என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DRONES"

    • வோல்கெல் விமானப் படைதளம் மீது டிரோன்கள் பறந்தது தெரியவந்தது.
    • இதையடுத்து, அவற்றை சுட்டு வீழ்த்த வான் பாதுகாப்பு படையினர் முயன்றனர்.

    ஆம்ஸ்டர்டாம்:

    ஐரோப்பிய நாடுகளில் சமீப காலமாக விமான நிலையம், ராணுவ தளம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் டிரோன்கள் பறப்பது, பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

    இந்நிலையில், நெதர்லாந்தின் வோல்கெல் விமானப் படைதளம் மீது டிரோன்கள் பறந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை சுட்டு வீழ்த்த வான் பாதுகாப்பு படையினர் முயன்றனர். ஆனால் அந்த டிரோன்கள் தப்பிச் சென்றன.

    இதனையடுத்து, ஐன்ட்ஹோவன் விமான நிலைய வான் பகுதியிலும் சில டிரோன்கள் பறந்தன. எனவே பாதுகாப்பு கருதி விமான சேவை சில மணி நேரம் துண்டிக்கப்பட்டது. அடுத்தடுத்து பறந்த டிரோன்களால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இதுகுறித்து ராணுவ மந்திரி ரூபன் பிரெக்கல்மன்ஸ் கூறுகையில், இனி வரும் காலங்களில் டிரோன் அச்சுறுத்தலை சமாளிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    • ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய நிலையில் இந்த தாக்குதல்.
    • 101 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றச்சாட்டு.

    உக்ரைன் தலைநகர் கீவ் நகரை குறிவைத்து இன்று 2ஆவது நாளாக இரவு நேரத்தில் ரஷியா டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேர் உயிரிழ்ந்த நிலையில், 29 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    கீவில் உள்ள டெஸ்னியான்ஸ்கி மாவட்டத்தில் உள்ள இரண்டு குடியிருப்பு கட்டிடம் ரஷியாவின் டிரோன்கள் தாக்குதலால் தீப்பிடித்து எரிந்தது. 9 மற்றும் 16 மாடி குடியிருப்புகளில் இருந்து மக்களை மீட்புக்குழுவினர் வெளியேற்றினர். 74 வயது மூதாட்டியால் வீட்டில் இருந்து வெளியே வரமுடியவில்லை. இதனால் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

    மேலும் 19 வயது இளம் பெண் மற்றும் அவருடைய 46 வயது தாய் ஆகியோரும் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 101 டிரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியு்ளது. இதில் 90 டிரோன்களை தடுத்து நிறுத்தியும், தாக்கியும் அழித்ததாக உக்ரைன் விமானப்படை தெரிவித்து்ளளது. ஐந்து டிரோன்கள் நான்கு இடங்களை தாக்கியது எனவும் தெரிவித்துள்ளது.

    நேற்று ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி 4 பேர் கொலை செய்த நிலையில், இந்த தாக்குதலை ரஷியா நடத்தியுளள்து.

    • ஜெர்மனியின் முனிச் விமான நிலையத்திலும் டிரோன்கள் பறந்தன.
    • இந்த டிரோன்கள் ரஷியாவுக்கு சொந்தமானது என குற்றம் சாட்டப்பட்டது.

    பெர்லின்:

    டென்மார்க், போலந்து நாடுகளின் எல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டிரோன்கள் கண்டறியப்பட்டன. இதனால் அந்த விமான நிலையங்களை மூடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    இந்த டிரோன்கள் ரஷியாவுக்கு சொந்தமானது என குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ரஷியா தரப்பில் எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

    இந்நிலையில், தற்போது ஜெர்மனியின் முனிச் விமான நிலையத்திலும் டிரோன்கள் பறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் விமான நிலையம் மூடப்பட்டதால் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 15 விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இதனால் சுமார் 3 ஆயிரம் பயணிகள் அவதியடைந்தனர்.

    ஐரோப்பிய நாடுகளில் அடுத்தடுத்து டிரோன்கள் பறக்கும் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சில மணி நேரங்களுக்கு பிறகு விமான நிலையம் திறக்கப்பட்டு விமான சேவை தொடங்கியது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய சில டிரோன்கள் போலந்து நாட்டுக்குள் ஊடுருவின.
    • டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக போலந்து ராணுவம் தெரிவித்தது.

    ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய சில டிரோன்கள் போலந்து நாட்டுக்குள் ஊடுருவின.

    இதையடுத்து அந்த டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக போலந்து ராணுவம் தெரிவித்தது. நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் போலந்து உறுப்பினராக உள்ளது.

    இந்தக் கூட்டமைப்பில் ஒரு நாட்டுக்கு எதிரான தாக்குதல் அல்லது போர் செயல்பாடு ஒட்டுமொத்த கூட்டமைப்புக்கும் எதிரான செயலாக கருதப்படும்.

    அந்த நாட்டுக்கு ஆதரவாக, அனைத்து நாடுகளும் போரில் களம் இறங்கலாம். இதையடுத்து ரஷியாவுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று நேட்டோ அமைப்பை உக்ரைன், போலந்து வலியுறுத்தி உள்ளன.

    • அவசரகால ஆயுதக் கொள்முதல் திட்டத்தின் கீழ் இந்த பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படுகின்றன.
    • , கவச வாகனங்கள் மற்றும் துப்பாக்கிகளில் பொருத்தக்கூடிய நைட் விஷன் அமைப்புகளும் வாங்கப்படும்.

    ராணுவத் திறன்களை மேம்படுத்துவதற்காக ரூ.2,000 கோடி மதிப்பிலான ஆயுதக் கொள்முதல் ஒப்பந்தத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

    அவசரகால ஆயுதக் கொள்முதல் திட்டத்தின் கீழ் இந்த பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படுகின்றன.

    நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ரூ.1,981.90 கோடிக்கு இந்த ஆயுதங்கள் வாங்கப்படும்.

    பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்காக இந்த பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படுவதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    13 ஒப்பந்தங்கள் மூலம் ட்ரோன் பாதுகாப்பு அமைப்புகள், குறைந்த எடை கொண்ட ரேடார்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் தயாராகி வருகிறது.

    ஏவுகணைகள், ரிமோட் கண்ட்ரோல் செய்யப்பட்ட கண்காணிப்பு ட்ரோன்கள், சிறிய ட்ரோன்கள், குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள், குண்டு துளைக்காத தலைக்கவசங்கள், கவச வாகனங்கள் மற்றும் துப்பாக்கிகளில் பொருத்தக்கூடிய நைட் விஷன் அமைப்புகளும் வாங்கப்படும்.

    முன்னதாக, ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு ஆயுதக் கிடங்கு அதிகரிக்கப்படும் என்று தகவல்கள் வெளிவந்தன.

    இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது, ஜம்மு-காஷ்மீர் மற்றும் எல்லைப் பகுதியில் உள்ள பல இடங்களில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இந்திய ராணுவம் அவற்றை அழித்தாலும் இவ்வகை தாக்குதல்கள் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

    • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருகிறார்.
    • தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்காபங்கஜம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருகிறார்.

    இதனை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி நாளை (ஞாயிற்றுகிழமை), நாளைமறுநாள் (திங்கள்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.

    எனவே, தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாதுகாப்பு ஒத்திகை செலவு என கணக்கிட்டால் நிதிச்செலவினம் கடுமையாக இருக்கும் என வல்லுநா்கள் மதிப்பிடுகின்றனா்.
    • இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் சண்டை நடந்தது.

    புதுடெல்லி:

    காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியா பதிலடி கொடுத்து 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் சண்டை நடந்தது. தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது.

    பாகிஸ்தானுடனான 4 நாள் சண்டையில் ரூ.15 ஆயிரம் கோடி செலவு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 7-9 தேதிகளில் நடந்த தாக்குதல்கள், அதையொட்டி மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மட்டும் தினமும் ரூ.1460 கோடி முதல் ரூ.5000 கோடி வரை செலவானது. அந்த வகையில் 4 நாள் செலவு ரூ. 15,000 கோடி வரை ஆனதாக பாதுகாப்புத் துறை மதிப்பிட்டுள்ளது. கப்பலில் இருந்து தரைப் பகுதியில் இலக்கைத் தாக்கக்கூடிய இந்திய தயாரிப்பு பிரமோஸ் ஏவுகணை பயன்படுத்தப்பட்ட செலவினமும் இதில் அடங்கும்.

    எல்-70 ரக விமான எதிா்ப்பு சிறிய வகை நவீன பீரங்கி, இசட்யு 23 எம்எம் பீரங்கிகள், எஸ்-400 அம்சங்களைக் கொண்ட 'சில்கா' ரகவான் பாதுகாப்பு சாதனங்கள் போன்றவற்றை பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்தியதாக இந்திய பாதுகாப்புப்படை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

    சண்டையில் தலா ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள ரஷிய தயாரிப்பு வெடிமருந்து டிரோன்களும் (காமிகேஸ்) நூற்றுக்கணக்கில் பயன் படுத்தப்பட்டுள்ளன. இவை தவிர போா் விமானங்களை இயக்கும் செலவு, தளவாடங்கள், துருப்புக்களின் நடமாட்டம், மீட்பு நடவடிக்கைகள், போா் மற்றும் பாதுகாப்பு ஒத்திகை செலவு என கணக்கிட்டால் நிதிச்செலவினம் கடுமையாக இருக்கும் என வல்லுநா்கள் மதிப்பிடுகின்றனா்.

    • அவசரக்காலங்களுக்கான ஆயுத இருப்புக்காக இறக்குமதி செய்தது.
    • இவை மேற்கு எல்லை பகுதியில் பயன்படுத்தப்படுகின்றன.

    பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா சமீபத்தில் ரஷ்யாவிலிருந்து இக்லா-எஸ் ஏவுகணைகளை இறக்குமதி செய்துள்ளது.

    அவசரக்காலங்களுக்கான ஆயுத இருப்புக்காக ராணுவம் இந்த குறுகிய தூர தாக்குதல் ஏவுகணைகளை இறக்குமதி செய்தது.

    சில வாரங்களுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்ட இந்த ஏவுகணைகள் எல்லைக்கு கொண்டுசெல்லப்படுவதாகக் கூறப்படுகிறது..

    ராணுவம் மொத்தம் ரூ. 260 கோடி மதிப்புள்ள ஏவுகணைகளை இறக்குமதி செய்துள்ளது. இவை மேற்கு எல்லை பகுதியில் பயன்படுத்தப்படுகின்றன.

    இந்த ஏவுகணைகள் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

    இக்லா-எஸ் என்பது இந்தியாவிடம் ஏற்கனவே உள்ள இக்லா ஏவுகணைகளின் மிகவும் மேம்பட்ட பதிப்பாகும்.

    • பஞ்சாப் எல்லைப் பகுதி வழியாக இந்த ஆண்டு 215 ட்ரோன்கள் ஊடுருவல்.
    • சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டுள்ளவர்களின் முகவரியை கண்காணிக்க முடியும்.

    பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு எதிராக செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் எல்லைகள் வழியே ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வீசி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

    இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எல்லைப் பாதுகாப்பு படையின் இயக்குநர் ஜெனரல் பங்கஜ்குமார் சிங் கூறியுள்ளதாவது: 

    ட்ரோன் தடயவியல் ஆய்வுக்காக டெல்லியில் அண்மையில் அதிநவீன ஆய்வகத்தை எல்லை பாதுகாப்பு படை நிறுவி உள்ளது. அதன் முடிவுகள் எங்களுக்க மிகவும் ஊக்கமளிக்கின்றன. இதன் மூலம் எல்லை தாண்டிய சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளின் முகவரியைக் கூட பாதுகாப்பு ஏஜென்சிகள் கண்காணிக்க முடியும்.

    கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியே ஊடுருவிய சுமார் 79 ட்ரோன்களை பி.எஸ்.எஃப். கண்டறிந்தது. ​​​​இது கடந்த ஆண்டு 109 ஆக அதிகரித்தது. நடப்பு ஆண்டில் அது 266 ஆக அதிகரித்துள்ளது.

    பஞ்சாப் எல்லைப் பகுதி வழியாக இந்த ஆண்டு 215 ட்ரோன்களும், ஜம்முவில் சுமார் 22 ட்ரோன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த பிரச்சினை தீவிரமானது. அவர்கள் (பயங்கரவாதிகள்) ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள், ஆயுதங்கள், வெடிமருந்துகள், போலி ரூபாய் நோட்டுக்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவிற்குள் கொண்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டாக எல்லை தொடர்பாக மோதல் பிரச்சினை நீடித்து வருகிறது.
    • தென்கொரியா, அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது.

    சியோல்:

    கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக எல்லை தொடர்பாக மோதல் பிரச்சினை நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், வடகொரியாவின் 5 ஆளில்லா டிரோன் விமானங்கள் இன்று தென்கொரிய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளன. இந்த டிரோன்களில் ஒன்று தென்கொரியாவின் தலைநகரான சியோலின் தெற்கு பகுதி எல்லைக்குள் மிகவும் உள்ளே வந்துள்ளது.

    வடகொரிய டிரோன்கள் நுழைந்ததையடுத்து தென்கொரிய விமானப்படை உஷார்படுத்தப்பட்டது. போர் விமானங்கள், உளவு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உடனடியாக விரைந்தன. வடகொரிய டிரோன்களை எச்சரிக்கும் வகையில் துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில் டிரோன்கள் வீழ்த்தப்பட்டனவா? என்ற தகவல் வெளியாகவில்லை.

    • மு.க.ஸ்டாலின் சாலை மார்க்கமாக நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு புறப்படுகிறார்.
    • முதல்-அமைச்சர் வருகையையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    நெல்லை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் ஆய்வு கூட்டங்களும் நடத்தி வருகிறார்.

    நாகர்கோவில் பயணம்

    அதன்படி இன்று மதுரைக்கு செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை(திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு சாலை மார்க்கமாக அங்கிருந்து நாகர்கோவிலுக்கு புறப்படுகிறார். நெல்லை வழியாக செல்லும் அவர் இரவு 7.30 மணிக்கு நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகை சென்றடைகிறார்.

    தொடர்ந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் புதிய மாநகராட்சி கட்டிடம் திறந்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். அதன்பின்னர் மதியம் 2 மணியளவில் காரில் தூத்துக்குடிக்கு வந்து அங்கிருந்து விமானம் மூலமாக சென்னை செல்கிறார்.

    போலீஸ் பாதுகாப்பு

    இதனையொட்டி விருதுநகர் மாவட்ட எல்கையில் இருந்து குமரி மாவட்ட எல்கை வரையிலும் நெல்லை, தென்காசி,தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    மேலும் தூத்துக்குடி மாவட்ட எல்கையான ஸ்ரீவைகுண்டம் வட்டம் வசவப்பபுரம் கிராமத்தில் இருந்து மறவன்மடம் வரை மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரையிலும் நாளை மறுநாள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • சென்னையில் ஜி 20 மாநாடு கருத்தரங்கம் நடைபெறுகிறது.
    • இதையொட்டி வரும் 25ம் தேதி வரை டிரோன்கள் பறக்க போலீசார் தடை விதித்தனர்.

    சென்னை:

    இந்தியாவில் ஜி 20 மாநாடு வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.

    சென்னையில் 2-வது கட்ட கருத்தரங்கு நிகழ்ச்சி வரும் வெள்ளி, சனிக்கிழமை ஆகிய 2 நாட்கள் கிண்டியில் உள்ள ஐ.டி.சி.கிராண்ட் சோழா ஓட்டலில் நடைபெற உள்ளது. இதில் 29 வெளிநாடுகள், 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

    கருத்தரங்கு நடைபெறும் ஓட்டல், ரமடா பிளாசா, ஓட்டல் ஹப்ளீஸ், ஓட்டல் பார்க் ஹையாத் ஆகிய ஓட்டல்களில் தங்குகின்றனர். இவர்கள் தங்கியுள்ள ஓட்டல்கள், கருத்தரங்கு நடைபெறும் ஓட்டல் மற்றும் இவர்கள் செல்லும் வழித்தடங்களை சிவப்பு மண்டலமாக சென்னை போலீசார் அறிவித்துள்ளனர்.

    இந்நிலையில், வரும் 25-ம் தேதி வரை இப்பகுதிகளில் டிரோன்கள், இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

    ×