என் மலர்

  நீங்கள் தேடியது "transformer"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆறுமுகநேரி பேயன்விளை ஐயன்நகர் பகுதியில் நீண்ட காலமாக குறைந்த மின் அழுத்தம் பிரச்சனை இருந்து வந்தது. அங்கு புதிய மின் மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
  • ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய மின்மாற்றியை திறந்து வைத்தார்.

  ஆறுமுகநேரி:

  ஆறுமுகநேரி பேயன்விளை ஐயன்நகர் பகுதியில் நீண்ட காலமாக குறைந்த மின் அழுத்தம் பிரச்சனை இருந்து வந்தது. இதனால் அங்கு புதிய மின் மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

  இதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் விஜயசங்கர பாண்டியன் உத்தரவின் பேரில் ஆறுமுகநேரி உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார் வழிகாட்டுதலில் ரூ.9.3 லட்சம் மதிப்பில் புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது.

  இதன் தொடக்க விழா ஆறுமுகநேரி பேரூராட்சி துணைத்தலைவர் அ.கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. உதவி மின் பொறியாளர் ஜெபஸ் சாம் முன்னிலை வகித்தார். போர்மேன் திரவியம் வரவேற்று பேசினார்.

  ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய மின்மாற்றியை திறந்து வைத்தார். 8-வது வார்டு கவுன்சிலர் புனிதா சேகர், நகர தி.மு.க செயலாளர் நவநீத பாண்டியன், காமராஜ், அஜித், விஜய், ராஜன், மகாராஜன், முத்துசூர்யா, வனகார்த்திக், வேல் குமார், பேச்சிமுத்து, மாயாண்டி, மாரியப்பன், ராமமூர்த்தி, ரஞ்சித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திறன் உயர்த்தப்பட்ட மின்மாற்றி பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.
  • பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

  பெரம்பலூர்:

  பெரம்பலூர் மாவட்டம் கைகளத்தூரில் ரூ.18 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் 110 கிலோவாட் திறன் கொண்ட புதிய துணை மின் நிலையம் மற்றும் துறைமங்கலம் நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள துறைமங்கலம் 110 கிலோவாட் துணை மின் நிலையத்தில் ரூ.1 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் 16 மெகாவாட் அதிக திறன் உயர்த்தப்பட்ட மின்மாற்றி ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து துணை மின் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா, பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். தரம் உயர்த்தப்பட்ட மின்மாற்றியால் பெரம்பலூர் நகர், அரணாரை, எளம்பலூர் இந்திரா நகர், காவலர் குடியிருப்பு, எளம்பலூர், சமத்துவபுரம், அரியலூர் மெயின் ரோடு, கவுல்பாளையம், காவலர் குடியிருப்பு, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி, அருமடல் ரோடு தொழிற்சாலை பகுதிகளில் உள்ள 40 ஆயிரத்து 386 மின் நுகர்வோர்களுக்கு சீரான மின்சாரமும், அதேபோல கிருஷ்ணாபுரம் துணைக்கோட்டத்தில் உள்ள கை.களத்தூரை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உள்ள 8 ஆயிரத்து 324 மின் நுகர்வோருக்கு சீரான மின்சாரமும் வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிகளில் மின்வாரிய அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நெல்லை மின் பகிர்மானத்திற்கு உட்பட்ட நகர்புற கோட்டத்தில் பழையபேட்டை உப மின் நிலையம் உள்ளது.
  • மின்தடை சாதனம் நிறுவப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

  நெல்லை:

  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மானத்திற்கு உட்பட்ட நகர்புற கோட்டத்தில் பழையபேட்டை உப மின் நிலையத்தில் இருந்து பேட்டை பகுதிக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு செல்லும் மின் பாதைக்கு உண்டான காலாவதியான 11 கிலோ வோட் மின்தடை சாதனம் மாற்றப்பட்டு புதிய மின்தடை சாதனம் நிறுவப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

  இப்பணியை செயற்பொறியாளர் (பொறுப்பு) ஷாஜஹான் தலைமையில் சிறப்பு பராமரிப்பு பிரிவு தாழையூத்து, மின் அளவி சோதனை பிரிவு தாழையூத்து, உப மின் நிலையம் மற்றும் பழையபேட்டை உபகோட்ட பிரிவு அலுவலக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களால் செய்து முடிக்கப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியால் இன்று முதல் 3 நாட்கள் மின் சப்ளையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • மின் சப்ளையில் ஏற்படும் சிரமங்களை பொது மக்கள் புரிந்து கூடுதல் திறன் உடைய மின்மாற்றி பொருத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  பரமக்குடி

  பரமக்குடி நகர் காட்டு பரமக்குடியில் உள்ள துணை மின் நிலையம் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இருந்த போதிலும் வளர்ந்து வரும் தொழில் நகரமான பரமக்குடி பகுதிக்கு மின் தட்டுப்பாடு நிலவி வந்தது.

  இதனை கருத்தில் கொண்டு மின்சார துறை சார்பில் 16 எம்.வி.ஏ திறன் கொண்ட பவர் டிரான்ஸ்பார்மர் பொருத்தும் பணியை தற்போது தொடங்கியுள்ளது. இந்த பணி இன்று (19-ந் தேதி) முதல் வருகிற 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

  இதையொட்டி மின் சப்ளையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் சிட்கோ பீடருக்கு காவனூர் உப மின் நிலையம் வழியாகவும், பெருமாள் கோவில், கமுதக்குடி பகுதிகளுக்கு பார்த்திபனூர் உப மின் நிலையம் வழியாகவும், எமனேஸ்வரம் பகுதிக்கு இளையான்குடி உப மின் நிலையம் வழியாகவும் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

  எனவே தொடர்ந்து 3 நாட்களுக்கு மின் சப்ளையில் ஏற்படும் சிரமங்களை பொது மக்கள் புரிந்து கூடுதல் திறன் உடைய மின்மாற்றி பொருத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மின்மாற்றியை சீரமைக்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  விக்கிரமங்கலம்:

  அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே கீழநத்தம் ஊராட்சிக்கு உட்பட்டது மழவராயநல்லூர் கிராமம். இக்கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 16-ந் தேதி மழவராயநல்லூர் மேற்குதெருவில் உள்ள மின்மாற்றி பழுதடைந்துள்ளது. இதனால் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கடந்த சில நாட்களாக மின்சாரம் இல்லாததால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கடம்பூர்- விக்கிரமங்கலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

  இது குறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தசாமி, மணவாளன் மற்றும் போலீசார், ஊராட்சி செயலாளர் முருகானந்தம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  அப்போது சம்பந்தப்பட்ட மின்சாரவாரிய அதிகாரிகளிடம் கூறி மின்மாற்றியை உடனே சீரமைத்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கடம்பூர்- விக்கிரமங்கலம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராணிப்பேட்டையில் 40 பயணிகளுடன் சென்ற ஆந்திர அரசு பஸ் டிரான்ஸ்பார்மரில் மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

  வாலாஜா:

  ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள உறவுகொண்டா (உருவிகொண்டா) பகுதியில் இருந்து சென்னைக்கு இன்று காலை அம்மாநில அரசு பஸ் 40 பயணிகளுடன்சென்று கொண்டிருந்தது.

  சித்தூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை காரை பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த பேரி கார்டு வளைவில் பஸ் திரும்பியது.

  அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடி அங்கிருந்த டிரான்ஸ்பார்மரில் பயங்கரமாக மோதியது. இதில் டிரான்ஸ்பார்மர் உடைந்து நொறுங்கியது. மின்வயர்கள் பஸ் கூரை மீது கொத்தாக விழுந்தது.பஸ்சுக்குள் இருந்த 40 பயணிகளும் ‘அபயக்குரல்’ எழுப்பினர். பஸ்சை விட்டு உடனடியாக கீழே இறங்கி விட்டனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

  தகவலறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மின் இணைப்பை துண்டித்தனர். விபத்தில் சிக்கிய பஸ்சில் இருந்த அனைத்து பயணிகளும் மாற்று பஸ்களில் தங்களது ஊர்களுக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நல்லூர் துணை மின்நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பிடித்தது.
  கந்தம்பாளையம்:

  நல்லூர் துணை மின்நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பிடித்தது.

  இதுபற்றிய விவரம் வருமாறு:-

  நாமக்கல் மாவட்டம் பரமத்தி தாலுகா நல்லூரில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து கந்தம்பாளையம், நல்லூர், சித்தம்பூண்டி, பெருமாபட்டி, மணியனூர், கோலாரம், வசந்தபுரம் மற்றும் பல ஊர்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

  நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் துணை மின் நிலையத்தில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அப்போது டிரான்ஸ்பார்மரின் டேங்க் வெடித்து அதில் இருந்த ஆயில் வெளியேறி தீப்பிடித்தது. அந்த தீ தரைப்பகுதியில் புற்களில் பற்றிப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது.

  இதுகுறித்து திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதனால் இரவு முழுவதும் அந்த பகுதியில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. நேற்று காலையில் மின்வாரிய ஊழியர்கள் அங்கு வந்து டிரான்ஸ்பார்மரை சீரமைத்தனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்து சுற்றுப்புற பகுதிகளுக்கு மீண்டும் மின்வினியோகம் செய்யப்பட்டது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் அருகே இன்று டிரான்ஸ்பார்மரில் பயங்கர தீ விபத்து பெரும் விபத்து ஏற்பட்டது. உரிய நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
  தாரமங்கலம்:

  சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கே.ஆர்.தோப்பூரில் மத்திய அரசுக்கு சொந்தமான ‘பவர் கிரிப்ட்’ உள்ளது. இதேப்போல் அப்பகுதியில் தமிழ்நாடு மின்பகிர்மான வட்டத்திற்கு சொந்தமான ‘பவர்ஹவுஸ்’ உள்ளது.

  இந்த துணை மின்நிலையத்திற்கு மேட்டூர் அனல் மின்நிலையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி பவர் ஸ்டேசன் ஆகிய இடங்களில் இருந்து டவர்கள் மூலம் உயர் அழுத்த மின்சாரம் கொண்டு வந்து சேமித்து வைத்து சேலம் மாநகரின் சில பகுதிகளுக்கும் கே.ஆர்.தோப்பூர், தாரமங்கலம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கும் மின்விநியோகம் செய்யப்படுகிறது.

  இந்த துணை மின்நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர்களில் ஒன்று சில நாட்களுக்கு முன்பு பழுதானது. இதனால் கடந்த ஒருவாரகாலமாக பராமரிப்புப்பணி மேற்கொள்ளப்பட்டு பழுதடைந்த டிரான்ஸ்பார்மர் சரி செய்யப்பட்டது. நேற்று மாலை முதல் டிரான்ஸ்பார்மர் இயக்கப்பட்டது. இன்று காலை 8.30 மணி அளவில் இந்த டிரான்ஸ்பார்ம் திடீரென தீப்பிடித்து குபு, குபுவென கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்தது.

  இதனை தொடர்ந்து துணைமின்நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் மின் விநியோகம் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டது. தீ விபத்து குறித்து இரும்பாலை, ஓமலூர், சூரமங்கலம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் 5 வாகனங்களில் கொண்டு வந்த தண்ணீரை டிரான்ஸ்பார்மரில் பீய்ச்சி அடித்து தீ முழுவதையும் அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

  இங்கிருந்து சற்று தொலைவில் தான் தமிழக மின்வாரிய ஊழியர்களுடைய குடியிருப்புகள் உள்ளன. இங்கு செயற் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் பலர் குடும்பத்துடன் தங்கி இருக்கிறார்கள். டிரான்ஸ் பார்மர் தீப்பிடித்து எரிவதை அறிந்தவுடன் அவர்கள் வெடித்து விடுமோ? என பீதி அடைந்தனர். இந்த டிரான்ஸ்பார்மரின் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும். இது வெடித்து இருந்தால் பெரிய அளவில் விபத்து நேரிட்டு இருக்கும். ஏனெனில் இதன் பக்கத்தில் ஏராளமான டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. மேலும் அருகில் மத்திய அரசுக்கு சொந்தமான பவர் கிரிப்ட் மற்றும் மின்வாரிய குடியிருப்புகள் உள்ளது. உரிய நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். #Tamilnews
  ×