search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெடிவிபத்து"

    • மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
    • மக்கள் தொழிற்சாலை வாயிலுக்கு வெளியே ஓடுவதை பார்க்க முடிந்தது.

    ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில் உள்ள பெரிய தொழில் மையமான தருஹேராவில் உள்ள லைஃப் லாங் நிறுவனத்தில் கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டது.

    இதில், 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

    இதுதொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில், வானத்தில் புகை மூட்டத்துடன் மக்கள் தொழிற்சாலை வாயிலுக்கு வெளியே ஓடுவதை பார்க்க முடிந்தது.

    இதுகுறித்து சிவில் சர்ஜன் டாக்டர் சுரேந்தர் யாதவ் கூறுகையில், " ரேவாரி, தாருஹேராவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்துள்ளது. பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

    சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவருக்கு காயம் தீவிரமாக உள்ள நிலையில் மேலும், ஒரு தீவிர ரோஹ்தக்கிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்" என்றார்.

    • தாய்லாந்தில் பட்டாசு ஆலையில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் 23 தொழிலாளர்கள் தீயில் சிக்கி பலியாகினர்.

    பாங்காக்:

    சீன புத்தாண்டு அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளதால் தாய்லாந்து பட்டாசுகளுக்கு தேவை அதிகம் உள்ளது. இதனால் தாய்லாந்து பட்டாசு ஆலைகள் இறுதிக்கட்ட தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், தாய்லாந்தின் சுபன் பூரி மாகாணத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் நேற்று பிற்பகல் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலை இடிந்து முற்றிலுமாக தரைமட்டமானது. அந்த இடமே கரும்புகையால் சூழப்பட்டது. அப்போது 30 ஊழியர்கள் வரை பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

    தகவலறிந்து தேசிய பேரிடர் தடுப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் 23 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் பலரது உடல்கள் துண்டு துண்டுகளாக சிதறியதால் அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே பலி எண்ணிக்கை உயரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 23 ஊழியர்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மகாராஷ்டிரா வெடி விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • வெடிவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மும்பை:

    மகாராஷ்டி மாநிலம் நாக்பூரில் வெடிபொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சோலார் இன்டஸ்டிரீஸ் என்னும் தொழிற்சாலையில் விபத்து நடந்துள்ளது. பேக்கிங் செய்யும் போது வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த வெடி விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. வெடிவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், நாக்பூர் வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் மந்திரி நிதியுதவி அறிவித்துள்ளார். விரைவில் விபத்து நடைபெற்ற இடத்தைப் பார்வையிட உள்ளேன் என தெரிவித்தார்.

    • பேக்கிங் செய்யும் போது வெடிவிபத்தான ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • வெடிவிபத்து காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகாராஷ்டி மாநிலம் நாக்பூரில் வெடிபொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சோலார் இன்டஸ்டிரீஸ் என்னும் தொழிற்சாலையில் விபத்து நடந்துள்ளது. பேக்கிங் செய்யும் போது வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    முதற்கட்டமாக இந்த வெடி விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. வெடிவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள ரெயின்போ பாலத்தில் கார் வெடித்ததில் 2 பேர் பலியாகினர்.
    • இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள ரெயின்போ பாலம் உள்ளது. ரெயின்போ பாலம் ஒன்டாரியோவை நியூயார்க்குடன் இணைக்கும் 4 எல்லைக் கடப்புகளில் ஒன்றாகும்.

    இந்நிலையில், நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள அமெரிக்கா-கனடா எல்லை சோதனைச் சாவடியில் கார் ஒன்று வந்தது. அந்தக் கார் திடீரென வெடித்ததில் 2 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பாலத்தின் எல்லையில் ஒரு வாகனம் வெடித்த சம்பவம் 'பயங்கரவாத தாக்குதல்' முயற்சியாக இருக்கலாம் என்ற கோணத்தில் எப்.பி.ஐ. விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோகுல் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நயாகரா நீர்வீழ்ச்சியில் உள்ள ரெயின்போ பாலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அதிகாரிகள் நெருக்கமாக கண்காணித்து வருகின்றனர் என பதிவிட்டுள்ளார்.

    • உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி அளிப்பது வாடிக்கையாக நடந்து கொண்டு இருக்கிறது.
    • தீபாவளிப் பண்டிகை வருவதை முன்னிட்டு பட்டாசு தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவிலேயே பட் டாசு உற்பத்தியில் தமிழ்நாடு முதன்மை வகிக்கிறது என்ப தும், தீபாவளிப் பண்டிகை மற்றும் இதர பண்டிகைகளுக்காக தமிழ்நாட்டில் இருந்துதான் பிற மாநிலங்களுக்கு பட்டாசுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன என்பதும், இந்தத் தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் உள்ளன என்பதும் யாவரும் அறிந்த ஒன்றாகும்.

    பட்டாசு தொழிற் சாலைகளில் ஏற்படும் வெடி விபத்துகள் மூலம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி அளிப்பது வாடிக்கையாக நடந்து கொண்டு இருக்கிறது. இது மிகவும் வேதனை அளிக்கும் செயலாகும்.

    தீபாவளிப் பண்டிகை வருவதை முன்னிட்டு பட்டாசு தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அதிகாரிகள் எடுத்துக்கூறி அவர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, இனி வருங்காலங்களில் பட்டாசு தொழிற் சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    • வெடிவிபத்து குறித்து மாவட்ட எஸ்.பி. தலைமையில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்து தருமபுரி மாவட்ட தடயவியல் நிபுணர்கள் நேற்று தடயங்களை சேகரித்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பழையப்பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் நேற்று திடீரென்று வெடிவிபத்து நடந்து 9 பேர் இறந்தனர். இந்த சம்பவத்தால் 15 பேர் படுகாயமடைந்து கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும், வெடிவிபத்தால், பட்டாசு குடோனை சுற்றி இருந்த 5 கட்டிடங்கள் இடிந்து சேதமானது. இதேபோல் அந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகளில் விரிசல் ஏற்பட்டும், சுவர் உடைந்து சேதமானது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரிகள் பழையபேட்டை பகுதியில் விபத்த இடத்தில் சுற்றியுள்ள குடியிருப்பு வீடுகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த வெடிவிபத்து குறித்து மாவட்ட எஸ்.பி. தலைமையில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெடிவிபத்தில் காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு இன்று அமைச்சர் சக்கரபாணி அரசு அறிவித்த நிதிஉதவிக்கான காசோலையை வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    கிருஷ்ணகிரி பழையபேட்டையில் நடந்த பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்து தருமபுரி மாவட்ட தடயவியல் நிபுணர்கள் நேற்று தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து ஆய்வறிக்கை இன்று அவர்கள் தாக்கல் செய்தனர். அதில் இந்த வெடிவிபத்துக்கு ஒட்டலில் உள்ள சிலிண்டர் வெடித்ததால் தான் அருகில் இருந்த பட்டாசு குடோன் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொழிற்சாலையில் திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது.
    • பயங்கரவாத தாக்குதல் அல்ல என்று தம்போவ் கவர்னர் மாக்சிம் யெகோரோவ் தெரிவித்தார்.

    மாஸ்கோ:

    ரஷிய தலைநகர் மாஸ் கோவின் தென் கிழக்கே உள்ள தம்போவ் பகுதியில் வெடிமருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது.

    இதில் 4 தொழிலாளர்கள் பலியானார்கள். 12 பேர் காயமடைந்தனர். வெடிவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இது பயங்கரவாத தாக்குதல் அல்ல என்று தம்போவ் கவர்னர் மாக்சிம் யெகோரோவ் தெரிவித்தார்.

    உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் சில நாட்களாக ரஷியாவின் ஆயுத கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விபத்தில் ஆலையின் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தது, மற்றொன்று சேதமடைந்தது. அருகில் இருக்கும் சில வீடுகள் வெடிவிபத்தால் அதிர்ந்தன.
    • வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்.

    பென்சில்வேனியாவில் வெஸ்ட் ரெடிங் பகுதியில் உள்ள சாக்லேட் தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் ஆர்எம் பால்மர் சாக்லெட் ஆலையில் இந்த வெடி விபத்து நிகழ்ந்தது.

    அதில் ஆலையின் ஒரு கட்டிடம் இடிந்து தரைமட்டமாகி உள்ளது. மற்றொ கட்டிடம் சேதமடைந்தது. அருகில் இருக்கும் சில வீடுகள் வெடி விபத்தால் அதிர்ந்தன.

    இந்த வெடி விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர் என்றும் 5 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் தற்போது இடிபாடுகளுக்குள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறைத் தலைவர் வெய்ன் ஹோல்பென் தெரிவித்தார்.

    • பட்டாசு ஆலையில் வெடிவிபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
    • அதிகமான தொழிலாளர்கள் ஒரே இடத்தில் பணியில் இருந்ததாக தெரிகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள குருவிமலை அடுத்த வளத்தோட்டம் பகுதியில் நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை இருந்தது.

    இங்குள்ள குடோனில், தயாரான பட்டாசுகளை சேமித்து வைப்பது வழக்கம். இங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்த்து உள்ளனர். நேற்று மதியம் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் இருந்த போது திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலை முழுவதும் தீ பரவி அங்கிருந்த வெடிகள், மூலப்பொருட்கள் வெடித்து சிதறின.

    இந்த வெடி விபத்தில் காஞ்சிபுரம் பல்லவன் தெருவை சேர்ந்த பூபதி (வயது 53), பள்ளூரை சேர்ந்த முருகன் (50), குருவிமலையை சேர்ந்த தேவி (34), காஞ்சிபுரத்தை சேர்ந்த சுதர்சன், குருவிமலை முருகன் கோவிலை சேர்ந்த சசிகலா (35), காஞ்சிபுரம் அருகே வளர்த்தோட்டத்தை சேர்ந்த கங்காதரன் (68), அவரது மனைவி விஜயா (38), காஞ்சிபுரத்தை சேர்ந்த கவுதம் (15), குருவிமலையை சேர்ந்த கோட்டீஸ்வரி (48) என மொத்தம் 9 பேர் பலியானார்கள்.

    வெடிகள் வெடித்து சிதறியதில் பட்டாசு ஆலையில் இருந்த 4 கட்டிடங்கள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. பலரது உடல்கள் சிதறி வீசப்பட்டு கிடந்தன. மேலும் வெடிவிபத்தில் உடல் கருகிய 18 பேர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதில் சிலரது நிலைமை மோசமாக உள்ளது. ஒருவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், எம்.எல்.ஏ.க்கள் சுந்தர், எழிலரசன் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    மேலும் வெடிவிபத்தில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

    வெடி விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் நரேந்திரனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    பட்டாசுகள் வெடித்து சிதறியபோது அதன் சத்தம் சுமார் 3 கி.மீட்டர் தூரத்துக்கு கேட்டதாக அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர். வெடிகள் வெடித்த அதிர்வில் குருவிமலை பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. வெடிவிபத்து அதிர்ச்சியில் இருந்து அப்பகுதி மக்கள் இன்னும் மீளவில்லை.

    இதற்கிடையே குருவிமலை, வளத்தோட்டம் பகுதியில் உள்ள 2 ஊராட்சி நடுநிலைப் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    பட்டாசு ஆலையில் வெடிவிபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதிக அளவு பட்டாசு மூலப்பொருட்களை குடோனில் வாங்கி வைத்திருந்ததாக தெரிகிறது.

    தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்க மூலப்பொருட்களை பயன்படுத்தியபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

    இது தொடர்பாக வேலூர் மண்டல தீயணைப்புத்துறை இயக்குனர் சரவணகுமார் கூறும்போது:-

    இந்த பட்டாசு ஆலைக்கு 2024-ம் ஆண்டு வரை உரிமம் உள்ளது. பட்டாசு குடோனில் அதிக வெப்பநிலை, மூலப்பொருட்கள் உராய்வால் ரசாயன மாற்றம் மற்றும் மருந்து பொருட்களை கையாளுதல் தவறு உள்ளிட்டவற்றால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.

    இது பற்றி மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றார்.

    பட்டாசு ஆலையில் அதிகமான தொழிலாளர்கள் ஒரே இடத்தில் பணியில் இருந்ததாக தெரிகிறது. இதனால் வெடிவிபத்து ஏற்பட்ட போது அதிக அளவு உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    • மீட்புப்பணிகள் மற்றும் சிகிச்சை விபரங்கள் குறித்து தருமபுரி கலெக்டர் மூலம் அறிந்தேன்.
    • விபத்தில் கடுமையான காயமடைந்து பென்னாகரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிவலிங்கத்துக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தி உள்ளேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி உள்வட்டம், சிகரலஅள்ளி தரப்பு, நாகதாசம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் இன்று எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் நாகதாசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காவேரியின் மனைவி முனியம்மாள் (வயது 65) மற்றும் சேலம் மாவட்டம் மேச்சேரியைச் சேர்ந்த பூபதியின் மனைவி பழனிம்மாள், (வயது 50) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மீட்புப்பணிகள் மற்றும் சிகிச்சை விபரங்கள் குறித்து தருமபுரி கலெக்டர் மூலம் அறிந்தேன்.

    மேலும், இவ்விபத்தில் கடுமையான காயமடைந்து பென்னாகரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னுமாலையின் மகன் சிவலிங்கத்துக்கு (வயது 52) சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தி உள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், கடும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சிவலிங்கத்துக்கு ஒரு லட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    • வெடிவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    • அருகில் உள்ள வங்கியின் கண்ணாடி உடைந்து விழுந்துள்ளது.

    டாக்கா:

    வங்காளதேச தலைநகர் டாக்காவில் 7 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிவிபத்து ஏற்பட்ட தளத்தில் பலர் தூக்கி வீசப்பட்டனர். குண்டு வெடித்ததுபோன்று பயங்கர சத்தம் கேட்டு அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினர். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வெடிவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அந்த கட்டிடத்தின் தரைத் தளத்தில் சானிடரி பொருட்கள் விற்பனை செய்யும் பல கடைகள் உள்ளன. தரைத்தளத்தில் வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. 

    ×