வட மாநில தொழிலாளி திடீர் சாவு

காலை வெகு நேரமாகியும் பன்ச்சம் ஓரன் எழுந்திருக்கவில்லை.மனைவி கங்கிடோபோ கணவரை எழுப்ப முயன்ற போது அவர் அசைவற்று கிடந்தார்.
வட மாநில தொழிலாளி திடீர் சாவு
Published on

ஈரோடு:

ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி மாவட்டம், டெங்கரியா பகுதியை சேர்ந்தவர் பன்ச்சம் ஓரன் (28). இவரது மனைவி கங்கிடோபோ (29). இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

பன்ச்சம் ஓரன் கடந்த 2 ஆண்டுகளாக ஈரோடு, நசியனூர் ரோடு, நல்லி தோட்டம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கினர். பின்னர் காலை வெகு நேரமாகியும் பன்ச்சம் ஓரன் எழுந்திருக்கவில்லை.

இதையடுத்து மனைவி கங்கிடோபோ கணவரை எழுப்ப முயன்ற போது அவர் அசைவற்று கிடந்தார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பன்ச்சம் ஓரனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் பன்ச்சம் ஓரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com