என் மலர்
நீங்கள் தேடியது "Police"
- போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தி வந்தனர்.
- தீவிர சோதனை
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் சோதனை சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தி வந்தனர். அப்போது அந்த வழியாக சொகுசு கார் ஒன்று வந்தது. அந்த காரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர்.
அதில் சுமார் 1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பெட்டி பெட்டியாக கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து இந்த மது பாட்டில்களை கடத்தி வந்த ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியை சேர்ந்த மல்லி (வயது 35), இவரது நண்பர் ராம்மோகன் (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார் சொகுசு கார் மற்றும் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- பசுபதி ஊத்துமலை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
- நேற்று காலை பசுபதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
சுரண்டை:
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் பசுபதி. (வயது 55). இவர் ஊத்துமலை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். பசுபதி தற்போது குடும்பத்துடன் கீழ சுரண்டை பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் பசுபதி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அவர் திடீரென விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுபதி குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பணிச்சுமை காரணமாக இந்த முடிவை எடுத்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாயமான 4 சிறுவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
- கோகுலின் சொந்த ஊரான ஸ்ரீரங்கம் நாகமங்கலத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை அடுத்துள்ள நரிக்குடி போலீஸ் சரகத்துக் குட்பட்ட சமத்துவபுரம் குடியிருப்பை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 38). கட்டிட தொழிலாளி இவர் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்றும் கட்டிட வேலை பார்ப்பதுண்டு.
அதன்படி சில மாதங்க ளுக்கு முன்பு திருச்சி ஸ்ரீரங்கத்தை அடுத்துள்ள நாகமங்கலத்துக்கு கட்டிட வேலைக்கு பாலகிருஷ்ணன் சென்றார். அப்போது இவ ருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவலிங்கத்தின் மகன் கோகுலுக்கும் (16) பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நாகமங்க லத்தில் வேலை முடிந்த பின்பு பாலகிருஷ்ணன் ஊர் திரும்பி உள்ளார். அவருடன் கோகுலும் நரிக்குடிக்கு வந்தார். சில மாதங்கள் அங்கு தங்கியபோது அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் ஹபீஸ் (16), பிலாவடி குமார் மகன் அபிலேஷ் கார்த்திக் (14), ராஜபாண்டி மகன் அருண்பாண்டி (13)ஆகியோருடன் கோகுலுக்கு நட்பு ஏற்பட்டது. 4 பேரும் ஒன்றாக சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த னர்.
இந்த நிலையில் சம்பவத் தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற 4 பேரும் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சிஅடைந்த பாலகிருஷ்ணன் மற்றும் 3 சிறுவர்களின் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை.
இதுகுறித்து பாலகிருஷ் ணன் நரிக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரும் எங்கு சென்றார்கள்? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோகுலின் சொந்த ஊரான ஸ்ரீரங்கம் நாக மங்கலத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- போலீஸ்காரர் வாகன ஓட்டியிடம் லஞ்சம் வாங்கியதாகவும், இதனை சக போலீஸ்காரர் தட்டிக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
- 2 போலீஸ்காரர்களும் ஒருவரையொருவர் கைகளாலும், கம்பாலும் தாக்கிக் கொண்டனர்.
பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள சொஹ்சராய் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முக்கிய சாலையில் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு போலீஸ்காரர் வாகன ஓட்டியிடம் லஞ்சம் வாங்கியதாகவும், இதனை சக போலீஸ்காரர் தட்டிக் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.
2 போலீஸ்காரர்களும் ஒருவரையொருவர் கைகளாலும், கம்பாலும் தாக்கிக் கொண்டனர். பட்டப்பகலில் போலீஸ்காரர்கள் முக்கிய சாலையில் சண்டை போட்டுக் கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சிலர் இந்த சண்டையை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். வீடியோ வைரலானதைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சாலையில் சண்டை போட்ட 2 போலீஸ்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- விநாயகர் சிலை ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
- 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தர்மாபுரம் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் பொதுமக்கள் பங்களிப்போடு கடந்த 35 ஆண்டுகளாக ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலத்தை சிறப்பாக நடத்தி வருகிறார்.
அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று நடந்தது. விநாயகர் சிலை ஊர்வலத்தை மதுரை ஆதீனம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவில் தொழில் அதிபர் குவைத் ராஜா மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் நகரில் முக்கிய வீதி வழியாக சென்றது. இதில் வயல்வெளியில் விதை தூவும் விநாயகர் விவசாயி, புல்லட் பைக் ஓட்டும் விநாயகர், ஹெவி வெயிட் சாம்பியன் விநாயகர் என பல்வேறு விநாயகர் சிலைகள் இடம்பெற்றன.
ஊர்வலத்தில் பிரமாண்ட சோபக்கிருது விநாயகர் முன்னே சென் றது. இந்த வாகனத்தில் சாரதியாக சமூக சேவகர் ராமராஜ் இருந்தார். அதனைத் தொடர்ந்து மற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலமாக வந்தன
இறுதியில் ஆகம விதி முறைப்படி ஐ.என்.டி.யூ. சி. நகர் முன்புள்ள புதியா தியார் குளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்கா ணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவின் படி ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ப்ரீத்தி தலைமையில் 3
டி.எஸ்.பி.க்கள் 10 ஆய்வா ளர்கள் என 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடந்த 4 நாட்களாக மூன்று வேலை அன்ன தானம், பெண்களுக்கு இலவச தையல் எந்திரம், ஏழை எளியவர்களுக்கு சீர்வரிசைகளோடு இலவச திருமணங்கள், தொழிலாளி களுக்கு இலவச சைக்கிள் கள் வழங்கி பக்தர்கள் வியக்கும் வகையில் வீதி உலாவை நடத்திய மன்ற தலைவரும், சமூக சேவ கருமான ராமராஜூக்கும், மன்ற நிர்வாகிகளுக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
- வாகன சோதனையை தீவிரபடுத்தவும் போலீஸ் சோதனை சாவடி அமைக்கவும் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவிட்டார்.
- உரிய நபர்களை பிடித்து முகவரி, ஆதார் கார்டு, செல்போன் எண், டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை பெற்று சரிபார்த்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே காங்கயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதுறை ஊராட்சி உள்ளது. திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையை இணைக்கும் நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ள இந்த ஊராட்சியின் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. விவசாயம் சார்ந்த தொழில்கள் பிரதானமாக உள்ள இந்த கிராம பகுதிகளில் பொதுமக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.
மருதுறை ஊராட்சிக்குட்பட்ட சின்ன புத்தூர் கிராமத்தில் கடந்த மாதம் தனியார் பனியன் நிறுவன சூப்பர்வைசர் ஒருவரின் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகையை திருடிச்சென்று விட்டனர்.மேலும் மருதுறை ஊராட்சியில் பஸ் நிறுத்தம் அருகில் சுமார் 10 அடி தூரத்தில் உள்ள நொய்யல் ஆற்றை கடந்தால் ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முருங்கத்தொழுவு ஊராட்சி கிராம பகுதிகள் ஏராளமாக உள்ளன.
இந்த நிலையில் கடந்த வாரம் சென்னிமலை அருகே ஒட்டன்குட்டை கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியை மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதைத்தொடர்ந்து மருதுறை ஊராட்சி கிராம பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில், வாகன சோதனையை தீவிரபடுத்தவும் போலீஸ் சோதனை சாவடி அமைக்கவும் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவிட்டார். அதன்படி காங்கயம் போலீசார் தற்போது மருதுறை பஸ் நிறுத்தத்தில் பட்டீஸ்வரர் கோவில் முன்புறம் சாலையில் தடுப்புகள் அமைத்து போலீஸ் சோதனை சாவடி அமைத்து உள்ளனர்.
இதில் 24 மணி நேரமும் போலீசார் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து இருசக்கர, கனரக வாகனங்களில் வருபவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.
மேலும் சந்தேகத்திற்கு உரிய நபர்களை பிடித்து முகவரி, ஆதார் கார்டு, செல்போன் எண், டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை பெற்று சரிபார்த்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கரூரில் வீட்டு உரிமையாளரிடம் வாடகை தொடர்பாக தகராறில் ஈடுபட்ட சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்
- கைது செய்யப்பட்ட சிறுவன் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே ஓ.கே.ஆர். தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (56). இவருக்கு சொந்தமான வீடு மாணிக்க நகரில் உள்ளது. அங்குள்ள வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் மூர்த்தி தனக்கு சொந்தமான மாணிக்க நகரில் உள்ள வீட்டிற்கு சென்ற போது அங்கு ஏற்கனவே வாடகை கொடுக்காத 17 வயது சிறுவன் மூர்த்தியிடம் வாடகை கேட்க, சிறுவன் வாடகை கொடுக்க முடியாது என தகாத வார்த்தைகளால் மூர்த்தியை திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து மூர்த்தி வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் வழக்கு பதிவு செய்து 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் அரசினர் கூர் நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.
- பாலு. இவரது மகள் சுபாஹரிணி (வயது 20). இவர் அம்மாபேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
- தினமும் பஸ்சில் கல்லூரி சென்று வருவார்.
சேலம்:
சேலம் வீராணம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு. இவரது மகள் சுபாஹரிணி (வயது 20). இவர் அம்மாபேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 3-ம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் பஸ்சில் கல்லூரி சென்று வருவார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் கல்லூரி சென்றவர் மாலை அங்கிருந்து மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் காண வில்லை. இதுகுறித்து வீராணம் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
- தலைமை இடத்து துணை கமிஷனராக அனிதாவும் பணியாற்றி வருகிறார்.
- ஆதர்ஷ் பச்சேரா சென்னையில் சொத்து உரிமைகள் அமலாக்க பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார்.
நெல்லை:
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மேற்பார்வையில் மாநகரமானது நெல்லை மேற்கு, நெல்லை கிழக்கு என இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றங்கள் தடுக்கப்பட்டு வருகிறது.
காலி பணியிடம்
அதன்படி நெல்லை மாநகர் மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக சரவணகுமார் இருந்து வருகிறார். கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக சீனிவாசன் பணி யாற்றனார். அதே போல் தலைமை இடத்து துணை கமிஷனராக அனிதாவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் அந்த பதவியிடம் காலியாக இருந்தது. அந்த பொறுப்பை தலைமை இடத்தை துணை போலீஸ் கமிஷனர் அனிதா கவனித்து வந்தார்.
துணை கமிஷனர் நியமனம்
இதற்கிடையே காலியாக இருந்த போலீஸ் துணை கமிஷனர் பதவிக்கு உடனடியாக ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பி னரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி தற்போது நெல்லை கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக ஆதர்ஷ் பச்சேரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னையில் சொத்து உரிமைகள் அமலாக்க பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். தற்போது இவர் நெல்லை மாநகரத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
- காவலர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க நடமாடும் கழிப்பறை வாகனங்கள் அனுப்பப்பட்டு, போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.
- 10 நடமாடும் கழிப்பறை வாகனங்களும் தினசரி பயன்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில், வி.வி.ஐ.பி.க்கள் வழி பாதுகாப்பு பணி மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு, ஆண் மற்றும் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவ்வாறு பணியிலிருக்கும் ஆண் மற்றும் பெண் காவலர்கள், இயற்கை உபாதைகளை கழிக்க நடமாடும் கழிப்பறை வாகனங்கள் அனுப்பப்பட்டு, போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.
சென்னை பெருநகர காவல்துறையின் 4 மண்டலங்களுக்கும் தலா 2 கழிப்பறை வாகனங்கள் என 8 கழிப்பறை வாகனங்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறைக்கு 2 கழிப்பறை வாகனங்கள் என 10 நடமாடும் கழிப்பறை வாகனங்களும் தினசரி பயன்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கழிப்பறை வாகனங்களிலும் 2 இந்தியன் வகை கழிப்பறை, 2 மேற்கத்திய கழிப்பறைகள் என 4 கழிப்பறைகளும், உடை மாற்றுவதற்கு 1 சிறிய அறை, கை கழுவுவதற்கு 2 வாஷ் பேஷின்கள், தண்ணீர் நிரப்பி வைத்துக் கொள்ள 1 தண்ணீர் தொட்டி, பெண் காவலர்கள் கழிப்பறை வாகனங்களில். 5 ரூபாய் நாணயம் செலுத்தினால் நாப்கின்கள் வழங்கும் எந்திரம், சிறிய குப்பை தொட்டி ஆகியவை பொருத்தப்பட்டு, நல்லமுறையில் இயங்கி வருகிறது. இவைகள் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு கழிப்பறை வாகனம் தினசரி தலைமைச் செயலகத்தில் நிறுத்தப்பட்டு, அங்கு பணிபுரியும் பெண் போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.