என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்க் ஜுக்கர்பெர்க்"

    • புதிதாக ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்ற இலக்கு இருந்து கொண்டே இருந்தது.
    • பெருநிறுவன வாடிக்கையாளர்களிடையே பிரபலமாகி வெற்றிப்பெற தற்போது புதிதாக ரூ.3 ஆயிரத்து 100 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளது.

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் ஹோசேவில் உள்ள பள்ளியில் படித்தவர்கள் சூர்யா மிதா (வயது 22), ஆதர்ஷ் ஹைரேமத் (22). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களான இவர்களுடன் அமெரிக்காவை சேர்ந்த பிரெண்டன் பூடி (22) என்பவரும் படித்தார்.

    பள்ளியில் இருந்தே நல்ல நண்பர்களாக இருந்த இவர்களுக்கு சிறுவயதிலேயே தொழில் தொடங்கி கோடீஸ்வரர்களாக வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. அந்த கனவை நனவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

    இதனிடையே ஆதர்ஷ்சுக்கு பிரபல ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படிக்கவும், சூர்யா, பிரெண்டனுக்கு ஜார்ஜ்டவுண் பல்கலைக்கழகத்தில் படிக்கவும் வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும் தற்போதைய தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் அளவுக்கு திறன் வாய்ந்த அவர்கள் புதிதாக ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்ற இலக்கு இருந்து கொண்டே இருந்தது.

    இந்தநிலையில் அவர்கள் படித்து கொண்டிருக்கும் போதே சிலிக்கான் பள்ளத்தாக்கில் செயல்படும் மிகப்பெரிய நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்புக்கு தேவையான மென்பொருள் உரையாடு ஏ.ஐ.செயலியான 'மெட்கோர்'ரை உருவாக்கினர்.

    இது பெருநிறுவன வாடிக்கையாளர்களிடையே பிரபலமாகி வெற்றிப்பெற தற்போது புதிதாக ரூ.3 ஆயிரத்து 100 கோடி (350 பில்லியன் டாலர்கள்) முதலீட்டை ஈர்த்துள்ளது. இதனால் அந்த மெட்கோர் நிறுவனத்தின் தலா 22 சதவீத பங்குகளை கொண்டுள்ள சூர்யா மிதா, ஆதர்ஷ் ஹைரேமத் மற்றும் பிரெண்டன் பூடி ஆகியோர் ஒரே இரவில் கோடீஸ்வரர்களாகிவிட்டனர். இதன்மூலம் சுயதொழில் மூலமாக கோடீஸ்வரர்கள் ஆன பட்டியலில் முதலிடத்தில் இருந்த 'பேஸ்புக்' நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் சாதனையை இவர்கள் முறியடித்தனர்.

    • பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் சில மணிநேரங்கள் 2 ஆம் இடத்தில் இருந்தார்.
    • 384 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் மஸ்க் மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.

    ப்ளூம்பர்க் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி, ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எல்லிசன் முதலிடம் பிடித்து அசத்தினார். ஆனால் அடுத்த சில மணிநேரங்களில் எலான் மஸ்க் மீண்டும் முதல் இடம் பிடித்தார்.

    ஆரக்கிள் நிறுவன பங்குகளில் திடீர் உயர்வால் உலக பணக்காரர்களின் பட்டியலில் சில மணிநேரம் லேரி எல்லிசன் முதலிடம் பிடித்திருந்தார்.

    தற்போது 384 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் மஸ்க் தன்னுடைய முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

    383 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் லேரி எல்லிசன் 2 ஆம் இடம் பிடித்துள்ளார். 264 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் 3 ஆம் இடமும் 252 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் 4 ஆம் இடம் பிடித்துள்ளார்.

    • செனட்டர் ஜோஷ் ஹாவ்லி, ஜுக்கர்பெர்கிடம் "மன்னிப்பு கேட்பீர்களா?" என கேட்டார்
    • டிக்டாக், ஸ்னாப், எக்ஸ் மற்றும் டிஸ்கார்ட் நிறுவனங்களும் விசாரணை வளையத்தில் உள்ளன

    உலகின் முன்னணி சமுக வலைதளமான இன்ஸ்டாகிராம் மற்றும் மெட்டா (முன்னர் ஃபேஸ்புக்) நிறுவனர், மார்க் ஜுக்கர்பெர்க் (39).

    நேற்று, சமூக வலைதளங்களில் வெளியாகும் உள்ளடக்கங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் தாக்கம் மற்றும் குழந்தைகள் மீதான தாக்குதல் சம்பந்தமான வீடியோக்கள் குறித்து அந்நிறுவனங்களின் மீது பலர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளின் மீது அமெரிக்க செனட் விசாரணை நடத்தியது.

    இதில் ஜுக்கர்பெர்க் நேரில் பங்கேற்று தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார்.

    விசாரணை தொடங்கியதும் ஊடகங்களில் குழந்தைகள் மீதான தாக்குதல் குறித்த வீடியோவை விசாரணைக்குழு ஒளிபரப்பியது. இதில் பல உயிரிழப்பு சம்பவங்கள் குறித்தும் நேரடியாக கேள்விகள் கேட்கப்பட்டன.


    குடியரசு கட்சியின் செனட்டர் ஜோஷ் ஹாவ்லி (Josh Hawley), ஜுக்கர்பெர்கை நோக்கி, "உங்கள் வலைதள உள்ளடக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்பீர்களா?" என கேட்டார்.

    அப்போது, ஜுக்கர்பெர்க் எழுந்து நின்று கொண்டு அக்குடும்பத்தினரை நோக்கி பேசினார்.

    அவர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

    நீங்கள் அனைவரும் அனுபவித்த கொடுமையான துன்பங்களுக்கு நான் வருந்துகிறேன். உங்கள் குடும்பங்கள் அனுபவித்த துயரங்கள் வேறு எவருக்கும் வர கூடாது. என்னை மன்னியுங்கள்.

    இவ்வாறு ஜுக்கர்பெர்க் கூறினார்.

    சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்த நிறுவனங்கள் பொறுப்பேற்கும் வகையில் ஒரு சட்டம் வரையறுக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக அமெரிக்க அரசு முயன்று வருகிறது.

    இது குறித்து பல வலைதளங்களின் நிறுவனர்கள் செனட் சபைக்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் விவாதம் நடத்தி கருத்துகள் கேட்கப்படுகின்றன.


    மெட்டா அதிபர் மட்டுமின்றி, டிக்டாக், ஸ்னாப், எக்ஸ் மற்றும் டிஸ்கார்ட் ஆகிய நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் செனட் சபை விசாரணையில் பங்கேற்றனர்.

    அவர்கள் செனட்டின் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி உறுப்பினர்களால் சுமார் 4 மணி நேரங்களுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டனர்.

    • மார்க்ஜுக்கர்பெர்க் பேஸ்புக் தளத்தில் முதலில் வந்தவர்.
    • 4-வது பழமையான கணக்காக ஜுக்கர்பெர்க்கின் கணக்கு உள்ளது.

    பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற செயலிகளின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க்ஜுக்கர்பெர்க் அவ்வப்போது சமூக வலைதளத்தில் பயனர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.

    அப்போது ஒரு பயனர் மார்க்ஜூக்கர்பெர்க்கிடம் நீங்கள் முதல் பேஸ்புக் கணக்கை உருவாக்க பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரி எது என்று கேட்டார். அதற்கு மார்க்ஜூக்கர்பெர்க் அளித்த பதிலில், 2004-ம் ஆண்டில் பேஸ்புக்கில் முதல் கணக்கை பதிவு செய்ய 'mzuckerb@fas.harvard.edu' என்ற மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தியதாக கூறினார்.

    மார்க்ஜுக்கர்பெர்க் பேஸ்புக் தளத்தில் முதலில் வந்தவர். ஆனால் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கிய முதல் நபர் அல்ல. அவருக்கு முன்பே 3 ஐ.டி.கள் உருவாக்கப்பட்டன. அவை அனைத்தும் சோதனைக்காக ஒதுக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்டன.

    இதன்படி பேஸ்புக்கில் 4-வது பழமையான கணக்காக ஜுக்கர்பெர்க்கின் கணக்கு உள்ளது. 5-வது மற்றும் 6-வது கணக்குகள் ஜுக்கர்பெர்க்குடன் இணைந்து பேஸ்புக்கை தொடங்கிய இணை நிறுவனர்களுடையது ஆகும். 

    • அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ், டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கடந்த தேர்தலின்போது தனக்கு எதிராக மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி சதி செய்ததாக டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுகிறார்.

    இந்த தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதலாவது கறுப்பின மற்றும் ஆசிய அமெரிக்க பெண் என்ற வரலாற்று சாதனையை கமலா ஹாரிஸ் படைத்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ், டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் மெட்டா மோசடி செய்தால் மார்க் ஜுக்கர்பெர்க் தனது வாழ்க்கையை சிறையில் கழிப்பார் என்று வரவிருக்கும் சேவ் அமெரிக்கா என்ற புத்தகத்தில் டிரம்ப் எழுதி உள்ளார்.

    கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது தனக்கு எதிராக மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் சதி செய்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார்.

    இந்த முறை அவர் சட்டவிரோதமாக ஏதாவது செய்தால், 2024 ஜனாதிபதி தேர்தலில் ஏமாற்றும் மற்றவர்களைப் போலவே, அவர் தனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிப்பார் என்று டிரம்ப் தனது வரவிருக்கும் சேவ் அமெரிக்கா என்ற புத்தகத்தில் எழுதி உள்ளார்.

    அதில் மார்க் ஜுக்கர்பெர்க் தனக்கு எதிராக பேஸ்புக்கை வழிநடத்தியதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

    • உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டது.
    • இதில் மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் 2வது இடத்திற்கு முன்னேறினார்.

    வாஷிங்டன்:

    உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் ஒவ்வொரு வாரமும் வெளியிட்டு வருகிறது. கடந்த வாரம் வெளியான பட்டியலில் டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ. எலான் மஸ்க் முதலிடத்தில் இருந்தார்

    இந்நிலையில், இந்த வாரம் வெளியான பட்டியலிலும் எலான் மஸ்க் 256 பில்லியன் டாலருடன் முதலிடத்தில் உள்ளார்.

    இரண்டாவது இடத்திற்கு அமெரிக்காவைச் சேர்ந்த மெட்டா நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. மார்க் ஜுக்கர்பெர்க் முன்னேறினார். அவரது சொத்து மதிப்பு 206 பில்லியன் டாலர்களுடன் உள்ளார்.

    கடந்த சில ஆண்டுகளில் , சமூக வலைதளங்களில் அதிகம் வளர்ந்த நிறுவனமாக மெட்டா உருவெடுத்து உள்ளது. மாதந்தோறும் 30 கோடி பேர் இதனை பயன்படுத்தி வருகின்றனர். உலகின் 7 வது பெரிய கார்பரேட்டாக இந்த நிறுவனம் உருவெடுத்து உள்ளது.

    பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, பின்னர் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகியவற்றை கையகப்படுத்தியது.

    ஏற்கனவே 2-வது இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் இம்முறை 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார். அவரது சொத்து மதிப்பு 205 பில்லியன் டாலர்கள். 4வது இடத்தில் பிரான்சின் பெர்னார்ட் அர்னால்ட்- 193 பில்லியன் டாலர் ஆகும்.

    5 முதல் 10-வது இடம் வரை அமெரிக்க கோடீஸ்வரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

    • வீடியோவின் இறுதியில் அவரது மகள் தனது வண்ணம் தீட்டப்பட்ட நகங்களை காட்டி அழகாக இருப்பதாக கூறுகிறார்.
    • வீடியோ இணையத்தில் வெளியாகி ஒரே நாளில் 6½ லட்சம் பேரால் ரசிக்கப்பட்டு காட்டுத்தீபோல் இணையத்தில் பரவுகிறது.

    உலக பணக்காரர்களில் ஒருவரும் சமூக வலைத்தளமான 'பேஸ்புக்' நிறுவனத்தின் தலைவருமானவர் மார்க் ஜுக்கர்பெர்க். ஆசிய வம்சாவளியான பிரிசில்லா சான் என்பவருடன் இவருக்கு திருமணமான நிலையில் மாக்சிமா, ஆகஸ்டு, ஆரேலியா என 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    தனது பரபரப்பான அலுவல்களுக்கு மத்தியிலும் புதிய திறன்களை கற்று கொள்வது மட்டுமின்றி குடும்பத்துடனும் நேரத்தை செலவிடுவதை ஜகர்பர்க் வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில் தன்னுடைய மகள்களில் ஒருவரை ஜுக்கர்பெர்க் அழகுப்படுத்துவது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் தனது மகளின் கைவிரல் நகங்களுக்கு வெவ்வெறு வண்ணங்களில் 'நகப்பூச்சு' பூசி அழகுப்படுத்துகிறார். வீடியோவின் இறுதியில் அவரது மகள் தனது வண்ணம் தீட்டப்பட்ட நகங்களை காட்டி அழகாக இருப்பதாக கூறுகிறார்.

    இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ஒரே நாளில் 6½ லட்சம் பேரால் ரசிக்கப்பட்டு காட்டுத்தீபோல் இணையத்தில் பரவுகிறது.

    • பல்வேறு நாடுகளில் நாங்கள் உடன்படாத சட்டங்கள் உள்ளன
    • நான் பாகிஸ்தானுக்குச் செல்லப் போவதில்லை.

    மத நிந்தனையில் ஈடுப்பட்டதற்காக கூறி பாகிஸ்தானில் தனக்கு மரண தண்டனை விதிக்கும் நிலை உருவானதாக மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

    மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் சமூக ஊடகமான பேஸ்புக்கில் யாரோ ஒருவரின் மத நிந்தனை பதிவுக்காக தன் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி நடந்தாக அவர் தெரிவித்துள்ளார்.

    பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மார்க் ஜுக்கர்பெர்க் பேசியதாவது, "பல்வேறு நாடுகளில் நாங்கள் உடன்படாத சட்டங்கள் உள்ளன. உதாரணமாக, பாகிஸ்தானில் ஒருவர் எனக்கு மரண தண்டனை பெற்றுத் தர முயன்றார்.

    பேஸ்புக்கில் ஒரு நபர்  நபிகள் நாயகத்தின் உருவம் என்று ஒன்றை வரைந்து பதிவிட்டார். அது தங்கள் கலாச்சாரத்தில் தெய்வ நிந்தனை என கூறி என் மீது வழக்குத் தொடரப்பட்டது. நான் பாகிஸ்தானுக்கு செல்லப் போவதில்லை, எனவே நான் அதைப் பற்றி அவ்வளவு கவலைப்படவில்லை" என்று தெரிவித்தார்.

    பல்வேறு நாடுகளில் உள்ளூர் விதிமுறைகள் மற்றும் கலாச்சார விழுமியங்களை மதித்து நடந்தும் அதே நேரம் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்வதும் சவாலானது என்று அவர் மேலும் .தெரிவித்தார். 

    ×