search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "வாழ்த்து"

  • அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
  • இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

  இவர் தமிழ் இயக்குனரான விக்னேஷ் சிவனை ஜூன் 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அழகான இரு ஆண் குழந்தைகள் அக்டோபர் 2022 ஆம் ஆண்டு பிறந்தன. அவர்களுக்கு உயிர் மற்றும் உலக் என பெயரிட்டனர். அவ்வப்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளங்களில் அவர்களின் திரை துறை வாழ்க்கையை பற்றியும் தனிப்பட்ட வாழ்க்கையில் நடைப்பெறும் நிகழ்வை பற்றியும் புகைப்படங்களை பகிர்ந்து வருவர்.

  அதுப்போல் இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் நயன்தாரா அவரது மகன்களான உயிர் மற்றும் உலகுடன் குழந்தையோடு குழந்தையாய் விளையாடிக்கொண்டு இருக்கிறார். குழந்தையை தோள் மேல் தூக்கி வைத்து விளையாடுவது, மகனை முத்தமிடுவது, கொஞ்சுவது, சிரிப்பது, கைப் பிடித்து நடப்பது என அந்த வீடியோவில் காட்சிகள் அமைந்துள்ளன.

  இந்த வீடியோவை   பார்க்கவே மிகவும் கியூட்டாக உள்ளது. இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீதான் என்னுடைய உயிர் மற்றும் உலகம் என அந்த வீடியோவில் நயன்தாராவை குறித்து பதிவிட்டுள்ளார்.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • தந்தை தொடங்கி, கணவன், மகன் என பலரின் வெற்றிக்கு பின்னிருக்கும் சக்தி.
  • நம் ஒவ்வொருவரையும் தீராக்கடனாளியாக்கிய அன்னையரை உலக அன்னையர் நாளில் வணங்குவோம்.

  பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

  உலகின் ஈடு இணையற்ற உறவு, ஒப்பீடற்ற தியாகத்தின் திருவுருவம், மனிதர்களுக்கு மாதா, பிதா, குருவாக இருந்து வளர்த்தெடுக்கும் தெய்வம், தந்தை தொடங்கி, கணவன், மகன் என பலரின் வெற்றிக்கு பின்னிருக்கும் சக்தி.

  மனிதவாழ்வின் அனைத்துக்கும் ஆதாரமாக திகழ்பவர்கள் அன்னையர்களே. நீங்கள் இன்றி நாங்கள் இல்லை என்ற உண்மை அவர்களுக்கு மட்டுமே பொருந்தும். நம் ஒவ்வொருவரையும் தீராக்கடனாளியாக்கிய அன்னையரை உலக அன்னையர் நாளில் வணங்குவோம்; அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • மு க ஸ்டாலின் சமூக வலைதளத்தில் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • ஈன்றவள் நம்மைச் சான்றோன் எனக் கேட்க வாழ்ந்து அன்னையரைப் போற்றுவோம்.

  சென்னை:

  தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தினத்தையொட்டி சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

  உயிராக உருவான நம்மை தன் வயிற்றுக்குள் சுமந்து, வாழ்நாளெல்லாம் பாசத்தோடு அரவணைக்கும் அன்பின் திருவுரு அம்மா.

  தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் நாள் வாழ்த்துகள்.

  ஈன்றவள் நம்மைச் சான்றோன் எனக் கேட்க வாழ்ந்து அன்னையரைப் போற்றுவோம்.

  இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.  • அன்பை மட்டுமே செலுத்தும் அன்னையரை, வாழ்நாளெல்லாம் போற்றிப் பாதுகாப்பது ஒவ்வொரு பிள்ளையின் கடமையாகும்.
  • பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் உலகில் உள்ள அனைத்து விஷயங்களையும் கருவில் இருந்தே கற்றுத் தருவது அம்மா தான்.

  சென்னை:

  அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  ஆயிரம் உறவுகள் வந்தாலும், தாய் அன்புக்கு ஈடாகாது. பூமி தாங்கும் முன்பே, நம்மையெல்லாம் பூவாய் தாங்கியதோடு, ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும், அன்பின் முழு வடிவமான அன்னையர் அனைவருக்கும் எனது இதயமார்ந்த 'அன்னையர் தின' நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

  'அம்மா' என்ற சொல்லை உச்சரிக்கும்போது, அ.தி.மு.க. பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றுத் தந்து, தமிழக மக்களுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட இதய தெய்வம் அம்மாவின் நினைவுதான் நமக்கெல்லாம் வருகிறது.

  தாய் தன் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் அன் பிற்கு அளவே கிடையாது. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தன் பிள்ளைகள் மீது அதிக பாசத்தையும், அன்பையும் கொண்டிருக்கும். அன்னை தனது பிள்ளைகள் மீதும், குடும்பத்தின் மீதும் வைத்திருக்கும் அளவிட முடியாத அன்பையும், அவர்களின் ஒப்பற்ற பங்களிப்புகள் மற்றும் தன்னலமற்ற தியாகத்தையும் கொண்டாடுவதே அன்னையர் தினமாகும்.


  இந்த நன்னாளில், அன்னையரின் ஆசீர்வாதங்களைப் பெறுவது ஒவ்வொரு பிள்ளையின் கடமையாகும்.கோபம், வெறுப்பு, பிடிவாதம் என தன் பிள்ளைகள் எதைக் காட்டினாலும், அவர்கள் மீது அன்பை மட்டுமே செலுத்தும் அன்னையரை, வாழ்நாளெல்லாம் போற்றிப் பாதுகாப்பது ஒவ்வொரு பிள்ளையின் கடமையாகும்.

  பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் உலகில் உள்ள அனைத்து விஷயங்களையும் கருவில் இருந்தே கற்றுத் தருவது அம்மா தான். கனவு, ஆசை, லட்சியம் முதலானவற்றை துறந்து தன் குடும்பதிற்காக மட்டுமே வாழ்பவர் அன்னை. இத்தகைய போற்றுதலுக்குரிய அன்னையர் அனைவரும் பூரண நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் நிறை வாழ்வு வாழ்ந்திட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, உலகம் முழுவதும் வாழும் அன்னையர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த 'அன்னையர் தின' நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • உலகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
  • த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் ஈஸ்டர் வாழ்த்து பதிவு.

  கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் முடிந்துவிட்டது. இதையொட்டி இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது.

  3-வது நாள் அவர் உயிர்த்தெழுவார் என்ற அடிப்படையில் உலகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

  இதையொட்டி, உலக தலைவர்கள் பொது மக்களுக்கு ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

  உலக மக்கள் அனைவரிடமும் அமைதி நிலவ, அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை, தியாகம் தழைத்தோங்க, புனிதமான இந்நன்னாளில் அனைவருக்கும் ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துகள்.

  இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • இதை பார்த்த ரசிகர்கள், நண்பர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்
  • "வாழ்நாள் முழுவதும் திருமண ஜோடிகள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்' என்று தெரிவித்து உள்ளார்.

  நடிகர் சித்தார்த் 'ஆயுத எழுத்து' படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதை தொடர்ந்து பாய்ஸ், அரண்மனை, தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட படங்களில் நடித்து முக்கிய நடிகரானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'சித்தா' படம் ரசிகர்களிட நல்ல வரவேற்பு பெற்றது.

  இந்நிலையில் நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ்வை காதலித்து வந்தார். இவர் செக்க சிவந்த வானம், காற்று வெளியிடை, சைக்கோ போன்ற தமிழ் படங்களில் நடித்து உள்ளார்.

  இந்நிலையில் சித்தார்த்தும், அதிதி ராவும் தெலுங்கானாவில் ஒரு கோவிலில் ரகசிய திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இது திருமணம் அல்ல, நிச்சயதார்த்தம் என்று இருவரும் பதில் அளித்து உள்ளனர். இது வைரலாக பரவியது.

  இதை பார்த்த ரசிகர்கள், நண்பர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவும் சித்தார்த்- அதிதி ஜோடிக்கு இணைய தளத்தில் வாழ்த்துக்கள் கூறி உள்ளார். அதில் "வாழ்நாள் முழுவதும் திருமண ஜோடிகள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்' மனமாற வாழ்த்துக்கள் என்று தெரிவித்து உள்ளார்.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • பிரதமர் மோடி தனது எக்ஸ்தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • சமூக சேவை மற்றும் கல்வியில் சிறந்த பங்களிப்பை கொடுத்தவர்.

  புதுடெல்லி:

  இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மேல்சபை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்து இருப்பதாக குறிப்பிட்டு தனது எக்ஸ் வலைதள பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  மேலும் அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்தார். சமூக சேவை மற்றும் கல்வியில் சிறந்த பங்களிப்பை கொடுத்தவர் என்று புகழாரம் சூட்டி உள்ளார். அவரது பாராளுமன்ற பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்.

  மேல்சபை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ள சுதா, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் ஆவார்.

  • அரசியல் தலைவர்கள் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  உலகம் முழுவதும் நாளை (மார்ச்-8ம் தேதி) மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களை போற்றும் விதமாக கொண்டாடப்படும் இத்தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

  சமூகத்தின் சரிபாதியான பெண்கள் அவர்களுக்கு உரிய அனைத்து உரிமைகளையுயும், நலன்களையும் முழுமையாக பெறும்வரை அதை நோக்கிய நமது பயணம் தொடரும் என்ற உறுதியுடன் மகளிர் தன வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

  இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • பொதுத் தளங்களில் இயங்கும் பெண்களை காணுகின்ற போது மனம் பேர் உவகை கொள்கிறது.
  • பெண்மையால் பெருமை கொள்வோம்!

  சென்னை:

  சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  பெண்மையைப் போற்றி வணங்கவும், பெண்கள் இன்றி இந்த உலகம் இல்லை என்பதை உணர்த்தவும், பெண்களின் தியாக வாழ்வு க்கு வணக்கம் செலுத்தவும், ஆண்டுதோறும் வருகிற 8-ந் தேதி "சர்வ தேச மகளிர் தினமாக" கொண்டாடப்படு கிறது. பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் இந்த நாளில் பெண்கள் அனை வருக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது இதயமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

  ஒரு நூற்றாண்டுக்கு முன், பாரதி கண்ட புதுமைப் பெண்களின் வடிவமாக புரட்சித் தலைவி அம்மா திகழ்ந்ததையும், அவர்களைப் போல பல்வேறு பொதுத் தளங்களில் இயங்கும் பெண்களையும் காணுகின்றபோது மனம் பேர் உவகை கொள்கிறது.

  பெண்மையின் மேன்மையைப் போற்றுவோம்!

  பெண்மையை வணங்கு வோம்!

  பெண்மையால் பெருமை கொள்வோம்!

  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

  • எம்.பி.க்கள், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து.
  • பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி.

  தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

  இந்நிலையில், தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

  மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி!

  பேரன்பொழுக என்னை வாழ்த்த வந்த உடன்பிறப்புகளே…. தலைமைத் தொண்டனாய் என்றும் உங்களுக்குத் தொண்டாற்றுவதே நான் செய்யும் நன்றியெனக் கடமையாற்றுவேன்.

  இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.