என் மலர்
நீங்கள் தேடியது "timetable"
- பயணிகள் ரயிலை, நாகர்கோவில் டவுன் வழியாக திருநெல்வேலி வரை நீட்டிக்க கேட்டுக்கொள்கிறோம்.
- நாகர்கோவில் டவுண் வழியாக திருநெல்வேலி வரை நீட்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஜனவரி 1ம் தேதி முதல் அமலாக இருக்கும் ரெயில்வேயின் புதிய கால அட்டவணைக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த்பல்வேறு கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை முன் வைத்துள்ளார்.
இந்திய ரெயில்வே நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் ரெயில்களின் கால அட்டவணையை பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் நிர்வாக மேம்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அமல்படுத்தி வருகிறது.
01 ஜனவரி 2025 அன்று முதல் புதிய அட்டவணை செயல்பட்டு வருவதை தொடர்ந்து வருகின்ற 2026 ஆம் ஆண்டிற்கான ரெயில் அட்டவணை ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கபடுகின்றது. அதற்காக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் கீழ்கண்ட கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை ரெயில்வே நிர்வாகத்திடம் முன் வைத்துள்ளார்.
பயணிகள் ரெயில்கள் இணைப்பு மற்றும் நீட்டிப்பு:
56305/56310 நாகர்கோவில் – திருவனந்தபுரம் வடக்கு பயணிகள் ரயில் மற்றும் 56708/56707 திருநெல்வேலி – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் ஆகியவற்றை ஒன்றாக இணைத்து திருநெல்வேலி – நாகர்கோவில் டவுன் (NJT) வழியாக – திருவனந்தபுரம் வடக்கு எனும் ஒரே பயணிகள் ரயிலாக இயக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அல்லது 56306/56309 திருவனந்தபுரம் – நாகர்கோவில் பயணிகள் ரயிலை, நாகர்கோவில் டவுன் வழியாக திருநெல்வேலி வரை நீட்டிக்க கேட்டுக்கொள்கிறோம்.
புதிய நேர அட்டவணை அலுவலகப் பயணிகளுக்குத் தகுந்தவாறு வடிவமைக்கப்பட வேண்டும்.
திருநெல்வேலி – நாகர்கோவில் டவுன் – திருவனந்தபுரம் – கொல்லம் – புனலூர் – செங்கோட்டை – திருநெல்வேலி மற்றும் மாற்று திசையில் சர்குலர் பயணிகள் ரயில்களை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தற்போது காலை நேரத்தில் 66305/66306 கொல்லம் – கன்னியாகுமரி மற்றும் 56705/56706 புனலூர் – கன்னியாகுமரி எனும் இரண்டு பயணிகள் ரயில்கள் கன்னியாகுமரிக்கு. செல்கின்றன. ஆனால் நாகர்கோவில் – திருநெல்வேலி வழித்தடத்தில் பகல் நேர பயணிகள் ரயில் இல்லை எனவே, இவற்றில் ஏதாவது ஒன்றை நாகர்கோவில் டவுண் வழியாக திருநெல்வேலி வரை நீட்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், 16347/16348 மங்களூரு சென்ட்ரல் – திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலை, நாகர்கோவில் வரை நீட்டிக்கவும் கேட்டுக்கொள்கிறோம். தற்போது மங்களூரு மற்றும் வடகேரளா நோக்கி பயணிக்கும் பயணிகளுக்கான இரவு ரயில்கள் கிடைப்பதில்லை, எனவே இந்நீட்டிப்பு பயணிகளுக்கு பெரிதும் உதவும்.
நேர அட்டவணை மாற்றங்கள்:
66305/66306 கொல்லம் – கன்னியாகுமரி MEMU ரயிலின் ஓய்வு நாளை வெள்ளிக்கிழமையிலிருந்து இருந்து செவ்வாய் அல்லது புதன்கிழமை என மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். இது வார இறுதியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பயனுள்ளதாக அமையும்.
17235/17236 நாகர்கோவில் – பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் பெங்களூரு காலை 06:00 – 07:00 மணிக்குள் சென்றடையவும், மற்றும் அங்கிருந்து புறப்படும் நேரம் 18:00 மணிக்கு மாற்றப்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலின் புறப்படும் நேரத்தை இரவு 22:00 மணி என முன்னேற்றி, நாகர்கோவில் வருகை காலை 10:00 மணிக்குள் வருமாறு பரிந்துரைக்கிறோம்.
22667/22668 கோயம்புத்தூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் புறப்படும் நேரத்தை நாகர்கோவிலில் இரவு 20:30 மணிக்கு முன்னேற்றி, கோயம்புத்தூரில் காலை விரைவில் வருமாறு மாற்ற பரிந்துரைக்கிறோம்.
16339/16340 நாகர்கோவில் – மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தை அதிகரித்து மக்கள் பயன்படும் விதத்தில் தாமதமாக புறப்பட்டு முன்னதாக வந்தடையும் வகையில் நேரம் திருத்துவதின் மூலம் நாகர்கோவில் நிலையத்தில் நீண்ட நேரம் நிற்கும் வண்டிகள் குறைந்து, நிலைய நெரிசல் குறையும்.
மேலும் 16649/16650 கன்னியாகுமரி – மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தை உயர்த்தி, கன்னியாகுமரியில் இருந்து காலை 05:00 மணிக்கு புறப்பட்டு, மாலை 20:30 மணிக்குள் திரும்பி வருமாறு நேரம் மாற்ற பரிந்துரைக்கிறோம். இது பயணிகளின் வசதிக்கும் இயக்கத்திறனுக்கும் உதவும்.
20635/20636 சென்னை எக்மோர் – கொல்லம் ஆனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நாகர்கோவில் டவுன் நிலையத்தில் 5 நிமிடம், மற்றும் குளித்துறை நிலையத்தில் 3 நிமிடம் என இரு திசைகளிலும் நிறுத்தம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிறுத்தங்கள் தொடர்பான வேண்டுகோள்கள்:
22627/22628 இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ஏரணியல் நிலையத்தில் தற்காலிக நிறுத்தம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
19577/19578 திருநெல்வேலி – ஜாம்நகர் இருவாராந்திர எக்ஸ்பிரஸ் மற்றும் 16335/16336 நாகர்கோவில் – காந்திதாம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு குளித்துறை நிலையத்தில் நிறுத்தம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
முனைய மாற்றங்கள் மற்றும் நாகர்கோவில் நெரிசல் குறைப்பு:
22657/22658 நாகர்கோவில் – தாம்பரம் எக்ஸ்பிரஸ், 12667/12668 நாகர்கோவில் – சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ், மற்றும் 12689/12690 நாகர்கோவில் – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் ரேக்குகள் நாகர்கோவிலில் நீண்ட நேரம் நிற்பதால் நிலைய நெரிசல் ஏற்படுகிறது.
எனவே இவற்றை நாகர்கோவில் டவுன் வழியாக திருவனந்தபுரம் வடக்கு வரை நீட்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இது ரேக் பயன்பாட்டை மேம்படுத்தி, நாகர்கோவில் முனைய நெரிசலை குறைக்கும்.
அது போன்று 16353/16354 நாகர்கோவில் – காசேகுடா எக்ஸ்பிரஸ் ரயிலின் ரேக்குகள் பல நாட்கள் நாகர்கோவிலில் நிற்கின்றன. இதை நாகர்கோவில் டவுன் வழியாக திருவனந்தபுரம் வடக்கு வரை நீட்டிக்கவும், மேலும், 16331/16332 திருவனந்தபுரம் – மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலுடன் ரேக் பகிர்வு (rake sharing) நடைமுறைப்படுத்தி, அதன் இயக்க நாள்களை மறுசீரமைக்கவும் பரிந்துரைக்கிறோம். இதன் மூலம் ரேக் பயன்பாடு மேம்பட்டு, நாகர்கோவில் நிலைய நெரிசல் குறையும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- காலாண்டு, அரையாண்டு தேர்வு: அட்டவணைகளை வெளியிட்ட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
- பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபரில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
சென்னை:
2025 – 26-ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபரில் வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
2025-26 கல்வியாண்டுக்கான காலாண்டு, அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
1 முதல் 12-ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 18ல் தொடங்கி 26ம் தேதியில் காலாண்டுத் தேர்வு முடிவடைகிறது. செப்டம்பர் 27 முதல் 30-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 15-ம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்கி 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது. டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 – 26-ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபரில் வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின்படி, கடந்தாண்டு போலவே 2025-2026-ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும். இத்துடன் பள்ளிக் கல்வித்துறையின் (2025-2026) நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள காலாண்டு/அரையாண்டுத் தேர்வுக்கான தேதிகள் அடங்கிய பக்கங்களை இணைத்துள்ளோம். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தன்னம்பிக்கையோடு தயார் ஆகுங்கள் என பதிவிட்டுள்ளார்.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. #SSLC #HSC #ExamTimeTable
2018-19-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், சிறப்பு பள்ளிகளுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்படுகிறது. இதில் எந்தவித மாற்றம் இன்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 அரையாண்டு தேர்வு டிசம்பர் 10-ந் தேதி தொடங்கி 22-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அந்த அட்டவணை வருமாறு:-
எஸ்.எஸ்.எல்.சி.
10-ந் தேதி (திங்கட்கிழமை) - தமிழ் முதல் தாள்
11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - தமிழ் இரண்டாம் தாள்
13-ந் தேதி (வியாழக்கிழமை) - ஆங்கிலம் முதல் தாள்
14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) - ஆங்கிலம் இரண்டாம் தாள்
17-ந் தேதி (திங்கட்கிழமை) - கணிதம்
18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - விருப்ப பாடம்
19-ந் தேதி (புதன்கிழமை) - அறிவியல்
22-ந் தேதி (சனிக்கிழமை) - சமூக அறிவியல்
பிளஸ்-1
10-ந் தேதி (திங்கட்கிழமை) - தமிழ்
11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - ஆங்கிலம்
12-ந் தேதி (புதன்கிழமை) - தகவல் தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாசாரம், கணினி அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், உயிரி வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.
14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) - கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிசன் அண்ட் டைட்டிக்ஸ், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண்மை அறிவியல், நர்சிங் (பொது), நர்சிங் (தொழிற்கல்வி).
17-ந் தேதி (திங்கட்கிழமை) - இயற்பியல், பொருளியல், கம்ப்யூட்டர் டெக்னாலஜி.
19-ந் தேதி (புதன்கிழமை) - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், அடிப்படை எலக்ட்ரானிக் என்ஜினீயரிங், அடிப்படை சிவில் என்ஜினீயரிங், அடிப்படை ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினீயரிங், அலுவலக மேலாண்மை மற்றும் செக்கரட்டரிஷிப், டெக்ஸ்டைல் டெக்னாலஜி.
22-ந் தேதி (சனிக்கிழமை) - வேதியியல், கணக்குபதிவியல், புவியியல்.
பிளஸ்-2
10-ந் தேதி (திங்கட்கிழமை) - தமிழ்
11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - ஆங்கிலம்
12-ந் தேதி (புதன்கிழமை) - தகவல்தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.
14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) - கணிதம், வணிகவியல், மைக்ரோபயாலஜி, விலங்கியல், நியூட்ரிசியன் அண்ட் டைட்டிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், உணவு மேலாண்மை மற்றும் குழந்தைகள் பராமரிப்பு, வேளாண்மை நடைமுறைகள், நர்சிங் (தொழிற்கல்வி), நர்சிங் (பொது).
17-ந் தேதி (திங்கட்கிழமை) - இயற்பியல், பொருளியல், ஜெனரல் மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள், சிவில் வரைவாளர், எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ் மற்றும் அப்ளையன்சஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி.
19-ந் தேதி (புதன்கிழமை) - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கை கோட்பாடு.
22-ந் தேதி (சனிக்கிழமை) - வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்.
மேற்சொன்ன அனைத்து தேர்வுகளும் காலை 10 மணிக்கு தொடங்கும். 10 மணியில் இருந்து 10.10 மணி வரை வினாத்தாளை படிப்பதற்கும், 10.10 மணி முதல் 10.15 மணி வரை விடைத்தாளின் முதல் பக்கத்தை நிரப்புவதற்கும், 10.15 மணி முதல் 12.45 மணி வரை தேர்வு எழுதுவதற்கும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகள் நடைபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு அட்டவணை வெளியிடப்பட்டு வந்தது.
பொதுத்தேர்வுகள் தான் மாணவர்களுடைய எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிப்பதால் அவர்கள் எந்தவித மன அழுத்தம் இன்றி தேர்வு எழுதுவதற்கு வசதியாகவும், ஆசிரியர்கள் முன்னதாகவே மாணவர்களை தயார் செய்யும் வகையிலும் கடந்த ஆண்டு தமிழக அரசு புதிய யுக்தியை கையாண்டது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
தேதி பாடம்
மார்ச் 14-ந் தேதி தமிழ் முதல் தாள்
18-ந் தேதி தமிழ் இரண்டாம் தாள்
20-ந் தேதி ஆங்கிலம் முதல் தாள்
22-ந் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்
23-ந் தேதி விருப்ப பாடம்
25-ந் தேதி கணிதம்
27-ந் தேதி அறிவியல்
29-ந் தேதி சமூக அறிவியல்
பிளஸ்-1 தேர்வு
மார்ச் 6-ந் தேதி தமிழ்
8-ந் தேதி ஆங்கிலம்
12-ந் தேதி கணிதவியல், விலங்கியல், வணிகவியல், மைக்ரோ-பயாலஜி.
14-ந் தேதி இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம்.
18-ந் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்.
20-ந் தேதி வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்.
22-ந் தேதி கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், கணினி பயன்பாடுகள், பயோ-கெமிஸ்ட்ரி, சிறப்பு பாடம் (தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல் மற்றும் புள்ளியியல்.
பிளஸ்-2 தேர்வு
மார்ச் 1-ந்தேதி தமிழ்
5-ந்தேதி ஆங்கிலம்
7-ந்தேதி கணிதவியல், விலங்கியல், வணிகவியல், மைக்ரோ-பயாலஜி.
11-ந்தேதி இயற்பியல், பொருளாதாரம்.
13-ந்தேதி வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்.
15-ந்தேதி கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, சிறப்பு பாடம் (தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.
19-ந்தேதி உயிரியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்கியல் மற்றும் தணிக்கை.
பள்ளிகள் தொடங்கியவுடன் பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதியும், தேர்வுப்பாடங்கள் அட்டவணையும் வெளியிடப்பட்டது. அதன்படி வருகிற கல்வி ஆண்டில் நடைபெற உள்ள பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. ஆகிய பொதுத்தேர்வுகள் அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பழைய பாடத்திட்ட மாணவர்களுக்கும், புதிய பாடத்திட்ட மாணவர்களுக்கும் ஒரே தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு கொண்டிருக்கின்ற தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதலாக நிதிகளை ஒதுக்கி வருகிறார்கள். பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில் மொழி பாடங்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டு தாள்களையும் (தேர்வு) ஒரே தாளாக மாற்றி 6 பாடங்களுக்கு தேர்வு நடத்த அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.
மாணவர்களுக்கு மன அழுத்ததை குறைக்கின்ற வகையிலும், ஆசிரியர்கள், பொதுமக்கள், சிறந்த கல்வியாளர்களின் கருத்துகளை கேட்டறிந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
தமிழக முதல்-அமைச்சர் இந்த கோப்பில் (அரசாணை) கண் இமைக்கின்ற நேரத்தில் கையெழுத்திட்டார்.
தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் அட்டவணை கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தற்போதே வெளியிடப்படுகிறது. அதன்படி பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது. மார்ச் 19-ந்தேதி தேர்வு முடிவடையும். தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19-ந்தேதி வெளியிடப்படும்.
பிளஸ்-1 வகுப்புகளுக்கு மார்ச் 6-ந்தேதி தேர்வு தொடங்கும். மார்ச் 22-ந்தேதி தேர்வு முடியும். மே 8-ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 14-ந்தேதி தொடங்கும். மார்ச் 29-ந்தேதி தேர்வு நிறைவடையும். ஏப்ரல் 29-ந்தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தமிழ், ஆங்கிலம் 4 தாள்களை (பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள்) 2 தாள்களாக மாற்றி இருப்பதால் 8 தேர்வுகள் எழுதிய மாணவர்கள் இனி 6 தேர்வுகள் எழுதினால் போதும் என்பதால், தேர்வு முடிவுகள் 10 நாட்களுக்கு முன்பாகவே வெளியிட அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- இந்த தேர்வுக்கான இடைவெளி குறைக்கப்பட்டுள்ளதே?
பதில்:- கடந்த ஆண்டு 3 நாட்கள் இடைவெளிவிட்டு தேர்வு நடத்தப்பட்டது. இப்போது 2 நாட்கள் என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண் என்று 1,200 மதிப்பெண்கள் வகுத்து இருந்தோம். ஆனால் இந்த முறை 100 மதிப்பெண் என்ற முறையில் 6 பாடங்களுக்கு 600 மதிப்பெண் என்று இருப்பதால், இந்த கால அவகாசமே மாணவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது.
கேள்வி:- புதிய பாடப்புத்தகம் கடினமாக இருப்பதாக கூறப்படுகிறதே?
பதில்:- 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் படிக்கிற மாணவர்களுக்கு புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் தேர்ச்சி அடைய செய்வதற்காக அரசு பள்ளிகள் நடைபெறும் நாட்கள் 180 ஆக உயர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
மாணவர்கள் சிறப்பான முறையில் கற்றுக்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ‘ஸ்மார்ட் கிளாஸ்’ கொண்டு வருகிற போது, மாணவர்கள் தங்களுடைய இல்லங்களில் இருந்து பாடங்களை செல்போன் மூலம் வீட்டில் இருந்து சிறப்பான முறையில் கற்றுதர நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த ஆண்டு 3 ஆயிரம் பள்ளிகள். வருகிற ஆண்டில் 2 ஆயிரத்து 200 பள்ளிகள் என 5 ஆயிரத்து 200 பள்ளிகளில் ஸ்மார்ட் ‘கிளாஸ்’ கொண்டு வர திட்டங்கள் இருக்கிறது. ஐ.சி.டி. என்று சொல்லப்படுகிற 9, 10, 11, 12-ம் வகுப்பில் படிக்கிற மாணவர்களை ஒருங்கிணைந்து அந்த திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
கேள்வி:- ஆசிரியர்களுக்கு எப்போது பயிற்சி அளிக்கப்படும்?
பதில்:- அரசு பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு மட்டும் பேராசிரியர்கள் மூலம் குழுக்களை அமைத்து அடுத்த மாதம் முதல் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலம் 15 நாட்கள் ஆகும்.
கேள்வி:- ‘நீட்’ தேர்வுக்கு 2 ஆண்டுகள் பயிற்சி பெற்றால் தான் நல்ல மதிப்பெண் பெற முடியும் என்று முதல் மதிப்பெண், 2-வது மதிப்பெண் பெற்ற மாணவிகள் தெரிவித்துள்ளனரே?
பதில்:- ‘நீட்’ தேர்வை பொறுத்தவரையில் தமிழகத்துக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை. இருந்தபோதிலும் கடந்த ஆண்டு நமக்கு கிடைத்த அவகாசம் 4 மாதங்கள் தான். இந்த ஆண்டு முழுமையாக இருக்கிற போது, 2 ஆண்டு காலம் பயிற்சிகள் தேவை இல்லை. ஓராண்டு காலத்திலேயே முழுப்பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. புதிய பாடத்திட்டத்தில் 11-ம் வகுப்பு படிக்கிற மாணவர்களுக்கு 40 சதவீதம் நீட் தேர்வுக்கான கேள்விகள் இடம் பெற்றுள்ளது. எனவே ‘நீட்’ தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் வெற்றிவாகை சூடும் நிலை தமிழகத்தில் உருவாகும்.
கேள்வி:- ‘நீட்’ தேர்வை ஆன்-லைன் மூலம் எழுதும் முடிவை தமிழக அரசு ஏற்குமா?
பதில்:- மத்திய அரசு திடீரென்று கொண்டு வருகிற திட்டங்கள், எங்களிடம் வரும்போது அதற்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.
கேள்வி:- ‘வெயிட்டேஜ்’ முறையில்...
பதில்:- 2013-ம் ஆண்டு வெயிட்டேஜ். 2017-ம் ஆண்டு வெயிட்டேஜ் வேறுபாடு இருக்கிறது. அன்றைய மதிப்பெண் வேறு. இன்றைய மதிப்பெண் வேறு. ஆகவே தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.
பேட்டியின்போது பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், இயக்குனர் ரெ.இளங்கோவன், அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி இயக்குனர் க.அறிவொளி மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனர் எஸ்.கண்ணப்பன் ஆகியோர் உடனிருந்தனர். #PublicExamination #TimeTable #Tamilnews






