என் மலர்
நீங்கள் தேடியது "switzerland"
- பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டன.
- தகவல் அறிந்து ஹெலிகாட்பர்களில் மீட்புப்படை விரைந்தது.
சுவிட்சர்லாந்தின் வலைஸ் மாகாணத்தில் கோபென்ஸ்டைன் அருகே இன்று காலை பனிச்சரிவு காரணமாக பயணிகள் ரெயில் ஒன்று தடம் புரண்டது.
பிரிக் நகரிலிருந்து புறப்பட்ட ரெயில், ஸ்டாக்ராபன் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மலை உச்சியிலிருந்து சரிந்து விழுந்த பனியில் சிக்கியது.
இதில் ரெயிலின் பல பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டன. விபத்தின்போது ரெயிலில் சுமார் 80 பயணிகள் இருந்தனர்.
தகவல் அறிந்து ஹெலிகாட்பர்களில் வந்த மீட்புப்படையினர் மோசமான வானிலைக்கு மத்தியில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். காயமடைந்த 5 பேருக்குசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- 30 சதவீத வரி அறிவிப்புக்குப் பிறகு எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
- அவர்கள் ஒரு சிறிய நாடு என்றும், வரிகளின் சுமையை அவர்கள் மீது சுமத்த வேண்டாம் என்றும் கூறினார்.
சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 39 சதவீதம் வரி விதித்துள்ளது.
இந்நிலையில் முதலில் 30 சதவீதமே வரி விதித்ததாகவும், ஆனால் கூடுதலாக 9 சதவீதம் வரிவிதிக்க ஒரு காரணம் உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு டிரம்ப் அளித்த பேட்டியில், சுவிட்சர்லாந்து மீதான 30 சதவீத வரி அறிவிப்புக்குப் பிறகு எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
அது முதலில் சுவிஸ் பிரதமர் என்று நினத்தேன். ஆனால் மறுப்புறம் போனில் பேசியது சுவிஸ் கூட்டாட்சி கவுன்சில் உறுப்பினர் கரின் கெல்லர்.
அவர் வரிகளைப் பற்றிக் குறிப்பிட்டு, அவர்கள் ஒரு சிறிய நாடு என்றும், வரிகளின் சுமையை அவர்கள் மீது சுமத்த வேண்டாம் என்றும் கூறினார்.
நீங்கள் ஒரு சிறிய நாடாக இருந்தாலும், எங்களுடன் வர்த்தகத்தில் உங்களுக்கு 42 பில்லியன் டாலர் உபரி உள்ளது நான் விளக்கினேன்.
இருப்பினும், 'நாங்கள் ஒரு சிறிய நாடு' என்று அவர் மீண்டும் மீண்டும் கூறினார். அவர் பேசிய விதம் எனக்கு பிடிக்கவில்லை, அதனால்தான் வரிகளை 30 சதவீதத்திலிருந்து 39 சதவீதமாக உயர்த்தினேன்" என்று கூறியுள்ளார்.
- புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிலர் பட்டாசு வெடித்தனர்.
- இதனால் ஏற்பட்ட தீப்பொறி பறந்து அந்த விடுதி கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது.
பெர்ன்:
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள ஒரு பாரில் நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது, இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அங்கு சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். இதனால் ஏற்பட்ட தீப்பொறி பறந்து அந்த விடுதி கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். படுகாயம் அடைந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மருத்துவமனையில் 7 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதையடுத்து, தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. தீ விபத்து குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
- ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள பாரில் நிகழ்ந்தது.
- தீயணைப்புத் துறையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு வருகின்றனர்.
சுவிட்சர்லாந்தில் சொகுசு விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள ஒரு பாரில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது, இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நள்ளிரவு 1:30 மணியளவில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் உச்சத்தில் இருந்தபோது அந்த பாரில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. 100 கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் சுவிஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் விடுமுறைக்காக அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் என கூறப்படுகிறது.
வெடிப்புக்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை. இருப்பினும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட பட்டாசுகள் காரணமாக இருக்கலாம் எனச் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
- ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள பாரில் நிகழ்ந்தது.
- தீயணைப்புத் துறையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு வருகின்றனர்.
சுவிட்சர்லாந்தில் சொகுசு விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள ஒரு பாரில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது, இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நள்ளிரவு 1:30 மணியளவில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் உச்சத்தில் இருந்தபோது அந்த பாரில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் சுவிஸ் போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் விடுமுறைக்காக அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் என கூறப்படுகிறது.
வெடிப்பு எதனால் ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இசை நிகழ்ச்சியின் போது பயன்படுத்தப்பட்ட பட்டாசுகள் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பபடுகிறது.
- சுவிட்சர்லாந்தின் கருத்துகள் மேலோட்டமான தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டது என்று கூறினார்.
- சுவிட்சர்லாந்து இனவெறி, திட்டமிட்ட பாகுபாடு மற்றும் வெளிநாட்டவர் வெறுப்பு போன்ற அதன் சொந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்
ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்தியா சுவிட்சர்லாந்து தெரிவித்த கருத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
கூட்டத்தில் பேசிய சுவிட்சர்லாந்து பிரதிநிதி, இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பேச்சு சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ஐநாவுக்கான இந்திய தூதரகத்தின் ஆலோசகர் க்ஷிதிஜ் தியாகி, சுவிட்சர்லாந்தின் கருத்துகள் மேலோட்டமான தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டது என்று கூறினார்.
மேலும், "ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் தலைவராக சுவிட்சர்லாந்து, வெளிப்படையாக தவறான மற்றும் இந்தியாவின் யதார்த்தத்திற்கு பொருந்தாத கதைகளால் சபையின் நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க வேண்டும்.
சுவிட்சர்லாந்து இனவெறி, திட்டமிட்ட பாகுபாடு மற்றும் வெளிநாட்டவர் வெறுப்பு போன்ற அதன் சொந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்" என்று தியாகி தெரிவித்தார்.
- சிலர் அங்கேயே பாறைகளில் சிக்கி காணாமல் போவதும், இறப்பதும் அவ்வப்போது நிகழும்
- உடல் பாகங்கள் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவ பிரிவுக்கு அனுப்பப்பட்டன
தென் மத்திய ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மிக நீண்ட, பரந்திருக்கும் மலைத்தொடர் ஆல்ப்ஸ். இது 8 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கியது.
சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிப்பாறைகளை தாண்டி, ஆபத்தான மலையேற்றத்தில் பலர் ஈடுபடுவதுண்டு. இவ்வாறு செல்பவர்களில் ஒரு சிலர் அங்கேயே பாறைகளில் சிக்கி காணாமல் போவதும், இறப்பதும் அவ்வப்போது நிகழும்.
இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில், 37 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஒரு மலையேற்ற வீரரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 12 அன்று சுவிட்சர்லாந்தின் ஜெர்மாட்டில் உள்ள தியோடுல் பனிமலையை கடந்து சென்ற மலையேற்ற வீரர்களால் இந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த உடல் பாகங்கள் அருகிலுள்ள நகரமான சியோனில் உள்ள வலாய்ஸ் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவ பிரிவுக்கு அனுப்பப்பட்டன.
1986 ஆம் ஆண்டு மலையில் காணாமல் போன 38 வயது மலையேற்ற வீரர் ஒருவரின் உடல் பாகங்கள் என்பதை டிஎன்ஏ பகுப்பாய்வு உறுதிப்படுத்தியது.
மலை ஏறியவரின் அடையாளம் மற்றும் அவர் இறந்த சூழ்நிலை குறித்து காவல்துறை கூடுதல் தகவல்கள் ஏதும் வழங்கவில்லை. இருப்பினும், பனிப்பாறைகளின் அடியிலிருந்து கிடைத்ததாக, காணாமல் போன நபருக்கு சொந்தமானதாக சொல்லப்படும் நீண்ட காலணி (ஹைகிங் பூட்) மற்றும் மலையேற்றத்திற்கு பயன்படுத்தப்படும் உலோக கொக்கிகள் (க்ராம்பன்) ஆகியவற்றின் புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டனர்.
"செப்டம்பர் 1986 ஆம் ஆண்டு 38 வயதான ஜெர்மனி நாட்டை சேர்ந்த மலையேற்ற வீரர் ஒருவர், மலையேற்றத்திலிருந்து திரும்பாததால் புகார் பதிவு செய்யப்பட்டு, அவர் 'காணாமல் போனவராக' வழக்கு பதிவு செய்யப்பட்டது. இப்போது கிடைத்திருக்கும் உடல், அவரது உடல்தான் என பரிசோதனையில் உறுதியாகியிருக்கிறது. பனிப்பாறைகள் உருகி குறையும் போது, அவை பல தசாப்தங்களுக்கு முன் காணாமல் போனதாக கருதப்படும் பல மலையேறுபவர்களை குறித்த விவரங்களை அதிகளவில் கொண்டு வருகின்றன " என்றும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.
ஒவ்வொரு கோடை காலத்திலும், ஆல்ப்ஸ் மலையில் பனிப்பாறைகள் உருகும்போது, பல வருடங்களுக்கு முன் காணாமல் போன மனிதர்கள் மற்றும் வேறு பொருட்கள் வெளிப்படுகின்றன.
- புடாபெஸ்ட் நகர போட்டியில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார்
- தற்போது 12-நாள் பயிற்சி முகாமிற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்
ஈட்டி எறிதல் விளையாட்டில், ஒலிம்பிக் போட்டிகள், உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் டயமண்ட் லீக் போட்டிகள் ஆகியவற்றில் முதலிடம் பிடித்து பல கோப்பைகளையும், பதக்கங்களையும் குவித்தவர் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா.
சமீபத்தில் ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட் நகரில் ஈட்டி எறிதல் போட்டியில் 88.17 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்து சாதனை படைத்தார். அவருக்கு 2022-ம் ஆண்டு, ஐரோப்பாவில் உள்ள முக்கிய சுற்றுலா மையமான சுவிட்சர்லாந்து நாட்டில் அந்நாட்டிற்கான 'நட்பு தூதர்' அந்தஸ்து வழங்கப்பட்டது.
நட்பு தூதராக, தனது அனுபவங்களை அந்நாட்டின் விளையாட்டு ஆர்வலர்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் அந்நாட்டில் உள்ள தனித்துவம் வாய்ந்த பனிச்சறுக்கு விளையாட்டுகளை உலகிற்கு அறிமுகப்படுத்தி விளையாட்டு சுற்றுலாவிற்கான முக்கிய நாடாக சுவிட்சர்லாந்து நாட்டை விளம்பரப்படுத்தி வருகிறார்.
தற்போது, சுவிட்சர்லாந்து நாட்டில் 12-நாள் பயிற்சி முகாமிற்காக அங்குள்ள மேக்லிங்கன் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பும், சிறப்பான உபசரிப்பும் வழங்கப்பட்டது.
இது குறித்து சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலாத்துறையில் உலகளாவிய கூட்டமைப்பின் தலைவர் பாஸ்கல் ப்ரின்ஸ் கூறும் போது, "இந்திய விளையாட்டு துறையின் சாதனையாளரான நீரஜ் சோப்ராவை எங்கள் நாட்டின் சார்பாக கொண்டாடுவதில் பெருமை அடைகிறோம். நீரஜ் ஒரு தலைமுறையையே ஊக்கப்படுத்தும் சக்தி படைத்தவர். இளம் தலைமுறையினருக்கு அவர் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக திகழ்கிறார். அவரது உலக சாதனைகளுக்காக அவரை பாராட்டுகிறோம். அவரது எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள்," என்று தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்து சென்றுள்ள நீரஜ் சோப்ரா, அங்குள்ள பனி மலைகளில் பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வமுடன் பங்கேற்று அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள கணக்குகளில் பதிவிட்டு வருகிறார்.
- ஆக்ஸ்ஃபேம் "இன்ஈக்வாலிட்டி இங்க்." எனும் பெயரில் ஆண்டுதோறும் அறிக்கை வெளியிடும்
- இது தொடர்ந்தால் 229 வருடங்களுக்கு வறுமை ஒழியாது என எச்சரிக்கிறது ஆக்ஸ்ஃபேம்
ஜனவரி 15 தொடங்கி 19 வரை, சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் (Davos) நகரில் உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) ஆண்டு கூட்டம் நடைபெறுகிறது.
பொருளாதார ஏற்ற இறக்கங்கள் குறித்து "இன்ஈக்வாலிட்டி இங்க்." (Inequality Inc.) எனும் பெயரில் தங்களது ஆண்டு அறிக்கையை ஆக்ஸ்ஃபேம் (Oxfam) எனும் அமைப்பு, உலக பொருளாதார மன்ற கூட்டத்திற்கு சில தினங்களுக்கு முன் வெளியிடுவது வழக்கம்.
இங்கிலாந்தை சேர்ந்த சுமார் 21 தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய அமைப்பு, ஆக்ஸ்ஃபேம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டு அறிக்கையில் ஆக்ஸ்ஃபேம் தெரிவித்ததாவது:
2020க்கு பிறகு உலகின் பெரும் பணக்காரர்களில் முதல் 5 இடத்தில் உள்ளவர்கள், தங்கள் சொத்து மதிப்பை 2 மடங்கிற்கும் மேல் பெருக்கி உள்ளனர்.
அந்த 5 பேரும் $3.3 ட்ரில்லியன் மதிப்பிற்கு மேலும் பணக்காரர்களாகி உள்ளனர்.
பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault), ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos), வாரன் பஃபே (Warren Buffet), லேரி எலிசன் (Larry Ellison) மற்றும் எலான் மஸ்க் (Elon Musk) ஆகிய அந்த 5 பேரின் நிகர மதிப்பு தற்போது $869 பில்லியன் என அதிகரித்துள்ளது.
கடந்த 4 வருடங்களாக இவர்களின் சொத்து மதிப்பு, மணிக்கு சுமார் $14 மில்லியன் என அதிகரித்து வந்திருக்கிறது.
இதே காலகட்டத்தில் 5 பில்லியன் மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலை தொடர்ந்தால் அடுத்த 229 வருடங்களுக்கு உலகில் வறுமையை ஒழிக்க முடியாது.
இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
"பணியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பது, வரிகளை கட்டாமல் தப்பிப்பது, தனியார்மயத்தை ஊக்குவிப்பது, பருவகால மாற்றங்களை தொடர செய்வது ஆகியவற்றால் அசுரத்தனமான பணக்காரர்களை உருவாக்கத்தான் கார்ப்பரேட் அமைப்புகள் இயங்குகின்றன" என ஆக்ஸ்ஃபேம் செயல் இயக்குனர் அமிதாப் பெஹர் (Amitabh Behar) தெரிவித்தார்.
1792லிருந்து 1822 வரை இங்கிலாந்தில் வாழ்ந்த எழுத்தாளர், பெர்சி பைஷ் ஷெல்லி (Percy B. Shelley) "பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகின்றனர், ஏழைகள் மேலும் ஏழைகளாகின்றனர்" என கூறியதை ஆக்ஸ்ஃபேம் அறிக்கையுடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் பயனர்கள் விவாதிக்கின்றனர்.
- உலக பொருளாதார மன்ற கூட்டம் ஜனவரி 15லிருந்து 19 வரை நடைபெறுகிறது
- பிராந்திய அமைதி இஸ்ரேலின் அமைதியையும் உள்ளடக்கியது என்றார் ஃபர்ஹான்
ஆண்டுதோறும், சுவிட்சர்லாந்தின் டாவோஸ் (Davos) நகரில் உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) கூட்டம் நடைபெறும்.
இவ்வருட கூட்டம் ஜனவரி 15லிருந்து 19 வரை நடைபெறுகிறது. இதில் உலக நாடுகளில் இருந்து தொழில் மற்றும் வர்த்தக துறையை சேர்ந்த அரசாங்க மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் பங்கு பெறுகின்றனர்.
இதில் சவுதி அரேபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான் (Prince Faisal bin Farhan) பங்கேற்றார்.
அவரிடம் இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து கேட்கப்பட்டது.
அப்போது பதிலளித்த அவர் தெரிவித்ததாவது:
பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அந்தஸ்து தருவதில் இஸ்ரேலுடன் ஒருமித்த கருத்து ஏற்பட்டால், இஸ்ரேலை ஒரு தனி நாடாக ஏற்று கொள்ள சவுதி அரேபியாவிற்கு எந்த தயக்கமும் இல்லை.
பிராந்திய அமைதி என்பது இஸ்ரேலுக்கான அமைதியையும் உள்ளடக்கியது என்பதை நாங்கள் ஏற்று கொள்கிறோம். ஆனால், பாலஸ்தீன மக்களுக்கு தனி நாடு கிடைத்து அவர்கள் அமைதியாக வாழும் சூழல் ஏற்பட்டால்தான் அது சாத்தியமாகும்.
அப்போது இஸ்ரேலை தனி நாடாக ஏற்க சவுதி அரேபியா சம்மதிக்கும்.
தற்போது இஸ்ரேல், பிராந்திய அமைதியையும், பாதுகாப்பையும் ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
அப்பகுதியில் பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் வளமான எதிர்காலம் உருவாக அமைதிதான் ஒரே வழி. போர் நிறுத்தமே அமைதிக்கான முதல் படி.
அதற்கு நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து முயற்சிக்கிறோம்.
இவ்வாறு ஃபைசல் கூறினார்.
பெரும்பாலும் சன்னி பிரிவு இஸ்லாமியர்கள் நிறைந்த சவுதி அரேபியா, அரபு நாடுகளிடையே வலிமை வாய்ந்த நாடாக கருதப்படுகிறது.
கடந்த வருடம், பிராந்திய அமைதி ஏற்படும் வகையில் இஸ்ரேலுடன், சவுதி அரேபியா ஒரு ஒப்பந்தம் செய்ய இருந்தது.
ஆனால், அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து அமைதிக்கான சூழல் மாறி விட்டது.
- ஹங்கேரி அணிக்கு எதிராக 3-1 என சுவிட்சர்லாந்து அபார வெற்றி.
- ஸ்காட்லாந்து அணி போட்டியில் முன்னணி வகித்தது.
ஜெர்மனியில் நடைபெற்று வரும் யூரோ கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டயில் ஸ்காட்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. முன்னதாக ஹங்கேரி அணிக்கு எதிரான போட்டியில் 3-1 என்ற அபார வெற்றியை பெற்ற சுவிட்சர்லாந்து, இந்த போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் ஆடியது.
மறுபுறம் ஸ்காட்லாந்து அணியும் வெற்றி முனைப்பில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. அந்த வகையில் ஸ்காட் மெக்டொமினே அடித்த கோல் காரணமாக ஸ்காட்லாந்து அணி போட்டியில் முன்னணி வகித்தது.
இதைத் தொடர்ந்து பதில் கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரம் காட்டிய சுவிட்சர்லாந்து அணிக்கு ஷகிரி 20 யார்ட்களில் இருந்து அடித்த ஷாட் கோலாக மாறியது. இதனால் போட்டியில் இரு அணிகளும் ஒரு கோல் அடித்து சமநிலையில இருந்தன.
இதைத் தொடர்ந்து இரு அணி வீரர்களும் இன்னொரு கோல் அடித்து முன்னிலை பெற முனைப்பு காட்டினர். எனினும், போட்டி முடிவில் 1-1 என்ற வகையில் போட்டி சமனில் முடிந்தது.
- யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைப்பெற்று வருகிறது.
- நேற்று ஜெர்மனி அணி மற்றும் சுவிட்சர்லாந்து அணியும் மோதின.
யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைப்பெற்று வருகிறது. நேற்று ஜெர்மனி அணி மற்றும் சுவிட்சர்லாந்து அணியும் மோதின. இரண்டு அணிகளும் தரவரிசை பட்டியலில் கடைசியில் இருந்ததால் எந்த அணி வெற்றி பெறும் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்தது.
தரவரிசை பட்டியலில் ஜெர்மனி அணி 6 புள்ளிகளிலும், சுவிட்சர்லாந்து அணி 4 புள்ளிகளிலும் இருப்பது குறிப்பிடத்தக்கத்து. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் ஆதிக்கம் செலுத்தி விளையாடினர். ஆட்ட முடிவில் இரு அணியும் தலா 1 கோல் எடுத்ததால் போட்டி டிராவில் முடிந்தது. இதனால் தரவரிசை பட்டியலில் ஜெர்மனி சுவிட்சர்லாந்து அணியைவிட முன்னிலையில் இருக்கிறது.






