என் மலர்
நீங்கள் தேடியது "bus accident"
- பஸ்களில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
- விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுராந்தகம்:
மதுராந்தகத்தில் இருந்து எல்.எண்டத்தூர் வழியாக காஞ்சிபுரம் நோக்கி தனியார் பஸ் சென்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
மதுராந்தகம் அருகே அய்யனார் கோவில் என்ற இடத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற போது, தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் பஸ் திடீரென பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. பஸ்களில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மதுராந்தகம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விபத்தில் சிக்கிய 2 பஸ்களையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவர்களில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- முதற்கட்ட தகவல்படி முன்பக்க டயர் வெடித்ததே விபத்துக்கான காரணம் என்று தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஆரஞ்சு கவுண்டியில் உள்ள நெடுஞ்சாலையில் உயர்நிலைப் பள்ளி இசைக்குழு மாணவர்களை ஏற்றுச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது.
இந்த பேருந்தில் 40 பள்ளி மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், 43 வயதான கினா பலேட்டியர் என்ற நபரும், 77 வயதான பீட்ரைஸ் பெர்ராரி என்ற நபரும் உயிரிழந்தனர். மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த நியூயார்க் மாநில காவல்துறையின் லெப்டினன்ட் கர்னல் ரிச்சர்ட் எல் மஸ்ஸோன்," முதற்கட்ட தகவல்படி முன்பக்க டயர் வெடித்ததே விபத்துக்கான காரணம் என்று தெரியவந்துள்ளது என்றார்.
- பின்பகுதியில் மற்றொரு பேருந்து மோதியால் விபத்து ஏற்பட்டது
- பேருந்தில் இருந்த 30 பயணிகள் உயிர்தப்பினர்
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. இது மின்சாரத்தில் இயங்கும் இ-பேருந்தாகும். இந்த பேருந்தில் 30 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த பேருந்து பூந்தமல்லியையடுத்த பாப்பாசத்திரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் மின்சார பேருந்து தீப்பற்றி எரிந்தது. இதனால் பயணிகள் அலறியடித்து கீழே இறங்கி உயிர்தப்பினர்.
இதற்கிடையே அருகில் இருந்தவர்கள், அந்த வழியாக வந்த தண்ணீர் லாரியை மடக்கி, தீயை அணைக்க முயற்சி செய்தனர். தீ கட்டுக்குள் வருவதுபோல் இருந்தது.
பேட்டரியில் இயங்கும் பேருந்து என்பதால், ஸ்பார்க்காகி தீ கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் பேருந்து முழுவதும் எரிந்து சேதமாகியது.
அதனைத்தொடர்ந்து போலீசார் வாகனத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
- பள்ளி பஸ்சில் சிக்கினார்
- போலீசார் விசாரணை
செங்கம்:
செங்கம் அடுத்த தோக்கவாடி பகுதியை சேர்ந்தவர் காசியம்மாள் (வயது 80).
இவர் இன்று காலை செங்கம் புதிய பஸ் நிலையம் அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்த தனியார் பஸ் மூதாட்டி மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே காசியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
- விபத்தில் பலர் காயம் அடைந்துள்ளனர்.
- தரமற்ற மற்றும் பராமரிப்பு இல்லாத ரோடுகளால் விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
அயகுச்சோவா:
பெரு நாட்டில் அயகுச்சோவா பகுதியில் இருந்து ஹூவான்சாயோ என்ற இடத்துக்கு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். திடீரென அந்த பஸ் விபத்தில் சிக்கி கவிழ்ந்தது.
இதில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 24 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.பலர் காயம் அடைந்தனர், பெரு நாட்டை பொறுத்தவரை தரமற்ற மற்றும் பராமரிப்பு இல்லாத ரோடுகளால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்தில் 8 பயணிகள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் இன்று அதிகாலை 40 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தூரில் இருந்து ஜோத்பூருக்கு சென்றுக் கொண்டிருந்த பேருந்து ஒன்று கனமழை காரணமாக வளைவு ஒன்றில் திரும்பியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மாவட்டத் தலைமையகத்திலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள ஃபர்னாகேடி கிராமத்திற்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கச்ரோட் காவல் நிலையப் பொறுப்பாளர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் நடத்துனர் உட்பட இருவர் பேருந்தின் அடியில் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு பயணி சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும், இந்த விபத்தில் 8 பயணிகள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3 பேர் பலி
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வங்காரம் மதுரா ஆவணவாடி ஊராட்சிக்குட்பட்ட காமராஜர் நகரை சேர்ந்தவர் நாவப்பன். இவரது மகன்கள் கன்னியப்பன் (வயது 50), குரு நாதன் (45). அதே பகுதியை சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மகன் ரவி (50).
இவர்கள் 3 பேரும் ஒரே மொபட்டில் காமராஜர் நகரில் இருந்து வந்தவாசி நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்தனர்.
வந்தவாசி - சேத்துப்பட்டு செல்லும் நெடுஞ் சாலையில் வங்காரம் கூட்டு ரோடு பகுதியில் போளூர் நோக்கி சென்று கொண்டிருந்த மினி பஸ் திடீரென மொபட் மீது மோதியது.
இதில் மொபட்டில் வந்த அண்ணன், தம்பி உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னூர் போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த சாலை கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 24). தெருக்கூத்து கலைஞர். திருமணமாகி மனைவி சுகன்யா மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் செல்வம் சாலை கிராமத்தில் இருந்து அரக்கோ ணத்தில் உள்ள மனைவியை பார்ப்பதற்காக நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் அரக் கோணம் சோளிங்கர் ரோடு - ரெயில்வே மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப் போது அரக்கோணத்தில் இருந்து சோளிங்கர் நோக்கி சென்ற தனி யார் தொழிற்சாலை பஸ் எதிர் பாரதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் கீழே விழுந்த செல்வம் பஸ்சில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்வத்தை பரிசோதித்த போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.
இந்த விபத்து குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.
- விபத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
- போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்றபோது அதிகாலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல், பலியானர்வர்களின் உடல்களும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாராந்திர சந்தைக்கு பயணிகளை ஏற்றிச் சென்றபோது விபத்து.
- விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை தொடங்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட ஆப்பிரிக்காவில் உள்ள மொரொக்கோ நாட்டில் உள்ள மத்திய மாகாணமான அஜிலாலில் மிக மோசமான சாலை விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில், 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
அஜிலாலில் உள்ள டெம்னேட் நகரில் நடைபெற்ற வாராந்திர சந்தைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற மினிபஸ் வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை தொடங்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொராக்கோ உள்பட பிற வட ஆப்பிரிக்க நாடுகளின் சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. அந்நாட்டில் உள்ள பல ஏழை குடிமக்கள் கிராமப்புறங்களில் பயணம் செய்ய மினிபஸ்களைப் பயன்படுத்துகின்றனர்.
மொராக்கோவில் ஆண்டுதோறும் சராசரியாக 3,500 சாலை இறப்புகள் மற்றும் 12,000 காயங்கள் பதிவு செய்யப்படுகின்றன. தேசிய சாலை பாதுகாப்பு அமைப்பின்படி, சராசரியாக ஒரு நாளைக்கு 10 இறப்புகள் பதிவாகின்றன.
- மாங்காய்க சிதறி கிடந்தது
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆம்பூர்:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால், லாரி டிரைவர். இவர் இன்று அதிகாலை வேலூரில் இருந்து கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மண்டிக்கு, லாரியில் மாங்காய்களை லோடு ஏற்றிக்கொண்டு சென்றார்.
ஆம்பூர் நெடுஞ்சாலை யில் சென்றபோது, லாரி மீது பின்னால் வந்த தனியார் பஸ் மோதியது.
இதில் பஸ்சில் பயணம் செய்த 15 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 5 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
விபத்தால் சாலை முழுவதும் மாங்காய் சிதறி கிடந்தது. அதனை பொதுமக்கள் அள்ளி சென்றனர். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.