என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளர்கள்"

    • வெடிபொருட்கள் வெடித்ததில் ஏற்பட்ட அதிர்வால் பாறைகள் உருண்டு விழுந்தன.
    • குவாரியில் பணியில் இருந்த தொழிலாளர்கள் பலர் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

    ஒடிசாவின் தேன்கனல் மாவட்டத்தில் கருங்கல் குவாரி ஒன்று செயல்பட்டு வந்தது.

    இன்று, பாறைகளைத் தகர்க்க வைக்கப்பட்ட வெடிபொருட்கள் வெடித்ததில் ஏற்பட்ட அதிர்வால் பாறைகள் உருண்டு விழுந்தன.

    இந்த விபத்தின் போது குவாரியில் பணியில் இருந்த தொழிலாளர்கள் பலர் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.

    மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.  

    • பாஜக ஆளும் அரியானா மாநிலத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக அனில் விஜ் உள்ளார்.
    • ஆயிரக்கணக்கான நபர்களைப் போலியாகத் தொழிலாளர்களாகப் பதிவு செய்து, அவர்களுக்குப் போலி ஒர்க் ஸ்லிப்கள் வழங்கப்பட்டுள்ளன.

    அரியானா மாநில தொழிலாளர் நலத்துறையில் சுமார் ரூ.1,500 கோடி ஊழல் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாஜக ஆளும் அரியானா மாநிலத்தின் எரிசக்தி, போக்குவரத்து மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக அனில் விஜ் உள்ளார்.

    இந்தியாவில் கட்டுமானத் தொழிலாளர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற வேண்டுமானால், அவர்கள் ஒரு வருடத்தில் குறைந்தது 90 நாட்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும். இதற்கான ஆதாரமே ஒர்க் ஸ்லிப் ஆகும்.

    இந்நிலையில் அரியானாவில் தொழிலாளர் நல வாரியத்தில் இருக்கும் நிதியைப் பெறுவதற்காக, கட்டுமானப் பணியில் ஈடுபடாத ஆயிரக்கணக்கான நபர்களைப் போலியாகத் தொழிலாளர்களாகப் பதிவு செய்து, அவர்களுக்குப் போலி ஒர்க் ஸ்லிப்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதன் மூலம் சுமார் ரூ.1,500 கோடி ரூபாய் நலத்திட்ட நிதி முறைகேடாகக் கையாளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    போலிப் பதிவுகளைக் கண்டறிய அனில் விஜ் உத்தரவிட்டதை அடுத்து அதிகாரிகள் நடத்திய ஆய்வில் பல மாவட்டங்களில் தகுதியற்றவர்களுக்குத் திட்டப் பயன்கள் சென்றடைந்தது தெரியவந்தது.  

    இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த அரியானா முதல்வர் நாயப் சிங் சைனி 3 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார். 

    • தொடர் விலை உயர்வால் வெள்ளி நகைகளும் வாங்க முடியாத நிலை உள்ளதால் ஏழை மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    • வெள்ளி விலை தொடர் உயர்வால் வெள்ளி நகைகளை பொது மக்கள் வாங்குவது கணிசமாக குறைந்துள்ளது.

    சேலம்:

    தங்கத்திற்கு அடுத்த படியாக வெள்ளி கொலுசு உள்பட வெள்ளி நகைகளை வாங்கி பொது மக்கள் அதிக அளவில் அணிந்து வந்தனர். தற்போது வெள்ளியின் விலை படிப்படியாக அதிகரித்து தினசரி புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

    குறிப்பாக நேற்று வெள்ளியின் விலை ஒரு கிலோ ரூ. 2 லட்சத்து 54 ஆயிரமாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் கிலோவுக்கு மேலும் ரூ.20 ஆயிரம் அதிகரித்தது. இதனால் ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ. 2 லட்சத்து 74 ஆயிரமாக அதிகரித்தது. ஒரு கிராம் வெள்ளி விலை 274 ரூபாயாக உயர்ந்து உள்ளது.

    சமீப காலமாக வெள்ளி விலை தினசரி உயர்ந்து வருவதால் தொழில் அதிபர்கள் பலர் வெள்ளியில் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் வெள்ளி விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

    இதில் அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 20 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களிலும் வெள்ளி விலை வேகமாக உயரும் என்று கூறப்படுகிறது. இந்த தொடர் விலை உயர்வால் வெள்ளி நகைகளும் வாங்க முடியாத நிலை உள்ளதால் ஏழை மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    வெள்ளி விலை தொடர் உயர்வால் வெள்ளி நகைகளை பொது மக்கள் வாங்குவது கணிசமாக குறைந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான வெள்ளி பட்டறைகள் புதிய ஆர்டர்கள் வராததால் வேலை இல்லாத நிலையில் களை இழந்து காணப்படுகிறது. மேலும் அங்கு வேலை பார்த்த பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள்.

    • மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    • மற்றவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    உத்தரபிரதேசத்தில் கல் குவாரி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

    சோன்பத்ரா மாவட்டத்தில் ஓப்ராவில் உள்ள கிராமத்தில் உள்ள ஒரு கல் குவாரியில் இன்று இந்த விபத்து நடந்துள்ளது.

    தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

     இடிபாடுகளுக்கு அடியில் ஒரு தொழிலாளியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மற்றவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.  

    • சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை அடைக்கும் பணி நடைபெற்றது.
    • சாலையை சீராக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள நாதல்படுகை கிராமத்துக்கு செல்லும் சாலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கிராமத்தை சூழ்ந்து சாலையையும் அரித்து துண்டித்துவிட்டது.

    மேலும் சாலையில் 1 கி.மீ. தூரத்திற்கு ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.

    இதனையறிந்த பூம்புகார் எம்.எல்.ஏ.வும், தி.மு.க மாவட்ட செயலாளருமான நிவேதா.முருகன் நாதல்படுகை கிராமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சேதமடைந்து துண்டிக்கப்–பட்ட சாலை மேம்படுத்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இதனையடுத்து சாலையை தற்காலிகமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து ஜே.சி.பி எந்திரம் கொண்டு வரப்பட்டு, ஆயிரக்கணக்கான மணல் மூட்டைகள் மற்றும் சவுக்கு கட்டைகள் எடுத்து வரப்பட்டு சாலையின் நடுவில் போட்டு சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை அடைக்கும் பணி நடைபெற்றது.

    கிராமத்துக்கு செல்லும் சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டு விட்டதால் உடனடியாக தற்காலிகமாக சாலையை சீராக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

    இது குறித்து நிவேதா.முருகன் எம்.எல்.ஏ. கூறும்போது:-

    நாதல்படுகை மற்றும் முதலைமேடுதிட்டு கிராமங்களுக்கு செல்லும் சாலை தண்ணீரில் அரித்துச் செல்லப்பட்டு விட்டதால் சாலையை தற்காலிகமாக மேம்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    பின்னர் அரசின் நிதி ஒதுக்கீடு பெற்று நிரந்தரமாக சாலை மேம்படுத்தப்படும் என்றார்.

    அப்போது ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், பி. டி. ஓ. அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பலராமன், பூரணச் சந்திரன், மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்ல சேது ரவிக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் கென்னடி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் உடனிருந்தனர்.

    • சம்பா நடவு பணிகளும் நாற்று பறிக்கும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • வேளாண் கடன்கள் எளிதில் கிடைக்காத நிலை இருந்த போதிலும் உழவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    பூதலூர்:

    பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் குறுவை அறுவடை ஏறக்குறைய நிறைவடைந்து விடும் நிலையில் உள்ளது.

    தாம தமாக நடவு செய்யப்பட்ட குறுவை பயிர்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.

    இது ஒரு புறம் இருக்க பூதலூர் வேளாண்மை வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    ஏரி பாசன பகுதிகளான செங்கிப்பட்டி பகுதியிலும் சில கிராமங்களில் சம்பா நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சம்பா நடவு பணிகளும் நாற்றுப் பறிக்கும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறுவை அறுவடை செய்யப்பட்ட வயல்களில் தாளடி நடவு பணிகளும் மெதுவாக தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    குறுவை அறுவடை செய்யப்பட்ட வயல்களை உழவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

    இன்னும் ஒரு சில நாட்களில் பூதலூர் வேளாண்மை வட்டார பகுதிகளில் முழு வீச்சில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகள் நடைபெறும் என்று தெரிய வருகிறது.

    விவசாயிகள் உரத் தட்டுப்பாடு, கூட்டுறவு சங்கங்களில் வேளாண் கடன்கள் எளிதில் கிடைக்காத நிலை இருந்த போதிலும் உழவுப் பணிகளிலும் வேளாண் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்ற அறிவிப்பு வந்துள்ள நிலையில் அதற்கு முன்னதாக நடவு பணிகளை செய்து விட வேண்டும் என்று விவசாயிகள் வேளாண் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் தலை வாசல் அருகே மணிவிழுந்தானில் ஒரு நூற்பாலை உள்ளது.
    • பெண் ெதாழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி அதிகாரிகளிடம் கூறி கதறி அழுதனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலை வாசல் அருகே மணிவிழுந்தானில் ஒரு நூற்பாலை உள்ளது. இங்கு உள்ளூர் மட்டு மின்றி வடமாநில தொழி லாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர். வடமாநில பெண் தொழிலாளர்கள் சிலர், பெண்கள் பாது காப்புக்கான தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, பணி கடினமாக உள்ளது. ஆலையில் இருக்க விரும்பமில்லை என புகார் கூறியுள்ளனர்.

    இதையடுத்து சேலம் மாவட்ட சமூக நலத்துறை உத்தரவுப்படி வரு வாய்த்துறை அதிகாரிகள் விரைந்து சென்று நூற்பாலையில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பணியாற்றி வந்த ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஓடிசா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பெண் ெதாழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி அதிகாரிகளிடம் கூறி கதறி அழுதனர்.

    இதையடுத்து 35 பெண் தொழிலாளர்களை மீட்டு மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்க ளுக்கான கூலி, கருணைத் தொகை தலா ரூ.10 ஆயிரம் வழங்கினர். இதையடுத்து அவர்கள் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • திருவட்டார், குலசேக ரம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, திற்பரப்பு உள்ளிட்ட பகுதியில் ரப்பர் பால் வெட்டும் தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தொடர் மழையால் குழித்துறை, ஆரல்வாய்மொழி பகுதியில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கி யுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலை நேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் மப்பும் மந்தாரமுமாக காணப்படும்.

    பின்னர் மாலை நேரங் களில் வனத்தில் கருமே கங்கள் சூழ்ந்து மழை பெய்யத்தொடங்குகிறது. குறிப்பாக மேற்கு மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகப்படியான மழை மாலை நேரங்களில் பெய்து வருகிறது.

    இதனால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தொடர் மழையால் பிரதான அணையான பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் ஆறுகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    திருவட்டார், குலசேக ரம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, திற்பரப்பு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் ரப்பர் பால் வெட்டும் தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் உயர்தரமான ரப்பர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.தற்போது தொடர் மழை பெய்து வருவதால் ரப்பர் மரத்தில் இருந்து பால் வடிக்க முடியாமல் தொழிலாளர்கள் அவதிப்ப டுகிறார்கள். ரப்பர் உற்பத்தி செய்யும் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாவட்டத்தில் செங்கல் சூளை அதிக அளவில் உள்ளன. இந்த தொடர் மழையால் குழித்துறை, ஆரல்வாய்மொழி பகுதியில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    • கேரளாவில் இருப்பது போன்று தனி நலவாரியம் அமைக்க வேண்டும்.
    • அடையாள அட்டை வழங்க வேண்டும்

    நாகர்கோவில்:

    தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கேரளா வில் இருப்பது போன்று தனி நலவாரியம் அமைக்க வேண்டும். அடை யாள அட்டை வழங்க வேண்டும் என்பது உட்பட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு இன்று கண்டன ஆர்ப்பா ட்டம் நடந்தது.

    மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கி னார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்க மோகனன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சந்திரபோஸ், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பொன் சோபன ராஜ், மாநில குழு உறுப்பினர்கள் இந்திரா, சித்ரா மற்றும் நிர்வாகிகள் நாகராஜன், பொன் சுந்தர், மாரிமுத்து, பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியு றுத்தி கோஷங்கள் எழுப்ப ப்பட்டன.

    • ஜாம்புவானோடை கந்தபரிச்சான் ஆற்றங்கரையோரங்களில் பனை விதைகள் நடும் பணி.
    • 1000-க்கும் மேற்பட்ட பனை விதைகள் விவசாய தொழிலாளர்கள் மூலம் நடப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு மற்றும் ஜாம்புவானோடை கிராமங்களில் தமிழ்நாடு விவசாய குத்தகைதாரர்கள் பாதுகாப்பு நல சங்கம் சார்பில் பனைவிதை நடும் பணி நடைபெற்றது.

    இதை தமிழ்நாடு விவசாய குத்தகைதாரர்கள் பாதுகாப்பு நல சங்க மாவட்ட தலைவர் துரைஅரசன் தலைமையில் மாநில தலைவர் வழக்கறிஞர் சிறுகளத்தூர் ஜெய்சங்கர் பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தார்.

    இதில் ஆலங்காடு கோட்டகம், குளக்கரை ஆற்றங்கரையோரம் மற்றும் ஜாம்புவானோடை கந்தபரிச்சான் ஆற்றங்கரையோரங்களில் 1000-க்கும் மேற்பட்ட பனை விதைகள் விவசாய தொழிலாளர்கள் மூலம் நடப்பட்டது.

    இதில் ஆலங்காடு கிராமத்தில் ஒன்றிய கவுன்சிலர் மோகன், ஊராட்சி மன்ற தலைவர் பிரவீன்குமார், ஜாம்புவானோடை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன், துணைத்தலைவர் ராமஜெயம், சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் இளையராஜா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இருதயராஜ், கோட்டூர் ஒன்றிய தலைவர் நடராஜன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பல்லடம் பகுதிக்கு எரிவாயு தகன மேடை வேண்டும்.
    • எரிவாயு தகனமேடை அமைக்கவும், தொழிலாளர்களுக்கு, விரோதமாக செயல்படும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

       பல்லடம் : 

    பல்லடத்தில், அனைத்துக் கட்சி கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க.மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். இதில் பல்லடத்தில் தொழிலாளர்களை ஏமாற்றும் நிறுவனம், நகராட்சி எரிவாயு தகன மேடை அமைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டம் துவங்கிய போது இது எரிவாயு தகன மேடை அமைப்பது குறித்த ஆதரவுக் கூட்டம். இதில் மாற்றுக் கருத்து உள்ளவர்கள் வெளியேறலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க, பா.ம.க., இந்து முன்னணி, கிளை நிர்வாகிகள் எழுந்து வெளி நடப்பு செய்தனர். இது குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று அழைத்துவிட்டு, எரிவாயு தகன மேடை ஆதரவுக் கூட்டம் என்று அறிவிப்பது முறையில்லாத செயல், அப்படி இருந்தால் முன்னரே எரிவாயு தகன மேடை ஆதரவு கூட்டம் என்று எங்களிடம் சொல்லி இருந்தால், நாங்கள் வந்திருக்க மாட்டோம், என அவர்கள் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அரசியல் கட்சியினர் பேசுகையில், பல்லடம் பகுதிக்கு எரிவாயு தகன மேடை வேண்டும், மக்களின் ஒத்துழைப்போடு அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏன் எதிர்க்கிறார்கள் என அவர்களிடம் விளக்கம் கேட்டு,எரிவாயு தகனமேடை அமைக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து எரிவாயு தகனமேடை அமைக்கவும், தொழிலாளர்களுக்கு, விரோதமாக செயல்படும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட கலெக்டரை சந்தித்து வலியுறுத்துவது என ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

    • கூட்செட் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு குடிதண்ணீர் மற்றும் கழிவறை வசதி செய்து கொடுக்க வேண்டும் .
    • இஎஸ்ஐ, பிஎப் மற்றும் சட்ட பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி வழங்க வேண்டும்.

    திருப்பூர் : 

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில்கள் நிற்கும் இடங்களில் பிளாட்பாரம் இல்லாததால் சரக்குகளை ஏற்றி , இறக்குவதில் சிரமம் ஏற்படுவதாகவும் , அதனால் சமதளமாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் , கூட்செட் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு குடிதண்ணீர் மற்றும் கழிவறை வசதி செய்து கொடுக்க வேண்டும் .

    அடையாள அட்டையை உடனடியாக வழங்க வேண்டும் , இஎஸ்ஐ, பிஎப் மற்றும் சட்ட பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி வழங்க வேண்டும் , வேலை நேரத்தை அதிகப்படுத்தக் கூடாது , சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ெரயில்வே கூட்செட் சுமைப்பணி தொழிலாளர்கள் ெரயில்வே கூட்செட் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ×