search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "railway board"

    • ரெயில்வே வாரியத்தின் புதிய தலைவராக IRMS அதிகாரி சதீஷ்குமார் நியமனம்.
    • செப்டம்பர் 1 ஆம் தேதி ரெயில்வே வாரியத்தின் தலைவராக அவர் பொறுப்பேற்கவுள்ளார்.

    இந்திய ரெயில்வே வாரியத்தின் புதிய தலைவராக இந்திய ரயில்வே மேலாண்மை சேவை (IRMS) அதிகாரி சதீஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ரெயில்வே வாரியத்தின் 119 ஆண்டுகால வரலாற்றில் தலைவராகும் முதல் பட்டியலினத்தவர் என்ற சிறப்பை சதீஷ்குமார் பெற்றுள்ளார்

    செப்டம்பர் 1 ஆம் தேதி ரெயில்வே வாரியத்தின் தலைவராக அவர் பொறுப்பேற்கவுள்ளார்.

    சதீஸ்குமார் 1986 ஆம் ஆண்டு ரெயில்வேயில் வேலை செய்து வருகிறார். 34 ஆண்டு கால சேவைக்கு பிறகு அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    • ரெயில்களின் எண்களும் 7-ல் ஆரம்பிக்கும் வகையில் மாற்றப்பட்டன.
    • பழைய எண்களை அறிவிக்க ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    பெருநகரங்களையும், சிறு கிராமங்களையும் இணைக்கும் முக்கிய ரெயில் போக்குவரத்தாக பயணிகள் ரெயில் விளங்குகிறது. கொரோனா பரவலுக்கு முன்பு தெற்கு ரெயில்வே சார்பில் 3,081 கி.மீ. தொலைவுக்கு 487 பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டன.

    கொரோனா கட்டுப்பாட்டின்போது நிறுத்தப்பட்ட இந்த ரெயில் சேவை பின்னர் முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் எனும் பெயரில் இயக்கப்பட்டன.

    இதனால் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10-லிருந்து ரூ.30 ஆக உயர்ந்ததால் தினசரி பயணிக்கும் ஏழை நடுத்தர மக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் முதல் அனைத்து மெமு, டெமு, பயணிகள் சிறப்பு ரெயில்கள் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும் எனவும், கொரோனா கட்டுப்பாட்டுக்கு முன்பு வசூலித்த கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்த முன்பதிவில்லா சிறப்பு ரெயில்களுக்கான எண்கள் வழக்கமான பயணிகள் ரெயில்களுக்கான எண்களாக மாற்றப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தலைமையகத்தின் போக்குவரத்து பிரிவில் இருந்து அனைத்து கோட்ட பொதுமேலாளருக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா பரவலுக்கு பின்பு அனைத்து பயணிகள் ரெயிலும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்களாக மாற்றி இயக்கப்பட்டன.

    இந்த ரெயில்களின் எண்களும் 7-ல் ஆரம்பிக்கும் வகையில் மாற்றப்பட்டன. இந்த நிலையில் தெற்கு ரெயில்வேயில் இயங்கும் அனைத்து முன்பதிவில்லா ரெயில்களின் எண்களையும் மாற்றி மீண்டும் பழைய எண்களை அறிவிக்க ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    தெற்கு ரெயில்வேயில் இயங்கும் 288 பயணிகள் ரெயில்கள் மற்றும் 8 மலைப்பாதை ரெயில்களின் எண்கள் அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி பழைய எண்களை கொண்டு இயக்கப்படும்.

    உதாரணமாக திருப்பதி-சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் பயணிகள் ரெயில் 06728 எனும் எண்ணிலும், மதுரை-செங்கோட்டை பயணிகள் ரெயில் 06504 எனும் எண்ணுக்கு பதிலாக 56719 எனும் எண்ணிலும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரெயில்களில் ஏசி சேர் கார் கட்டணம் 25 சதவீதம் குறைக்கப்படுகிறது.
    • ஏற்கனவே ரிசர்வ் செய்துள்ள டிக்கெட்டுகளுக்கு இச்சலுகை பொருந்தாது.

    புதுடெல்லி:

    ரெயில்களில் ஏசி சேர் கார் கட்டணம் 25 சதவீதம் குறைக்கப்படுவதாக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, ரெயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வந்தே பாரத் உள்ளிட்ட சில ரெயில்களில் ஏசி சேர் கார் கட்டணம் குறைக்கப்படுகிறது.

    ஏசி சேர் கார் மற்றும் எக்சிகியூடிவ் வகுப்பு கட்டணம் 25 சதவீதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும், ஏற்கனவே ரிசர்வ் செய்துள்ள டிக்கெட்டுகளுக்கு இச்சலுகை பொருந்தாது. கட்டணம் எதுவும் திருப்பி தரப்படாது. பண்டிகை மற்றும் விடுமுறை கால சிறப்பு ரெயில்களுக்கு இந்த சலுகை கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒடிசா ரெயில் விபத்தில் இதுவரை 275 பேர் பலியாகி உள்ளனர்.
    • மனித தவறு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    ஒடிசாவில் நிகழ்ந்த ரெயில் விபத்து நாட்டையே உலுக்கி உள்ளது. பாலசோர் மாவட்டம் பஹனகா ரெயில் நிலையம் அருகே மெயின் லைனில் வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லூப் லைனில் திடீரென சென்று சரக்கு ரெயில் மீது மோத, எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் உள்ள மற்றொரு மெயின் லைனில் விழுந்துள்ளன. அந்த சமயத்தில் வந்த பெங்களூரு- ஹவுரா அதிவிரைவு ரெயில், தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது பயங்கரமாக மோதியது.

    ஒடிசா ரெயில் விபத்தில் இதுவரை 275 பேர் பலியாகி உள்ளனர். 1175 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 793 பேர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் உள்ளவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறு இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மனித தவறு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    இந்நிலையில் ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவதற்கு ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது. நிர்வாகத்திற்கு கிடைத்த தகவல்கள் மற்றும் பிற கேள்விகளையும் கருத்தில் கொண்டு, இந்த விபத்து தொடர்பாக மேல் விசாரணை செய்வதற்காக, முழு வழக்கையும் விசாரிக்கும்படி சிபிஐக்கு ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்திருப்பதாக ரெயில்வே துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

    • சென்னை- திருச்செந்தூர் ரெயில் பாபநாசம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
    • மத்திய இணை மந்திரி முருகன் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை.

    மேட்டுப்பாளையம்-கோவை இடையே வாரத்தின் ஆறு நாட்கள் மட்டுமே பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமை அந்த ரெயில் இயக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.

    இதனையடுத்து மத்திய இணை மந்திரி எல் முருகன், ரெயில்வே துறை அமைச்சகத்திற்கு எழுதியிருந்த கடிதத்தில், மேட்டுப்பாளையம்-கோவை ரெயிலை ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க வேண்டும் என்று ஏராளமான பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தம்மிடம் கோரிக்கை விடுத்ததாக குறிப்பிட்டிருந்தார்.இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதில் அளித்து ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழுதிய பதில் கடிதத்தில். கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டதாகவும், வாரத்திற்கு ஆறு நாட்கள் இயக்கப்பட்டு வந்த மேட்டுப்பாளையம்-கோவை பயணிகள் ரெயில் இனி தினசரி இயக்கப்படும் என்றும், சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், பாபநாசம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    ரெயில்வே அமைச்சரின் அறிவிப்பை அடுத்து, வரும் 4ந் தேதி முதல் மேட்டுப்பாளையம்-கோவை பயணிகள் ரெயில் வாரம் முழுவதும் இயக்கப்படும் என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

    • தென்காசி - விருதுநகர் 2004-ம் ஆண்டு அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • குருவாயூர்- புனலூர் பயணிகள் ரெயிலில் பெரும்பாலான நாட்களில் இருக்கைகள் காலியாகவே செல்கின்றன.

    தென்காசி:

    தென்காசி - விருதுநகர் வழித்தடம் 1927 ஆண்டு மீட்டர்கேஜ் ஆக தொடங்கப்பட்டு பின்னர் 2004-ம் ஆண்டு அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தற்போது இந்த விருதுநகர் - தென்காசி வழித்தடத்தில் பொதிகை, சிலம்பு, கொல்லம் மெயில் ஆகிய 3 ரெயில்கள் சென்னைக்கு இயக்கப்பட்டு வருகின்றது. நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் தாம்பரத்திற்கும், எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரந்திர சிறப்பு ரெயிலும், செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில், செங்கோட்டை -மதுரை இடையே இரு ஜோடி பயணிகள் ரெயில்கள் எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயங்கி வருகின்றன.

    இந்நிலையில் 2020 மற்றும் சமீபத்தில் நடைபெற்ற ரெயில்கள் கால அட்டவணை சந்திப்புகளின்போது, தென்னக ரெயில்வே சார்பாக வண்டி எண் 16327/16328 குருவாயூர் - புனலூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் வண்டி எண் 56733/56734 மதுரை - செங்கோட்டை பயணிகள் ரெயில் ஆகிய இரு ரெயில்களையும் ஒன்றாக இணைத்து குருவாயூர் - மதுரை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ஒரே விரைவு ரெயிலாக இயக்க முன்மொழிவு செய்யப்பட்டது. மேலும் குருவாயூர் - புனலூர் ரெயில் புதிதாக இயக்கப்பட்ட போது நடைபெற்ற விழாவில் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் கேரள எம்.பி.க்கள் இந்த ரெயில் புனலூர் செங்கோட்டை ரெயில் பாதைகள் முடிந்தவுடன் மதுரை வரை நீட்டிப்பு செய்யப்படும் என்று உறுதி அளித்திருந்தனர்.

    இருக்கைகள் காலி

    இந்த குருவாயூர்- புனலூர் பயணிகள் ரெயிலில் பெரும்பாலான நாட்களில் இருக்கைகள் காலியாகவே செல்கின்றன. புனலூரில் இருந்து மதுரை வரை நீட்டிக்கப் பட்டால்தான் பயணிகளின் பயன்பாடு அதிகரிக்கும். ரெயில்வே வருமானமும் அதிகரிக்கும்.

    மேலும் சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லி புத்தூர் சங்கரன்கோவில், கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார மக்கள் புனலூர், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கு பேரும் உதவியாக இருக்கும். அது மட்டுமின்றி இந்த மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில், ஆரியங்காவு, சபரிமலை அய்யப்பன், குருவாயூர் போன்ற அனைத்து கோவில்களை இணைக்கும் வகையில் பக்தர்களுக்கு உதவியாக இருக்கும்.

    பொங்கி வழியும் பாலருவி

    நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம், கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கொல்லம் வழியாக பாலக்காடு வரை இயங்கும் பாலருவி விரைவு ரெயிலில் தமிழகப் பகுதிகளில் இருந்து ரெயில் பயணிகள் முன்பதிவு நிரம்பி வழிகிறது.

    சுற்றுலா வளர்ச்சிக்கு உதவும்

    மேலும் சுற்றுலாவிற்கு குற்றாலம் மற்றும் அதை சுற்றி உள்ள அருவிகள், கேரளாவில் உள்ள பாலருவி, தென்மலை , 13 கண் பாலம் என பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு பயணிகளுக்கு வசதியாக இருக்கும். இதனால் பயணிகள் போக்குவரத்து சுற்றுலா ஆகிய அனைத்தும் மேம்படும். ரெயில்வேக்கும் நல்ல வருமானம் ஈட்டித் தரும்.

    இதுகுறித்து ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறும்போது, இந்த மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரை - கொல்லம் இடையே உள்ள வழித்தட மக்களுக்கு பகல்நேர இன்டர்சிட்டி ரெயில் போல செயல்படும். தமிழ்நாடு மற்றும் கேரளா மக்களுக்கு இந்த ரெயில் மிகவும் உதவியாக இருக்கும். சபரிமலை சீசன் தொடங்க இருப்பதால் அய்யப்ப பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசிக்கும் வகையில் கண்ணாடி மேற்கூரைகளால் ஆன விஸ்டாடோம் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும். மேலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மதுரை குருவாயூர் ரெயிலுக்கு ரெயில்வே வாரியம் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ரெயில்வே டெண்டர்கள் குறித்த விவரங்கள் இனி ஆன்லைன் மூலமே தெரிவிக்கப்படும் எனவும், செய்தித்தாள்களில் விளம்பரம் இல்லை எனவும் ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. #RailwayBoards
    புதுடெல்லி:

    ரெயில்வே துறையில் விடப்படும் டெண்டர்களின் விவரங்களை செய்தித்தாள்களில் வெளியிடும் வழக்கத்தை கைவிட ரெயில்வே துறை தற்போது முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்,  செய்தித்தாள்கள் மற்றும் வார இதழ்கள் மூலம் டெண்டர் விளம்பரங்கள் அளிப்பதனால் ஏற்படும் அதிகப்படியான செலவை கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் டெண்டர் குறித்த விவரங்கள் வெளியிடப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #RailwayBoard
    டெல்லியில் உள்ள ரெயில்வே பவன் தலைமையகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், இனி வீட்டிலிருந்து குடிநீர் கொண்டுவர வேண்டும் என ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. #RailNeer
    புதுடெல்லி:

    இந்தியா முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் 15 ரூபாய் விலையில் ஒரு லிட்டர் குடிநீர் விற்கப்படுகிறது. ரெயில்வே துறை சார்பில் பல்வேறு இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு இந்த பாட்டில்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

    டெல்லியில் உள்ள இந்திய ரெயில்வே தலைமையகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த குடிநீர் பாட்டில்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

    இதனால் ஏற்படும் செலவினங்களை சிக்கனப்படுத்தும் நடவடிக்கையால், இனி யாருக்கும் இலவசமாக குடிநீர் பாட்டில் வழங்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    மேலும், பணிக்கு வருபவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து குடிநீர் கொண்டுவர வேண்டும் அல்லது அலுவலகத்தில் சில இடங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களில் இருந்து தண்ணீரை பிடித்து அருந்தி கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #RailNeer
    ×