வட மாநில இளம்பெண் தற்கொலை

வீட்டில் அவரது மூத்த மகள் ரஷ்னாராகாதுன் மட்டும் இருந்துள்ளார்.வீட்டிற்குள் சென்று பார்த்தபோது துப்பட்டாவால் தனது மகள் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வட மாநில இளம்பெண் தற்கொலை
Published on

பெருந்துறை:

மேற்கு வங்க மாநிலம் 24 பர்கானா மாவட்டம், ராமேஸ்வர்பூர் பகுதியை சேர்ந்தவர் ரபியுல்ஷாஜி. இவர் தனது மனைவி தஸ்நாமா, மகள்கள் ரஷ்னாராகாதுன் (வயது 20), ரிஹானாகாதூன், ரூமானாகாதூன் ஆகியோருடன் பெருந்து றையை அடுத்துள்ள பணிக்கம்பாளையம் பகுதியில் குடியிருந்து வருகிறார்.

ரபியுல்ஷாஜி பெருந்துறை பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். மனைவி தஸ்நாமா, மூத்த மகள் ரஷ்னாராகாதுன் 2 பேரும் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் ரஷ்னாராகாதுன் 2 வருடங்களுக்கு முன்பு கொல்கத்தாவை சேர்ந்த ராகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து அவருடன் தங்கி இருந்தார். இதனையடுத்து கொஞ்சம் நாளிலேயே அவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனது தந்தையுடன் குடியிருந்து வந்தார்.

இதனையடுத்து ரபியுல்ஷாஜியின் 2 மகள்கள் மற்றும் மனைவி மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்று இருந்தனர். வீட்டில் அவரது மூத்த மகள் ரஷ்னாராகாதுன் மட்டும் இருந்துள்ளார். ரபியுல்ஷாஜி கட்டிட வேலைக்கு சென்ற விட்டு மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்போட்டு இருந்தது.

தட்டி பார்த்து கதவு திறக்காததால் கம்பியை வைத்து ெநம்பி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது துப்பட்டாவால் தனது மகள் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை கீழே இறக்கி பார்த்தபோது மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தார்.

உடனே அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ரஷ்னாராகாதுன் இறந்து விட்டதாக கூறினார்.

இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com