search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Worker killed"

    • பணியில் ஈடுபட்டிருந்த ஏராளமான தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
    • 30 தொழிலாளர்கள் வரை இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    பாட்னா:

    பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் மரிச்சா பகுதியில் கோசி ஆற்றின் மீது பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    இந்நிலையில் கட்டுமானப்பணியின் போது திடீரென பாலத்தின் பலகை இடிந்து பாலம் உடைந்து விழுந்துள்ளது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த ஏராளமான தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதனால் தொழிலாளர்கள் அலறி துடித்தனர்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததோடு மீட்பு பணியிலும் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள், தன்னாவலர்கள் உதவியோடு மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் ஒரு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். 30 தொழிலாளர்கள் வரை இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


    • சென்னை சென்ற லாரி இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
    • அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சேடன் குட்டை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 55) . கூலித் தொழிலாளி.இவர் திண்டிவனம் எம். ஆர். எஸ். கே. கேட் அருகே டாஸ்மாக் கடைக்குஎதிரே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக ரோட்டை கடந்த போது திண்டிவனத்தில் இருந்து சென்னை சென்ற லாரி இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் நாகராஜ் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜ் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த பகுதியில் நெடுஞ்சாலையில் ஓரத்தில் டாஸ்மாக் கடை உள்ளதால் தொடர்ந்து விபத்து நடப்பதாகவும் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தொடர்ந்து உயிரிழப்பும் ஏற்படுவதாகவும் அந்த பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இந்த இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் போராட்டம் நடத்துவது என திட்டமிட்டுள்ளனர்.

    • கணவன்- மனைவிக்கி டையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
    • மனைவி சந்தியா மாமனார் ராமமூர்த்தி இருவரும் சேர்ந்து கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர்.

    கடலூர் :

    வடலூர் அருகேயுள்ள திடீர் குப்பத்தை சேர்ந்தவர்ராமமூர்த்தி (வயது 29). இவர் வெல்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கும் பண்ருட்டி காடாம்புலியூரை அடுத்தசெம்மங்குப்பம் கிராமத்தை சேர்ந்த சந்தியா விற்கும்திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ராமமூர்த்திக்கு குடிப் பழக்கம் இருந்த தால் கணவன்- மனைவிக்கி டையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதில்ஆத்திர மடைந்த சந்தியா குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய்வீடான செம்மங்குப் பத்திற்கு வந்து விட்டார். இந்நிலையில் கடந்த மாதம் 16-ந் தேதி சந்தியாவை தேடி சந்தியாவின் தங்கை வீடான விருத்தாச்சலத்திற்கு அடுத்த கொம்பாடிகுப்பத்திற்கு சென்று ராமமூர்த்தி சண்டை போட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சந்தியாவின் தங்கை யுடைய கொழுந்தனார் கொம்பாடிகுப்பம் அருண் குமார் (வயது 24) ராமமூர்த்தியின் கைகளைக் கட்டி போட்டு காரில் செம்மங்குப் பத்திற்கு அழைத்துச் சென்று உள்ளார். அங்கு மீண்டும் தகராறில் ஈடுபட்ட ராமமூர்த்தியை அவரது மனைவி சந்தியா மாமனார் ராமமூர்த்தி இருவரும் சேர்ந்து கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் முத்தாண்டிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் .ராமமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். ராமமூர்த்தியின் மனைவி சந்தியா,மாமனார் ராமமூர்த்தி ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர் இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தியாவின் தங்கையுடைய கொழுந்தனார் கொம்பாடி குப்பம் அருண்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சம்பவத்தன்று கீழவடகரை ஸ்டேட்பாங்க் காலனி பிரிவு பகுதியில் உள்ள கடையில் தகரசெட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
    • அப்போது எதிர்பாராதவித மாக உயர்அழுத்த மின்வயரில் உடல் உரசி மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே காந்திநகரை சேர்ந்தவர் குமார்(48). தகரசெட் அமைக்கும் தொழிலாளி. சம்பவத்தன்று கீழவடகரை ஸ்டேட்பாங்க் காலனி பிரிவு பகுதியில் உள்ள கடையில் தகரசெட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராதவித மாக உயர்அழுத்த மின்வயரில் உடல் உரசி மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி குமார் உயிரிழந்தார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • அரசு பஸ் மோதி தொழிலாளி பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அமீர்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது31), கட்டிடத் ெதாழி லாளி. இவரது மனைவி மஞ்சுளா(21). இவர் சாத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு வேலை முடித்துவிட்டு மஞ்சுளா கணவரை அழைத்து செல்ல வருமாறு கூறியுள்ளார். அதன்படி ஜெயராஜ் மோட்டார் சைக்கிளில் சாத்தூருக்கு புறப்பட்டார்.

    சாத்தூரில் உள்ள மதுரை பஸ் நிறுத்தத்தில் மஞ்சுளா கணவருக்காக காத்திருந்தார். அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் ஜெயராஜ் மனைவி அருகில் வரும்போது பின்னால் வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.மஞ்சுளா கண்ணெதிரே விபத்தில் கணவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி பலியானார்.
    • வேன் டிரைவர் பாலாஜி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமசாமிபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது42), தொழிலாளி. இவர் சம்பவத்தன்று ஆட்டோவில் வெளியே புறப்பட்டார்.

    அருப்புக்கோட்டை பந்தல்குடி மெயின் ரோட்டில் உள்ள வேளாண் அலுவலகம் அருகில் சென்றபோது சாலையில் நாய் திடீரென குறுக்கே பாய்ந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கருப்ப சாமி சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி சுந்தரி கொடுத்த புகாரின் பேரில் அருப்புக் கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை ஜீவாநகர் திருமலை தெருவை சேர்ந்தவர் கார்த்திக்குமார் (வயது40). இவர் சம்ப வத்தன்று உறவினர்களுடன் குற்றாலம் சென்று விட்டு வேனில் அருப்புக் கோட்டைக்கு வந்து கொண்டிருந்தார். கிருஷ்ணன் கோவில்-எரிச்சநத்தம் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது வேனின் டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் தலைக்குப்புற கவிழ்ந்தது. அதில் இருந்த 5 பெண்கள் உள்பட 11 பேர் படுகாயமடைந்தனர்.

    இந்த விபத்து அருப்புக் கோட்டை போலீசார் விசா ரணை நடத்தி வேன் டிரைவர் பாலாஜி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • டாஸ்மாக் கடை முன் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்
    • வேலூர் ஜெயிலில் அடைத்தனர்

    ஆரணி:

    ஆரணி கொசப்பா ளையம் பெரிய சாயக்கார தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 50). சலவை தொழிலாளி. இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், சுரேஷ்குமார், ஜெயக்குமார் என்ற 2 மகன்களும் உள்ளார்.

    பிரகாஷ் மது அருந்தி வருவ தால் அவரை விட்டு மனைவி சரஸ்வதி, மகன் ஜெயக்குமார் சென்னையில் வசித்து வரு கின்றனர்.

    நேற்று முன்தினம் இரவு ஆரணி காந்தி ரோட் டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பிரகாஷ் மதுபானம் வாங்க சென்றதாக கூறப்படு கிறது. அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை.

    அவரை மகன் சுரேஷ்கு மார் தேடிச்சென்றபோது டாஸ்மாக் கடை முன் பிரகாஷ் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் மகேந்திரன், உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்தார்.பின்னர் பிரேத பரிசோத னைக்காக பிரகாஷ் உடலை திருவண்ணாமலை மருத்து வக் கல்லூரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    உடலில் ரத்தக்காயங்கள் இருப்பதால் அவரை யாரும் கொலை செய்தனரா? போதையில் தடுமாறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரித்து வந்தனர்.

    இந்தநிலையில் ஆரணி பஜார் பகுதியில் பழவியாபாரம் செய்து வரும் கனகம்பட்டு பகுதியைச் சேர்ந்த முனியாண்டி(வயது 37) என்பவர் பிரகாசை கொலை செய்தது தெரியவந்தது.

    மது அருந்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கொலை நடந்துள்ளது.

    போலீசார் முனியாண்டியை கைது செய்தனர். அவரை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    • திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
    • மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பி.தொட்டியப்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் முத்துக்குமார்(வயது24). பிளஸ்-2 முடித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் பாப்புரெட்டிபட்டியில் நடக்கும் திருவிழாவுக்காக விடுமுறையில் ஊருக்கு வந்தார். நண்பர்களை பார்ப்பதற்காக மோட்டார் ைசக்கிளில் சென்றார். ஆவாரம் பட்டி விலக்கு அருகே சென்றபோது எதிர்திசையில் வந்த வேன் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் முத்துக்குமார் தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த அவரை அங்கிருந்த வர்கள் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் பேரையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பேரையூர் போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவில் விழாவுக்கு மின்விளக்கு அலங்காரம் செய்த போது பரிதாபம்.
    • இது குறித்து சேதராப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான வானூர் அருகே காட்ராம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் குமார். (வயது 32) இவர் சேதராப்பட்டில் உள்ள தனியார் சவுண்டு சர்வீஸ் உரிமையாளர் சங்கரிடம் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார்.

    சேதராப்பட்டு அருகே கரசூரில் முத்து மாரியம்மன் கோவில் விழாவுக்காக நேற்று சதீஷ் குமார் மின் விளக்கு அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென மின் கசிவு ஏற்பட்டு சதீஷ்குமாரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அங்கிருந்தவர்கள்அவரை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சதீஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சேதராப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரு சக்கர வாகனம் மோதி தொழிலாளி பலியானார்.
    • இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    விருதுநகர் அருகேயுள்ள வடமலைக்குறிச்சியை சேர்ந்தவர் கண்ணன் என்ற மலைச்சாமி(வயது55), கூலித்தொழிலாளி. இவர் வெளியூர் சென்றுவிட்டு டி.கல்லுப்பட்டி பஸ் நிலையத்தில் வந்து இறங்கினார். அங்கு நடந்து சென்றபோது, பேரையூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மலைச்சாமியின் மனைவி லீலாவதி கொடுத்த புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்தவ உப்பளத் தொழிலாளி இசக்கி அர்ஜூன் (வயது20).
    • நேற்று வழக்கம் போல உப்பளத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த போது இசக்கி அர்ஜூனை மின்சாரம் தாக்கியது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி 3 சென்ட் அமுதா நகரை சேர்ந்தவர் இசக்கி அர்ஜூன் (வயது20). இவர் அப்பகுதியில் உள்ள உப்பளத்தில் தொழிலாளியான பணியாற்றி வந்தார். நேற்று வழக்கம் போல உப்பளத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை சக ஊழியர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தானமுத்துநகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் அங்குள்ள வெளிமாநிலத்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம் அதிகரித்து உள்ளது. கடந்த ஒருமாதத்திற்கு மேலாக அங்கு பணியாற்றி வரும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள். மற்றும் பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர்களை குறி வைத்து இந்த தாக்குதல் சம்பவம் நடந்து வருகிறது.

    31-ந்தேதி ரஜனிபாலா என்ற பண்டிட் ஆசிரியை சுட்டுக்கொல்லப்பட்டார். இதன்தொடர்ச்சியாக நேற்று குல்காம் மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கிக்குள் புகுந்து மேலாளர் விஜயகுமார் என்பவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று இரவு செங்கல் சூளை தொழிலாளி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மத்திய காஷ்மீர் பகுதி பட்காம் மாவட்டம் மக்ரய்புரா என்ற இடத்தில் உள்ள செங்கல் சூளையில் வெளிமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    திடீரென இந்த செங்கல்சூளைக்குள் புகுந்த பயங்கரவாதிகள் தொழிலாளர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் தில்குஷ்குமார் ( வயது17) என்ற தொழிலாளி குண்டுபாய்ந்து அதே இடத்தில் இறந்தார் இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்.

    மற்றொரு தொழிலாளியான பஞ்சாப்பை சேர்ந்த ராஜன் என்பவர் படுகாயம் அடைந்தார். இவர் சிசிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் அங்குள்ள வெளிமாநிலத்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. உயிருக்கு ஆபத்து இருப்பதால் தங்களை சொந்த மாவட்டங்க ளுக்கு மாற்ற கோரி அரசு ஊழியர்கள் நேற்று பேரணி சென்றனர். காஷ்மீர் நிலவரம் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அடுத்தடுத்து நடைபெற்று வரும் துப்பாக்கி சூடு சம்பவத்தால் காஷ்மீரில் பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது.
    ×