என் மலர்
நீங்கள் தேடியது "greetings"
- இக்கோவில் ஆதிராகு தலமாக விளங்குகிறது.
- நந்தி பகவானுக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி கடைவீதி யில் இந்து சமய அறநிலை யத்துறைக்கு உட்பட்ட பொன்னாகவள்ளி அம்மன் உடனாகிய நாகேஸ்வர முடையார் சாமி கோவில் உள்ளது.
இக்கோவில் ஆதி ராகு ஸ்தலமாக விளங்குகிறது.
இக்கோவிலில் பிரதோ ஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
முன்னதாக நந்தி பகவானுக்கு மஞ்சள், திரவிய பொடி, பால், தயிர், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் முதலான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல் மூலவர் நாகேஸ்வரமுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது.
இதில் அதிமுகவை சேர்ந்த பொறியாளர் மார்கோனி, நகை வணிகர் சங்கத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் உள்ளிட்ட திரளான பகதர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
கோவில் சிவாச்சாரியார் முத்து குருக்கள் பூஜை ஏற்பாடுகளை செய்திருந்தார்.
- தி.மு.க. மாநாடு போல இந்த சுயமரியாதை திருமணம் நடைபெற்றுள்ளது
- நரேந்திர மோடி, மணிப்பூர் மக்களை பற்றி கவலைப் படாமல் உள்ளார்.
கடலூர்:
நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மகன் திருமணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்து வாழ்த்துரையாற்றினார். விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;-
நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் மகன் திருமண விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது. தி.மு.க. மாநாடு போல இந்த சுயமரியாதை திருமணம் நடைபெற்றுள்ளது. குறிப்பாக நெய்வேலி தொகுதி மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் இல்ல திருமணத்தில் கலந்து கொண்டதை பெருமையாக கருதுகிறேன். மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியா என்ற பெயரை கேட்டாலே பயந்து பீதியடைகின்றனர். இதனால் பாரத் என்ற பெயரை பா.ஜ.க. தூக்கிப்பிடிக்கிறது. ஜீ 20 மாநாட்டை நடத்துவதில் ஆர்வம் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, மணிப்பூர் மக்களை பற்றி கவலைப் படாமல் உள்ளார். வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தி, இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்யவேண்டும். தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. பல்வேறு அணிகளாக சிதைந்து கிடக்கிறது. இதில் பல அணிகள் பா.ஜ.க.விடம் சரணடைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
- மு.க. ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் மாவீரர் பூலித்தேவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- விடுதலைப் போராட்டத்துக்கான உணர்வைக் கிளர்ந்தெழச் செய்த மாவீரர் பூலித்தேவரின் 308-வது பிறந்தநாள்.
சென்னை:
மாவீரர் பூலித்தேவரின் 308-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இந்திய நிலப்பரப்பில் முதன்முதலில் போர்முரசம் கொட்டி, விடுதலைப் போராட்டத்துக்கான உணர்வைக் கிளர்ந்தெழச் செய்த மாவீரர் பூலித்தேவரின் 308-வது பிறந்தநாள்.
அடக்க நினைத்தால் தமிழர் பொறுக்கமாட்டார், அந்நியர் ஆதிக்கத்தை அடித்து நொறுக்குவர் எனக் காட்டிய அவரது புகழ் என்றும் தமிழ் நிலத்தில் நிலைத்து நிற்கும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
- தி.மு.க. நிர்வாகிகள் அமைச்சரிடம் வாழ்த்து தெரிவித்தனர்.
- தி.மு.க. அயலக அணி சிவகங்கை மாவட்ட தலைவராக ஆர்விஎஸ்.சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர்
தி.மு.க. அயலக அணி சிவகங்கை மாவட்ட தலைவராக ஆர்விஎஸ்.சரவணனும், துணைத் தலைவராக ஜான்பீட்டரும், அமைப்பாளராக அஜித் குமார், துணை அமைப்பா ளர்களாக நெடுஞ்செழியன், புகழேந்தி, சதீஷ்குமார், சிவசுப்பிரமணியன், ராஜ்குரு மற்றும் சீமான் சன் சுப்பையா ஆகியோரை பொதுச் செயலாளர் நியமனம் செய்துள்ளார்.
நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் திருப்பத்தூரில் கூட்டுறவு துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பனை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். புதிய நிர்வாகிகள் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றனர்.
- தி.மு.க. மாணவரணி அமைப்பாளர்கள் மாவட்ட செயலாளர் மணிமாறனிடம் வாழ்த்து பெற்றனர்.
- துணை அமைப்பாளர்களாக மூவேந்திரன், மருதுபாண்டியன், ஜெய்லானி, கண்ணன், செந்தமிழ்அரசி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருமங்கலம்
தி.மு.க. மதுரை தெற்கு மாவட்டத்திற்கு புதிய மாணவரணி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைப்பாளராக பாண்டிமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார். துணை அமைப்பாளர்களாக மூவேந்திரன், மருதுபாண்டியன், ஜெய்லானி, கண்ணன், செந்தமிழ்அரசி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட செயலாளர் மாணவரணி நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் முத்துராமன், மகிழன், மாநில விவசாய அணி துணைசெயலாளர் கொடிசந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், ஒன்றிய செயலாளா்கள் ஆலம்பட்டி சண்முகம், மதன்குமார், தனசேகரன், திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர், நகராட்சிதலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன், நகர துணைசெயலாளர் செல்வம், இளைஞரணி அமைப்பாளர் விமல், துணை அமைப்பாளர்கள் சுரேஷ், ஜெகதீஷ், பேரூர்செயலாளர் வருசை முகமது, பிரதிநிதிகள் ரஞ்சித்குமார், தொ.மு.ச. முத்துராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இது மகளிர் போலீசாரால் மேற்கொள்ளப்படும் மிக நீண்ட படகு பயணமாக உள்ளது.
- சென்னை வரை சுமார் 1000 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்கின்றனர்.
கடலூர்:
மகளிர் போலீஸ் துறையின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு சென்னையிலிருந்து கோடியக்கரை வரை மகளிர் போலீசாரின் பாய்மர படகு பயணம் கடந்த 10-ந்தேதி தொடங்கியது. தமிழ்நாடு போலீஸ் துறையில் புதிய வரலாறு படைக்கும் படகு பயணத்தை இந்த குழுவினர் மேற்கொண்டு உள்ளனர். இது மகளிர் போலீசாரால் மேற்கொள்ளப்படும் மிக நீண்ட படகு பயணமாக உள்ளது. இதில் இன்ஸ்பெக்டர் நீலாதேவி தலைமையில் 25 பேர் கொண்ட போலீசார் பாய்மர படகில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்தக் குழுவினர் சென்னையில் இருந்து கோடியக்கரை வரை சென்று மீண்டும் சென்னை வரை சுமார் 1000 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்கின்றனர்.
இப்பயணக்குழு இன்று அதிகாலை கடலூர் துறைமுகத்திற்கு வந்தடைந்தனர்.கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாய்மர படகு பயணத்தை கடலூர் துறைமுகத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா, சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், ரோட்டரி சங்க பிறையோன், கருணாகரன், கவுன்சிலர் அருள்பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- கட்டிடத்தில் சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் மற்றும் ஏராளமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.
- குமாவத் தனது வலைதள பதிவில், ‘புதிய இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் 2 பெரிய தூண்கள் என்னால் செதுக்கப்பட்டவை’. இந்த பெருமையை நான் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை என குறிப்பிட்டிருந்தார்.
சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கும் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திராவின் ஒவ்வொரு பதிவும் ஏராளமான லைக்குகளை பெற்று வருகிறது.
இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். கட்டிடத்தில் சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் மற்றும் ஏராளமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.
இவற்றை செதுக்கிய சிற்பி மூர்த்திகர் நரேஷ் குமாவத்தை தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா வாழ்த்தி உள்ளார். குமாவத் தனது வலைதள பதிவில், 'புதிய இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் 2 பெரிய தூண்கள் என்னால் செதுக்கப்பட்டவை'. இந்த பெருமையை நான் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை என குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்த பதிவை ஆனந்த் மகிந்திரா மறு பதிவு செய்து, 'அற்புதமான பணி, அற்புதமான மரியாதை, வாழ்த்துக்கள்' என பதிவிட்டுள்ளார். 'கம்பீரமான கலை படைப்பு' என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த பதிவு ஆயிரக்கணக்கான பார்வைகளையும், கருத்துக்களையும் பெற்று வருகிறது.
- வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி புறப்பாடு நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பின்னர், வண்ணமலர்களால் சுவாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் அலங்காரம் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர், பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தில் புறப்பாடு நடைபெற்றது.
இதேப்போல், தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில், வெள்ளப்பள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரமுடையர் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோவில் மற்றும் ருத்ரசோமநாதர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் சிவன்கோவில், கத்தரிப்புலம் கோவில், குத்தகை காசிநாதர் கோவில் ஆகிய சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான புனித ரமலான் பண்டிகை ஆண்டு தோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடபடுவது வழக்கம்
- ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் ரமலான் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடபடுகிறது.
கடலூர்:
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான புனித ரமலான் பண்டிகை ஆண்டு தோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடபடுவது வழக்கம் . ஈகையின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் ரமலான் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடபடுகிறது.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மிக உயர்வான கடமையான நோன்புடன் தொடங்கும் இந்த பண்டிகை நிறைவாக ரமலான் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இன்று விருத்தாசலம் ஆலடி ரோட்டில் அமைந்துள்ள நவாப் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்கு பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டியணைத்து உற்சாகத்துடன் ரமலான் திருநாள் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர் .
- எவரெஸ்ட் சிகரம் ஏறும் பெண்ணுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. வாழ்த்து தெரிவித்தார்.
- தமிழக அரசு ரூ.10 லட்சம் வழங்கியது பாராட்டுக்குரியது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியை சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வி. இவர் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு தகுதி பெற்றுள்ள இவருக்கு, மாணிக்கம் தாகூர்
எம்.பி. வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
33 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழ்ப்பெண் என்ற பெருமையை பெற்றுள்ள முத்தமிழ்ச்செல்விக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். உங்கள் முயற்சி தமிழகத்துக்கே பெருமை சேர்த்துள்ளது.
கடந்த மகளிர் தினத்தன்று ஸ்ரீபெரும்பத்தூர் அருகேயுள்ள 155 அடி உயர மலை உச்சியில் இருந்து கண்களை கட்டிக்கொண்டு 58 விநாடியில் இறங்கி சாதனை படைத்தீர்கள்.
இதேபோன்று எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு முன்னோட்டமாக காஷ்மீரில் லடாக் பகுதியில் சுமார் 5,500 அடி உயர பனிமலை உச்சியை அடைந்து சாதனை படைத்துள்ளீர்கள்.
தற்போது எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கான தகுதியை பெற்றிருக்கும் தங்களை வாழ்த்துகிறேன். தங்களின் முயற்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் தமிழக அரசு ரூ.10 லட்சம் வழங்கியது பாராட்டுக்குரியது.
இன்று 10-வது நாள் மலையேறும் பயணம் மேற்கொண்டுள்ள முத்தமிழ்ச்செல்விக்கு எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.