என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்முதல்"

    • மின்மாற்றி கொள்முதல் ஊழல் குறித்து வழக்குப்பதிவு செய்வதை தி.மு.க. அரசு திட்டமிட்டு தாமதித்து வருகிறது.
    • தி.மு.க. ஆட்சியில், இந்த ஊழல் வழக்கில் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை மின்சார வாரியத்திற்கு 45 ஆயிரத்து 800 மின்மாற்றிகள் ரூ.1182 கோடிக்கு வாங்கப்பட்டன. ஒவ்வொரு மின்மாற்றியும் 50 சதவீதம் வரை கூடுதல் விலை கொடுத்து வாங்கப்பட்டதில் மின்வாரியத்திற்கு ரூ.387 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து உயர்நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப் பிரிவிடம் அறப்போர் இயக்கம் 2023-ம் ஆண்டு ஜூலை 6-ந்தேதி புகார் அளித்தது.

    இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிடக் கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால் அவற்றின் மீது எந்த நடவடிக்கையையும் தி.மு.க. அரசு மேற்கொள்ளவில்லை.

    இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 7-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, இதே கோரிக் கையுடன் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருப்பதைக் காரணம் காட்டி, மின்மாற்றி கொள்முதல் ஊழல் குறித்து வழக்குப்பதிவு செய்வதை தி.மு.க. அரசு திட்டமிட்டு தாமதித்து வருகிறது.

    மின்மாற்றி ஊழல், மின்சாரக் கொள்முதல் ஊழல், ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் பேரம் என மின்வாரியத்தை ஊழல் வாரியமாக மாற்றியது தான் தி.மு.க. அரசின் சாதனையாகும்.

    மின்மாற்றிக் கொள்முதலில் தொடர்புடைய எதிரிகள் மீது வழக்கு தொடர்வதற்கு பதிலாக அவர்களுக்கு சன்மானம் வழங்கும் தி.மு.க. ஆட்சியில், இந்த ஊழல் வழக்கில் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

    எனவே, மின்மாற்றி கொள்முதலில் நடைபெற்ற ஊழல்கள், கூட்டுச் சதிகள் ஆகியவற்றை வெளிக்கொண்டு வந்து, சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்கும் வகையில், இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அவசரகால ஆயுதக் கொள்முதல் திட்டத்தின் கீழ் இந்த பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படுகின்றன.
    • , கவச வாகனங்கள் மற்றும் துப்பாக்கிகளில் பொருத்தக்கூடிய நைட் விஷன் அமைப்புகளும் வாங்கப்படும்.

    ராணுவத் திறன்களை மேம்படுத்துவதற்காக ரூ.2,000 கோடி மதிப்பிலான ஆயுதக் கொள்முதல் ஒப்பந்தத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

    அவசரகால ஆயுதக் கொள்முதல் திட்டத்தின் கீழ் இந்த பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படுகின்றன.

    நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ரூ.1,981.90 கோடிக்கு இந்த ஆயுதங்கள் வாங்கப்படும்.

    பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்காக இந்த பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படுவதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    13 ஒப்பந்தங்கள் மூலம் ட்ரோன் பாதுகாப்பு அமைப்புகள், குறைந்த எடை கொண்ட ரேடார்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் தயாராகி வருகிறது.

    ஏவுகணைகள், ரிமோட் கண்ட்ரோல் செய்யப்பட்ட கண்காணிப்பு ட்ரோன்கள், சிறிய ட்ரோன்கள், குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள், குண்டு துளைக்காத தலைக்கவசங்கள், கவச வாகனங்கள் மற்றும் துப்பாக்கிகளில் பொருத்தக்கூடிய நைட் விஷன் அமைப்புகளும் வாங்கப்படும்.

    முன்னதாக, ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு ஆயுதக் கிடங்கு அதிகரிக்கப்படும் என்று தகவல்கள் வெளிவந்தன.

    இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது, ஜம்மு-காஷ்மீர் மற்றும் எல்லைப் பகுதியில் உள்ள பல இடங்களில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இந்திய ராணுவம் அவற்றை அழித்தாலும் இவ்வகை தாக்குதல்கள் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

    • கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
    • இறவை பாசனதிட்ட மின்மோட்டார்களை பழுதுபார்த்து சீரமைக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா அலுவலகத்தில் வட்டார அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் சமூக நலத்துறை தனிப்பிரிவு தாசில்தார் ரமேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மின்சாரம், தோட்டக்கலை உள்பட பல துறை அதிகாரிகள் தங்களது துறைகளில் உள்ள திட்டம் குறித்து விளக்கினர்.

    கூட்டத்தில் வேதாரண்யம் விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் கிராமங்களில் தங்கி பணியாற்ற வேண்டும், வடிகால் வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் ஆகாயதாமரை செடிகளை அகற்றி தூர்வாரப்பட வேண்டும், கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், தகட்டூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள இறவை பாசனதிட்ட மின்மோட்டார்களை பழுதுபார்த்து சீரமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

    இதற்கு பதிலளித்து கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் பேசியதாவது:-

    விவசாயிகளின் குறைகள் அனைத்தும் சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வேதாரண்யம் பகுதி முழுவதும் உள்ள ஆக்கிரமிப்பில் இருக்கும் அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகளை மீட்டு, வடிகால் பகுதிகளில் உள்ள ஆகாயதாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    துணை தாசில்தார் மாதவன் அனைவரையும் வரவேற்றார்.

    முடிவில் தனித்துறை ரமேஷ் நன்றி கூறினார்.

    • பொங்கலூர் மற்றும் காங்கயம் ஆகிய 4 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டது.
    • கொப்பரை கொள்முதல் கால நீட்டிப்புக்கான கருத்துரு மேல் நடவடிக்கைக்காக இயக்குனர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    திருப்பூர்

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, பெதப்பம்பட்டி, பொங்கலூர் மற்றும் காங்கயம் ஆகிய 4 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டது. அதன்படி இந்த விற்பனை கூடங்களிலும் இதுவரை 9,844 விவசாயிகளிடமிருந்து ரூ.129 கோடி மதிப்பிலான 12,145 மெட்ரிக் டன் அரைவை தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேங்காய் கொப்பரைக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. கொப்பரை கொள்முதல் கால நீட்டிப்புக்கான கருத்துரு மேல் நடவடிக்கைக்காக இயக்குனர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பயன்பாட்டிற்காக பொள்ளாச்சியில் தென்னை சார்ந்த பொருட்களின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு முதன்மை பதப்படுத்தும் மையம் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    • ரூ.28 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் நெல் கொள்முதல் நிலையம் கட்டுமான பணி.
    • ரூ.4 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில் சத்திரகுளம் தூர்வாரப்பட்டு படித்துறைகள் அமைக்கும் பணி.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம், போலகம், புத்தகரம் ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் 15-ஆவது நிதி குழு மானியத்தில் ரூ.11 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிட கட்டுமான பணிகளையும், கீழப்பூதனூர், பில்லாளி ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டிட கட்டுமான பணிகளையும், நரிமணம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிட கட்டுமான பணிகளையும், அம்பல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில் சத்திரகுளம் தூர்வாரப்பட்டு படித்துறைகள் அமைக்கும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி திட்டம்) பிருத்திவிராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குனர் கலைச்செல்வி, திருமருகல் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாத்திமா ஆரோக்கியமேரி, ஒன்றிய பொறியாளர் செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உடன் இருந்தனர்.

    • பற்றாக்குறையை சமாளிக்க, பல மாநிலங்களில் இருந்து அரிசி, கோதுமை பெறப்படுகிறது.
    • ஒரு வருட தேவைக்கும் மேலாக உணவு தானியம் கையிருப்பு.

    இந்திய உணவு கழகத்தின் சென்னை மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்திய உணவுக் கழகத்தின் சென்னைப் பிரிவின் கீழ், 1.9 லட்சம் மெட்ரிக் டன் சேமிப்பு திறன் கொண்ட உணவு தானிய சேமிப்பு கிடங்குகள் ஆவடி மற்றும் எழும்பூரில் உள்ளன. மேலும், எலாவூரில் 0.25 மெட்ரிக் டன் சேமிப்பு திறன் கொண்ட நிலையம் உள்ளது. 


    இக்கிடங்குகள் முலம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஒரு வருட தேவைக்கும் மேலான உணவு தானியம் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை கொள்முதலில் தமிழ்நாடு பற்றாக்குறை மாநிலமாக உள்ளது.

    பற்றாக்குறையை சமாளிக்க, பஞ்சாப், ஹரியானா, ஆந்திரா, தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து அரிசி, கோதுமை ரயில் மற்றும் சாலை போக்குவரத்து மூலம் பெறப்படுகிறது.

    பிரதமரின் இலவச உணவு பொருள் திட்டத்தின் கீழ் இந்திய உணவுக் கழக சென்னைப் பிரிவு, 1.9 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 0.17 மெட்ரிக் டன் கோதுமையை வழங்கியது. இந்த திட்டத்தின் கீழ் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 24 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் பயன் பெறுகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கறிக்கோழி பண்ணைகள் அதிகம் உள்ளதால் மக்காச்சோள தேவை அதிகம் உள்ளது.
    • கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 2500 ரூபாய்க்கு கொள்முதல் செய்தால் மட்டுமே ஓரளவு லாபம் ஈட்ட முடியும்.

    வீரபாண்டி : 

    திருப்பூர் மாவட்டத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் காய்கறி பயிர்கள், மக்காச்சோளம், வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. கறிக்கோழி பண்ணைகள் அதிகம் உள்ளதால் மக்காச்சோள தேவை அதிகம் உள்ளது.

    உள்ளூர் விளைச்சல் குறைவாக உள்ளதால் அண்டை மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. உள்ளூரில் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் அருகே உள்ள நொச்சிப்பாளையத்தை சேர்ந்த விவசாயி சிவநாதன் கூறுகையில், காய்கறிகளுக்கு போதிய விலை கிடைக்காததால் மக்காச்சோளம் பயிரிட்டோம்.

    தற்பொழுது குவிண்டால் 1800 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஏக்கருக்கு 25 முதல் 30 குவிண்டால் கிடைக்கும். கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 2500 ரூபாய்க்கு கொள்முதல் செய்தால் மட்டுமே ஓரளவு லாபம் ஈட்ட முடியும். எனவே மத்திய மாநில அரசுகள் விவசாய பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்து விவசாயிகளிடமிருந்து மத்திய மாநில அரசுகள் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் வேண்டும் என்றார்.

    .

    • இடைத்தரகர்களின் தலை யீடு இன்றி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.
    • விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    காங்கிரஸ் கட்சியின் மாநில பொது செயலாளர் (விவசாய பிரிவு) சுர்ஜித் சங்கர் முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    காவிரி டெல்டா பகுதிகளில் சில இடங்களில் அறுவடை தொடங்கியுள்ளது. இந்நிலையில், பெரும்பா லான கொள்முதல் நிலை யங்களில் அடிப்படை வசதி களான குடிநீர், கழிவறை மற்றும் சாலை வசதி இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.

    மேலும், தமிழகத்தில் உள்ள திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்க ளுக்கு போர்கால அடிப்படையில் ஷெட் வசதி செய்து தர வேண்டும், அனைத்து கொள்முதல் நிலையங்களுக்கும் நெல் தூற்றக்கூடிய எந்திரங்கள் வழங்க வேண்டும், நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்களின் தலையீடு இன்றி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும், கொள்முதல் நிலையங்களில் மூட்டை தூக்குவதற்கு தொழி லாளர்கள் பற்றாக்குறை இருப்பதை கருத்தில் கொண்டு மூட்டைகளை ஏற்றி இறக்குவதை நவீனப்படுத்த வேண்டும், கொள்முதல் செய்து இங்கு வரும் நெல் மூட்டைகளை காலதாமதம் இன்றி அரவை மில்களுக்கும், வெளி மாவட்டத்திற்கும் விரைந்து அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தாளடி பருவம் நெருங்கியுள்ள நிலையில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும், விளைவித்த நெல்லை அரசு குறித்த நேரத்தில் கொள்முதல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகள் பலர் அறுவடை பருவத்தை தாண்டியும் அறுவடை செய்யாமல் உள்ளனர்.
    • நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சம்பா முன்பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யும்பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    மெலட்டூர் அரசு கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்து விற்க முடியாமல் கடந்த ஒருவார காலமாக காத்து கிடக்கின்றனர்.

    கொள்முதல்நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் பலர் அறுவடை பருவத்தை தாண்டியும் அறுவடை செய்யாமல் உள்ளனர்.

    எனவே மெலட்டூரில் அரசு கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறந்து நெல்கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விவசாயிகளின் விளைப்பொருட்களை கொள்முதல் செய்யும் பணிகளை தொடங்கி உள்ளனர்.
    • இதனால், நன்னிலம் வட்டார விவசாயிகள், பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டாரத்தில், தற்போது சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு வழக்கத்திற்கு முன்னதாக மேட்டூரில் முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடியும், அதனைத் தொடர்ந்து சம்பா சாகுபடி பணிகள், நடைபெற்றது.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை, தமிழகத்தில் வழக்கத்திற்கு அதிகமாக மழை பெய்தபோதும் நன்னிலம் வட்டார பகுதியில், மழைப்பொழிவு என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, அமைந்திருந்ததால் இந்த ஆண்டு நன்னிலம் வட்டார பகுதியில், மகசூல் சிறப்பாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியோடு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    மேலும், விவசாயப் பணிகளுக்கு தற்போது ஆள் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் எந்திரங்களின் ஆதிக்கம் தொடங்கிய நிலையில் எந்திரங்கள் விரைந்து அறுவடை பணிகளை மேற்கொள்வதால், அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள், உடனடியாக கொள்முதல் செய்து கொள்ளக் கூடிய வகையில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உரிய காலத்திற்கு முன்பாக திறக்கப்பட்டு, விவசாயிகளின் விளைப்பொருட்களை கொள்முதல் செய்யும் பணிகளை தொடங்கி உள்ளார்கள்.

    விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மேட்டூர் அணை நீர் திறப்பும் விவசாயிகள் அறுவடை செய்த நெற்களை, விற்பனைக்கு காத்திருக்–காமல் விவசாயிகளின் நலன் பேணிக் காக்கக்கூடிய வகையில் உடனடியாக கொள்முதல் செய்யக்கூடிய வகையில், விவசாயிகளின் உணர்வுகளைஉணர்ந்த அரசாக, இருந்து உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகளை, தொடங்கியதில் நன்னிலம் வட்டார விவசாயிகள், பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தமிழக அரசின் செயல்பாடு விவசாயிகளின் நலனை பேணிக் காக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது என்று பாராட்டையும் தெரிவித்து வருகிறார்கள்.

    • விவசாயிகள் கொட்டியுள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
    • ரங்கநாதபுரத்தில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி கோஷங்கள் எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது பாபநாசம் வட்டம் விழுதியூர் ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய நிர்வாகிகள் திருநாவுக்கரசு, ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    விழுதியூர் பகுதியில் கடந்த காலங்களில் இரண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வந்தது. தற்போது ஒரு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட ரெங்கநாதபுரத்தில் கடந்த காலங்களில் செயல்பட்டு வந்த மற்றொரு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொட்டி வைத்து விவசாயிகள் ஒரு வார காலமாக காத்து கிடக்கும் அவலம் உள்ளது. உடனடியாக ரெங்கநாதபுரம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொட்டியுள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பின்னர் மனுவை அளித்துவிட்டு அவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று தரையில் நெல்லை கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரங்கநாதபுரத்தில் உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி கோஷங்கள் எழுப்பினர். இந்த நூதன போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அறுவடை பணிகளை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர்.
    • மழை காரணமாக பல இடங்களில் நெல் கொள்முதல் பணிகள் நடைபெறவில்லை.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் தொடர்ந்து காலை முதல் மாலை வரை பரவலாக மழை பெய்தது பாபநாசம் தாலுகாவில் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன.

    தற்போது பெய்த மழையால் நெற் கதிர்கள் வயலில் சாய்ந்து அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் கூறியதாவது:-

    பாபநாசம் சுற்றுப்பகுதி களில் பெய்த கனமழை காரணமாக வயலில் மழைநீர் தேங்கி நிற்பதால் நெல்மணிகள் உதிர்ந்து பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சம்பா நெற்பயிர் அறுவடை பணிகளை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.சில பகுதிகளில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் மழையின் காரணமாக சாய்ந்து விழுந்து பாதிக்கப்பட்டுள்ளன.

    மழை நீடித்தால் நெற்பயிர்கள் பெருமளவு பாதிப்பு ஏற்படுவதாகும். இதனிடையே பாபநாசம் தாலுகாவில் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு நிலவுவதாகவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில் மழை காரணமாக பல இடங்களில் நெல் கொள்முதல் பணிகள் நடைபெறவில்லை.

    கொள்முதல் நிலைய ங்களில் விவசாயிகள் தாங்கள்கொண்டு சென்ற நெல்லை கொள்முதல் செய்ய முடியாமல்தார்ப்பாய் கொண்டு மூடி

    வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    ×