search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணிகள்"

    • 5 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.
    • பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் கூடுதலாக பேருந்துகளை இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    தாம்பரம் ரயில் நிலையத்தில் 23.07.2024 முதல் 14.08.2024 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 09.30 மணி முதல் பிற்பகல் 13.30 மணி வரையும் மற்றும் இரவு 22.00 மணி முதல் 23.59 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் பல்லாவரம் இரயில் நிலையம் வரையும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் இரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

    எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் 23.07.2024 முதல் 14.08.2024 வரை மேற்குறிப்பிட்ட நேரங்களில் பல்லாவரம் வழியாக கூடுவாஞ்சேரிக்கு தற்போது 60 பேருந்துகள் மூலம் 571 பயண நடைகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் விமான நிலையம் மெட்ரோ முதல் செங்கல்பட்டுக்கு கூடுதலாக 50 பெரிய பேருந்துகளை மா.போ.கழக இயக்க உள்ளது. மற்றும் பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 5 சிற்றுந்துகள் மற்றும் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் முதல் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திற்கு 5 சிற்றுந்துகள் shuttle service-ஆக இயக்க உள்ளது. மேற்குறிப்பிட்ட நாட்களில் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என கூறியுள்ளது.

    • அதிகாலை முதல் காலை 09:20 மணி வரை கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்.
    • கூடுதலாக ரயில்வே பாதுகாப்பு படையினரும் / டிக்கெட் பரிசோதகர்களும் பயணிகளின் உதவிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    தெற்கு ரெயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது,

    ஜூலை 23, 2024 முதல் ஆகஸ்ட் 14, 2024 வரை தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.

    ரத்து செய்யப்பட்ட 55 மின்சார ரயில்கள்


    • அதிகாலை முதல் காலை 09:20 மணி வரை கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்.

    • மதியம் 01:00 மணியிலிருந்து இரவு 10:20 வரை கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்.

    ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில்களுக்கு பதிலாக இயக்கப்படும் சிறப்பு மின்சார ரயில்களின் கால அட்டவணை


    • பயணிகளின் சிரமத்தை குறைப்பதற்காக, பல்லாவரத்திலிருந்து கூடுவாஞ்சேரி வரை இரு மார்க்கங்களிலும் கூடுதல் பேருந்து சேவைகளை இயக்குவதற்கு மாநில போக்குவரத்து துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • ரயில்களின் ரத்து குறித்த விவரங்களை ரயில் நிலைய அறிவிப்பு (Station Announcement) / அறிவிப்பு பலகைகள் மூலமாகவும், மேலும் செய்தித்தாள்கள். டிவி சேனல்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பயணிகள் தெரிந்துகொள்ளலாம்.

    • மேலும், சென்னை எழும்பூர், பல்லாவரம், தாம்பரம், கூடுவாஞ்சேரி ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் உதவி மையம் (Passenger Help Desk) ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

    • கூடுதலாக ரயில்வே பாதுகாப்பு படையினரும் / டிக்கெட் பரிசோதகர்களும் பயணிகளின் உதவிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    • பயணிகளின் வசதிக்காக கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் செங்கல்பட்டிலும், கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களில் இயக்கப்பட உள்ளது.

    • ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக இந்த பராமரிப்புப் பணி நடைபெறுவதன் காரணமாக பயணிகள் தங்கள் பயணத்தை அதற்கேற்றவாறு திட்டமிடும்படி தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் கேட்டுக்கொள்கிறது. பயணிகளுக்கு ஏற்படும்

    சிரமத்திற்கு வருந்துகிறோம்.

    • இயந்திர கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில் அவசரமாக நிறுத்தம்.
    • பசுமை நிறப் பாதையில் செல்லும் மெட்ரோ ரெயில்களில் எந்தவித பிரச்சினையும் இல்லை.

    சென்னை மெட்ரோ ரெயிலில் திடீரென தீர்பொறி பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகள் மத்தியில் கூச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து ரெயில் அவரசாமக நிறுத்தப்பட்டுள்ளது.

    விம்கோ நகர்- விமான நிலையம் வரை செல்லக்கூடிய மெட்ரோ ரெயிலில், உயர்நீதிமன்ற நிறுத்தத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது.

    இயந்திர கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில் அவசரமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ரெயில் நிறுத்தியதை தொடர்ந்து ரெயிலில் பயணித்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீல நிறப் பாதையில் செல்லும் மெட்ரோ ரெயில்கள் 10 நிமிடம் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பசுமை நிறப் பாதையில் செல்லும் மெட்ரோ ரெயில்களில் எந்தவித பிரச்சினையும் இல்லை என மெட்ரோ ரெயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

    • இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து இந்த பிரச்சனை குறித்து பல பயணிகள் புகார் அளித்தனர்.
    • இந்த புகார் தொடர்பாக வடக்கு ரெயில்வே தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.

    டெல்லியில் இருந்து வாரணாசிக்கு சென்ற வந்தே பாரத் ரெயிலில் மேற்கூரையில் இருந்து தண்ணீர் ஒழுகும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து இந்த பிரச்சனை குறித்து பல பயணிகள் புகார் அளித்தனர்.

    இந்த புகார் தொடர்பாக வடக்கு ரெயில்வே தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில், குழாய்களில் ஏற்பட்ட அடைப்புகளில் இந்த நீர்க்கசிவு ஏற்பட்டிருக்கலாம். பயணிகளின் சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று பதிவிட்டுள்ளது.

    இருப்பினும் ரெயிலில் நீர் ஒழுகும் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து நெட்டிசன்கள் ரெயில்வேத்துறையின் அலட்சியத்தை விமர்சித்து வருகின்றனர்.

    • ரெயிலில் தண்ணீர் தெளித்து பயணிகளை இளைஞர்கள் தொந்தரவு செய்தனர்.
    • இதையடுத்து ரெயிலை நிறுத்திய அவர்களில் சிலர் அந்த இளைஞர்களை சரமாரி தாக்கினர்.

    இஸ்லாமாபாத்:

    டிக்டாக் செயலி மூலம் வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடும் பொழுதுபோக்கு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் இதனால் சிக்கல்களிலும் சிலர் சிக்கி கொள்கிறார்கள். இதுபோன்ற ஒரு சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.

    பாகிஸ்தானில் ரெயில்வே தண்டவாளம் அருகே நீர்நிலையில் இளைஞர்கள் சிலர் குளித்துக் கொண்டும், வாகனத்தைக் கழுவி கொண்டும் இருந்தனர்.

    அப்போது அந்தப் பகுதியில் ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதை கவனித்த இளைஞர்கள் பைக்கின் ஆக்சிலேட்டரை திருகி ரெயிலில் செல்பவர்கள் மீது தண்ணீர் தெளித்து விளையாடினர். இதனை அவர்கள் வீடியோவாக பதிவுசெய்தனர்.

    அப்போது திடீரென ரெயில் நின்றது. அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் ரெயிலை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

    ரெயிலில் இருந்து கீழே இறங்கிய பயணிகளில் சிலர் இளைஞர்களை சரமாரி தாக்கினர். மேலும், தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த பைக்கையும் ரெயிலில் ஏற்றிச் சென்றனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் கற்களைக் கொண்டு ரெயில் பெட்டிகள் மீது வீசினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரெஷரைசேஷன் சிஸ்டம் என்ற இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.
    • நடுவானில் சென்று கொண்டிருந்த விமானம் திடீரென கீழே சரிந்தது.

    கொரியன் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சியோலின் இன்சியோன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தைவானில் உள்ள டைசுங் சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்டது. கடந்த ஜூன் 22 ஆம் தேதி, மாலை 4.45 மணிக்கு விமானம் புறப்பட்டது.

    விமானம் புறப்பட்ட 50 நிமிடங்களில் விமானத்தின் காற்றோட்டத்தை சீராக வைத்துக் கொள்ளும் பிரெஷரைசேஷன் சிஸ்டம் (pressurization system) என்ற இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக விமானம் 15 நிமிடங்களில் 26,900 அடி கீழே சரிந்தது. நடுவானில் சென்று கொண்டிருந்த விமானம் திடீரென கீழே சரிந்ததால், அதில் பயணம் செய்தவர்கள் அலறினர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து பயணிகளுக்கு சுவாச கோளாறு ஏற்படுவதை தவிர்க்க விமானத்தில் இருந்த ஆக்சிஜன் முகக்கவசங்கள் விடுவிக்கப்பட்டன. பயணிகள் முகக்கவசங்களை அணிந்து கொண்டதால், அவர்களுக்கு ஏற்பட இருந்த பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.

    இதையடுத்து விமானம் டைசுங் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கிருந்து விமானத்தில் பயணம் செய்த 17 பயணிகளுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு யாருக்கும் பெரிய பாதிப்பு ஏற்படாத காரணத்தால் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கொரியன் ஏர் சார்பில் பயணிகளிடம் மன்னிப்பு கோரப்பட்டது. மேலும், இந்த சம்பவத்தில் அனைத்து வகை விசாரணைக்கும் தயார் என்றும் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்கியுள்ளோம். அவர்களுக்கு தேவையான தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    • சென்னையில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.
    • பயணிகள் பாதுகாப்பிற்காக தெற்கு ரயில்வே பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    சென்னை:

    சென்னையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மின்சார ரெயில்கள் ஒருநாள் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது ரெயில் சேவையில் தாமதம் ஏற்பட்டாலோ ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

    பயணிகள் பாதுகாப்பிற்காகவும், ரெயிலை பாதுகாப்பாக இயக்கவும் தெற்கு ரெயில்வே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும். பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்கும் வகையில் பெரும்பாலும் இரவு நேரங்களில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.

    பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படும் சேவைகள் குறித்து முன்கூட்டியே பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டு விடுவதும் வழக்கம்.

    இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவை இன்று பகுதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய மின்சார ரயில்கள், சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    • கடந்த 21-ந்தேதி ஒரு குழுவாக மலையேற்றத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் சிறிய மலை முகடு ஒன்றில் ஏறுகின்றனர்.
    • 2 பேர் காணாமல் போய் உள்ளனர் என அவர் கூறும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுவது பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது. கூட்ட நெரிசல் காரணமாக அங்கு விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மலையேற்ற பயிற்சியாளரான விநாயக் மல்லா என்பவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அதில், கடந்த 21-ந்தேதி ஒரு குழுவாக மலையேற்றத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் சிறிய மலை முகடு ஒன்றில் ஏறுகின்றனர். அந்த முகடு அனைவரின் எடையையும் தாங்க முடியாமல் சரிந்து விழுகிறது. இதில் 2 பேர் காணாமல் போய் உள்ளனர் என அவர் கூறும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதே போல இந்தியாவை சேர்ந்த ராஜன் டிவிடேடி என்பவரும் எவரெஸ்ட் சிகரத்தில் மக்கள் கூட்டம், கூட்டமாக மலையேறும் காட்சிகளை பகிர்ந்துள்ளார். அதில், 'எவரெஸ்ட் சிகரம் ஒரு ஜோக்கர் அல்ல', மக்கள் கூட்டம், கூட்டமாக மலையேறி வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

    • இணையதளத்தில் வித்தியாசமான, சுவாரஸ்யமான சில நேரங்களில் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட அமானுஷ்யமான வீடியோக்கள் உலா வருவது வழக்கம்.
    • ஜம்முவில் இருந்து கத்துவாவிற்கு செல்லும் ரயிலில் உள்ள பொதுப் பெட்டியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் திடீரென வினோதமாக நடந்துகொள்ளத் தொடங்குகின்றனர்.

    இணையதளத்தில் வித்தியாசமான, சுவாரஸ்யமான சில நேரங்களில் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட அமானுஷ்யமான வீடியோக்கள் உலா வருவது வழக்கம். அந்த வகை வீடியோக்கள் நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்தைக் கிளப்பத் தவறுவதில்லை.

    வியக்க வைக்கும் இந்த வீடியோக்களின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளும் எழாமலில்லை. அந்த வகையில் தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஜம்முவில் இருந்து கத்துவாவிற்கு செல்லும் ரயிலில் உள்ள பொதுப் பெட்டியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் திடீரென வினோதமாக நடந்துகொள்ளத் தொடங்குகின்றனர்.

    அவர்களது முக பாவனைகள் வினோதமாக மாறுகிறது. தங்களது உடலை வளைத்து உறுமுவது போன்ற சத்தத்தை வெளியிடுகின்றனர். பேய் பிடித்தது போல அவர்கள் நடந்துகொள்கின்றனர். ஆனால் அருகில் உள்ளவர்கள் எந்த பயமும் இல்லாமல் தங்களது இடங்களிலேயே அமர்ந்து அந்த பெண்களை வேடிக்கை பார்க்கின்றனர்.

     

    இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களும் அந்த பெண்களை நம்புவதாக இல்லை. டிக்கெட் எடுக்காமல் டிடிஇ இடமிருந்து தப்பிக்கவே இப்படியொரு நாடகத்தை அந்த பெண்கள் அரங்கேற்றியுள்ளனர். அதனாலேயே அருகில் உள்ளவர்கள் பயப்படவில்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • சென்னையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
    • ஆனால் அவ்வப்போது பயணிகள் பாதுகாப்பிற்காகவும் ரயிலை பாதுகாப்பாக இயக்கவும் தெற்கு ரயில்வே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும்.

    சென்னையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மின்சார ரெயில்கள் ஒரு நாள் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது ரெயில் சேவையில் தாமதம் ஏற்பட்டாலோ ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோது வழக்கம்.

    ஆனால் அவ்வப்போது பயணிகள் பாதுகாப்பிற்காகவும் ரெயிலை பாதுகாப்பாக இயக்கவும் தெற்கு ரெயில்வே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும். இது குறித்து பயணிகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படுவதுடன் பயணிகளுக்கு பெரிய சிரமத்தை தவிர்க்கும் வகையில் பெரும்பாலும் இரவு நேரங்களில் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படும் சேவைகள் குறித்து முன்கூட்டியே பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டு விடுவதும் வழக்கம்.

    இந்நிலையில் செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில் இடையே இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சார ரெயில் சேவை இயங்காது. சென்னை கடற்கரையில் இருந்து நண்பகல் 12.40- க்கு புறப்படும் மின்சார ரெயில் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் இதனை கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக தங்களது பயணத்தை திட்டமிடவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    • விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில், லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை என்பது தெரியவந்தது.
    • விமானியின் திறமை மிகவும் அற்புதமானது. எங்களுக்கு சிறிய காயம் கூட ஏற்படவில்லை.

    நியூசவுத்வேல்ஸ்:

    ஆஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸ் நகரில் உள்ள நியூகேஸில் விமான நிலையத்தில் இருந்து போர்ட் மெக்குவாரிக்கு சிறிய ரக விமானம் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது.

    இந்த விமானத்தில் விமானி, 60 வயது முதியவர் மற்றும் 65 வயது மூதாட்டி என மொத்தம் 3 பேர் பயணித்தனர். முதியவருக்கு பிறந்தநாள் கொண்டாட அவர்கள் சென்றனர்.

    இந்த நிலையில் விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில், லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை என்பது தெரியவந்தது.

    உடனடியாக விமானத்தின் நிலைமை குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானம், சிறிது நேரம் விமான நிலையத்தையே சுற்றி பறந்தது. பின்னர் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து மீட்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து விமானத்தில் பயணித்த முதியவர் கூறியதாவது:-

    எங்களுக்கு சூழல் புரிந்தது. நடுவானில் பறக்கிறோம். லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை. எங்களால் கீழே இறங்க முடியாது. அடுத்து சில நிமிடங்களில் நாங்கள் உயிரோடு இருப்போமா? என்று கூட தெரியாது. இந்த நேரத்தில் விமானியால் மட்டுமே எங்களை காப்பாற்ற முடியும். அதை அவர் செய்தும் காட்டினார்.

    எங்கள் விமானம் விமான நிலையத்தை 2 மணி நேரமாக சுற்றி வந்தது. காரணம் விமானத்தின் எரிபொருள் காலியாக வேண்டும். லேண்டிங் கியர் இல்லாத நேரத்தில், தரை யிறங்கும் போது விமானத்தின் இறக்கைகள்தான் முதலில் அடிவாங்கும். இறக்கையில்தான் எரிபொருள் இருக்கிறது. அதனால் தரையிறங்கும் போது தீப்பற்றி எரிய வாய்ப்பு உள்ளது.

    எனவே விமானி எரிபொருள் முழுவதையும் தீர்த்துவிட்டு, கீழே இறங்க முயன்றார். அவர் விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார். விமானியின் திறமை மிகவும் அற்புதமானது. எங்களுக்கு சிறிய காயம் கூட ஏற்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 53 வயதான விமானி பீட்டர் ஷாட்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    • காயம் அடைந்தவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • விபத்து காரணமாக கடலூர்-புதுச்சேரி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதி 29 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

    சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி அரசு பஸ்பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. கடலூர் அருகே உள்ள ரெட்டிச்சாவடி கரிக்கன் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அரசு பஸ் திடீரென்று சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் பயங்கர சத்தத்துடன் மோதி ஏறி நின்றது.

    அந்த சமயம் அரசு பஸ்சுக்கு பின்னால் வந்த தனியார் ஆம்னி பஸ் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ்சின் பின்புறம் மோதியது. அப்போது பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறினார்கள். இத்தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அரசு மற்றும் ஆம்னி பஸ்சில் பயணம் செய்து காயம் அடைந்தவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


    இந்த விபத்தில் 29பேர்கள் காயம் அடைந்து உள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். விபத்தில் அரசு பஸ் முன்புறம் சிதைந்தது. ரெட்டிச்சாவடி போலீசார் உடனடியாக ஜே.சி.பி. மற்றும் கிரேன் போன்ற வாகனங்கள் மூலம் இடிப்பாட்டில் சிக்கிக் கொண்டிருந்த அரசு மற்றும் ஆம்னி பஸ்சை மீட்டு சாலையின் ஓரமாக நிறுத்தினார்கள். இந்த விபத்து காரணமாக கடலூர்-புதுச்சேரி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

    ×