search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "North State"

    • ஜீப் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டு அந்த வாலிபர் சர்வீஸ் ரோட்டிற்கு வந்து இறந்தது தெரிய வந்தது.
    • விபத்தை ஏற்படுத்திய ஜீப் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள சித்தோடு சேலம்-கோவை பைபாஸ் ரோடு, நொச்சிப்பாளையம் பிரிவு சர்வீஸ் ரோட்டில் உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதனையடுத்து போலீசார் சம்பவயி டத்திற்கு வந்து பார்த்த போது இறந்து கிடந்தது சுமார் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க வட மாநில நபர் என்பதும், அவர் யார்? எந்த ஊரை சேர்ந்த வர் என தெரியவில்லை.

    அதேபோல் அருகிலுள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்ததில் அதிகா லை 5 மணியளவில் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்த ஜீப் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டு அந்த வாலிபர் சர்வீஸ் ரோட்டிற்கு வந்து இறந்தது தெரிய வந்தது.

    இதனைத்தொடர்ந்து போலீசார் இறந்த வட மாநில வாலிபர் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தை ஏற்படுத்திய ஜீப் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பதிவுச்சான்று இல்லாமல் வெளிமாநிலத் தொழிலாளர்களை பணி அமர்த்தினால் அதற்கு தடைவிதிப்பதோடு சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
    • மேலும், பதிவு சான்று பெறுவதற்கு வெளிமாநில தொழிலாளர்களின் தற்போதைய விவரங்களை https://labour.tn.gov.in/ism என்ற இணையத்தளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யவேண்டும்.

    சேலம்:

    சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் தினகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கு முன்னர் சம்ந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகங்கள் சேலம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநரிடம் பதிவுச்சான்று பெற்ற பின்புதான் பணியமர்த்த வேண்டும்.

    பதிவுச்சான்று இல்லாமல் வெளிமாநிலத் தொழிலாளர்களை பணி அமர்த்தினால் அதற்கு தடைவிதிப்பதோடு சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். மேலும், பதிவு சான்று பெறுவதற்கு வெளிமாநில தொழிலாளர்களின் தற்போதைய விவரங்களை https://labour.tn.gov.in/ism என்ற இணையத்தளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யவேண்டும்.

    பதிவேற்றம் செய்யப்பட்ட விவரத்தினை dcifsalem@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு சாப்ட் காப்பி ஆகவும் சேலம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அலுவலகம், 27/2 ஏ 2, காந்தி ரோடு, வருமான வரித்துறை அலுவலகம் அருகில், சேலம்-636007. என்ற முகவரிக்கு அதன் நகல்களை அனுப்புமாறு சேலம், தொழிலக பாதுபாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    வெளிமாநிலத் தொழிலாளர்களில் பணியின்போதும், பணியில் இல்லாமல் ஓய்வின் போதும் மற்றும் இரவு நேரங்களிலும் உயிருக்கு கேடு ஏதும் ஏற்படாவண்ணம் பாதுகாப்பது தொழிற்சாலை நிர்வாகங்கள் உரிய முறையில் கண்காணித்திட வேண்டும், வேறு ஏதாவது நேர்ந்தால் உடனே அருகிலுள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவகல் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் இது குறித்து சேலம், ராசிபுரம், நாமக்கல் மற்றும் பரமத்தி வேலூர் தாலுகாக்க ளை சேர்ந்தவர்கள் சேலம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் தினகரனை 9597386807, 9445869224 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

    மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி மற்றும் திருச்செங்கோடு தாலுக்காக்களை சேர்ந்தவர்கள் மேட்டூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநரை 9445869225 என்ற எண்ணிலும், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தினர் ஓசூர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் சந்திரமோகனை 9994847205 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • பஞ்சாராம் ராய் தனது நண்பருடன் மது அருந்திவிட்டு பி.பி. அக்கரகாரம் பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலுக்கு குளிக்க சென்றனர்.
    • இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன

    ஈரோடு:

    நேபால் மாநிலம் ராவுத்தார் பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சாராம் ராய் (29). இவர் ஈரோடு மாவட்டம் சோலார் பகுதியில் தங்கி அங்குள்ள ஒரு பிராசசிங் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று பஞ்சாராம் ராய் தனது நண்பருடன் மது அருந்திவிட்டு பி.பி. அக்கரகாரம் பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலுக்கு குளிக்க சென்றனர்.

    வாய்க்காலில் குளித்துக் கொண்டிருக்கும் போது பஞ்சாராம் ராய் திடீரென நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் மில்லில் வேலை பார்க்கும் நபர்களிடம் இது குறித்து கூறினார்.

    இதனை அடுத்து அனைவரும் அக்ரஹாரம் வாய்க்கால் பகுதிக்கு சென்று பஞ்சாராம்ராயை தேடிப் பார்த்தனர்.

    இந்நிலையில் ஈரோடு வைரா பாளையம் பகுதியில் வி.எம்.பி. தோட்டம் அருகே காலிங்கராயன் வாய்க்கால் கரையோரம் பஞ்சாராம் ராய் உடல் ஒதுங்கியது.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்ப ட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பஞ்சாராம் ராய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன

    • பரமத்தி வேலுார் தாலுகா பகுதிக்கு, தற்போது வட மாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வந்துள்ளனர்.
    • தாலுகா முழுவதும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர்.

    பரமத்தி வேலுார்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார் சுற்று வட்டாரப் பகுதிகளான பரமத்தி, கபிலர்மலை, இருக்கூர், ஜேடர்பாளையம், பிலிக்கல்பாளையம், நல்லுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள இரும்பு கம்பி தயார் செய்யும் தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு வகையான தொழிற்சாலைகள், கோழிப்பண்ணைகள், வெல்லம் தயாரிக்கும்ஆலைகள் உள்ளிட்டவைகளில், அதிக ளவில் வடமாநிலதொழி லாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர்.

    இதில் 90 சதவீதம் பேர் தங்கள் வேலை பார்க்கும் பகுதியிலேயே தங்கியுள்ளனர். சிலர் வாடகைக்கு வீடு எடுத்து, கூட்டாகவும் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அடிக்கடி மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்குவதற்கு, பரமத்திவேலூருக்கு வந்து செல்கின்றனர். மேலும் வட மாநிலத்தவர்கள் அதிகளவில், டீ கடை மற்றும் சிறிய உண வகங்கள் வைத்து நடத்தி வரு கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்த வட மாநில தொழிலாளர்களின் புகைப் படம், முகவரி உள்ளிட்டவைகளை, போலீசார் வாங்கி பதிவு செய்து வந்தனர்.

    ஆனால் தற்போது எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் எந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் எந்த ஊர், பெயர் உள்ளிட்ட எவ்வித விபரங்களும் பதிவு செய்யப் படாமலே உள்ளது. தொழிற் சாலை, கோழிப்பண்ணை மற்றும் ஆலை உரிமையாளர் களை அழைத்து விழிப்பு ணர்வு கூட்டம் நடத்த போலீசார் ஏற்பாடு செய்ய வேண்டும். வடமாநில தொழி லாளர்களை தொடர்ந்து கண்காணிக்கவும், அவர்க ளின் முழு விபரங்களையும் பெறவும் வேண்டும்.

    பரமத்தி வேலுார் தாலுகா பகுதிக்கு, தற்போது வட மாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வந்துள்ளனர், தாலுகா முழுவதும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். போலீசார் அவர்களை கண்காணித்து அவர்களின் சொந்த முகவரி ஆவணங்களை பெற வேண்டும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • காலை வெகு நேரமாகியும் பன்ச்சம் ஓரன் எழுந்திருக்கவில்லை.
    • மனைவி கங்கிடோபோ கணவரை எழுப்ப முயன்ற போது அவர் அசைவற்று கிடந்தார்.

    ஈரோடு:

    ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி மாவட்டம், டெங்கரியா பகுதியை சேர்ந்தவர் பன்ச்சம் ஓரன் (28). இவரது மனைவி கங்கிடோபோ (29). இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    பன்ச்சம் ஓரன் கடந்த 2 ஆண்டுகளாக ஈரோடு, நசியனூர் ரோடு, நல்லி தோட்டம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கினர். பின்னர் காலை வெகு நேரமாகியும் பன்ச்சம் ஓரன் எழுந்திருக்கவில்லை.

    இதையடுத்து மனைவி கங்கிடோபோ கணவரை எழுப்ப முயன்ற போது அவர் அசைவற்று கிடந்தார்.

    உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பன்ச்சம் ஓரனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் பன்ச்சம் ஓரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சுதன் சேகர்தக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • இந்த சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    ஒடிசா மாநிலம் மொசிந்தா பகுதியை சேர்ந்தவர் சுதன் சேகர்தக்கு (33). இவர் மொடக்குறிச்சி அருகே உள்ள ஆலூத்து பாளையம் பகுதியில் தங்கி, அங்கு இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான மில்லில் கூலி வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை மொடக்குறிச்சியில் இருந்து பூந்துறை செல்லும் வழியில் ஆலுத்து பாளையம் பிரிவு அருகே சுதன் சேகர்தக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அதிவேகமாக வந்து மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் சுதன் சேகர்தக்குவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    எனினும் சிகிச்சை பலனின்றி சுதன் சேகர்தக்கு இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளதால் விவசாய துறை தடுமாறுகிறது.
    • வேலைக்கு வரும் தொழிலாளர்களும் அதிக சம்பளம் எதிர்பார்க்கின்றனர்.

    திருப்பூர் :

    விவசாய குடும்பத்தை சேர்ந்த பல இளைஞர்கள் விவசாய தொழிலில் ஈடுபட விரும்புவதில்லை. அதேபோல விவசாய தொழிலாளர்களின் வாரிசுகளும் விவசாய பணிக்கு செல்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. பெரும்பாலும் பனியன் நிறுவனங்களிலும், ஐ.டி., நிறுவனங்களிலும் பணியாற்றுகின்றனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளதால் விவசாய துறை தடுமாறுகிறது. உள்ளூர் தொழிலாளர்கள் கடினமான வேலைகளை செய்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். வேலைக்கு வரும் தொழிலாளர்களும் அதிக சம்பளம் எதிர்பார்க்கின்றனர். கணிசமான விவசாயிகள் தங்கள் தோட்டங்களை குத்தகைக்கு விட்டு விட்டு வேறு தொழிலுக்கு செல்வது அதிகரித்துள்ளது.

    சிறிய பண்ணைகளில் குடும்ப உறுப்பினர்களே வேலைகளை பகிர்ந்து கொள்கின்றனர். பெரிய பண்ணைகளில் தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதை சமாளிக்க வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    • வீட்டில் அவரது மூத்த மகள் ரஷ்னாராகாதுன் மட்டும் இருந்துள்ளார்.
    • வீட்டிற்குள் சென்று பார்த்தபோது துப்பட்டாவால் தனது மகள் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பெருந்துறை:

    மேற்கு வங்க மாநிலம் 24 பர்கானா மாவட்டம், ராமேஸ்வர்பூர் பகுதியை சேர்ந்தவர் ரபியுல்ஷாஜி. இவர் தனது மனைவி தஸ்நாமா, மகள்கள் ரஷ்னாராகாதுன் (வயது 20), ரிஹானாகாதூன், ரூமானாகாதூன் ஆகியோருடன் பெருந்து றையை அடுத்துள்ள பணிக்கம்பாளையம் பகுதியில் குடியிருந்து வருகிறார்.

    ரபியுல்ஷாஜி பெருந்துறை பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். மனைவி தஸ்நாமா, மூத்த மகள் ரஷ்னாராகாதுன் 2 பேரும் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் ரஷ்னாராகாதுன் 2 வருடங்களுக்கு முன்பு கொல்கத்தாவை சேர்ந்த ராகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து அவருடன் தங்கி இருந்தார். இதனையடுத்து கொஞ்சம் நாளிலேயே அவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனது தந்தையுடன் குடியிருந்து வந்தார்.

    இதனையடுத்து ரபியுல்ஷாஜியின் 2 மகள்கள் மற்றும் மனைவி மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்று இருந்தனர். வீட்டில் அவரது மூத்த மகள் ரஷ்னாராகாதுன் மட்டும் இருந்துள்ளார். ரபியுல்ஷாஜி கட்டிட வேலைக்கு சென்ற விட்டு மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்போட்டு இருந்தது.

    தட்டி பார்த்து கதவு திறக்காததால் கம்பியை வைத்து ெநம்பி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது துப்பட்டாவால் தனது மகள் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை கீழே இறக்கி பார்த்தபோது மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தார்.

    உடனே அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ரஷ்னாராகாதுன் இறந்து விட்டதாக கூறினார்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மாலிக் சலீம் கட்டிடத்தின் 2-வது மாடியில் கட்டுமான பணி செய்து கொண்டிரு ந்தபோது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்தார்.
    • இதில் பலத்த காயம் அடைந்த மாலிக் சலீமை சக தொழிலாளர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    ஈரோடு:

    பீகார் மாநிலத்தை சேர்ந்த அப்துல்லா மகன் மாலிக் சலீம் (24). கட்டிட தொழிலாளி. இவர் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் வணிக வளாக கட்டிடப் பணியில் ஒப்பந்த முறையில் தொழிலாளராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்த மாலிக் சலீம் கட்டிடத்தின் 2-வது மாடியில் கட்டுமான பணி செய்து கொண்டிரு ந்தபோது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த மாலிக் சலீமை சக தொழிலாளர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாலிக் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பிரேத பரிசோதனை முடிந்து மாலிக்கின் உடல் பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கிருந்து விமானம் மூலம் அவர்கள் சொந்த மாநிலமான பீகாருக்கு எடுத்து செல்லப்பட்டது. இறந்து போன மாலிக் சலீமிற்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    • இந்த நிலையில், நேற்று காலை ராம்சர்தார் திடீரென வாந்தி எடுத்து, மயங்கி விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • புகாரின்பேரில் மொடக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    மேற்கு வங்க மா நிலம், பர்கானாஸ் பகுதியைச் சேர்ந்தவர் திலீப்முண்டா (31). இவரது தங்கை கணவர் ராம்சர்தார் (27). இருவரும், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் சிமெண்ட் கற்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

    இந்த நிலையில், நேற்று காலை ராம்சர்தார் திடீரென வாந்தி எடுத்து, மயங்கி விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு வந்து, ராம்சர்தாரை பரிசோதனை செய்த ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர், அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

    இதுகுறித்து, திலீப்முண்டா அளித்த புகாரின்பேரில் மொடக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×