search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Billionaires"

    • லேண்ட்மார்க் நிறுவனத்தின் சிஇஓவாக பதவி வகித்து வருபவர் ரேணுகா ஜக்தியானி.
    • போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரேணுகா ஜக்தியானி இடம்பிடித்துள்ளார்.

    வாஷிங்டன்:

    லேண்ட்மார்க் நிறுவனத்தின் சிஇஓ ரேணுகா ஜக்தியானி. இந்த நிறுவனத்தை அவரது கணவர் மிக்கி ஜக்தியாணி தொடங்கினார்.

    2023 மே மாதம் கணவர் இறந்த பிறகு சி.இ.ஓ. பதவிக்கு வந்தார் ரேணுகா. தற்போது இந்த நிறுவனத்தில் தற்போது 50,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், அமெரிக்காவின் போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவின் ரேணுகா ஜக்தியானி இடம்பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 4.8 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

    மேலும், போர்ப்ஸ் பட்டியலில் இந்தாண்டு இந்தியாவில் இருந்து மேலும் 25 பேர் கோடீஸ்வரர்கள் ஆக இணைந்துள்ளனர்.

    ரேணுகா ஜக்தியானி 2007-ம் ஆண்டு ஆசியாவின் சிறந்த பெண் தொழிலதிபர் விருது பெற்றார். 2012-ல் அரபு நாடுகளின் தொழில்கூட்டமைப்பின் சிறந்த பெண் தொழிலதிபர் விருதையும் பெற்ற அவர், 2014-ல் உலக தொழில்முனைவோர் அமைப்பின் சிறந்த தொழில்முனைவோர் விருதையும் பெற்றுள்ளார்.

    • ஆக்ஸ்ஃபேம் "இன்ஈக்வாலிட்டி இங்க்." எனும் பெயரில் ஆண்டுதோறும் அறிக்கை வெளியிடும்
    • இது தொடர்ந்தால் 229 வருடங்களுக்கு வறுமை ஒழியாது என எச்சரிக்கிறது ஆக்ஸ்ஃபேம்

    ஜனவரி 15 தொடங்கி 19 வரை, சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் (Davos) நகரில் உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) ஆண்டு கூட்டம் நடைபெறுகிறது.

    பொருளாதார ஏற்ற இறக்கங்கள் குறித்து "இன்ஈக்வாலிட்டி இங்க்." (Inequality Inc.) எனும் பெயரில் தங்களது ஆண்டு அறிக்கையை ஆக்ஸ்ஃபேம் (Oxfam) எனும் அமைப்பு, உலக பொருளாதார மன்ற கூட்டத்திற்கு சில தினங்களுக்கு முன் வெளியிடுவது வழக்கம்.

    இங்கிலாந்தை சேர்ந்த சுமார் 21 தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய அமைப்பு, ஆக்ஸ்ஃபேம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாண்டு அறிக்கையில் ஆக்ஸ்ஃபேம் தெரிவித்ததாவது:

    2020க்கு பிறகு உலகின் பெரும் பணக்காரர்களில் முதல் 5 இடத்தில் உள்ளவர்கள், தங்கள் சொத்து மதிப்பை 2 மடங்கிற்கும் மேல் பெருக்கி உள்ளனர்.

    அந்த 5 பேரும் $3.3 ட்ரில்லியன் மதிப்பிற்கு மேலும் பணக்காரர்களாகி உள்ளனர்.

    பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault), ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos), வாரன் பஃபே (Warren Buffet), லேரி எலிசன் (Larry Ellison) மற்றும் எலான் மஸ்க் (Elon Musk) ஆகிய அந்த 5 பேரின் நிகர மதிப்பு தற்போது $869 பில்லியன் என அதிகரித்துள்ளது.

    கடந்த 4 வருடங்களாக இவர்களின் சொத்து மதிப்பு, மணிக்கு சுமார் $14 மில்லியன் என அதிகரித்து வந்திருக்கிறது.

    இதே காலகட்டத்தில் 5 பில்லியன் மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.

    இந்நிலை தொடர்ந்தால் அடுத்த 229 வருடங்களுக்கு உலகில் வறுமையை ஒழிக்க முடியாது.

    இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

    "பணியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பது, வரிகளை கட்டாமல் தப்பிப்பது, தனியார்மயத்தை ஊக்குவிப்பது, பருவகால மாற்றங்களை தொடர செய்வது ஆகியவற்றால் அசுரத்தனமான பணக்காரர்களை உருவாக்கத்தான் கார்ப்பரேட் அமைப்புகள் இயங்குகின்றன" என ஆக்ஸ்ஃபேம் செயல் இயக்குனர் அமிதாப் பெஹர் (Amitabh Behar) தெரிவித்தார்.

    1792லிருந்து 1822 வரை இங்கிலாந்தில் வாழ்ந்த எழுத்தாளர், பெர்சி பைஷ் ஷெல்லி (Percy B. Shelley) "பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகின்றனர், ஏழைகள் மேலும் ஏழைகளாகின்றனர்" என கூறியதை ஆக்ஸ்ஃபேம் அறிக்கையுடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் பயனர்கள் விவாதிக்கின்றனர்.

    பிரதமர் மோடியின் ஆட்சி கோடீஸ்வரர்களின் ஆட்சியாக உள்ளது என்று வேதாரண்யத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திருநாவுக்கரசர் பேசினார். #Congress #Thirunavukkarasar #Modi
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் நாகை தெற்கு மாவட்ட காங். செயல் வீரர்கள் கூட்டம் முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-

    காவிரி மேலாண்மை வாரியத்தில் உறுப்பினர் நியமனம் செய்ய கர்நாடகாவை தமிழக அரசு தான் முனைப்போடு முன்னின்று செயல்பட வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்களுக்கு தீர்வு காணாமல் பாசிச போக்கை கடைப்பிடிப்பது கண்டிக்கத்தக்கது.

    தற்போது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. 35 லட்சம் உறுப்பினர் கொண்டதை 50 லட்சமாக உயர்த்த மாவட்ட, நகர, பேரூர் தலைவர்கள் பாடுபட வேண்டும். தமிழக காங்கிரசில் காலியாக உள்ள பொறுப்புகளுக்கு உரிய நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மாவட்ட, மாநில, நகர அளவில் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    சாதி, மத பேதங்களை கடந்த கட்சி காங்கிரஸ் கட்சியாகும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அந்த கட்சியில் சூழ்நிலை சரியில்லை. ஓ.பி.எஸ். இ.பி.எஸ். அணிகள் ஆட்சி இருக்கும் வரைதான். தற்போது மாமா, மாப்பிள்ளை (திவாகரன், தினகரன்) கட்சிகளும் புதிதாக கிளம்பியுள்ளது. அனைவரும் அ.தி.மு.க.வை தோற்றுவித்த எம்.ஜி.ஆரை மறந்து விட்டனர். எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் போன்ற ஒரு சிலரை தவிர சினிமாவில் இருந்து வந்த யாரும் முதல்வராக முடியாது.

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலைக்கு பின்னர் நடந்த தேர்தலில் (1991) காங்கிரஸ் தனித்து நின்றிருந்தால் ஆட்சியை பிடித்திருக்கும். 50 ஆண்டுகளுக்கு பிறகும் காங்கிரஸ் கட்சி வலுவாகதான் உள்ளது. கட்சிக்கு குளுக்கோஸ் ஏற்ற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். கட்சி தெம்பாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி வரவேண்டும் என்ற இலக்கோடு கட்சித் தலைவர்கள் பணியாற்ற வேண்டும். தூய்மையான ஆட்சி நடத்திய காமராஜர் ஆட்சியை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்பதில் தவறில்லை. தற்போதைய பிரதமர் மோடி பல்வேறு பொய்களை சொல்லி ஆட்சியை பிடித்துள்ளார். அவரது பொய்யை நம்பி மக்கள் ஓட்டு போட்டு ஏமாந்து விட்டனர். மோடியின் ஆட்சி கோடீஸ்வரர்களின் ஆட்சியாக உள்ளது. வரும் தேர்தலில் மோடிக்கு பிறகு நிலையான ஆட்சியை தரக்கூடியவர் ராகுல் தான்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #Thirunavukkarasar #Modi
    ×