என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Year"

    • பால்வண்ணநாதபுரம் சகாரா பக்தர்கள் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக கபடி போட்டி நடைபெற்றது.
    • கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் போட்டியினை தொடங்கி வைத்தார்.

    கடையம்:

    கடையம் அருகே பால்வண்ணநாதபுரம் சகாரா பக்தர்கள் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் விழாக்களை கொண்டாடும் வகையில் கபடி போட்டி நடைபெற்றது. போட்டியினை கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தொடங்கி வைத்தார். போட்டியில் பல்வேறு பகுதியினை சேர்ந்த கபடி அணியினர் பங்கேற்றனர்.

    போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. விழாவில் கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகி பரமசிவன், மற்றும் தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

    • திரையரங்குகளில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.
    • புத்தாண்டு கொண்டாட்டங்கள் நள்ளிரவு 1 மணிக்குள் முடிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    பெங்களூரு:

    சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டம் காணவைத்தது. தற்போது இயல்புநிலை திரும்பி வரும் நிலையில், சீனாவில் புதிதாக மீண்டும் பரவும் கொரோனா (பி.எப்.7) கதிகலங்க வைத்துள்ளது.

    இந்த தொற்று இந்தியாவிலும் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறது.

    இந்நிலையில், கர்நாடக மாநில அரசு கொரோனா பரவலைத் தடுக்க புதிய நடைமுறைகளை வெளியிட்டுள்ளது.

    திரையரங்குகளில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

    உணவகங்கள், நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

    புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைத்தும் நள்ளிரவு 1 மணிக்குள் நிறைவடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    • இந்த ஆண்டு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்படும்.
    • உரிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

    சென்னை :

    சென்னையில் ஓட்டல்களில் நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும், வரும் 29-ந்தேதி அன்று அதுதொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்றும் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது:-

    சைபர் குற்றங்கள் தொடர்பான குற்றவாளிகள் 75 சதவீதம் பேர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். நைஜீரியா போன்ற வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இதுதொடர்பான குற்றங்களில் கைதாகி உள்ளனர். சைபர் குற்றங்கள் தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சைபர் குற்றங்களை விசாரிக்க சென்னையில் ஒரு போலீஸ் நிலையம்தான் இருந்தது. தற்போது 5 போலீஸ் நிலையங்கள் உள்ளன.

    குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது, அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் மீது வாகன சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பது தற்போது தினமும் நடந்து வருகிறது. புத்தாண்டு தினம் வரை இந்த நடவடிக்கை தொடரும். புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்களை ஜாலியாக கொண்டாடலாம். ஆனால் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் அந்த கொண்டாட்டங்கள் இருக்க வேண்டும்.

    புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக ஓட்டல்கள் மற்றும் ரிசார்ட்டு போன்றவைகளுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்படும். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நட்சத்திர ஓட்டல்கள் போன்றவற்றில் எந்த அளவுக்கு ஆட்களை அனுமதிக்க முடியுமோ, அந்த அளவுக்குதான் டிக்கெட்டுகள் வழங்க வேண்டும். அளவுக்கு அதிகமாக டிக்கெட்டுகள் வழங்கக்கூடாது. இதனால் தேவை இல்லாத பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. உரிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது, என்பது பற்றி உரிய விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும். புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக ஓட்டல் நிர்வாகத்தினருடன் வரும் 29-ந்தேதி முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. அப்போது புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதிக்கப்படும் நேரம் குறித்தும் முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • முறையாக நம்பர் பிளேட் இல்லாமலும், நம்பர் பிளேட்டுகளில் பெயர்கள் எழுதப்பட்டிருந்த வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர்.
    • ‘பைக்’ ரேஸில் ஈடுபடுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என துணை கமிஷனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டை பகுதியில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் போலீசார் இன்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அபராதம்

    அவ்வழியாக வரும் வாகனங்களில் அரசு விதிமுறைகள்படி நம்பர் பிளேட்டுகள் முறையாக வைக்கப்பட்டுள்ளதா?, அரசு விதிமுறைகள் படி வாகனங்கள் பயன்படுத்தப் படுகிறதா? என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது முறையாக நம்பர் பிளேட் இல்லாமலும், நம்பர் பிளேட்டுகளில் நம்பரை எழுதாமல் பெயர்கள் எழுதப்பட்டிருந்த வாகனங்களை இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதித்தனர்.

    இதேபோல் ஏர்- ஹாரன் உள்ளிட்டவைகள் பயன்படுத்திய வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 4 நாட்களாக இதே போல் நடைபெற்று வரும் வாகன தணிக்கையில் நம்பர் பிளேட் முறையாக வைக்கப்படாத 250 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ப்பட்டு பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    துணை கமிஷனர் எச்சரிக்கை

    இந்த நிலையில் புத்தாண்டு தொடர்பாக மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நெல்லை மாநகர் பகுதிகளில் புத்தாண்டு தினத்தை ஒட்டி 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    விழா காலங்களில் குற்றங்களை தடுக்கும் வகையில் காவல்துறை பாதுகாப்பு அதி கரிக்கப்படும். புத்தாண்டு அன்று 'பைக்' ரேஸில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள், சொகுசு ஓட்டல்கள் மற்றும் ரிசார்ட்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சேலம் ரூரல் டி.எஸ்.பி தையல்நாயகி ஆய்வு செய்தார்.
    • ஹோட்டல் உரிமையாளர்கள், தங்கும் விடுதி அதிபர்கள், மேலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்துவது குறித்து தெரிந்தால் பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க புகார் பெட்டி திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

    ஏற்காடு:

    ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள், சொகுசு ஓட்டல்கள் மற்றும் ரிசார்ட்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சேலம் ரூரல் டி.எஸ்.பி தையல்நாயகி ஆய்வு செய்தார்.

    அப்போது, ஹோட்டல் உரிமையாளர்கள், தங்கும் விடுதி அதிபர்கள், மேலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்துவது குறித்து தெரிந்தால் பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க புகார் பெட்டி திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

    பின்னர் அவர் கூட்டத்தில் பேசியதாவது:-

    மது அருந்திவிட்டு வரும் சுற்றுலா பயணிகளை விடுதிகளில் தங்க வைக்கக் கூடாது. கொண்டாட்டங்களில் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். விடுதி நிர்வாகம் கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்தி கண்காணிக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் அநாகரிகமாக நடந்து கொள்ளாதவாறு விடுதி நிர்வாகம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வேறு மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், கண்டிப்பாக 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.

    நீச்சல் குளம் அமைந்திருக்கும் விடுதிகளில் நீச்சல் குளத்தினை மூடி வைத்திருக்க வேண்டும். இரவு 1 1/2 மணி நேரம் மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற வேண்டும். அந்த நேரத்தில் பட்டாசு வெடிப்பதோ, அதிக சத்தத்துடன் டி.ஜே மியூசிக் வைப்பதோ, இருசக்கர வாகனத்தில் வேகமாக ஓட்டி செல்வதோ இருக்கக் கூடாது. இது போன்ற அறிவுறுத்தல்களை விடுதி நிர்வாகம் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.
    • வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது என தெரிவித்தது.

    சென்னை:

    புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழக காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    31.12.2022 அன்று இரவு பொது இடங்களிலும் சாலைகளிலும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.

    வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது.

    31.12.2022 அன்று மாலை முதல் சுமார் 90,000 காவல்துறையினர், 10,000 ஊர்க்காவல் படையினர் என பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாகன சோதனை தமிழ்நாடு முழுவதும் நடைபெறும். எனவே, நள்ளிரவு, மோட்டார் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

    நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை.

    முதல் நாள் இரவும், புத்தாண்டின் போதும் கடற்கரைகளில் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது.

    மது அருந்தியவர்கள், வாகனம் ஓட்டக் கூடாது. மீறினால் கைது செய்யப்படுவர், அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.

    வழிபாட்டுத் தலங்களுக்கு காவல்துறையால் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு குழப்பம் விளைவிக்க முனைவோர் கைது செய்யப்படுவார்கள்.

    கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது காவல்துறையின் அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

    அசம்பாவிதம் இல்லாத, விபத்தில்லாத புத்தாண்டு கொண்டாட தமிழக காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கக் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 2022-ம் ஆண்டு நாளை மறுநாள் முடிவடைகிறது. இதனால் 2023-ம் ஆண்டை வரவேற்க அனைத்து தரப்பினரும் தயாராகி வருகிறார்கள்.
    • அதன் தொடர்ச்சியாக நாமக்கல் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தை அமைதியாக கொண்டாடும் வகையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடு–கிறார்கள்.

    நாமக்கல்:

    2022-ம் ஆண்டு நாளை மறுநாள் முடிவடைகிறது. இதனால் 2023-ம் ஆண்டை வரவேற்க அனைத்து தரப்பினரும் தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் புத்தாண்டை அசம்பாவிதங்கள் இல்லாமல் கொண்டாட தமிழக அரசும், போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    அதன் தொடர்ச்சியாக நாமக்கல் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தை அமைதியாக கொண்டாடும் வகையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடு–கிறார்கள். 20 இடங்களில் வாகன சோதனை செய்ய போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட உள்ளது.

    31-ந் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட தடை செய்யப்பட்டுள்ளது. அதிவேகமாக வாகன ஓட்டுபவர்கள் கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்க, வழக்கு பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் குறித்து 100-க்கும், போலீஸ் செயலிக்கும் தகவல் தெரிவிக்கலாம். வழிபாட்டு தளங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவ–தாக நாமக்கல் நகர போலீசார் தெரிவித்துள்ளனர். 

    • ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாளை இரவு 1 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.
    • மேலும் பொது இடங்க ளிலும், சாலைகளிலும் கூட்டம் சேர்த்துக் கொண்டு கேக் வெட்டுதல், பட்டாசு வெடித்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீதும், புத்தாண்டு கொண்டாட்டம் சம்பந்தமாக விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் உட்கோட்ட காவல் சரகத்திற்கு உட்பட்ட பரமத்தி வேலூர், பரமத்தி, நல்லூர், வேலகவுண்டன்பட்டி, ஜேடர்பாளையம் ஆகிய காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாளை இரவு 1 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.

    இரு சக்கர வாகனத்தில் தேவையில்லாமல் இளைஞர்கள் சுற்றுதல் கூடாது. மேலும் மது அருந்திவிட்டு மது போதையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீதும், பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிகவேகமாக பைக் ரேஸ் ஓட்டுபவர்களின் மீதும் சட்ட நடவடிக்கை எடுத்து வாகனத்தை பறிமுதல் செய்யப்படும்.

    மேலும் பொது இடங்க ளிலும், சாலைகளிலும் கூட்டம் சேர்த்துக் கொண்டு கேக் வெட்டுதல், பட்டாசு வெடித்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீதும், புத்தாண்டு கொண்டாட்டம் சம்பந்தமாக விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே நள்ளிரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும். மேலும் புத்தாண்டிற்கு தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் பொது மக்கள், தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துவிட்டு செல்லுமாறும் பரமத்தி

    வேலூர் டி.எஸ்பி கலை யரசன் தெரிவித்துள்ளார்.

    • புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மதுரை மாநகரில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
    • இந்த தகவலை போலீஸ் கமிஷனர் அறிவித்துள்ளார்.

    மதுரை

    புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாளை (31-ம் தேதி) இரவு பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாக, அமைதியாக கொண்டாடும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

    அதன்படி நாளை இரவு பொது இடம், சாலைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். குடும்பத்துடன் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடுவது சிறந்தது. நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை.

    புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மதுரை நகரில் சுமார் 1300 போலீசார் மற்றும் 100 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மதுரை மாநகர் முழுவதும் வாகன சோதனைகள் நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் தேவையின்றி மோட்டார் வாகனங்களில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். அதிவேகமாக, கவனக் குறைவுடன் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மதுபானம் அருந்தி விட்டு வாகனம் ஓட்டக்கூடாது. மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.

    அனைத்து முக்கிய வழிபாட்டுத் தலங்களிலும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. வெளியூர் செல்பவர்கள் அருகிலுள்ள காவல் நிலை யத்தில் தகவல் தெரிவித் தால், அந்த பகுதியில் போலீ சாரின் ரோந்துக்கு ஏற்பாடு செய்யப்படும். இதனால் பூட்டிய வீடுகளில் திருட்டு சம்பவம் தவிர்க்கப்படும். கேளிக்கை விடுதிகளில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அனைவரும் போலீசாரின் நிபந்தனைகளை கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

    புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 2 மற்றும் 4 சக்கர ரோந்து வாகனங்கள் மூலம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் கண்காணிக்கப்படுவர். பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் பற்றி, போலீசாரின் கட்டணமில்லா தொலைபேசி எண்; 100-க்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தருவோர் பற்றிய விவரம் ரகசியமாக வைக்கப்படும். அவசர உதவி தேவைப்படுபவர்கள் "காவல் உதவி" என்ற அதிகாரப்பூர்வ செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்"

    மேற்கண்ட தகவலை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • ஆட்டம், பாட்டத்துடன் களைகட்ட உள்ளது
    • புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஓட்டல்கள், விடுதிகள் முழுவதும் அலங்கார தோரணங்கள், வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தற்போது, பகல் நேரங்களில் வெயிலும், இரவு நேரங்களில் குளிரும் நிலவி வருகிறது.

    இந்த காலநிலையை அனுபவிக்க வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை என தொடர் விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் வருகை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் நீலகிரி மாவட்டத்தில் புத்தாண்டு மிகவும் உற்சாகமான நிகழ்வுகள், மறக்கமுடியாத இரவுகள் இனிப்பான செயல்பாடுகளுடன் கொண்டாடப்படும்.

    அந்த வகையில் இந்த ஆண்டும் 2023 புத்தாண்டை வரவேற்கும் விதமாக நீலகிரியில் தற்போது கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கி உள்ளது. புத்தாண்டை கொண்டுவதற்காகவே தமிழகத்தின் பிற மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகளும் இங்கு வருவார்கள். இதனால் ஊட்டியில் உள்ள விடுதிகள், லாட்ஜூகள், ஓட்டல்கள் முழுவதும் நிரம்பி வழிகிறது.

    புத்தாண்டு தினத்தின் முந்தைய தினமான நாளை இரவு ஊட்டியில் உள்ள பெரும்பாலான ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் பல்வேறு விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், பட்டாசு என, புத்தாண்டை அமர்க்களமாக வரவேற்க சுற்றுலா பயணிகளும், உள்ளூர் பொதுமக்களும் தயாராகி வருகிறார்கள். புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஓட்டல்கள், விடுதிகள் முழுவதும் அலங்கார தோரணங்கள், வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    இதனால் இரவில் ஊட்டி நகரமே வண்ண விளக்குகளாலும், அலங்காரத்தினாலும் ஜொலிக்கிறது. இதுதவிர வித, விதமான உணவு வகைகளும் சுற்றுலா பயணிகளுக்கு தயாராகி வருகிறது.

    இதுதவிர ஊட்டியில் உள்ள மாரியம்மன், காந்தல் காசிவிஸ்வநாதர், எல்க்ஹில் முருகன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், குழந்தை ஏசு, புனித மரியன்னை, சி.எஸ்.ஐ., தூய யோவான், மைக்கா மவுண்ட்உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகிறது. இதில் திரளான மக்கள் பங்கேற்க உள்ளனர்.

    இதேபோல் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம், குன்னூர், கோத்திகிரியில் உள்ள பூங்காக்கள், முதுமலை புலிகள் காப்பகம் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து புத்தாண்டை கொண்டாட உள்ளனர்.

    புத்தாண்டையொட்டி சுற்றுலா தலங்கள், முக்கிய சாலைகள் என பல்வேறு இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    கோவை மாவட்டத்திலும் புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். கோவையில் அவினாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலையில் ஏராளமான நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன.

    இந்த ஓட்டல்களில் எல்லாம் புத்தாண்டையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான முன்னேற்பாடு பணிகள் தற்போதே தீவிரமாக நடந்து வருகிறது.

    ஓட்டல்கள் முழுவதும் வண்ண விளக்குகளாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, அந்தபகுதியே வண்ணமயமாக ஜொலிக்கிறது. புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு பல்வேறு விதமான ஆட்டம், பாட்டத்துடன் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோன்று பொள்ளாச்சி, ஆனைகட்டி, ஆனைமலை போன்ற இடங்களில் உள்ள ரிசார்ட்டுகளிலும் புத்தாண்டு கொண்டாடத்திற்கு தயராகி வருகிறார்கள். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதுதவிர அவினாசி சாலை, பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மக்கள் அதிகளவில் கூடி புத்தாண்டை கொண்டாடுவார்கள்.

    அப்போது சாலையில் இளைஞர்கள் கார், மோட்டார் சைக்கிளில் அணிவகுத்து சென்றும், கேக் வெட்டியும் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். இதுதவிர கோவில்களில் சிறப்பு பூஜையும், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடக்கிறது.

    புத்தாண்டை மக்கள் பாதுகாப்புடன் கொண்டாட போலீசாரும் அறிவுறுத்தி உள்ளனர். புத்தாண்டையொட்டி கோவை மாவட்டத்தில் மாநகரில 1500 போலீசாரும் 1500 போலீசாரும் என மாவட்டம் முழுவதும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஆரோவில் அருகில் புதுச்சேரி மாநிலம் உள்ளது. அங்கும் ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளன.
    • சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவில், திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோவில், கல்மர பூங்கா, மொரட்டாண்டி காளி கோவில் போன்றவைகளும் சர்வதேச நகரமான ஆரோவில்லும் உள்ளது. இப்பகுதி அருகில் புதுச்சேரி மாநிலமும் உள்ளது. அங்கும் ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளன. ஆண்டு முழுவதும் வெளிநாடுகள், வெளிமாநிலத்தவர் இவைகளை காண இப்பகுதிகளுக்கு வருவது வழக்கம். கடந்த சில வருடங்களாக கொரோனா பாதிப்பினால் சுற்றுலா தளங்கள் மூடப்பட்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டன.

    இந்நிலையில் நாளை ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. இதனை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் வானூர் அடுத்த கோட்டக்குப்பம் பகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலத்திற்கு குவிந்து வருகின்றனர். குறிப்பாக ஆரோவில் மாத்ரி மந்திர் குளோப்பினை காண ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்துள்ளனர். இதனால் கோட்டக்குப்பம் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பின. மேலும், தந்திராய ன்குப்பம், நடுக்குப்பம், பொம்மையார்பாளையும் கடற்கரைகளுக்கும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இதனால் வழக்கத்தை விட அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். இதை யடுத்து கோட்டக்குப்பம் போலீஸ் துணை சூப்பிரண்டு மித்ரன் தலைமையிலான போலீசார் அப்பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    • காலை நேரங்களில் பனிப்பொழி வின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
    • நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ. 1,500 வரை விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.2,500 முதல் ரூ‌.3,000 வரை விற்பனை ஆகிறது.

    நெல்லை:

    நெல்லையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை பரவலாக மழை பெய்து வந்தது.

    இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்த நிலையில், தற்போது 2 நாட்களாக மழை பெய்யவில்லை. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் அடித்து வருகிறது.

    ஆனாலும் காலை நேரங்களில் பனிப்பொழி வின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். காலை 8 மணி வரையிலும் பனி மூட்டத்துடன் சாலைகள் காணப்படுவதால் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்கள் செல்கின்றன. தொடர்ந்து பனிப்பொழிவு அதிகரித்து வருவதால் மல்லிகை மற்றும் பிச்சி பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் மார்க்கெட்டு களில் அந்த 2 பூக்களின் விலையும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ. 1,500 வரை விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை விற்பனை ஆகிறது.

    அதேபோல் பிச்சி பூக்கள் ஒரு கிலோ ரூ.1,250 வரை நேற்று விற்கப்பட்டது. இன்று அவற்றின் விலை ரூ.2,000 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் ரோஜாப்பூ உள்ளிட்ட மற்ற பூக்களின் விலைகளில் மாற்றம் எதுவும் இல்லை.

    ×