக வாகனங்களை விடுவிக்க இந்தப் பாலம் உறுதுணையாக இருக்கும். மேலும், தென் அமெரிக்காவின் அட்லாண்டிக்-பசிபிக் வர்த்தகப் பாதைக்கு உதவுகிறது.

    • பிரேசிலில் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சனரோ ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டார்.
    • ஆட்சி கவிழ்ப்பு சதியில் தண்டனை பெற்ற முதல் பிரேசில் அதிபர் இவர் ஆவார்,

    பிரேசிலியா:

    பிரேசிலில் 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜெயிர் போல்சனரோ (70). லிபரல் கட்சியைச் சேர்ந்த இவர் 2022-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார்.

    இதில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தேர்தலில் தான் தோல்வி அடைந்ததை போல்சனரோ ஒப்புக் கொள்ளவில்லை.

    எனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மீது சந்தேகம் இருப்பதாக கூறி ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது அரசு கட்டிடங்களைக் குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்தினர்.

    ஆனால் ராணுவத்தின் முயற்சியால் இந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. இதனையடுத்து ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு தலைமை தாங்கியதாக ஜெயிர் போல்சனரோவை கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணை பிரேசில் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் போல்சனரோவுக்கு 27 ஆண்டு தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.

    ஆட்சி கவிழ்ப்பு சதியில் தண்டனை பெறும் முதல் பிரேசில் அதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, இந்த தண்டனையை எதிர்த்து புதிய மேல்முறையீட்டு மனுவை போல்சனரோ தாக்கல் செய்திருந்தார்.

    இந்நிலையில், போல்சனரோவின் மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    • வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    • கடும் சூறாவளி காற்று வீசுவதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    தெற்கு பிரேசிலில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீட்டர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை நேற்று வீசிய பலத்த சூறாவளிக் காற்றால் கீழே விழுந்து நொறுங்கியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    குவைபா நகரில் பரபரப்பான சாலையில் வாகனங்கள் தொடர்ந்து பயணிக்கும் நேரத்தில் சுதந்திர தேவி சிலை கீழே விழுந்து நொறுங்கியதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    முன்னதாக கடும் சூறாவளி காற்று வீசுவதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிலையை அதே இடத்தில் நிறுவவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 



    • மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 13 லட்சம் குடும்பங்கள் இருளில் சிக்கின.
    • இதன் காரணமாக பிரேசிலில் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கியது.

    பிரேசிலியா:

    பிரேசிலின் சாவோ பாலோ மாகாணத்தில் வெப்ப மண்டல புயல் உருவானது. அப்போது பலத்த காற்று வீசியதால் அங்கு ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.

    எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இதனால் சுமார் 13 லட்சம் குடும்பங்கள் இருளில் சிக்கித் தவித்தன. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை அங்கு முடங்கியது.

    அதேபோல், புயல் காரணமாக விமானங்கள் பறப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. எனவே 400 விமானங்கள் அங்கு ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

    • அப்போது பார் பெல் அவரது கைகளில் இருந்து நழுவி நேரடியாக அவரது மார்பில் விழுந்தது.
    • சில நொடிகளில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

    பிரேசில் நாட்டின் ஒலிண்டா நகரில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் ரொனால்ட் மாண்டினீக்ரோ (55) என்ற நபர் கடந்த மாதம் 1 ஆம் தேதி பெஞ்ச் பிரஸ் பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

    அப்போது பார் பெல் அவரது கைகளில் இருந்து நழுவி நேரடியாக அவரது மார்பில் விழுந்தது

    அவர் உடனடியாக அதை பக்கவாட்டில் அகற்றி எழுந்து நின்றார். சில நொடிகளில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

    ஜிம் ஊழியர்கள் அவருக்கு முதலுதவி அளித்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாண்டினீக்ரோ உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    • சிங்கம் கடித்து குதறியதில் படுகாயம் அடைந்த மச்சாடோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • மச்சாடோவுக்கு சில மனநல பிரச்சினைகள் இருந்துள்ளது. இதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

    பிரேசிலின் ஜோவா பெசோவா நகரில் ஜூபோடானியோ அருடா கமாரா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு கெர்சன் டி மெலோ மச்சாடோ என்ற 19 வயது வாலிபர் சென்றார்.

    அவர் திடீரென்று சிங்கம் அடைக்கப்பட்டிருந்த கூண்டின் வேலி மீது ஏறினார். பின்னர் அங்கிருந்த மரம் வழியாக கூண்டுக்குள் இறங்க முயற்சித்தார். இதை பார்த்த சிங்கம் மரத்தை நோக்கி சென்று அந்த வாலிபரை தாக்கி இழுத்து சென்றது. சிங்கம் கடித்து குதறியதில் படுகாயம் அடைந்த மச்சாடோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மச்சாடோவுக்கு சில மனநல பிரச்சினைகள் இருந்துள்ளது. இதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நீண்ட காலமாக சிங்கத்தை அடக்கும் நபராக மாற விரும்பி உள்ளார்.

    ஆப்பிரிக்காவுக்கு சென்று சிங்கங்களை பராமரிக்கும் பணியில் சேர வேண்டும் என்று விரும்பிய அவர் அதற்காக ஒரு முறை விமானத்தின் தரையிறங்கும் கியரில் ஒளிந்து கொண்டு பயணம் செய்ய முயன்றார் என்று அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் தெரிவித்தார்.

    • எட்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் டெங்குவுக்கு எதிராக இந்த தடுப்பூசி 91.6 சதவீதம் பயனுள்ளதாக இருந்தது.
    • உலகளவில் 14.6 மில்லியன் பாதிப்புகளும் 12,000 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    பிரேசில் அரசாங்கம் புதன்கிழமை உலகின் முதல் ஒற்றை டோஸ் டெங்கு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

    சாவ் பாலோவில் உள்ள புகழ்பெற்ற புட்டான்டன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'புட்டான்டன்-டிவி' எனப்படும் இந்த தடுப்பூசி 12 முதல் 59 வயதுடையவர்களுக்கு செலுத்தப்பட தகுந்தது.

    தற்போது கிடைக்கக்கூடிய டெங்கு தடுப்பூசிக்கு மூன்று மாத இடைவெளியில் இரண்டு டோஸ்கள் தேவைப்பட்ட நிலையில், இந்த புதிய தடுப்பூசி ஒரு டோஸ் போதுமானது.

    பிரேசிலில் 16,000 தன்னார்வலர்களிடம் எட்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் கடுமையான டெங்குவுக்கு எதிராக இந்த தடுப்பூசி 91.6 சதவீதம் பயனுள்ளதாக இருந்தது.

    2024 ஆம் ஆண்டில் உலகளவில் 14.6 மில்லியன் பாதிப்புகளும் 12,000 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் பாதி பிரேசிலில் நிகழ்ந்தன. 

    • பிரேசிலில் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சனரோ ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டார்.
    • ஆட்சி கவிழ்ப்பு சதியில் தண்டனை பெறும் முதல் பிரேசில் அதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரேசிலியா:

    பிரேசிலில் 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜெயிர் போல்சனரோ (70). லிபரல் கட்சியைச் சேர்ந்த இவர் 2022-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார்.

    இதில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தேர்தலில் தான் தோல்வி அடைந்ததை போல்சனரோ ஒப்புக் கொள்ளவில்லை.

    எனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மீது சந்தேகம் இருப்பதாக கூறி ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது அரசு கட்டிடங்களைக் குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்தினர்.

    ஆனால் ராணுவத்தின் முயற்சியால் இந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. இதனையடுத்து ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு தலைமை தாங்கியதாக ஜெயிர் போல்சனரோவை கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணை பிரேசில் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் போல்சனரோவுக்கு 27¼ ஆண்டுகள் தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

    ஆட்சி கவிழ்ப்பு சதியில் தண்டனை பெறும் முதல் பிரேசில் அதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. எனவே அடுத்த வாரம் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், போல்சனரோவை முன்னதாகவே கைதுசெய்த போலீசார் பிரேசிலியாவில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கையாக அங்குபோலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • சுமார் 200 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
    • மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்பட இந்திய குழுவில் சுமார் 20 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

    பிரேசிலின் பெலெம் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் COP30 காலநிலை உச்சிமாநாட்டு அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் காயமடைந்தனர்.

    சுமார் 200 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்கு நிதி உதவி வழங்குதல் போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து ஒருமித்த கருத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தனர்.

    கடந்த 2 வாரங்களாக நடந்து வந்த மாநாடு நிறைவடைவதற்கு 24 மணி நேரத்திற்குள் நேற்று இரவு மாநாட்டு அரங்கில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த இடத்தில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்பட இந்திய குழுவில் சுமார் 20 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

    மேலும் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த பிரதிநிதிகள் உள்பட 50,000 க்கும் மேற்பட்டோர் தீப்பிடித்து புகை பரவியதை கண்டு அதிர்ந்து அங்கிருந்து அவசரமாக வெளியேறினர்.

    அரங்கின் நுழைவுவாயிலுக்கு அருகில் உள்ள ப்ளூஸோன் என்றழைக்கப்படும் இடத்தில் மின் சாதனங்களில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

     ஆறு நிமிடங்களுக்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

    இந்த விபத்தில் 21 பேர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பிரேசில் சுற்றுலா அமைச்சர் செல்சோ சபினோ தெரிவித்தார். 

    • இந்த ஆபரேஷனில் 2,500 காவல்துறை மற்றும் இராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.
    • இந்த நடவடிக்கையில் 113 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட்டுள்ளனர்.

    பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் "ரெட் கமாண்ட்" என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக காவல்துறை நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) அதிரடி ஆபரேஷன் மேற்கொண்டது.

    ரியோ டி ஜெனிரோ நகரில் கோம்ப்லெக்ஸோ டி அலேமாவோ மற்றும் பென்ஹா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த ஆபரேஷனில் 2,500 காவல்துறை மற்றும் இராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.

    அப்போது, போதை பொருள் கும்பலுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. மேலும் கும்பல் மீது ஹெலிக்கப்பட்டர்கள் மற்றும் கவச வாகனங்கள் கொண்டு அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த சிறப்பு ஆபரேஷனில் நான்கு காவல்துறையினர் உட்பட 119 பேர் உயிரிழநதனர் என அந்நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையில் 113 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 93 துப்பாக்கிகள் மற்றும் 500 கிலோவுக்கும் கூடுதலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    இதற்கிடையே இந்த நடவடிக்கையை கண்டித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பு இந்த மரணங்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரியுள்ளன.

     இந்தத் ஆபரேஷன், அடுத்த வாரம் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவிருக்கும் சி40 சர்வதேச மேயர்கள் மாநாடு மற்றும் ஐக்கிய நாடுகளின் காலநிலை உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • சலோவா நகர் அருகே சென்றபோது அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
    • இதனால் சாலையோரம் இருந்த மணல்மேட்டில் மோதி பஸ் கவிழ்ந்தது.

    பிரேசிலியா:

    பிரேசிலின் பெர்னாம்புகோ மாகாணம் ப்ரூமாடோ நகரம் சிறந்த சுற்றுலா தலமாகத் திகழ்கிறது. அங்கு சுற்றுலா பயணிகள் 30 பேர் ஒரு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.

    சலோவா நகர் அருகே சென்றபோது அந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையோரம் இருந்த மணல்மேட்டில் மோதி பஸ் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    படுகாயம் அடைந்தவர்களை மீட்புப் படையினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    சுற்றுலா சென்ற பயணிகள் 17 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • போல்சனாரோ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
    • அர்ஜென்டினாவுக்கு தப்பியோடும் அவரின் முயற்சியும் தோல்வி அடைந்தது.

    பிரேசில் நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாத சிறைத்தண்டனை விதிதக்கப்படட்டது.

    கடந்த 2022ம் ஆண்டு நடந்த பிரேசில் தேர்தலில், அப்போதைய அதிபராக இருந்த போல்சனாரோ தோல்வியடைந்தார்.

    தேர்தலில் முறைகேடு நடந்ததால் தான் தோல்வி அடைந்ததாக குற்றம்சாட்டிய போல்சனாரோ, புதிய அரசு அமைவதை தடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதையடுத்து, தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்தல், ஆட்சியை கவிழ்க்க சதி செய்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போல்சனாரோ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இடையில் அர்ஜென்டினாவுக்கு தப்பியோடும் அவரின் முயற்சியும் தோல்வி அடைந்தது.

    இந்நிலையில் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வில் 4 நீதிபதிகள் அவரை குற்றவாளி என தீர்ப்பளித்ததால் அவருக்கு தண்டனை விதிக்கப்ட்டுள்ளது.

    தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் போல்சனாரோ தீர்ப்பை எதிர்த்து 11 நீதிபதிகள் அமர்வுக்கு மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

    ×