என் மலர்

  நீங்கள் தேடியது "wedding ceremony"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருமண நிகழ்ச்சிக்காக சுமார் 25 பேர் தனியார் பள்ளி பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.
  • காயமடைந்தவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்காக சிகிச்சை அனுப்பி வைத்தார்.

   கள்ளக்குறிச்சி:

  சின்னசேலம் அருகே ராயப்பனூர் கிராமத்தில் இருந்து கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் கிராமத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்காக சுமார் 25 பேர் தனியார் பள்ளி பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆலத்தூர் ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் வந்த 4 பேர் காயமடைந்தனர்.  இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்காக சிகிச்சை அனுப்பி வைத்தார். திருமண நிகழ்ச்சிக்காக வந்த பஸ் சாலையோரம் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமண நிகழ்வை சேங்காலிபுரம் ராஜகோபால பட்டாச்சாரியார், கீழஅமராவதி வெங்கட்ரமணி பட்டாச்சாரியார் ஆகியோர் தலைமை ஏற்று நடத்தி வைத்தனர்.

  நீடாமங்கலம்:

  திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம், புகழ்பெற்ற குரு ஸ்தலம் ஆலங்குடியில் நேற்று அபய வரதராஜபெருமாள் சுவாமிக்கும் ஸ்ரீதேவி, பூமிதேவி தாயாருக்கும் திருக்கல்யாண விழா மாலை 6.30 மணி அளவில் தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெற்றது.

  ்திருமண நிகழ்வை சேங்காலிபுரம் ராஜகோபால பட்டாச்சாரியார், கீழஅ மராவதி வெங்கட்ரமணி பட்டாச்சாரியார் ஆகியோர் திருமண வைபவங்களை தலைமை ஏற்று நடத்தி வைத்தனர். இந்நிகழ்வில் ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஏ .எம். மோகன் குடும்பத்தார்கள் மற்றும் உபயதா ரர்கள்,கி ராமவா சிகள் திரளானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மணமக்களை டி.டி.வி. தினகரன் வாழ்த்தி பேசினார்
  • பெருமாள் கோவில் அருகே டி.டி.வி.தினகரனுக்கு உற்சாக வரவேற்பு

  திருப்பூர், 

  அ.ம.மு.க.பொங்கலூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும், வடக்கு அவினாசிபாளையம் ஊராட்சி தலைவருமான மலையாண்டவர் ஏ.ஆர்.நடராஜ்-நிர்மலா தம்பதியின் மகன் லோகேஷ் மற்றும் திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த தங்கராஜ் என்கிற மாரிமுத்து-ஈஸ்வரி தம்பதியின் மகள் வித்யா ஆகியோரின் திருமண வரவேற்பு விழா நேற்று இரவு திருப்பூர் ராமசாமி கவுண்டர்முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

  விழாவுக்கு வந்திருந்தவர்களை திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் விசாலாட்சி வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார். தலைமை நிலைய செயலாளர் உடுமலை சி.சண்முகவேலு, அமைப்பு செயலாளர் சேலஞ்சர் துரை ஆகியோர் மணமக்களை வாழ்த்தி பேசினார்கள். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மணமக்களை வாழ்த்தி அவர் பேசினார். விழாவில் மணமக்களின் பெற்றோர், உறவினர்கள், மருத்துவர் அணி மாநில துணை செயலாளர் டாக்டர் கே.கிங், மாநகர் மாவட்ட துணை செயலாளர் சூர்யா செந்தில் மற்றும் அ.ம.மு.க. திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் அ.ம.மு.க. பொங்கலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மலையாண்டவர் நடராஜ் நன்றி கூறினார்.

  முன்னதாக திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் பெருமாள் கோவில் முன்பும், வடக்கு மாவட்டத்தின் சார்பில் சந்தைப்பேட்டையிலும் அ.ம.மு.க. பொதுச்செயலளார் டி.டி.வி.தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

  திருப்பூர் பெருமாள் கோவில் அருகே திருப்பூர் மாநகர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் விசாலாட்சி தலைமையில் மேளதாளங்கள் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

  இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட துணை செயலாளர்கள் புல்லட் ரவி, சூர்யா செந்தில் , மாநகர் மாவட்ட பொருளாளர் சேகர் என்ற ஜெகநாதன், மாநகர் மாவட்ட அம்மாபேரவை செயலாளர் ரத்தினசாமி, மாநகர் மாவட்ட அம்மா இளைஞரணி செயலாளர் பெஸ்ட் தம்பு என்ற சண்முகசுந்தரம், மாநகர அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் முத்துக்குட்டி, பொதுக்குழு உறுப்பினர் குட்வின் பழனிசாமி, அம்மா பனியன் தொழிற்சங்கம் சுரேஷ்ராஜா, மாவட்ட தொழிற்சங்க துணை தலைவர் பச்சமுத்து உள்பட அ.ம.மு.க. பல்வேறு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது. விழாவுக்கு வந்த 16 பேரை வெறிநாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
  ஸ்ரீமுஷ்ணம்:

  கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது லால்பேட்டை. இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் ஒரு திருமண மண்டபம் உள்ளது. இந்த திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது.

  இதில் அந்த பகுதியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் அங்குள்ள ரோட் டில் நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வெறிநாய் வந்தது. அந்த நாய் திடீரென்று ரோட்டில் நடந்து சென்ற அப்துல்ரகுமான் (65) என்பவரை கடித்து குதறியது. இதனால் அவர் கூச்சல் போட்டு அலறினார். அதனைத்தொடர்ந்து அந்த வெறிநாய் ரோட்டில் சென்றவர்களை விரட்டி விரட்டி கடித்தது. இதில் யாசன்பீவி(85), அப்துல்ஹமீது(55), முகமதுஷபீர், ஆசைத்தம்பி உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர். 

  காயம் அடைந்த அனைவரும் காட்டு மன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் 5 பேர் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

  இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, லால்பேட்டை பகுதியில் கடந்த சில மாதங்களாக நாய்கள் மற்றும் பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்கள் ரோட்டில் செல்பவர்களையெல்லாம் விரட்டி கடிப்பதால் பெண்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அவர்கள் கூறினர்.
  ×