என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுக்கோட்டை"

    • பெண்களை மதிக்க தெரியாமல் திமுக அமைச்சர்கள் பேசுகின்றனர்.
    • தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும்.

    புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் பிரச்சார பயண நிறைவு விழாவில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உரையாற்றினார்.

    அப்போது அவர், கரூர் கூட்ட நெரிசல், கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு சம்பவங்களை சுட்டிக்காட்டி பேசினார்.

    மேலும் அவர் கூறியதாவது:-

    பெண்களை மதிக்க தெரியாமல் திமுக அமைச்சர்கள் பேசுகின்றனர்.

    திமுக ஆட்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர்.

    நாங்கள் உருவாக்கியது ஆட்சி மாற்றத்திற்கான கூட்டணி; திமுக உருவாக்கியது போலி கூட்டணி, திமுக கடைபிடிப்பது போலி மதச்சார்பின்மை

    தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும். பீகார் மற்றும் திருவனந்தபுரத்தில் வீசிய காற்று தமிழ்நாட்டிலும் வீசும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நயினார் நாகேந்திரனின் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் நாளை நடைபெறுகிறது.
    • தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுக்கோட்டை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் திருக்கோகர்ணத்தில் பாலன் நகர் அருகே பள்ளத்திவயல் பகுதியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. இதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று பேசுகிறார்.

    இதையொட்டி பாதுகாப்பு காரணம் கருதி நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்தநிலையில், பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை கூடுதல் டி.ஜி.பி. மகேஸ்வர தயாள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜோஸ் நிர்மல் குமார், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சமீபத்தில் மதுரையில் தென்மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகளை மத்திய மந்திரி அமித்ஷா சந்தித்து பேசினார்.
    • கூட்டணி உறுதியானதும் பிரதமர் மோடி தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

    திருச்சி:

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

    ஆளுங்கட்சியான தி.மு.க. வரும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் வகையில் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது.

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களுக்கும் கள ஆய்வு சென்று புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் வருகிறார். மேலும் தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார்.

    அதேபோல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கிடையே வரும் தேர்தலையொட்டி பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து, 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைப்போம் என்று சூளுரைத்துள்ள எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. அரசால் மக்கள் படும் அவஸ்தைகள் குறித்து பேசி வருகிறார்.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. இந்த தேர்தலில் எப்படியாவது தமிழ்நாட்டில் தி.மு.க.வை வீழ்த்துவதுடன், வலுவாக காலூன்றும் வகையிலும் செயல்பட்டு வருகிறது. அதற்கேற்றவாறு சமீபத்தில் மதுரையில் தென்மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகளை மத்திய மந்திரி அமித்ஷா சந்தித்து பேசினார்.

    அதேபோல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. தலைமை, மத்திய மந்திரி பியூஸ் கோயலை களம் இறக்கி உள்ளது. தமிழ்நாடு பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அவர் கடந்த வாரம் சென்னை மற்றும் புதுச்சேரிக்கு வருகை தந்து நிர்வாகிகளை முதல்கட்டமாக சந்தித்து பேசினார். அதேபோல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி யையும் சந்தித்து தேர்தல் வியூகம் மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் ஆலோசனையின்படி அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் பியூஸ்கோயல் ஈடுபட்டு உள்ளார். இந்த கூட்டணியில் பிற கட்சிகளை சேர்ப்பதற்கான பணிகளும் திரைமறைவில் நடைபெற்று வருகிறது.

    அதனை மெய்ப்பிக்கும் வகையில் சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியின்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய த.வெ.க., தே.மு.தி.க. கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப் பட்டது. அதேபோல் அ.ம.மு.க., ஓ.பி.எஸ்.சின் அ.தி.மு.க. தொண்டர் மீட்புக்கழகம் மற்றும் பா.ம.க.வையும் கூட்டணியில் இணைக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகிறது.

    இந்த பரபரப்பான சூழலில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகிற 4-ந்தேதி தமிழகம் வருகிறார். தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த அக்டோபர் 12-ந்தேதி மதுரையில் தொடங்கி தமிழகம் முழுவதும் மேற்கொண்டுள்ள தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தேர்தல் பிரசார யாத்திரை நிறைவு விழா புதுக்கோட்டையில் நடைபெறுகிறது.

    இதில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் 4-ந்தேதி திருச்சி வருகிறார். பின்னர் இங்கிருந்து புதுக்கோட்டைக்கு சென்று நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரசார யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார்.

    இதற்காக நத்தம்பண்ணை ஊராட்சி பள்ளத்திவயல் பகுதியில் 60 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அங்கு பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்ள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ஐ.ஜே.கே. கட்சி தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பா.ஜ.க. சார்பில் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    நயினார் நாகேந்திரனின் பிரசார பயண நிறைவு விழாவுடன், தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டமாகவும் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்கிறார்கள்.

    புதுக்கோட்டை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திருச்சி வரும் அமித்ஷா இரவு கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கோர்ட் மாரியாட் ஓட்டலில் தங்கி ஓய்வு எடுக்கிறார். பின்னர் மறுநாள் (5-ந்தேதி) ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். அதன் பின்னர் திருச்சியில் நடை பெறும் 'நம்ம ஊரு மோடி ஜி' பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறார். 1000 பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிடும் இந்த நிகழ்ச்சி மன்னார் புரம் நான்கு ரோட்டில் அமைந்து உள்ள ராணுவ மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டார்.

    அமித்ஷா பங்கேற்கும் இந்த பொங்கல் விழாவில் ஆயிரம் பெண்கள் பங்கேற்க உள்ளனர். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகை தரும் அமித்ஷா, அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் சில கட்சிகளை இணைப்பதற்கான வேலைகளை தொடங்குவார் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. கூட்டணியை உறுதி செய்யாமல் இருக்கும் தே.மு.தி.க., அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஏற்கனவே பிரதமர் மோடி வருகிற 9-ந்தேதி தமிழகம் வருவதாக இருந்தது. ஆனால் கூட்டணி இன்னும் இறுதியாகாததால் அவரது வருகை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கூட்டணி உறுதியானதும் அவர் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். அமித்ஷா வருகை தமிழக பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • புதுக்கோட்டை அறந்தாங்கி நீலகொண்டான் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் ரூ.15 கோடியில் புனரமைக்கப்படும்.
    • கந்தவர்கோட்டை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.203 கோடியில் 103 புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

    இதையடுத்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகள் வெளியிட்டார்.

    * புதுக்கோட்டை அறந்தாங்கி நீலகொண்டான் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் ரூ.15 கோடியில் புனரமைக்கப்படும்.

    * கீரமங்கலம் பகுதியில் விவசாய விளைபொருட்களுக்கான குளிர்பதன கிடங்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

    * இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதுக்கோட்டையில் டைடல் பார்க் அமைக்கப்படும்.

    * ஆவுடையார்கோவில் ஊராட்சி, வடகாடு ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.10 கோடியில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்படும்.

    * கந்தவர்கோட்டை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

    * கிரமங்கலத்தில் காய்கறிகளை பாதுகாக்க ரூ.1.60 லட்சம் மதிப்பீட்டில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்.

    • சென்னையில் இருந்து விமான மூலம் நாளை இரவு 9 மணிக்கு திருச்சி வருகிறார்.
    • திருச்சி கொட்டப்பட்டில் முதியோர்களுக்கான அன்புச்சோலை திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை திருச்சி வருகிறார். சென்னையில் இருந்து விமான மூலம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு திருச்சி வருகிறார்.

    பின்னர் டிவிஎஸ் டோல்கேட் நெடுஞ்சாலைத்துறை விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். பின்னர் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலையில் சோமரசம்பேட்டை டாக்டர் கலைஞர் திடலில் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் செல்கிறார். அங்கு மூகாம்பிகை பொறியியல் கல்லூரி திடலில் அரசு விழாவில் கலந்து கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

    இதில் ரூ. 201 கோடியே 70 லட்சம் மதிப்பில் 103 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 223 கோடியே 6லட்சம் செலவில் முடிவுற்ற 577 திட்ட பணிகளை திறந்து வைத்து, ரூ.348 கோடியே 43 லட்சம் மதிப்பில் 44 ஆயிரத்து 93 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா பேருரை ஆற்றுகிறார்.

    மொத்தம் புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ. 773 கோடியே 19 லட்சம் திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    அதன் பின்னர் திருச்சி கொட்டப்பட்டில் முதியோர்களுக்கான அன்புச்சோலை திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இது முதியோர்களுக்கான பிரத்யேக பகல் நேர பராமரிப்பு மையமாகும். வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் வேலைக்கு செல்லும் சூழ்நிலையில் தனியாக இருக்கும் முதியவர்கள் இங்கு பராமரிக்கப்பட உள்ளனர்.

    இந்த மையங்களில் அவர்களுக்கு காலையில் டீ ஸ்னாக்ஸ், மதிய உணவு, மாலையில் டீ, காபி வழங்கப்படுகிறது. மேலும் அவரவர் சூழலுக்கு ஏற்ப கவுன்சிலிங் மற்றும் கேரம் போர்டு போன்ற பல்வேறு விளையாட்டு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

    தமிழக முழுவதும் 25-க்கும் மேற்பட்ட அன்புச் சோலை மையங்களை அன்றைய தினம் முதலமைச்சரும் மு. க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக கொட்டப்பட்டிலிருந்து தொடங்கி வைக்கிறார்.

    திருச்சி மாவட்டத்தில் பெட்டவாய்த்தலை பகுதியிலும் மற்றொரு மையம் திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மதியம் 2 மணி அளவில் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    முதல்வர் திருச்சி வருகையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் இரவு 12 மணி வரை திருச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கொடி தோரணங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கட்சி நிர்வாகிகள் முதல்வரை வரவேற்று பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர்கள், வரவேற்பு பதாகைகள் வைக்க உள்ளனர். முதல்வரின் வருகை தி.மு.க.வினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • 2012 இல் புதுக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு கார்த்திக் தொண்டைமான் வென்றார்.
    • 2016 மற்றும் 2021 தேர்தல்களில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு அவர் தோல்வியை தழுவினார்.

    அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

    2012 ஆம் ஆண்டு புதுக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு கார்த்திக் தொண்டைமான் வென்றார். அதன் பின்னர் 2016 மற்றும் 2021 தேர்தல்களில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு அவர் தோல்வியை தழுவினார்.

    திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கார்த்திக் தொண்டைமான், "அதிமுக மதவாத சக்திகளுக்கு துணை போகிறது. அதிமுக போகும் போக்கே சரியில்லை. தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் தலைதூக்க கூடாது என்ற காரணத்திற்காக திமுகவில் இணைந்தேன்" என்று தெரிவித்தார்.

    • அதிமுக ஆட்சியில் தொங்கப்பட்ட காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம் திமுக அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
    • காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் 2,306 கிராமங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டது.

    மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் புதுக்கோட்டை கந்தர்வகோட்டையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது, எடப்பாடி பழனிசாமி உரையாற்றியதாவது:-

    அதிமுக ஆட்சியில் தொங்கப்பட்ட காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம் திமுக அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    ரூ.16000 கோடியில் தொடங்கப்பட்ட காவிரி- குண்டாறு திட்டம் முடக்கப்பட்டுள்ளது.

    அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தால் புதுக்கோட்டை சுற்றுவட்டார மக்கள் பயன் பெறுகின்றனர்.

    காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் 2,306 கிராமங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டது.

    புதுக்கோட்டை சுற்றுவட்டார மக்களுக்காக ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அரசு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்பட்டது.

    அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மருதங்கோன் அரசு கலை, அறிவியல் கல்லூரியின் மூலம் ஏழை, எளிய மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

    வீட்டு மனை இல்லாத ஏழைகள், தாழ்த்தப்பட்டோருக்கு வீட்டு மனை கொடுத்து, இலவச வீடுகள் கட்டித் தரப்படும்.

    தைப்பெங்கலை கொண்டாடும் விதமாக அனைத்து குடும்பத்திற்கும் ரூ.2500 வழங்கப்படும்.

    விவசாயிகளுக்கு ஷிப்ட் முறையில் திமுக ஆட்சியில் மின்சாரம் தருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உண்டியல் கிடப்பதைப் பார்த்து பொது மக்கள் கீரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
    • தொடர் உண்டியல் உடைப்பு சம்பவங்கள் தொடர்பாக கீரமங்கலம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வீட்டின் பூட்டை உடைத்துத் தங்க நகை, வெள்ளிப் பொருட்கள் திருட்டு, கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி, கோவில் உண்டியல்கள் உடைப்பு எனத் திருட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இத்தகைய சூழலில் தான் கீரமங்கலம் காவல் சரகத்தில் உள்ள வேம்பங்குடி மேற்கு கிராமத்தில் உள்ள அடைக்கலம் காத்த அய்யனார் கோவில், கொத்தமங்கலம் கூலாட்சி கொல்லை காமாட்சியம்மன் கோவில் உண்டியல்கள் உடைத்துத் திருடப்பட்டிருந்தது. இந்த நிலையில், சேந்தன்குடி பெரியாத்தாள் ஏரிக்கு வடக்குப் பக்கம் உள்ள புதருக்குள் ஒரு சில்வர் உண்டியல் கிடப்பதைப் பார்த்து பொது மக்கள் கீரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரித்ததில் அது நகரம் காளியம்மன் கோவில் உண்டியல் என்பது தெரிய வந்துள்ளது.

    கீரமங்கலம் காவல் சரகத்தில் மட்டும் கடந்த 27-ம் தேதி ஒரே இரவில் 3 ஊர்களில் 3 கோவில் உண்டியல்களை உடைத்துக் கொள்ளையடித்துள்ளனர்.

    இதனால் கீரமங்கலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் உண்டியல் உடைப்பு சம்பவங்கள் தொடர்பாக கீரமங்கலம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தடயவியல் துறையினர் கைரேகை பதிவுகளைச் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

    • மழையூர் டாஸ்மாக் கடை அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளை வழிமறித்த மர்ம ஆசாமிகள் சிலர் முருகேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
    • சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர். இவரது மகன் முருகேசன் (வயது 25), மரம் வெட்டும் தொழிலாளி. இவர் நேற்று இரவு மழையூர் கடைவீதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    மழையூர் டாஸ்மாக் கடை அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளை வழிமறித்த மர்ம ஆசாமிகள் சிலர் முருகேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில், தலை, தோள்பட்டை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் அடைந்த முருகேசன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து தகவலறிந்த மழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே முருகேசன் அரிவாளால் வெட்டி படுகொலை செய்த தகவலை அறிந்த அவரது உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மழையூரில் கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த நிலையில் முருகேசன் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். அதே பகுதியை சேர்ந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முருகேசன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் மழையூரில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    • பஸ்சை ஓட்டி வந்த நபர்கள், பஸ்சில் டீசல் இல்லாததால் நிறுத்தி விட்டு சென்றுள்ளது தெரிய வந்தது.
    • கல்லூரி காவலர் கேட்டபோது, ஸ்பேர் பஸ் எடுத்து வரச் சொன்னதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியின் பஸ் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து ஆலங்குடி போலீசார் மாவட்டம் முழுவதும் தகவல் கொடுத்து சோதனை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ஆலங்குடியில் காணாமல் போன கல்லூரி பஸ், அறந்தாங்கி அருகே நிற்பது தெரிய வந்தது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அறந்தாங்கி போலீசார், ஆலங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    பஸ்சை ஓட்டி வந்த நபர்கள், பஸ்சில் டீசல் இல்லாததால் நிறுத்தி விட்டு சென்றுள்ளது தெரிய வந்தது.

    அறந்தாங்கி போலீசாரின் தகவலையடுத்து, ஆலங்குடி போலீசார் அறந்தாங்கி விரைந்து சென்று காணாமல் போன கல்லூரி பஸ்சை மீட்டு வந்தனர்.

    இதனை தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட அதே கல்லூரியில் படிக்கும் 4 மாணவர்கள் அங்கு நின்ற கல்லூரி பஸ்சை ஓட்டிக்கொண்டு சென்றுள்ளனர்.

    இதுகுறித்து கல்லூரி காவலர் கேட்டபோது, ஸ்பேர் பஸ் எடுத்து வரச் சொன்னதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.

    பஸ் வெளியே சென்ற பிறகு தான், அந்த பஸ் அதே கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர்களால் கடத்தப்பட்டுள்ளது தெரிந்துள்ளது.

    இந்த பஸ்சை திட்டமிட்டு கடத்தியதால் ஏதேனும் தவறான எண்ணத்தில் கடத்தி இருப்பார்களோ? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.

    இச்சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆலங்குடி போலீசார் பஸ்சை கடத்திய மாணவர்கள் 4 பேரையும் தேடி வருகின்றனர். 

    • இதில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தரிசித்தால், சகல தோஷங்களும் நீங்கும்.
    • கார்த்திகை நட்சத்திர நாளில் விளக்கேற்றி வழிபடுவது விசேஷம்.

    புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் சுமார் 25 கி.மீ தொலைவில் தேனிமலை கிராமத்தில் அழகிய முருகன் கோவில் உள்ளது.

    செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும், பெண்களும் தொடர்ந்து ஏழு செவ்வாய்க் கிழமைகளில் ஓரை காலத்தில் இங்கு வந்து

    ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு மலையை வலம் வந்து வணங்கினால், விரைவில் தோஷம் நீங்கி, திருமண வரம் கைகூடும்.

    செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், முருகக் கடவுளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை ஒழியும்.

    பங்குனி உத்திர நாளில் புதுக்கோட்டை திருமயம், பொன்னமராவதி, அன்னவாசல், முதலான பல ஊர்களில் இருந்து

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடம் சுமந்து வந்தும் வழிபடுகின்றனர்.

    மலையடிவாரத்தில், சுனை ஒன்று உள்ளது.

    இதில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தரிசித்தால், சகல தோஷங்களும் நீங்கும்.

    கார்த்திகை நட்சத்திர நாளில் இந்த முருகப் பெருமானுக்கு விளக்கேற்றி வழிபடுவது விசேஷம்.

    ஸ்ரீவள்ளி ஸ்ரீதெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு மாலை சார்த்தி, திருமாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் கைகூடும்.

    • புதுக்கோட்டை மாவட்டம் தேர்தல் திருவிழாவை உற்சாகமாக கொண்டாடுகிறது.
    • அனைத்து வேட்பாளர்களும் புதுக்கோட்டை மாவட்டத்தை கடக்காமல் செல்ல இயலாது.

    தேர்தல் வந்தாலே பட்டி தொட்டி முதல் மாநகர பகுதிவரை விழா கோலம்தான். அன்பான வாக்காள பெருமக்களே உங்கள் பொன்னான வாக்குகளை என்றவாறு வலம் வரும் வாகனங்கள், போடுங்கம்மா ஓட்டு என்ற குரல்கள், உங்கள் தொகுதிக்கு தேவையான அனைத்தையும் செய்து தருவேன் என்ற வாக்குறுதிகள் என கலகலக்க வைக்கும் காட்சிகளை காணலாம்.

    பாராளுமன்ற தேர்தலில் சற்று புதுமையாக புதுக்கோட்டை மாவட்ட மக்களை 4 தொகுதி வேட்பாளர்கள் சந்திக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை சட்டப்பேரவை தொகுதிகள் திருச்சி பாராளுமன்ற தொகுதியிலும், ஆலங்குடி, திருமயம் தொகுதிகள் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியிலும், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதி ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியிலும், விராலிமலை சட்டப் பேரவை தொகுதி கரூர் பாராளுமன்ற தொகுதியிலும் வருகிறது.

    தேர்தல் பிரசாரம், தலைவர்கள் வருகை, வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு என அனைத்திலும் 4 பாராளுமன்ற தொகுதி கட்சியினர் இந்த மாவட்டத்துக்கு வந்து செல்லவேண்டிய நிலை உள்ளது. 4 தொகுதிகளின் அனைத்து வேட்பாளர்களும் புதுக்கோட்டை மாவட்டத்தை கடக்காமல் செல்ல இயலாது என்ற நிலை உள்ளது.

    இதனால் புதுக்கோட்டை மாவட்டம் தேர்தல் திருவிழாவை உற்சாகமாக கொண்டாடுகிறது. என்றாலும் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்தும் பொருட்டு மறக்காமல் ஓட்டு போட்டு ஜனநாயக கடமை ஆற்றவேண்டும் என்கிறார்கள் சமூகநல ஆர்வலர்கள்.

    ×