என் மலர்

  நீங்கள் தேடியது "ditch"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை அடைக்கும் பணி நடைபெற்றது.
  • சாலையை சீராக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

  சீர்காழி:

  மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள நாதல்படுகை கிராமத்துக்கு செல்லும் சாலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கிராமத்தை சூழ்ந்து சாலையையும் அரித்து துண்டித்துவிட்டது.

  மேலும் சாலையில் 1 கி.மீ. தூரத்திற்கு ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.

  இதனையறிந்த பூம்புகார் எம்.எல்.ஏ.வும், தி.மு.க மாவட்ட செயலாளருமான நிவேதா.முருகன் நாதல்படுகை கிராமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  சேதமடைந்து துண்டிக்கப்–பட்ட சாலை மேம்படுத்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

  இதனையடுத்து சாலையை தற்காலிகமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

  அதனைத் தொடர்ந்து ஜே.சி.பி எந்திரம் கொண்டு வரப்பட்டு, ஆயிரக்கணக்கான மணல் மூட்டைகள் மற்றும் சவுக்கு கட்டைகள் எடுத்து வரப்பட்டு சாலையின் நடுவில் போட்டு சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை அடைக்கும் பணி நடைபெற்றது.

  கிராமத்துக்கு செல்லும் சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டு விட்டதால் உடனடியாக தற்காலிகமாக சாலையை சீராக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

  இது குறித்து நிவேதா.முருகன் எம்.எல்.ஏ. கூறும்போது:-

  நாதல்படுகை மற்றும் முதலைமேடுதிட்டு கிராமங்களுக்கு செல்லும் சாலை தண்ணீரில் அரித்துச் செல்லப்பட்டு விட்டதால் சாலையை தற்காலிகமாக மேம்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  பின்னர் அரசின் நிதி ஒதுக்கீடு பெற்று நிரந்தரமாக சாலை மேம்படுத்தப்படும் என்றார்.

  அப்போது ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், பி. டி. ஓ. அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பலராமன், பூரணச் சந்திரன், மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்ல சேது ரவிக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் கென்னடி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் உடனிருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மணல் குவாரி செயல்படுவதால் ஏராளமான லாரிகள் சென்று வருகின்றன.
  • கவனக்குறைவு ஏற்பட்டால் இந்த பள்ளத்தினால் அபாயம் ஏற்படும் நிலை உள்ளது.

  பூதலூர், அக்.9-

  திருக்காட்டுப்பள்ளியில் இருந்து கோவில்பட்டி வழியாக கல்லணை செல்லும் சாலை விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சாலை வழியாக கும்பகோணத்தில் இருந்தும் மயிலாடுதுறையில் இருந்தும் திருச்சிக்கு ஏராளமான கார்கள் சென்று வருகின்றன.

  திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, வளப்பகுடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விளைவிக்கப்படும் விளைப்பொருட்கள் பலவும் லாரிகள் மூலமாக திருச்சி மார்க்கெட் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. சாலை அகலப் படுத்தப்பட்டு விட்டதால் இரண்டு சக்கர வாகனங்களும் அதிக அளவில் சென்று வருகின்றன. கோவிலடி அருகே அரசு மணல் குவாரி செயல்படுவதால் ஏராளமான லாரிகளும் குறுக்கு நடுக்குமாக சென்று வருகின்றன.

  இந்த நிலையில் சுக்காம்பர் அருகே அண்மையில் பெய்த மழையால் சாலையின் ஓரத்தில் தொடர்ந்து பெரிய அளவில் அரிப்பு ஏற்பட்டு மூன்று பெரும் பள்ளங்கள் காணப்படுகின்றன. எதிர் புதிருமாக லாரிகள் வரும் நேரத்தில் சற்று கவனக்–குறைவாக ஏற்பட்டால் இந்த பள்ளத்தினால் அபாயம் ஏற்படும் நிலை உள்ளது.

  அதுபோல இரண்டு சக்கர வாகனங்களில் வருவோர் சற்று கவனம் பிசகினாலும் சாலையோர பள்ளத்தில் விழுந்துவிடும் அபாய நிலை உள்ளது.

  தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அரிப்பு ஏற்படுவது எப்படி என்பதை கண்டறிந்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று இந்த பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மத்திய அரசு மின்கட்டணத்தை உயர்த்தியதற்கான அறிவிப்பு ஆணை இருந்தால் காண்பியுங்கள்.
  • பாதாள சாக்கடை மேன்ஹாலை கண்டுபிடித்து பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.

  தஞ்சாவூர்:

  தஞ்சையில் இன்று மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் சண். ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிய விவரம் வருமாறு :-

  கவுன்சிலர் சரவணன்:

  சீனிவாசபுரம் ராஜாஜி ரோடு பகுதியில் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுவதால் வேகத்தடை அமைத்து தர வேண்டும்.

  கவுன்சிலர் கோபால்:

  4 ராஜ வீதிகளிலும் பாதாள சாக்கடை பணிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பல நாட்களாகியும் பணி முடியவில்லை.

  இதன் காரணமாக பலர் பள்ளத்தில் விழுந்து விபத்தை சந்தித்து வருகின்றனர். உடனடியாக இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும்.

  கவுன்சிலர் கண்ணுக்கினியாள்:

  மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும்.

  கவுன்சிலர் ஜெய் சதீஷ்:

  மத்திய அரசு மின்கட்டணத்தை உயர்த்தியதற்கான அறிவிப்பு ஆணை இருந்தால் காண்பியுங்கள். மத்திய அரசு ஒருபோதும் மின் கட்டணத்தை உயர்த்துமாறு கூறவில்லை.

  மாநில அரசுதான் உயர்த்தி உள்ளது.

  எனது வாடுக்கு உட்பட்ட பழைய ராமேஸ்வரம் சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு மழை பெய்யும் போதெல்லாம் தண்ணீர் தேங்கியுள்ளது.

  உடனடியாக பாதாள சாக்கடை மேன்ஹாலை கண்டுபிடித்து இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.

  இதே போல் மற்ற கவுன்சிலர்களும் தங்களது வார்டுக்கு உட்பட்ட கோரிக்கைகள் குறித்து பேசினர்.

  முன்னதாக கூட்டத்தில் ஏற்கனவே 22 கவுன்சிலர்கள் கொண்டு வந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

  கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து மேயர் சண் .ராமநாதன் பேசும்போது:-

  மத்திய அரசு மானியம் உள்ளிட்ட நிதிகளை தர மாட்டோம் என கூறியதாலும், அவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவும் தான் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

  மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மின் கட்டணம் குறைவுதான். கவுன்சிலர்களின் கோரிக்கைகள் பரீசிலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மழைநீர் தேங்கி நிற்பதால், சாலையில் பள்ளம் தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
  • அப்பகுதியை கடப்பதற்கு பள்ளி மாணவ- மாணவிகளும், வயதானவர்களும் சிரமப்படும் நிலை தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது.

  நன்னிலம்:

  திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கன மழையால், மழை நீர் சாலைகளில் ஆறு போல ஓடியது.

  கனமழையின் காரணமாக, சாலைகளில், உள்ள பள்ளங்களில், மழைநீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது.

  நல்லமாங்குடி, அக்ரஹாரத்தில் தெருவிற்கு செல்லும் சாலை முன்பாக, மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.

  சாலை வழியாக, அரசு பள்ளிக்கும், தனியார் பள்ளிக்கும், அரசு மாணவர் விடுதிக்கும், செல்ல வேண்டும்.

  மழைநீர் தேங்கி நிற்பதால், சாலையில் பள்ளம் தெரியாமல், இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

  பள்ளி குழந்தைகள், தேங்கி நிற்கும் மழை நீரில் இறங்கி செல்ல வேண்டியுள்ளது.

  ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் பொழுது, சாலையில் மழைநீர் குட்டை போல் தேங்கி நிற்பதும், அதனால் அந்தப் பகுதியை கடப்பதற்கு பள்ளி மாணவ மாணவிகளும் வயதானவர்களும் சிரமப்படும் நிலை தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது.

  இந்தச் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர் உடனடியாக வடியும் வகையில் மாற்று ஏற்பாடு செய்யப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தூத்துக்குடி -திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பு உள்ளது. இந்த சாலையின் கீழ் ஆத்தூரில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
  • சாலையில் தோண்டிய பள்ளத்தை நேர்த்தியாக மூடாமல் மணலையும் கல்லையும் குவித்து அதன் மீது குச்சியை நட்டு, பிளாஸ்டிக் பை ஒன்றை கொடி போல் பறக்க விட்டுள்ளனர்.

  ஆறுமுகநேரி:

  தூத்துக்குடி -திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பு உள்ளது. இந்த சாலையின் கீழ் ஆத்தூரில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குளம் போல் தண்ணீர் பெருகியது.

  இது பற்றி பொதுநல அமைப்புகள் புகார் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. ஆனால் அதற்காக சாலையில் தோண்டிய பள்ளத்தை நேர்த்தியாக மூடாமல் மணலையும் கல்லையும் குவித்து அதன் மீது குச்சியை நட்டு, பிளாஸ்டிக் பை ஒன்றை கொடி போல் பறக்க விட்டுள்ளனர்.

  போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையில் இந்த செயல்பாடு விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. வேகமாக வரும் வாகனங்கள் இந்த மணல் குவியலையும், அதன் மீது உள்ள கொடி நாட்டலையும் திடீரென கண்டு நிலைகுலைய நேரிடுகிறது. நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு பெரும் இடைஞ்சலாகவும் உள்ளது.

  ஆகவே பள்ளம் தோண்டப்பட்ட அந்த இடத்தை நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோபி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

  கோபி:

  கோபி அடுத்த கரட்டூர் மேடு அத்தாணியை சேர்ந்தவர் முத்துசாமி(வயது 42) கட்டிடத் தொழிலாளி. இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் அரசூர்-நம்பியூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

  அப்போது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் ரோட்டரோம் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்தார். அந்த பள்ளத்தில் தண்ணீர் சென்று கொண்டிருந்தது.

  இதில் முத்துசாமி சம்பவ இடத்திலேயே தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

  இது பற்றி தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று, முத்துசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

  மேலும் இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாலாஜா அருகே சொகுசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதிர்ஷ்டவசமாக 37 பேர் உயிர் தப்பினர்.

  வாலாஜா:

  பெங்களூருவில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை சொகுசு பஸ் புறப்பட்டது. டிரைவர் உமேஷ் (வயது 46). என்பவர் ஓட்டிவந்தார். கண்டக்டராக மோகன் (57). என்பவர் உள்பட 37 பயணிகள் இருந்தனர்.

  ராணிப்பேட்டை அருகே உள்ள காரை என்ற இடத்தில் பஸ் சென்ற போது லாரி ஒன்று பஸ்சை முந்தி சென்றது. இதனால் பஸ் டிரைவர் உமேஷ் பிரேக் போட்டுள்ளார். அப்போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது.

  இதில் கண்டக்டர் மோகன் காயமடைந்தார். பயணிகள் 37 பேர் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமின்றி உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

  காயமடைந்த மோகனை வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் பயணிகளை மாற்று பஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொள்ளாச்சியில் நகராட்சி குப்பை லாரி ஏ பி டி சாலை பகுதியில் பள்ளத்தில் சிக்கிக் கொண்டதால் அந்த வழியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

  பொள்ளாச்சி:

  பொள்ளாச்சி நகராட்சி யில் பாதாள சாக்கடை பணிகள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. ஒரு பகுதியில் பணிகளை முழுமையாக முடிக்காமல் அனைத்து பகுதிகளிலும் குழிகளை தோண்டி விட்டு சரியாக மூடாமல் செல்வதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பலர் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் விழுந்து காயமடையும் நிலை இருந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருவர் இரு சக்கர வாகனத்துடன் பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்து காயமடைந்தார்.

  சமீபத்தில் ஒருவர் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைத்து வரும் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். இருந்த போதும் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடாமல் அலட்சியமாக இருந்து வந்தனர்.

  காலை நகராட்சியின் குப்பை வண்டி ஏபிடி ரோடு பகுதியில் பாதாள சாக்கடைக் காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடாமல் இருந்த நிலையில் அதில் சிக்கிக் கொண்டது. ஓட்டுநர் பல முறை முயற்சித்தும் குப்பை லாரியை பள்ளத்தில் இருந்து மீட்க முடியவில்லை. இதனால் பொக்லைன் எந்திரம் கொண்டு வந்து குப்பை லாரியை மீட்க நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

  நகராட்சி குப்பை லாரி ஏ பி டி சாலை பகுதியில் பள்ளத்தில் சிக்கிக் கொண்டதால் அந்த வழியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேன்கனிக்கோட்டை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விவசாயி உயிரிழந்தார். அவருடைய நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
  தேன்கனிக்கோட்டை:

  கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சந்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அய்யூர் வனப்பகுதிக்கு தனது நண்பர்கள் விக்ரம், அனுமந்தகவுடா ஆகியோருடன் காரில் சென்றார்.

  அங்கு அவர்கள் வனப்பகுதியை சுற்றி பார்த்து விட்டு மீண்டும் காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். காரை சுரேஷ் ஓட்டி வந்தார். உனிசெட்டி அருகில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரத்தில் இருந்த பெரிய பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

  இந்த விபத்தில் சுரேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விக்ரம், அனுமந்தகவுடா ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  விபத்து குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் இறந்த சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன் கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராமேஷ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடம் பகுதியில் வீட்டுக்கு செப்டிக் டேங்க் கட்ட குழி தோண்டிய மீனவர் வீட்டில், பெட்டி பெட்டியாக பழைய தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
  ராமநாதபுரம்:

  ராமேஷ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடம் பகுதியில் இருக்கும் அந்தோனியார் புரத்தைச் சேர்ந்த மீனவர் எடிசன். இன்று பிற்பகலில் தனது வீட்டுக்கு செப்டிக் டேங்க் கட்ட அவர் குழி தோண்டியுள்ளார். 5 அடி தோண்டியதும் பெட்டி பெட்டியாக பழைய தோட்டாக்கள் கிடைத்துள்ளது.

  இதனை அடுத்து, போலீசாருக்கு எடிசன் தகவல் கூறியுள்ளார். இதனை அடுத்து, போலீசார் அங்கு வந்து குழியை மேலும் தோண்டி பழைய தோட்டாக்களை கைப்பற்றினர். மேலும், சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி ஓம் பிரகாஷ் மீனா பார்வையிட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
  ×