என் மலர்
நீங்கள் தேடியது "Air travel"
- எந்தவொரு அதிகார அமைப்புக்கும் விமானக் கட்டணங்களையோ அல்லது கூடுதல் கட்டணங்களையோ ஆய்வு செய்யவோ அல்லது கட்டுப்படுத்தவோ அதிகாரம் இல்லை.
- அத்தியாவசிய சேவைத் துறையில் தேவையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விலையை உயர்த்த விமான நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடற்ற சுதந்திரம் அளிப்பது நியாயமற்றது.
பண்டிகைக் காலங்களில் பன்மடங்கு விமான கட்டணங்கள் உயர்த்தப்படுவதன் மூலம் பயணிகள் 'சுரண்டப்படுவதாக' உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் நிச்சயமாக நீதிமன்றம் தலையிடும் என்றும் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து தனியார் விமான நிறுவனங்களால் விதிக்கப்படும் விமானக் கட்டண ஏற்ற இறக்கங்கள் மற்றும் இதர கூடுதல் கட்டணங்களைக் கட்டுப்படுத்த, பிணைப்புடன் கூடிய ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை உருவாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவிற்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும், சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கும் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
மத்திய அரசின் சார்பில் பதிலளிக்க கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் கௌஷிக் கால அவகாசம் கோரியதை அடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 23-ம் தேதிக்கு (2026) நீதிமன்றம் ஒத்திவைத்தது .
சிவில் விமான போக்குவரத்து துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு வலுவான மற்றும் சுதந்திரமான ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்கக் கோரி கடந்த மாதம் சமூக ஆர்வலர் எஸ். லட்சுமிநாராயணன் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில்,
"எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி, தனியார் விமான நிறுவனங்கள் எகானமி வகுப்பு (Economy class) பயணிகளுக்கான இலவச செக்-இன் லக்கேஜ் அளவை 25 கிலோவிலிருந்து 15 கிலோவாகக் குறைத்துள்ளன என்றும், இதன் மூலம் 'முன்பு டிக்கெட் சேவையின் ஒரு பகுதியாக இருந்த ஒரு விஷயத்தை தற்போது புதிய வருவாய் ஈட்டும் வழியாக மாற்றியுள்ளன'. என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், செக்-இன் லக்கேஜ் வசதியைப் பயன்படுத்தாத பயணிகளுக்கு எந்தவிதமான தள்ளுபடி, இழப்பீடு அல்லது சலுகைகள் வழங்கப்படாதது, இம்முறையின் 'தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான தன்மையை' காட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது எந்தவொரு அதிகார அமைப்புக்கும் விமானக் கட்டணங்களையோ அல்லது கூடுதல் கட்டணங்களையோ ஆய்வு செய்யவோ அல்லது கட்டுப்படுத்தவோ அதிகாரம் இல்லை. இது மறைமுகக் கட்டணங்கள் மற்றும் கணிக்க முடியாத விலை நிர்ணயம் மூலம் நுகர்வோரை சுரண்ட விமான நிறுவனங்களுக்கு வழிவகுக்கிறது.
தன்னிச்சையான கட்டண உயர்வு, ஒருதலைப்பட்சமாக சேவைகளைக் குறைத்தல் மற்றும் தரைமட்டத்தில் குறைகளைத் தீர்க்கும் வசதி இல்லாமை போன்ற ஒழுங்குபடுத்தப்படாத மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற இத்தகைய நடைமுறைகள், குடிமக்களின் சமத்துவம், தடையற்ற நடமாட்டம் மற்றும் கண்ணியமான வாழ்வு ஆகிய அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்.
ஒழுங்குமுறைப் பாதுகாப்புகள் இல்லாததால், குறிப்பாகப் பண்டிகைக் காலங்களில் அல்லது வானிலை மாற்றங்களினால் ஏற்படும் இடையூறுகளின் போது கட்டணங்கள் மிகக் கடுமையாக உயர்கின்றன. இது ஏழைகளையும் கடைசி நேரத்தில் பயணம் மேற்கொள்பவர்களையும் பெருமளவில் பாதிக்கிறது. வசதி படைத்த பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடிகிறது; ஆனால் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடிமக்கள் பெரும்பாலும் உச்சக்கட்ட விலையேற்றத்தின் போது அதிக விலை கொடுத்து டிக்கெட்டுகளை வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்.
விமானக் கட்டணங்களை நிர்ணயிக்கும் கணினி வழிமுறைகள், ரத்து செய்யும் கொள்கைகள், சேவைகளின் தொடர்ச்சி மற்றும் குறைதீர்க்கும் வழிமுறைகளை முறைப்படுத்துவதில் அரசு காட்டும் மெத்தனம், அரசியலமைப்பு ரீதியிலான கடமையைத் தவறுவதற்கு சமமாகும். இதில் நீதிமன்றத்தின் அவசரத் தலையீடு அவசியம்.
மேலும், அத்தியாவசிய சேவைத் துறையில் தேவையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விலையை உயர்த்த விமான நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடற்ற சுதந்திரம் அளிப்பது நியாயமற்றது. கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையில், அவசர காலப் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகளை நியாயமான மற்றும் சுரண்டலற்ற முறையில் பெறுவதும் அடங்கும். விமானப் பயணம் என்பது ஆடம்பரம் என்பதைத் தாண்டி ஒரு தேவையாக மாறும் அவசர காலங்களில், தன்னிச்சையான கட்டண உயர்வுகள் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள குடிமக்களின் இந்த உரிமையைப் பறிக்கின்றன என்றும் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக இது தொடர்பாக மத்திய அரசு, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) மற்றும் இந்திய விமான நிலையப் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
- பவர் பேங்குகளை செக்-இன் லக்கேஜ்களில் வைக்க அனுமதி கிடையாது.
- விமானம் பறக்கும் போது அவற்றை எலக்ட்ரானிக் சாதனங்களுடன் இணைப்பதோ அல்லது பயன்படுத்துவதோ கூடாது.
இனி விமானப் பயணத்தின் போது பயணிகள் பவர் பேங்குகளைப் பயன்படுத்தக் கூடாது என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் DGCA அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, விமானத்தில் பவர் பேங்க் கொண்டு செல்லலாம், ஆனால் விமானத்திற்குள் அதைப் பயன்படுத்தவோ அல்லது சார்ஜ் செய்யவோ அனுமதி இல்லை.
லித்தியம் பேட்டரிகள் கொண்ட பவர் பேங்குகள் விமானத்தின் உள்ளே தீப்பிடிக்க வாய்ப்புள்ளதால், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பவர் பேங்குகளை செக்-இன் லக்கேஜ்களில் வைக்க அனுமதி கிடையாது. அவற்றை பயணிகள் தங்கள் கையோடு வைத்திருக்கும் கேபின் பேக்குகளில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும்.
விமானம் பறக்கும் போது அவற்றை எலக்ட்ரானிக் சாதனங்களுடன் இணைப்பதோ அல்லது பயன்படுத்துவதோ முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் இந்தக் கட்டுப்பாடுகளை மீறினால், விமானப் பாதுகாப்பு விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைக்கும் இருக்கை ஒதுக்க வேண்டும் என டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.
- தனது முந்தைய பரிந்துரைகளில் திருத்தம் செய்து, ஒழுங்குமுறை ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
புதுடெல்லி:
விமானப் பயணத்தின் போது குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் அமர இயலாமல் போனது குறித்து பயணிகள் பலர் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், விமானப் பயணத்தின்போது 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அருகிலேயே இருக்கைகளை ஒதுக்கவேண்டும் என விமான நிறுவனங்களுக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
விமானப் பயணத்தின்போது குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் ஒருவரேனும் உடனிருப்பதை உறுதிசெய்யவும் இந்த உத்தரவு வழிவகை செய்கிறது.
தனது முந்தைய பரிந்துரைகளில் திருத்தம் செய்து, ஒழுங்குமுறை ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
- மதுரையில் இருந்து காசிக்கு விமான சுற்றுலாவுக்கு ரெயில்வேதுறை ஏற்பாடு செய்தனர்.
- மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.
மதுரை
இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், மதுரையில் இருந்து பல்வேறு ஆன்மீக சுற்றுலாக்களை நடத்தி வருகிறது. புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து கயா, வாரணாசி மற்றும் அலகாபாத் போன்ற ஆன்மிக தலங்களுக்கு விமானம் மூலம் சுற்றுலா நடத்தப்பட உள்ளது. இது 6 நாள் சுற்றுலா ஆகும்.
மதுரையில் இருந்து செப்டம்பர் 24-ந் தேதி சுற்றுலா தொடங்குகிறது. இதில் ஒரு நபருக்கு ரூ.39,300கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதில் விமான கட்டணம், உள்ளூர் போக்குவரத்து, தங்குமிடம், உணவு, பயண காப்பீடு ஆகியவை அடங்கும். கொரோனா முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறை களோடு நடத்தப்படும் சுற்றுலாவில் அரசு ஊழியர்கள் எல்.டி.சி. வசதியைப் பயன்படுத்தி கலந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு www.irctctourism.com இணையதளம் மூலம் பயண சீட்டுகள் பதிவு செய்யலாம்.
மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.
காஷ்மீரில் கடந்த 14-ந் தேதி சாலை வழியாக வாகனங்களில் சென்று கொண்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (துணை ராணுவம்) மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து வீரர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதில் ஒரு பகுதியாக, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பணிபுரியும் துணை ராணுவ வீரர்கள் வர்த்தக விமானங்களில் இலவசமாக சென்று வர மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. அதாவது விடுமுறைக்கு செல்லும்போதும், பணிக்கு திரும்பும் போதும் ஜம்மு-ஸ்ரீநகர், ஸ்ரீநகர்-டெல்லி இடையே வர்த்தக விமானங்களில் இருவழி போக்குவரத்தை மேற்கொள்ள உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து இருக்கிறது. இதற்கான உரிமத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் துணை ராணுவ வீரர்கள் வர்த்தக விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம். பின்னர் அந்த கட்டணத்தை தங்கள் நிர்வாகத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் சுமார் 7.8 லட்சம் வீரர்கள் பயனடைவார்கள் என கணக்கிடப்பட்டு உள்ளது. #PulwamaAttack #AirTravel #JammuKashmir






