search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிந்துரை"

    • சட்டப்படிப்புகள் துறை சார்பாக பல்கலைக்கழகத்தின் முடிவெடுக்கும் குழுவுக்கு மனுஸ்மிருதியை பாடத்திட்டத்தில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது .
    • 'அரசியலமைப்பை சூறையாட காத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கனவை நினைவாக்க பிரதமர் மோடி இந்த ராஜதந்திரத்தை அரங்கேற்றியுள்ளார்' என்று காங்கிரஸ் சாடியுள்ளது.

     இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகமாக விளங்கும் டெல்லி பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டப் படிப்புகளின் பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதியை சேர்ப்பதற்கான ஆலோசனையை நிர்வாகம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்த கவுன்சில் கூட்டத்தில் இது குறித்த ஆலோசனை நடைபெற்றுள்ளது.

     

    சட்டப்படிப்புகள் துறை சார்பாக பல்கலைக்கழகத்தின் முடிவெடுக்கும் குழுவுக்கு மனுஸ்மிருதி குறித்து ஜி.என்.ஜா மற்றும் டி. கிருஷ்ணசுவாமி ஐயர் ஆகியோர் எழுதிய விளக்க புத்தகங்களை இளங்கலை முதல் மற்றும் மூன்றாம் ஆண்டு பாடத்திட்டத்தில் சேர்க்கும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சர்ச்சையை கிளம்பியுள்ள இந்த முடிவுக்கு இடதுசாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பான SDTF ஆசிரியர்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    பெண்களின் உரிமைகளுக்கு எதிராகவும், பட்டியலினத்தர்களுக்கு எதிராகவும் மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கும் மனுஸ்மிருதி கல்வி முறையை சீர்குலைக்கும் என்று அவர்கள் பலகலை நிர்வாகத்துக்கு எழுதியுள்ள எதிர்புக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

    இதற்கிடையில் பாடதிட்டத்தில் மனு ஸ்மிருதியை சேர்க்கும் முடிவை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது. 'பல காலமாக அரசியலமைப்பை சூறையாட காத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கனவை நினைவாக்க பிரதமர் மோடி இந்த ராஜதந்திரத்தை அரங்கேற்றியுள்ளார்' என்று காங்கிரஸ் சாடியுள்ளது.

    மனு ஸ்மிருதி எனப்படும் மனு தர்ம சாஸ்திரம், பிற்போக்கான வகையில் சாதிய படிநிலைகளை வகுத்து மனிதர்களக்குக்கிடையில் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கிறது என்ற சர்ச்சை நிலவுவது குறிப்பிடத்தக்கது.

    • ஜம்மு காஷ்மீர் தலைமை நீதிபதி கோட்டீஸ்வர் சிங்கையும் பரிந்துரை.
    • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை.

    சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

    கடந்த மே மாதம் 23 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான எஸ்.வி.கங்காபூர்வாலா ஓய்வு பெற்றார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்த ஆர். மகாதேவனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார். அதன்படி கடந்த மே 24 இல் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

    இந்த நிலையில், தற்போது உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருக்கும் ஆர். மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

    இதேபோல், ஜம்மு காஷ்மீர் தலைமை நீதிபதி கோட்டீஸ்வர் சிங்கையும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விஜய்யுடன் இதுவரை நடிக்காத ஒருவரை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது
    • இதில் நடிகை மிருனால் தாக்கூர், பாலிவுட் நாயகி அலியா பட், திரிஷா, சமந்தா பெயர் இடம் பெற்று உள்ளது

    பிரபல நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    தற்போது இப்படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.விரைவில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ளது. அதன்பின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்குகிறது.

    வருகிற 14 - ந்தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடல் வெளியாகுகிறது. மேலும் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு GOAT படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.




    கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக்கழகம்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கினார்.அதை தொடர்ந்து அரசியல் பணிகளில் தீவிரம் காட்டினார்.

    வருகிற 2026- ல் சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிட திட்டமிட்டு உள்ளார். 'தளபதி - 69' படத்திற்கு பிறகு சினிமா நடிப்பில் இருந்து விலகுவதாகவும் விஜய் தெரிவித்தார்.

    இந்நிலையில் தளபதி- 69 படத்தில் விஜய் யை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் எச்.வினோத்துக்கு கிடைத்தது. அவரின் ஸ்கிரிப்ட்டை விஜய் அங்கீகரித்தார். விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.வருகிற 'மே' மாதம் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் தளபதி - 69 படத்தில் கதாநாயகியாக நடிக்கப்போவது யார் என்ற கேள்வி தற்போது எழுந்து உள்ளது. மேலும் விஜய்யின் கடைசி படம் இது என்பதால் விஜய்யுடன் இதுவரை நடிக்காத ஒருவரை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக 4 கதாநாயகிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.




    இதில் பிரபல நடிகை மிருனால் தாக்கூர், பாலிவுட் நாயகி அலியா பட், மற்றும் திரிஷா, சமந்தா ஆகியோர் பெயர் இடம் பெற்று உள்ளது. இதில் மிருனால் தாக்கூர், அலியா பட் ஆகியோரில் ஒருவருக்கு தளபதி 69 படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

    மேலும் இயக்குனர் எச்.வினோத், நடிகர் விஜய் இருவரும் இணைந்து விரைவில் கதாநாயகியை முடிவு செய்ய உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் அரசு ராசாமிராசுதார் ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை செய்தனர்.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை மேலக்காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். கூலித்தொழிலாளி, இவரது மனைவி அஞ்சலி தேவி (வயது 34), நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை பிரசவத்திற்காக உறவினர்கள் ஒரத்தநாடு தாலுகா, தொண்டராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கிருந்து அஞ்சலிதேவியை மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர்.

    இதையடுத்து, அவர் ஆலத்தூரில் இருந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    இந்நிலையில், தஞ்சை செல்லும் வழியில் அஞ்சலி தேவிக்கு பிரசவ வலி அதிகமானது. இதையடுத்து ஓட்டுநர் முரளி சாலையோரம் ஆம்புலன்சை நிறுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து அவசர சிகிச்சை நிபுணர் சிதம்பர கண்ணன் அஞ்சலி தேவிக்கு பிரசவம் பார்த்தார்.

    இதில் அஞ்சலி தேவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    பின்னர், மீண்டும் ஆம்பு லன்ஸ் தொண்ட ராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு தாயும், சேயும் அழைத்து செல்லப்பட்டனர்.

    உரிய நேரத்தில் பிரசவம் பார்த்து தாயையும், குழந்தை யையும் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு உறவினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • அரியலூர் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தை ராம்சர் தளமாக அறிவிக்க தமிழக அரசு பரிந்துரை
    • இந்த வருடம் பணிகள் விரைவில் மேற்கொள்ள ப்படும் என எதிர்பார்க்க ப்படுகிறது

    அரியலூர்,

    உலக அளவில் ஈர நில ங்களை பாதுகாக்க ஈரான் நாட்டின் ராம்சர் நகரில் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள ப்பட்டது.ராம்சர் தளங்கள் ஈரா னில் 1971ல் கையெழுத்தி டப்பட்ட ராம்சர் மாநாட்டின் கீழ் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஈரானில் கையொப்பமிடப்பட்ட ஒரு சர்வதேச சுற்றுச்சூழல் ஒப்பந்தமாகும்,இது ஈர நிலங்களின் பாதுகாப்பு மற்றும் புத்தி சாலித்தனமான பயன்பா ட்டிற்கான தேசிய நடவடி க்கை மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான கட்ட மைப்பை வழங்குகிறது.அதன்படி தமிழகத்தில் 14 ராம்சர் தளங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த பட்டி யலில் இணைக்கப்பட்டது.தற்போது மாநிலத்தில் உள்ள கரைவெட்டி பறவை கள் சரணாலயம் உள்ளிட்ட மேலும் சில இடங்களை சேர்க்க தமிழக அரசு ராம்சர் தளத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.ராம்சர் தளத்தில் இருப்ப தற்கு அந்த மாநாட்டில் வரையறுக்கப்பட்ட ஒன்பது அளவுகோல்களில் ஒன்றை யாவது பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதில் கரை வெட்டி பறவைகள் சரணா லயம் பாதிக்கப்படக்கூடிய ஆபத்தில் இருக்கும் அல்லது ஆபத்தான உயிரினங்களை ஆதரிப்பது,20 ஆயிரத்துக்கும் மேற்ப ட்ட நீர்ப்பறவைகள் இரு ப்பது, அல்லது மீன்கள், முட்டையிடும் இடம் என பல அம்சங்களை உள்ளட க்கியதாக உள்ளது.மாநிலத்தில் 82 நீர்ப்ப றவைகள் உட்பட 200க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சரணாலயம் அடிப்படை யானது.

    இந்த சரணாலயம் புலம் பெயர்ந்த நீர் பறவைகளுக்கு மிக முக்கியமான நன்னீர் உணவளிக்கும் இடமாகும். இந்த நீர் நிலைக்கு வரும் முக்கியமான பார்வை யாளர்களில் ஆபத்தில் இருக்கும் பார் ஹெட் வா த்தும் உள்ளது. அரியலூர் மாவட்டத்தின் அதிகா ரப்பூ ர்வ இணைய தளத்தி ன்படி, பறவைக ளைப் பார்ப்பதற்கு சரணால யத்திற்குச் செல்ல சிறந்த நேரம் அக்டோபர் - மார்ச் மாதங்களாகும்.ஏற்கனவே இந்த பறவை கள் சரணால யத்தை மேம்ப டுத்த மாநில அரசு ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, துறை மானியத்தின் போது, சட்டசபையில் அமைச்சர் அறிவித்தார்.இந்த வருடம் பணிகள் விரைவில் மேற்கொள்ள ப்படும் என எதிர்பார்க்க ப்படுகிறது.இதற்கிடையே கரைவெ ட்டி பறவைகள் சரணால யத்தை ராம் சர் தளத்தில் சேர்க்க பரிந்துரை செய்து ள்ள நிலையில், தமிழக வனத்துறை அமைச்சர்மதிவேந்தன், போக்குவ ரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், முதன்மை தலைமை வனப் பாதுகா வலர் சுப்ரத் மொகபத்ரா, கலெக்டர் அன்னே மேரி ஸ்வர்ணா ஆகியோருடன் பறவைகள் சரணாலயத்தி ற்குச் சென்று வளர்ச்சி த் தேவைகள் மற்றும் வசதிக ளை மதிப்பீடு செய்தனர்.காரைவெட்டி பறவை கள் சரணாலயத்தை புன ரமைத்து புதியதாக மாற்ற தேவையான அனை த்து நடவடிக்கைகளும் எடு க்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார்.

    • பட்டணம்காத்தான் துணை மின் நிலையத்தில் அதிக திறன் டிரான்ஸ்பார்மர் அமைக்க சட்டமன்ற பொது நிறுவனக்குழு பரிந்துரைந்துள்ளது.
    • 2021-23ம் ஆண்டிற்கான பொது நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் ராஜா தலைமையில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், குழு உறுப்பினர்கள் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. (பூந்தமல்லி), தமிழரசி எம்.எல்.ஏ (மானாமதுரை) நாகைமாலி எம்.எல்.ஏ (கீழ்வேளுர்), பாலாஜி எம்.எல்.ஏ (திருப்போரூர்) ஆகியோர் முன்னிலையில் 2021-23ம் ஆண்டிற்கான பொது நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பொது நிறுவன குழு தலைவர் ராஜா தலைமை வகித்தார்.

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, மூன்று சக்கர நாற்காலி, மடக்கு சக்கர நாற்காலி, திறன்பேசி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் என 15 பயனாளிகளுக்கு ரூ.1,70,888 லட்சம் மதிப்பீட்டிலான நிவாரண தொகைக்கான ஆணைகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.30,108 மதிப்பீட்டிலான இலவச தையல் எந்திரங்களையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.28,000 மதிப்பீட்டிலான இலவச தையல் எந்திரங்களையும், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் 5 பயனாளிகளுக்கு இணை மானிய திட்டம் மானியம் ரூ.13,58,589 மதிப்பீட்டிலும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.2,25,000 மதிப்பீட்டிலும், இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பு திட்டம் மூலம் 3 பயனாளிகளுக்கு என மொத்தம் 35 பயனா ளிகளுக்கு ரூ.19.74 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஷ் சுதாகர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவன குழு இணைச் செயலாளர் பாண்டியன், சார்பு செயலாளர் இந்திரா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக வாலாந்த ரவை ஊராட்சியில் கோரமண்டல் மின் ஆலை யினை பார்வையிட்டு உற்பத்தி திறன் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதை பொது நிறுவன குழுவினர் பார்வையிட்டனர்.

    அதனைத்தொடர்ந்து களிமண்குண்டு ஊராட்சியில் கடற்கரை ஓரமாக மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தனர். பின்னர் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதி யில் உள்ள மின்வாரிய துணை மின் நிலையத்தை பார்வையிட்டு கூடுதல் கொள்ளளவு திறன் மின்மாற்றிகள் அமைக்க அறிவுறுத்தினர்.

    • இ.சி.ஜி, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்து இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.
    • முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் ரோட்டரி சங்கம், தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மருத்துவமனை மற்றும் பாபநாசம் பேரூராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் கீர்த்திவாசன் ஆகியோர் இணைந்து நடத்திய இலவச பொது மற்றும் சர்க்கரை நோய் மருத்துவ முகாம் பாபநாசம் திருப்பாலைத்துறை ரோட்டரி சங்க கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.

    பாபநாசம் ரோட்டரி சங்க தலைவர் அறிவழகன் தலைமை வகித்தார்.

    பாபநாசம் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கீர்த்தி வாசன், பிரேம்நாத் பைரன், துரைமுருகன், தேன்மொழி உதயகுமார், முத்துமேரி மைக்கேல் ராஜ், புஷ்பா சக்திவேல், பாலகிருஷ்ணன், பிரகாஷ், விஜயா, கோட்டையம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாபநாசம் போலீஸ் துணை சூப்பரண்ட் பூரணி கலந்து கொண்டு இலவச பொது மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

    இம்முகாமில் தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திகேயன், மருத்துவர்கள் ஆனந்த், அனு அனன்யா, வர்ஷா, ராஜாத்தி ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் பொது மக்களுக்கு சர்க்கரை நோய் பரிசோதனை, இ.சி.ஜி மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.

    இம்முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். 25 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

    முகாமில் மருத்துவமனை மார்க்கெட்டிங் மேனேஜர் பூபதிகுமார், உதவி மேனேஜர் பழனிவேல், ரோட்டரி சங்க பொருளாளர் ஆனந்தன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் செந்தில்நாதன், பிரான்சிஸ் சேவியர், விவேகானந்தம், முருகானந்தம், ராஜேந்திரன், வெங்கடேசன், பக்ருதீன் அலி அகமது, சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ரோட்டரி சங்க செயலாளர் சிலம்பரசன் நன்றி கூறினார்.

    • திருபுவனம் மேலவீதியை சேர்ந்த சிவா மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
    • காமராஜ் நகரை சேர்ந்த கீர்த்தி என்பவரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருபுவனம் மேலவீ தியை சேர்ந்தவர் சிவா (வயது 22).

    இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இதையடுத்து இவரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

    என்று மாவட்ட கலெக்டர் தினே ஷ்பொன்ராஜ் ஆலிவருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் கலெக்டர் உத்தரவுப்படி சிவாவை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

    இதேப்போல் திருவிடை மருதூர் தாலுகா அம்மாச த்திரம் காமராஜ் நகரை சேர்ந்த கீர்த்தி (26) என்பவரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    • ஜெயக்குமார் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
    • கலெக்டர் உத்தரவுப்படி ஜெயக்குமாரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த கூடலூர் புது தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 38).

    இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இதனால் ஜெயக்குமாரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அவரை கொண்டு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் கலெக்டர் உத்தரவுப்படி ஜெயக்குமாரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • குறைந்தபட்சம் 3 கட்ட பதவி உயர்வு பெறுவது அவர்களுடைய பணித்தன்மையில் மாற்றத்தை உருவாக்கி, அவர்களுக்கான மனச்சோர்வை நீக்குவதாகவும் இருக்கும்.
    • உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உரிய பதவி உயர்வு வாய்ப்புகளை உருவாக்கி வழங்கிட வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் திறப்புவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் அ.தி.அன்பழகன், மாநில துணைத் தலைவர் பி.நல்லத்தம்பி மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

    அதில் 5.8.11 முதல் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டு வரும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ன்படி தமிழகத்தில், உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் கீழ், உணவு பாதுகாப்பு பிரிவில், உணவு பாதுகாப்பு அலுவலர்களாக நாங்கள் பணிபுந்து வருகிறோம்.

    ஒவ்வொரு அரசு ஊழியரும் தம்முடைய பணிக்காலத்தில் குறைந்த பட்சம் 3 கட்ட பதவி உயர்வு பெறுவது, அவர்களுடைய பணித் தன்மையில் மாற்றத்தை உருவாக்கி, அவர்களுக்கான மனச்சோர்வை நீக்குவ தாகவும் இருக்கும்.

    இது குறித்து தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டில் 5.4.22 அன்று பங்கேற்று சிறப்புரையாற்றிய அமைச்சர் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உரிய பதிவு உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமான கோரிக்கை.

    இது குறித்து அரசு பரிசீலித்து, விரைவில் தக்க முடிவெடுத்து, பதவி உயர்வு வழங்கும் " என்று உறுதியளித்தார். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக எந்தவொரு பதவி உயர்வும் இல்லாமல் பணியாற்றி, அரசுப் பணியை நிறைவுசெ ய்யவுள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு, உரிய பதவி உயர்வு வாய்ப்புகளை உருவாக்கி, அவற்றை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் முதன்மைச் செயல் அலுவலர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலா ளர் ஆகியோர் பரிந்துரை ப்படியும், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்ட விதிகளின்படியும், பல்வேறு மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ளது போலவும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உரிய பதவி உயர்வு வாய்ப்புகளை உருவாக்கி வழங்கிட வேண்டும்.

    உணவு கலப்பட தடுப்புச் சட்டம் 1954-ன்படி உணவு ஆய்வாளர் பயிற்சி முடித்து, உணவு ஆய்வாளராக பணியாற்றி, பின்னர் 5.8.2011 முதல் நடைமுறைக்கு வந்துள்ள உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ன்படி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பயிற்சியும் பெற்று, உணவு பாதுகாப்பு அலுவலர்களாக கடந்த 11 ஆண்டுகள் பணியை முடித்துள்ளோம்.

    உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட விதிகளின்படி உரிய தகுதிகள் பெற்றிருந்தும் கடந்த காலத்தில் எதிர்பார்ப்பை நிறைவேற்றாததால் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கப்படாமல் இருந்ததை மாற்றி பணிப் பாதுகாப்பு உத்தரவை வழங்கிய அமைச்சர் எந்தவொரு பதவி உயர்வும் இல்லாமல் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அரசுப் பணியை நிறைவு செய்யும் நிலையை போக்கி, உரிய பதவி உயர்வு வாய்ப்புக்களை உருவாக்கி, வழங்கிட வேண்டும்

    இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

    .நாகைமாலி எம்.எல்.ஏ உணவுபாதுகாப்பு அலுவலர்கள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து உரிய உத்தரவுகளை வழங்க அமைச்சரை கேட்டுக்கொண்டார்.

    • பஸ்ஸை ஓட்டி வந்த ஊஞ்சலூரை சேர்ந்த சங்கர் என்ற டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் சென்று விட்டார்.
    • கொடுமுடி சென்ற பஸ் மீண்டும் திரும்ப வந்தபோது பஸ்சை வழிமறித்து டிரைவர் சங்கரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    கொடுமுடி:

    கொடுமுடி அரசு பஸ் டிப்போவை சேர்ந்த 43 எண் வழித்தட டவுண் பஸ் கொடுமுடியில் இருந்து ஈரோடு வரை 2 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று காலை 11 மணியளவில் ஈரோட்டில் இருந்து கொடுமுடி செல்லும் போது ஊஞ்சலூர் அருகில் மணிமுத்தூர் பஸ் நிறுத்தத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் கொடுமுடி செல்வதற்கு பஸ்சை நிறுத்தி உள்ளனர்.

    பஸ்ஸை ஓட்டி வந்த ஊஞ்சலூரை சேர்ந்த சங்கர் என்ற டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் சென்று விட்டார். இதனால் கோபம் அடைந்த பெண்கள் ஊஞ்சலூர் வரை நடந்தே சென்று பஸ் திரும்பி வரும் வரை காத்து இருந்தனர்.

    கொடுமுடி சென்ற பஸ் மீண்டும் திரும்ப வந்தபோது பஸ்சை வழிமறித்து டிரைவர் சங்கரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்ததால் பஸ்சை பெண்கள் விட்டு விட்டனர்.

    இது போன்ற ஊழியர்கள் மீது உடனடியாக நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதனையடுத்து கொடுமுடி கிளை மேலாளர் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க ஈரோடு மண்டல அலுவலகத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.

    • நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற தேர்ந்தெடுக்கப்பட்ட பயிர் ரகங்களையே விவசாயிகள் தேர்வு செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • பருவத்துக்கு ஏற்ப மானிய விலையில் விதை நெல் மற்றும் இடுபொருள்களைப் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம்.

    ஈரோடு:

    நடப்பு சம்பா பருவத்தில் (ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை) மேற்கொள்ளப்படும் நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற தேர்ந்தெடுக்கப்பட்ட பயிர் ரகங்களையே விவசாயிகள் தேர்வு செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண்மை அதிகாரிகள் கூறியதாவது:-

    தற்போதைய சம்பா பருவத்தில் அதிக மகசூல் பெறுவதற்கு ஏற்றதாக ஏ.டீ.டி – 38, ஏ.டீ.டி – 39, தெலுங்கானா சோனா (ஆர்.என்.ஆர்.) வெள்ளை பொன்னி, பி.பி.டி – 5204, டி.ஆர்.ஒய். 3, சி.ஓ.ஆர். 50, வி.ஜி.டி. 1, ஐ.ஆர். 20 ஆகிய நெல் ரகங்களே பரிந்துரை செய்யப்படுகின்றன.

    இந்த ரகங்கள் பவானி வட்டார வேளாண் விரிவாக்க மையம் மற்றும் கவுந்தப்பாடி அலுவலகத்திலும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு, மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.

    மேலும், நெல் பயிருக்குத் தேவைப்படும் நுண்ணூட்ட உரம் மற்றும் நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்றவையும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    எனவே, பருவத்துக்கு ஏற்ப மானிய விலையில் விதை நெல் மற்றும் இடுபொருள்களைப் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×