என் மலர்
நீங்கள் தேடியது "Workers"
+2
- திருப்பூர் ரெயில் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
- தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்ததால் திருப்பூரில் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்திருந்தது.
திருப்பூர்:
பனியன் தொழில் நகரமான திருப்பூரில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது தொழிலாளர்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பொங்கல் பண்டிகையையொட்டி பனியன் நிறுவனங்களுக்கு 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
இதையடுத்து திருப்பூரில் தங்கி பணியாற்றி வந்த மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்ட ங்களை சேர்ந்தவர்களும், கரூர் திருச்சி, தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை சேர்ந்தவர்களும் என தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
இந்தநிலையில் பொங்கல் விடுமுறை முடிந்த நிலையில் பஸ்கள், ரெயில்களில் சிரமமின்றி செல்ல நேற்று முன்தினம் முதல் தொழிலாளர்கள் திருப்பூர் திரும்ப ஆரம்பித்தனர். இன்று காலை பல்வேறு மாவட்டங்களில் இருந்து சாரை சாரையாக வந்தனர். அவர்கள் திருப்பூர் திரும்புவதற்கு வசதியாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருப்பூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இதனால் இன்று காலை திருப்பூர் ரெயில் நிலையம், கோவில்வழி பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையங்களில் தொழிலாளர்கள், பயணிகள் கூட்டம் அலைமோதியது. ரெயில்களிலும் தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக வந்து இறங்கினார்கள். இதனால் திருப்பூர் ரெயில் நிலையத்திலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவர்கள் திருப்பூரில் இருந்து அவினாசி, பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்ததால் திருப்பூரில் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்திருந்தது. தொழிற்சாலைகள், கடைகள் திறக்கப்பட்டதால் இன்று அதிகாலை முதல் திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள சாலைகள் மீண்டும் பரபரப்பான இயக்கத்துக்கு திரும்பின.
- பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி தொழிலாளர்கள் பலர் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
- தொழிலாளர்கள் அனைவரும் வருகிற 20-ந்தேதிதான் திருப்பூர் திரும்ப வாய்ப்புள்ளது.
திருப்பூர்:
பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரில் வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். தற்போது பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி தொழிலாளர்கள் பலர் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் வருகிற 20-ந்தேதிதான் திருப்பூர் திரும்ப வாய்ப்புள்ளது. அதன்பிறகே பெரும்பாலான பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் திறக்கப்படும் என அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால் திருப்பூரில் இன்று பிரதான சாலைகள், கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. வெளியூர் சென்ற தொழிலாளர்கள் திரும்பிய பிறகே, திருப்பூர் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்தனர்.
- இன்று பிற்பகல் 2:39 மணியளவில் நடந்த இந்த விபத்து நடந்துள்ளது
- குறைந்தது 25 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கன்னோஜ் ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று [சனிக்கிழமை] பிற்பகல் 2:39 மணியளவில் நடந்த இந்த விபத்தில் குறைந்தது 25 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப்படையினரால் ஆறு தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
#WATCH | Kannauj, Uttar Pradesh: An under-construction lintel collapsed at Kannauj railway station; several workers trappedMore details awaited pic.twitter.com/vqefsjtXDc
— ANI (@ANI) January 11, 2025
முதற்கட்ட தகவல்களின்படி, கட்டுமானத்தில் இருந்த கூரையின் ஷட்டர் இடிந்து விழுந்ததில் இந்த சம்பவம் நிகழ்ந்தது" என்று மாவட்ட மாஜிஸ்திரேட் (டிஎம்) சுப்ரந்த் குமார் சுக்ல் கூறினார்.
- நிலத்துக்கு அடியில் தொட்டி அமைக்க தொழிலாளர்கள் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் கட்டுமானப்பணியின்போது சுவர் இடித்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஜசல்பூர் பகுதியில் காடி என்று இடத்தில் தனியார் தொழிற்சாலையின் கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது.
நிலத்துக்கு அடியில் தொட்டி அமைக்க தொழிலாளர்கள் சிலர் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் மண்சுவர் இடிந்து விழுந்ததில் பணியில் இருந்த தொழிலாளர்கள் உயிருடன் மண்ணுக்குள் புதைந்தனர். இன்று மதியம் மதியம் 1.45 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய 10 தொழிலாளர்களில் 6 பேர் உயிரிழந்தனர்.
மற்றவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படுகிறது.
#WATCH | Gujarat: Rescue operation underway after the wall of a private company collapsed near Jasalpur village in Kadi taluka of Mehsana district pic.twitter.com/ssI7mQlAMK
— ANI (@ANI) October 12, 2024
- ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டுமென்ற டார்க்கெட் எல்லாம் இல்லை என சாம்சங் விளக்கம் அளித்துள்ளது.
- ஆட்குறைப்பு படலத்தை சாம்சங் நிறுவனம் தொடங்க உள்ளது ஊழியர்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு அபாயத்தை சந்திக்க நேரிடும். குறிப்பாக, 10ல் ஒரு ஊழியர் வேலை இழக்கக் கூடிய சூழல் உருவாகும் என கூறப்படுகிறது!
நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்தவும், ஊழியர்கள் படிநிலையை சீர் செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேநேரம், இத்தனை ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டுமென்ற டார்க்கெட் எல்லாம் இல்லை என சாம்சங் விளக்கம் அளித்துள்ளது.

ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தொழிலாளர்கள் செப்டம்பர் 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்து 25 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆட்குறைப்பு படலத்தை சாம்சங் நிறுவனம் தொடங்க உள்ளது ஊழியர்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சாம்சங் நிறுவனம் தென் கொரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- 123 ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.
- பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நெய்வேலி:
என்.எல்.சி. 2-வது சுரங்கத்தை தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகையில் ஈடுப்பட்டனர்.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 3 சுரங்கள் உள்ளது. இதில் 2-வது சுரங்கம் மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ளது.
இந்த சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியை என்.எல்.சி.நிறுவனம் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் டெண்டர் விட்டுள்ளது. இங்கு தனியார் நிறுவனம் சார்பில் 123 ஒப்பந்த தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர்
இந்த தனியார் ஒப்பந்தம் நேற்றுடன் முடிவடைந்து விட்டது. இதனால் இதில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் வேலைக்கு வரவேண்டாம் என தனியார் நிறுவனம் கூறியதாக தெரிகிறது. இதனால் வேதனையடைந்த தொழிலாளர்கள் இன்று 2-வது சுரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
என்.எல்.சி. நிறுவனமே எங்களை ஒப்பந்த தொழிலாளர்களாக நியமிக்க வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுடன் என்.எல்.சி. உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- வைர தொழிலின் மந்த நிலையால் பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- தினமும் 75 தொழிலாளர்கள் தற்கொலை எண்ணம் தொடர்பாக ஹெல்ப்லைனுக்கு கால் செய்துள்ளனர்.
வைர உற்பத்தி குஜராத்தின் முக்கியமான தொழிலாளாகும். இந்த தொழிலில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால் பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட விரக்தியால் பல தொழிலாளர்களுக்கு தற்கொலை எண்ணம் உருவாகியுள்ளது. ஆகவே தொழிலாளர்களை காக்கும் பொருட்டு குஜராத்தில் உள்ள வரை வைர தொழிலாளர் சங்கத்தால் தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன் சேவை தொடங்கப்பட்டது.
இந்த தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன் சேவைக்கு கடந்த 20 நாட்களில் 1500 தொழிலாளர்கள் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்றுள்ளனர். தினமும் 75 தொழிலாளர்கள் தற்கொலை எண்ணம் தொடர்பாக இந்த ஹெல்ப்லைனுக்கு கால் செய்துள்ளனர்.
மேலும் கஷ்டப்படும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வைர தொழிலாள சங்கம் உதவி செய்து வருகிறது. 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 20 கிலோ கோதுமை, 5 கிலோ அரிசி, 5 லிட்டர் எண்ணெய், சக்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தொழிலாளர் சங்கம் வழங்கியுள்ளது.
வைர வியாபாரி லால்ஜி படேல், கஷ்டப்படும் 35 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 15,000 ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
- இளைஞர்களுக்கு திறன் பயிற்சியும், அதற்கேற்ற வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.
- இலவச வீட்டு மனைப் பட்டா, கலைஞர் கனவு இல்லத்தின் கீழ் வீடுகள் வழங்க நடவடிக்கை.
மாவட்ட ஆட்சியர் மற்றும் புலிகள் காப்பக துணை இயக்குநர் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,
▪️ தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சட்டப்பூர்வ பணிப் பலன்கள், மாதாந்திர ஓய்வூதியம் ஆகியவற்றை முறையாக பெற்று வழங்க அரசு நடவடிக்கை.
▪️ மணிமுத்தாறு அருகே அரசு சார்பில் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ள 240 வீடுகளை தொழிலாளர்களுக்கு வழங்க அரசு தயராக உள்ளது. இலவச வீட்டு மனைப் பட்டா, கலைஞர் கனவு இல்லத்தின் கீழ் வீடுகள் வழங்க நடவடிக்கை.
▪️ ₹11.54 லட்சம் மதிப்பு கொண்ட ஒரு வீட்டுக்கு அரசு ₹8.5 லட்சம் மானியமாக வழங்குகிறது. மீதம் ₹3.04 லட்சத்தை மட்டும் பயனாளிகள் செலுத்த வேண்டும். கூடுதல் மானியம் அளித்து வீடுகளை வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது
▪️ 55 வயதுக்குட்பட்ட தொழிலாளர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் மற்றும் நீட்ஸ் திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் ஏற்பாடு செய்ய அரசு தயார்.
▪️ இளைஞர்களுக்கு திறன் பயிற்சியும், அதற்கேற்ற வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.
▪️ சிறு கால்நடைப் பண்ணை அமைக்க அல்லது கறவை மாடுகள், ஆடுகள் வாங்கிட வட்டியில்லாத கடன் வழங்க நடவடிக்கை.
▪️ குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வி பாதிக்காத வகையில் அவர்கள் விரும்பிய பள்ளியில் சேர்க்கவும், விடுதிகளில் தங்க வைத்து படிக்க வைக்கவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.
▪️ தொழிலாளர்களின் ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை அவர்கள் விரும்பும் இடத்திற்கு மாற்றி வழங்க ஒற்றைச் சாரள முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.
▪️ தொழிலாளர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கவும் 'பர்மா பாம்பே டிரேடிங் கம்பெனி' நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- உணவக உரிமையாளர்களின் பெயர்களை பெயர்களைக் காண்பிக்க வேண்டும் உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது.
- உத்தரபிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும்.
உத்தரபிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை காண்பிக்க வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாஜக ரசின் இந்த உத்தர இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "ஒவ்வொரு கடையிலும் ஒரே ஒரு பெயர்ப்பலகை தான் இருக்க வேண்டும். அது மனிதநேயம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்
- இந்த உத்தரவை பிறப்பித்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உத்தரபிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களைக் காண்பிக்க வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உத்தரபிரதேச அரசின் இந்த உத்தரவை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "நமது அரசியலமைப்பு மனிதர்களிடையே ஜாதி, மதம், மொழி அல்லது வேறு எந்த அடிப்படையிலும் பாகுபாடு காட்டப்பட மாட்டாது என்று உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால் உத்தரபிரதேசத்தில் உள்ள உணவக உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்க வேண்டும் என்ற உத்தரவு நமது அரசியலமைப்பு, நமது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் மற்றும் அதை பிறப்பித்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- பாஜக அரசின் இந்த உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது.
- சாதி மற்றும் மதத்தின் பெயரால் பிரிவினையை உருவாக்கும் எதையும் நான் ஆதரிக்கமாட்டேன்.
உத்தரபிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களைக் காண்பிக்க வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பாஜக அரசின் உந்த உத்தரவிற்கு பாஜக கூட்டணியில் உள்ள 3 முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாதி மற்றும் மதத்தின் பெயரால் பிரிவினையை உருவாக்கும் எதையும் நான் ஆதரிக்கமாட்டேன் என்று உத்தரபிரதேச அரசின் இந்த உத்தரவிற்கு மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
அதே போல், உத்தரபிரதேச அரசின் இந்த உத்தரவு திரும்ப பெறப்பட வேண்டும் என்று நிதிஷ்குமார் கட்சியான ஜனதா தளத்தின் தலைவர் கே.சி. தியாகி தெரிவித்துள்ளார்.
பாஜக அரசின் இந்த உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது என்று ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் மாநில தலைவர் ராமஷிஸ் ராய் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச பாஜக அரசின் உத்தரவிற்கு பாஜக கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உத்தரபிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும்.
- சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களைக் காண்பிக்க வேண்டும் என்ற முசாபர்நகர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
காவல்துறையின் இந்த உத்தரவை எதிர்த்து தானாக முன்வந்து நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "கடை உரிமையாளரின் பெயர் என்னவாக இருந்தால் என்ன? பெயரை வைத்து நீங்கள் கண்டுபிடிக்க போகிறீர்கள்?. மாநிலத்தின் அமைதியான சூழலையும் நல்லிணக்கத்தையும் கெடுப்பதற்கான இத்தகைய உத்தரவு ஒரு சமூக குற்றம்" என்று தெரிவித்துள்ளார்.
அதே போல், "பாஜக அரசின் இந்த உத்தரவு முட்டாள்தனமானது. சட்டத்திற்குப் புறம்பான இந்த உத்தரவு இஸ்லாமியர்களுக்கு எதிரான பாரபட்சம் காட்டும் நடவடிக்கையாகும்" என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே தெரிவித்துள்ளார்.