என் மலர்

  நீங்கள் தேடியது "arrangement"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.39.20 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் செய்ய திட்டமிடப்பட்டது.
  • நடைபாதை அமைத்தல், சுற்றுச்சுவர் சீர்செய்தல், மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல் பணிகள் செய்யப்படஉள்ளது.

  தரங்கம்பாடி:

  மயிலாடுதுறை கூறைநாடு திருமஞ்சன வீதியில் அமைந்துள்ள குமரன் பூங்காவில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.39.20 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் செய்ய திட்டமிடப்பட்டது.

  அதன்படி, நடைபாதை அமைத்தல், சுற்றுச்சுவர் சீர்செய்தல், மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல், குழந்தைகள் விளையாட்டுகளுக்கான ஏற்பாடுகள் ஆகியன செய்யப்படவுள்ளது.

  அடுத்து பூங்கா மேம்பாட்டுப் பணிகளுக்காக நடைபெற்ற பூமி பூஜையில் ராஜகுமார் எம்.எல்.ஏ. பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

  நகராட்சித் மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சி உறுப்பினர்கள் ராஜலெட்சுமி ராஜேந்திரன், சர்வோதயன், ரமேஷ், மணிமேகலை மணிவண்ணன் மற்றும் நகராட்சி பணி ஆய்வர்கள் ரம்யா, ராஜாராமன், ஒப்பந்தகாரர் ரிஷி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்த மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், வர்த்தக பிரமுகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
  • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  கும்பகோணம்:

  கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

  பேரூராட்சி செயல் அலுவலர் வி.சிவலிங்கம் முன்னிலை வகித்தார். பேரூராட்சி துணைத் தலைவர் கமலா சேகர் வரவேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோ.சி. இளங்கோவன், ஆர். வி. குமார், ரா. சரவணன், பரமேஸ்வரி, முத்துபீவி, மீனாட்சி, செல்வராணி, எஸ்.மாலதி, ம. க. பாலதண்டாயுதம், கண்ணன், கே.சாந்தி, எஸ்.சுகந்தி , எஸ்.சமீம்நிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  கூட்டத்தில் கடந்த 75ம் ஆண்டு சுதந்திர தின மெகா பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்த மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், வர்த்தக பிரமுகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது.

  பேரூராட்சி பொது நிதியில் ரூ.35 லட்சம் மதிப்பில் பத்தாவது வார்டில் சிறு பாலம் கட்டுவது, 12 வது வார்டில் மழை நீர் வடிகால் கட்டமைப்பு பணிகள் சீரமைப்பது, 13 வது வார்டில் மண் சாலைகளை தார் சாலைகளாக போடுவது என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரையில் இருந்து காசிக்கு விமான சுற்றுலாவுக்கு ரெயில்வேதுறை ஏற்பாடு செய்தனர்.
  • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

  மதுரை

  இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், மதுரையில் இருந்து பல்வேறு ஆன்மீக சுற்றுலாக்களை நடத்தி வருகிறது. புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து கயா, வாரணாசி மற்றும் அலகாபாத் போன்ற ஆன்மிக தலங்களுக்கு விமானம் மூலம் சுற்றுலா நடத்தப்பட உள்ளது. இது 6 நாள் சுற்றுலா ஆகும்.

  மதுரையில் இருந்து செப்டம்பர் 24-ந் தேதி சுற்றுலா தொடங்குகிறது. இதில் ஒரு நபருக்கு ரூ.39,300கட்டணமாக செலுத்த வேண்டும்.

  இதில் விமான கட்டணம், உள்ளூர் போக்குவரத்து, தங்குமிடம், உணவு, பயண காப்பீடு ஆகியவை அடங்கும். கொரோனா முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறை களோடு நடத்தப்படும் சுற்றுலாவில் அரசு ஊழியர்கள் எல்.டி.சி. வசதியைப் பயன்படுத்தி கலந்து கொள்ளலாம்.

  மேலும் விவரங்களுக்கு www.irctctourism.com இணையதளம் மூலம் பயண சீட்டுகள் பதிவு செய்யலாம்.

  மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழ்நாடு தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டிகள் 5-ந் தேதி நடக்கிறது.
  • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சுசிலா மேற்கொண்டுவருகிறார்.

  விருதுநகர்

  விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

  தாய்த்தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ந் தேதியை பெருமைப்படுத்தும் வகையில் அந்த நாள் "தமிழ்நாடு நாளாக" கொண்டாடப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

  இந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடுநாளையொட்டி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் வருகிற 5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முற்பகலில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் நடத்தப்பெறவுள்ளன. அரசு/ தனியார் / அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள் இப்பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாகப் பள்ளிகளுக்கு அனுப்பப்படும்.

  பேச்சுப் போட்டி பின்வரும் தலைப்புகளில் நடத்தப்படும்.

  1. தமிழ்நாடு உரு வான வரலாறு, 2. மொழி வாரி மாகாணமும் தமிழ்நாட்டில்நடைபெற்ற போராட்டங்களும், 3. தமிழ்நாட்டிற்காக உயிர்கொடுத்த தியாகிகள், 4. பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாடு, 5. சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகம், 6. மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியார், 7. மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் ம.பொ.சி, 8. சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு, 9. எல்லைப்போர்த் தியாகிகள், 10. முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய தமிழ்நாடு.

  கட்டுரை ப்போட்டிக்கான தலைப்பு "சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகம்" மாவட்ட அளவில் ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம் , 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் வீதத்திலும் வழங்கப்பட உள்ளன.

  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சுசிலா மேற்கொண்டுவருகிறார்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சோழவந்தான் பாண்டி முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
  • விழா ஏற்பாடுகளை கிராம மக்கள், நிர்வாகிகள் கேசவன், முருகன், ஆதிமுத்துகுமார் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

  சோழவந்தான்

  சோழவந்தான் அருகே உள்ள மேட்டுநீரேத்தான் கிராம காவல் தெய்வமான பாண்டிமுனீஸ்வரர் கோவில் கும்பாபிசேகம் நடந்தது. சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் முன்னிலையில் யாகசாலை அமைத்து பூஜைகள் தொடங்கி கணபதி ஹோமம், நவகிரக பூஜை, செய்து மங்கள வாத்தியங்கள் மேளதாளத்துடன் புனிதநீர் குடத்தை தாங்கி கோவிலை வலம் வந்து சக்தி பீடம் மற்றும் சுவாமிக்கு புனித தீர்த்த நீரை ஊற்றி அபிஷேகம் செய்தனர்.

  தொடர்ந்து சுவாமிக்கு பூக்களால் அலங்காரம் செய்து தீபாராதனைகள் காட்டி பக்தர்கள் வணங்கினர். அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. இதனை கண்ட பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர்.

  விழா ஏற்பாடுகளை கிராம மக்கள், நிர்வாகிகள் கேசவன், முருகன், ஆதிமுத்துகுமார் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
  • சோழவந்தான் காவல் துறையைச் சேர்்ந்த குடும்பத்தினர் தேரோட்ட திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

  சோழவந்தான்

  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. கடந்த 6-ந் தேதி வைகாசி பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி வெவ்வேறு வாகனத்தில் அம்மன் வீதி உலா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

  16-ம் நாள் திருவிழாவான இன்று தேரோட்டம் நடந்தது. அதிகாலையில் அம்மன் கேடயத்தில் அலங்காரமாகி கோவிலில் இருந்து புறப்பட்டு தேருக்கு வந்து சேர்ந்தது. அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் செய்தார். அமைச்சர் மூர்த்தி வடம் பிடித்து தேர் திருவிழாவை தொடங்கி வைத்தார்.

  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத், டி.எஸ்.பி. பாலசுந்தரம், தாசில்தார் நவநீதகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சிவபாலன், பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், ஜெனகை டிரஸ்ட் தலைவர் சுப்ரமணியன் செட்டியார், பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சனன், கோவில் செயல்அலுவலர் இளமதி மற்றும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். சோழவந்தான் பாட்டியமந்தார், கிராம காவல்காரர்கள் தேரை வடம்பிடித்து இழுப்பதற்கு வெள்ளைக்கொடி வீசினர். கடைவீதி, தெற்குரதவீதி, மேலரதவீதி, வடக்குரதவீதி, வழியாக தேர் வலம் வந்து புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தது. ஆசாரியர்கள் தேர் சக்கரங்களை முறையாக வருவதற்கு ஒழுங்குபடுத்தினர். வழிநெடுக பக்தர்கள் அம்மனை வரவேற்று பூஜை செய்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர் வசந்தகோகிலம் சரவணன், சுகாதார பணி ஆய்வாளர் முருகானந்தம், துணைத் தலைவர் லதா கண்ணன், கவுன்சிலர்கள் மருதுபாண்டியர், சத்யபிரகாஷ், குருசாமி, ஈஸ்வரி, ஸ்டாலின் முத்துச்செல்வி, சதீஷ்குமார், செந்தில்வேல், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்

  தேர்த்திருவிழாவில் பக்தர்கள் மாம்பழம், வாழைப்பழம், நாணயங்களை சூறை விட்டனர். சிறுவர், சிறுமிகள் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி வலம் வந்தனர். நீர், மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணி, இளங்கோ உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

  தேர் திருவிழாவை முன்னிட்டு வட்ட பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த நண்பர்கள் சார்பில் 9-வது ஆண்டாக அன்னதானம் நடந்தது. இதில் கவுன்சிலர் டாக்டர் மருதுபாண்டியன் கலந்துகொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். சோழவந்தான் அய்யப்பன் கோவிலில் இன்று இரவு காவல்துறை பேண்டு வாத்திய கச்சேரி நடைபெறுகிறது. சோழவந்தான் காவல் துறையைச் சேர்்ந்த குடும்பத்தினர் தேரோட்ட திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

  ×