search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "statues"

    • பாரதியாரின் கனவினை பிரதமர் மோடி முன்னெடுத்து செல்கிறார்.
    • தமிழகத்திற்கு உண்மையான, முழுமையான வளர்ச்சி என்ன என்பதை பாரத பிரதமர் மோடி செய்து காட்டுவார்.

    சீர்காழி:

    பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    154-வது தொகுதியாக சீர்காழிக்கு நேற்றுவந்தார். பின்னர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது

    2024-ல் மூன்றாவது முறையாக பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு யாத்திரையில் பங்கேற்றுள்ளீர்கள். திருஞானசம்பந்தர், திருமங்கையாழ்வார், நந்தனார் போன்ற மகான்கள் பிறந்த ஊரில் மகான்களின் உருவபடத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு வந்துள்ளேன். நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த ஊர். சுதந்திர தாகம் தீட்டிய நீலகண்டபிரம்மச்சாரிக்கு ஒரு வேளை சாப்பிட உணவு இல்லை என பாரதியாரிடம் உணவுகேட்டார்.

    அப்போது முண்டாசு கவிஞர் பாரதியார் தனி மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என நீலகண்டபிரம்மச்சாரிக்காக பாடலை பாடினார். பாரதியாரின் கனவினை பிரதமர் மோடி முன்னெடுத்து செல்கிறார்.

    சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் கோவில் வளாகத்தில் ஐம்பொன் சிலைகள், தமிழகத்தின் அரிதான 410, தேவார செப்பேடுகள் கிடைக்கப் பெற்றது. தமிழகத்தின் பாரம்பரிய சின்னங்கள். இவைகள் காலத்தின் பொக்கிஷம். கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள், தேவார செப்பேடுகள் ஆகியவற்றை ஸ்ரீ சட்டை நாதர் திருக்கோவிலுக்கு உள்ளேயே தான் வைக்க வேண்டும். தவிர மியூசியத்தில் இருக்க கூடாது.

    மயிலாடுதுறையை சுற்றிலும் நவகிரக கோவில்கள், சைவ வைணவ தளங்கள் ஆன்மீகவாதிகள் குடியிருக்க கூடிய எம்பி தொகுதியாக உள்ளது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் வரும் தேர்தலில் பா.ஜனதா வெற்றி வாய்ப்பு கொடுத்தால் இந்தியாவின் ஆன்மீக தலங்களாக மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணத்தை மாற்றி காட்டுவோம். தமிழகத்திற்கு உண்மையான, முழுமையான வளர்ச்சி என்ன என்பதை பாரத பிரதமர் மோடி செய்து காட்டுவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் வழியாக ஏரிப்புறக்கரை கடலுக்கு எடுத்து செல்லப்பட்டது.
    • 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

    அதிராம்பட்டினம்:

    தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று மாலை அதிராம்பட்டினம் வண்டிப் பேட்டையில் இருந்து பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து விநாயகர் ஊர்வலம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் வழியாக ஏரிப்புறக்கரை கடலுக்கு எடுத்து செல்லப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் இளைஞர்கள் கலந்துக்கொண்டனர்.

    ஏரிப்புறக்கரையில் சிலைகளை கரைக்க கடற்கரையில் படகு தயார் நிலையில் நிறுத்தி வைக்கபட்டது.

    500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

    • கம்பு உள்ளிட்ட சிறுதானியங்களை கொண்டு சிலை தயாரிக்கப்பட்டுள்ளது.
    • விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் ருத்ராட்சங்கள் பிரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே ராதாநல்லூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 ஆயிரத்து எட்டு ருத்ராட்சங்களைக் கொண்டு விநாயகர் சிலை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    இதற்காக பிரத்தியேகமாக அயோத்தியில் இருந்து மொத்தமாக 5 முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

    கம்பு உள்ளிட்ட சிறுதானியங்களைக் கொண்டு அரசின் விதிமுறைகளை பின்பற்றி 10 அடி உயர உத்திர விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேல் புறத்தில் நூலை கொண்டு ருத்ராட்சங்களை கோர்த்து விநாயகர் முழுமையாக அலங்கரிக்கப்படுகிறார்.

    இந்து மகா சபா வைச் சேர்ந்த தொண்டர்கள் கடந்த 15 நாட்களாக இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இங்கு தயார் செய்யப்படும் விநாயகர் சிலை கும்பகோணத்தில் வைக்கப்படும் என்றும் விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் ருத்ராட்சங்கள் பிரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்றும் இந்து மகாசபையினர் தெரிவித்துள்ளனர்.

    • கட்டிடத்தில் சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் மற்றும் ஏராளமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.
    • குமாவத் தனது வலைதள பதிவில், ‘புதிய இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் 2 பெரிய தூண்கள் என்னால் செதுக்கப்பட்டவை’. இந்த பெருமையை நான் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை என குறிப்பிட்டிருந்தார்.

    சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கும் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திராவின் ஒவ்வொரு பதிவும் ஏராளமான லைக்குகளை பெற்று வருகிறது.

    இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். கட்டிடத்தில் சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் மற்றும் ஏராளமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

    இவற்றை செதுக்கிய சிற்பி மூர்த்திகர் நரேஷ் குமாவத்தை தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா வாழ்த்தி உள்ளார். குமாவத் தனது வலைதள பதிவில், 'புதிய இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் 2 பெரிய தூண்கள் என்னால் செதுக்கப்பட்டவை'. இந்த பெருமையை நான் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை என குறிப்பிட்டிருந்தார்.

    அவரது இந்த பதிவை ஆனந்த் மகிந்திரா மறு பதிவு செய்து, 'அற்புதமான பணி, அற்புதமான மரியாதை, வாழ்த்துக்கள்' என பதிவிட்டுள்ளார். 'கம்பீரமான கலை படைப்பு' என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த பதிவு ஆயிரக்கணக்கான பார்வைகளையும், கருத்துக்களையும் பெற்று வருகிறது.

    • 10 அடி உயரம் கொண்ட ஆண் முனி மற்றும் பெண் முனி சிலைகளை கலைநயத்துடன் உருவாக்கி உள்ளனர்.
    • ஈரோடு மாவட்டம் பாசூரில் புதிதாக கட்டப்பட்ட கோவிலுக்கு கன்டெய்னர் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அவினாசி :

    அவினாசி புது பஸ் நிலையம் பின்புறம் திருமலை ஸ்ரீவெங்கடேஸ்வரா சிற்பக் கலைக்கூடம் நடத்தி வருபவர் ஸ்தபதி கன்னியப்பன்.

    இவரது தலைமையில் சரவணகுமார், ரமேஷ் உள்ளிட்ட சிற்பிகள் கடந்த ஒரு மாதமாக கருங்கற்களால் 10 அடி உயரம் கொண்ட ஆண் முனி மற்றும் பெண் முனி சிலைகளை கலைநயத்துடன் உருவாக்கி உள்ளனர். இது குறித்து சிற்பி கூறுகையில், "ஈரோடு மாவட்டம் பாசூரில் புதிதாக கட்டப்பட்ட கோவிலுக்கு கன்டெய்னர் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றனர். 

    • மணலில் இந்த சாமி சிலைகள் எப்படி வந்தது.
    • சிதிலம் அடையாமல் அழகாகவும், நேர்த்தியாகவும் உள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் கடந்த 8-ந்தேதி அதிகாலை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது கடற்கரை ஓரம் மணலில் மூன்று சிலைகள் இருப்பதை கண்டறிந்து தகவல் அளித்ததன் பேரில் புதுப்பட்டினம் போலீசார் மற்றும் சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் நேரில் சென்று இரண்டு பெருமாள் சிலைகள் மற்றும் ஒரு அம்மன் சிலை ஆகியவைகளை கைப்பற்றி எடுத்து வந்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு சிலைகள் அதே கடற்கரையில் இருப்பதாக தகவல் அறிந்த வி.ஏ.ஓ. பவளச்சந்திரன் மற்றும் புதுப்பட்டிணம் போலீசார் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு இருந்த 3 அடி உயரத்தில் உள்ள ஒரு அம்மன் சிலை மற்றும் இரண்டடி உயரத்தில் உள்ள ஒரு அம்மன் சிலை ஆகிய இரண்டு சிலைகளையும் எடுத்து வந்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

    ஏற்கனவே மீட்கப்பட்ட மூன்று சுவாமி சிலைகள் குறித்து நடைபெற்ற விசாரணையில் சிலைகள் சீனிவாச பெருமாள், துவாரபாலகர , சிம்மவாகனி என தெரியவந்தது

    மேலும் கிடைக்கப்பெற்ற சிலைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ரவி மற்றும் போலீசார் கடற்கரை மணலில் இந்த சாமி சிலைகள் எப்படி வந்தது. யார் கொண்டு வந்து குறிப்பாக இங்கு போட்டார்கள். எதற்காக போட்டார்கள் என்றும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொதுவாக சிதிலமடைந்த சிலைகளை மட்டுமே கோயில்களில் பயன்படுத்த மாட்டார்கள்.

    ஆனால் இங்கு எடுக்கப்பட்ட அனைத்து சாமி சிலைகளும் சிதிலம் அடையாமல் அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ளது.

    ஏன் நல்ல சாமி சிலைகளை இங்கு கொண்டு வந்து போட்டார்கள் என்ற கோணத்திலும் புதுப்பட்டினம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 சிலைகளையும் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
    • புதுப்பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொடியம்பாளையம் தீவு கிராமம் அமைந்துள்ளது. மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடி தொழிலுக்கு சென்று வரும் நிலையில் கடற்கரையோர பகுதியில் கற்சிலை ஒன்று தென்பட்டதை கண்டுள்ளனர். அதனை தொடர்ந்து அப்பகுதியில் அடுத்தடுத்து மூன்று சிலைகள் இருப்பது தெரிய வந்தது.

    இதனை எடுத்து மூன்று சிலைகளையும் மீட்ட மீனவர்கள் இதுகுறித்து புதுப்பட்டினம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறை யினர் விரைந்து சென்று சிலைகளை கைப்பற்றிய நிலையில் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது குறித்து சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமாருக்கு தகவல் அளித்தனர்.

    இதனை எடுத்து கடற்கரையோரம் மீட்கப்பட்ட இரண்டடி உயரம் உள்ள பெருமாள் கற்சிலை ஒரு அடி உயரமுள்ள பெருமாள் சிலை அதேபோல் ஒன்றரை அடி உயரமுள்ள அம்மன் சிலை ஆகிய மூன்று சிலைகளை கிராம பஞ்சாயத்தார் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் வட்டாட்சியரிடம் பாதுகா ப்பாக ஒப்படைத்தனர்.

    தீவு கிராம கடற்கரையோர பகுதியில் பழமை வாய்ந்த மூன்று கற்சிலைகள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலைகள் எப்படி தீவு கிராம பகுதிக்கு வந்தது என்பது குறித்து புதுப்பட்டினம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

    • கைவினை கலைஞர்களை பாதுகாக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை வேண்டும்.
    • பஞ்சலோக சிலைகள் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டு உள்ளது.

    சுவாமிமலை:

    சுவாமிமலை பஞ்சலோக சிலைகள் தயாரிப்பு கூடத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு தலைவர் கம்பம் ராமகிருஷ்ணன், தலைமை கொறடா கோவி. செழியன், ஏடுகள் குழு உறுப்பினர்கள் செல்வம் எம்.எல்.ஏ, பொன்னுசாமி எம்.எல்.ஏ, நல்லதம்பி எம்.எல்.ஏ, மாவட்ட துணை கலெக்டர் சுகபுத்ரா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அதனை தொடர்ந்து சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு தலைவர் கம்பம் ராமகிருஷ்ணன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை கலைத்தட்டு, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட கைவினை படைப்புகளை பார்வையிட்டு இன்று பஞ்சலோக சிலைகள் தயாரிப்பு கூடத்தை ஆய்வு செய்தோம். ஆவின், எரிசக்தி, பூம்புகார் நிலையம், என அனைத்தையும் ஆய்வு செய்தோம்.

    இதில் ஆவின் நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு 88 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு அதில் 57 ஆயிரம் லிட்டர் விற்பனை செய்யப்பட்டு மீதி உள்ள பாலை முனையத்திற்கு அனுப்பப்படுகின்றன.

    பசுக்கள் நல்ல முறையில் பராமரித்து தரமான கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் பஞ்சலோக சிலைகள் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அருங்காட்சியங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

    கைவினை கலைஞர்களை பாதுகாக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, கைவினை பொருட்களை உற்பத்தி செய்யும் கலைஞர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • நாகையில் கண்டெடுக்கப்பட்ட பவுத்த சிற்பங்கள் உலகின் பல நாடுகளில் உள்ளன.
    • அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பவுத்த சிலைகளுக்கு தனி கண்காட்சி ஒன்றை நடத்த வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    தமிழ் ஆட்சி மொழி, பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசை சென்னை தலைமைச் செயலகத்தில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் சந்தித்து, நாகப்பட்டினம் அருங்காட்சியகம் தொடர்பாக பின்வரும் கோரிக்கைகளை வைத்தார்.

    நாகப்பட்டினம் அருங்காட்சியகம் பழமையும் சிறப்பும் மிக்கது.

    எனவே அது தனித்துவத்துடன் இயங்குவதற்கு ஏற்ப, பாரம்பரிய அரசு கட்டடத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி, அக்கட்டடத்தை முழுவதுமாக அருங்காட்சியகத்திற்கு ஒதுக்க வேண்டும்.

    நாகப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட பெளத்த சிற்பங்கள் உலகின் பல நாடுகளில் உள்ளன.

    அவற்றை மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு அறைகளில் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் நாகப்பட்டினம் பெளத்த சிலைகளை நிரந்தரமாக காட்சிப்படுத்த வேண்டும்.

    நாகப்பட்டினம் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பெளத்த சிலைகளுக்கு தனி கண்காட்சி ஒன்றை நடத்த வேண்டும் என்று நாகை எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

    இது குறித்து ஆய்வு செய்து, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் உறுதியளித்தார்.

    • 1அடி முதல் 10 அடி உயரங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
    • விநாயகருக்கு பூஜைகள் நடத்தி பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    விநாயகர் சதுர்த்தியையொட்டி, இந்து முன்னணி உட்பட பல்வேறு இந்து அமைப்புகள்சார்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டசிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி,விஷ்வ இந்து பரிஷத்,இந்து மக்கள் கட்சி, இந்து முன்னேற்ற கழகம், சிவசேனா என பல்வேறு அமைப்புகள் மற்றும்பொதுமக்கள் சார்பில்,தங்கள் பகுதியில் சிலைகள் பிரதிஷ்டை செய்யஉள்ளனர்.இதில் முன்னணி சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் சிலைகளை இன்றுபிரதிஷ்டை செய்துள்ளனர். வில் ஏந்திய விநாயகர், முருகன், சிவன் உடன் இருக்கும் வகையில், அனுமன் தூக்கிசெல்வது போல், ரத விநாயகர், சிம்ம வாகனம் விநாயகர், யானை வாகனம்,ஆஞ்சநேய விநாயகர்,கருட விநாயகர் என 1அடி முதல் 10 அடிஉயரங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ள விநாயகருக்கு பூஜைகள் நடத்தி தினசரி பொதுமக்களுக்கு அன்னதானமும்வழங்கப்படுகிறது.

    பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ளவிநாயகர் சிலைகளை கரைக்கமாவட்டம் முழுவதும் 7இடங்கள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.இந்த இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்கவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.நாளை, குன்னத்தூர், ஊத்துக்குளி, பொங்கலூர், காங்கயம்,குண்டடம் பகுதியில் வைக்கப்படும் விநாயகர்சிலைகள், 2-ந் தேதி, அவிநாசி, தாராபுரம், வெள்ளகோவில்,பல்லடம்,மூலனூர்,உடுமலை,3-ந்தேதி மடத்துக்குளம், திருப்பூர் மாநகரம்ஆகிய நாட்களில் இந்து முன்னணி சார்பில் விசர்ஜனம்ஊர்வலம் நடக்கிறது.சிலைகளின்பாதுகாப்பு உள்ளிட்டபல்வேறுஅறிவுரைகளை இந்து அமைப்பினருக்குபோலீசார் வழங்கி உள்ளனர். 2 ஆண்டுகளுக்கு பின், விசர்ஜனம்ஊர்வலம் நடப்பதால் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

    • இந்து அமைப்பினர் பெரிய அளவிலான சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட உள்ளனர்.
    • களிமண் சிலைகள் ரூ. 50 முதல் ரூ. 2000 வரை விற்பனைக்கு உள்ளன.

    திருப்பூர் :

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை 31ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டிஇந்து அமைப்பினர் பெரிய அளவிலான சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட உள்ளனர்.

    பக்தர்கள் வீடுகளில், களி மண்ணால் செய்த விநாயகர் சிலைகளை வைத்து மோதகம், கொழுக்கட்டை, சுண்டல், சர்க்கரை பொங்கல், அவல் பொரி உள்ளிட்ட பதார்த்தங்களை படைத்து வழிபடுவார்கள். வழிபாட்டுக்கு வைக்கப்படும் மண் சிலைகளை, நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இதற்காக எளிதில் கரையும் வகையிலான களிமண் சிலைகளை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.இதையடுத்து களிமண் விநாயகர் சிலைகள் திருப்பூரில் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் சதுர்த்தி வழிபாட்டுக்கு தேவையான பூஜை பொருட்கள் மற்றும் சிலைகளை ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர். இதனால் திருப்பூரில் விநாயகர் சதுர்த்திக்கான வழிபாட்டு பொருட்கள், சிலைகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில்,2ஆண்டுகளாக, ஊரடங்கால் விழா விமரிசையாக கொண்டாடப்படவில்லை. இந் தாண்டு உற்சாகத்துடன் கொண்டாட தயாராகிவிட்டனர். களிமண் சிலைகள் ரூ. 50 முதல் ரூ. 2000 வரை விற்பனைக்கு உள்ளன.கலர் செய்யப்படாத மண் சிலைகள், இயற்கையான காவி பூசிய சிலைகள், விதை விநாயகர் சிலைகளும் விற்பனைக்கு வந்துள்ளன என்றனர். திருப்பூர் கொங்கு மெயின்ரோடு, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, ஊத்துக்குளி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பலர் கடைகளில் விநாயகர் சிலைகளை விற்பனை செய்து வருகிறார்கள். அலகுமலை பகுதியில் தயாரிக்கப்பட்ட பெரிய விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் பூஜைக்கு தேவையான வெற்றிலை, பாக்கு, இலை, பிரசாதம் செய்வதற்கான பொருட்கள் உள்ளிட்டவைகளை வாங்க பொதுமக்கள் பலர் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகள், மளிகை கடைகளில் குவிந்தனர். இது மட்டுமின்றி பூக்களும் வாங்கி வருகின்றனர். இதனால் அவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது. 3 தினங்களுக்கு முன் கிலோ 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ கிலோ 800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. முல்லை கிலோ 400, அரளி 200, செவ்வந்தி 120, சம்பங்கி 150 ரூபாய்க்கு விற்கிறது. பூ வியாபாரிகள் கூறுகையில், பூ வரத்து அதிகமாகி, சீசன் சூடுபிடித்துள்ள நிலையில், அவ்வப்போது மழை மிரட்டுவதால் பூக்களை வாங்கி இருப்பு வைக்க தயக்கமாக உள்ளது. இருப்பினும் நாளை (31ந் தேதி) விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த தினம் இணைந்து வருவதால், பூ விலை உயர்ந்துள்ளது என்றனர்.

    • பல்வேறு வடிவங்களில் தத்ரூபமான வினாயகர் சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது
    • 1 அடி முதல் 15 அடி வரை பல்வேறு வடிவங்களில் வினாயகர் சிலை தயாரித்து, கண்கவர் வண்ணம் தீட்டப்படுகிறது.

    அவினாசி :

    அவினாசியை அடுத்து காசி கவுண்டன்புதூரில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு வடிவங்களில் தத்ரூபமான வினாயகர் சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிற்பி ஆனந்தகுமார் கூறுகையில்,ஆண்டுதோறும் நடைபெறும் வினாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்காக கடந்த 15 ஆண்டுகளாக வினாயகர் சிலைகளை வடிவமைத்து வருகிறோம்.

    கடந்த ஒரு மாதமாக எனது தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர்கல் மாவு, பேப்பர் மாவு, கிழங்கு மாவு ஆகிய மூன்று கலவைகள் மூலம் 1 அடிமுதல் 15 அடிவரை கற்பக வினாயகர், தாமரை வினாயகர், யானைமுக வினாயகர், காளிமுகம், சிங்கமுகம், மயில்வாகனம், கருடவாகனம், ராஜ அலங்கார வினாயகர் முகம், உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் வினாயகர் சிலை தயாரித்து அதற்கு ஏற்றார்போல் கண்கவர் வண்ணம் தீட்டப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட வினாயகர் சிலைகள் அவினாசி, அன்னூர், கருவலூர், கோபி நம்பியூர், சத்தியமங்கலம், புளியம்பட்டி, பல்லடம், உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது என்று கூறினார்.

    ×