search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jeff Bezos"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 197.7 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
    • ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 200.3 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

    உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனரும், தலைவருமான எலான் மஸ்க் முதல் இடத்தை இழந்துள்ளார். நேற்று பங்குச் சந்தையில் டெஸ்லா நிறுவனத்தின் பங்கு 7.2 சதவீதம் சரிவை சந்தித்த நிலையில் அவரின் நிகர சொந்த மதிப்பு 197.7 பில்லியன் அமெரிக்கா டாலராக குறைந்துள்ளது.

    இதனால் அமேசான்  நிறுவனர் பெசோஸ் 200.3 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    60 வயதாகும் பெசோஸ் ப்ளூம்பெர்க்கின் தரவரிசையில் முதன்முறையாக உலக கோடீஸ்வரரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    ஒரு கட்டத்தில் எலான் மஸ்க்- பெசோஸ் இடையிலான சொத்து மதிப்பு வித்தியாசம் 142 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

    2022-ல் இருந்து ஏறக்குறைய அமேசானின் பங்குகள் இரண்டு மடங்கு அதிகரித்தது. டெஸ்லாவின் பங்கு 2021-ல் அதன் உச்சத்தில் இருந்து சுமார் 50 சதவீதம் அளவிற்கு குறைந்ததாக கூறப்படுகிறது. இந்த பங்கு சந்தையின் விளைவு காரணமாக அமேசான் டாம் காம் நிறுவனர் பெசோஸ் தற்போது நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    ஷாங்காயில் இருந்து ஏற்றுமதியாகும் டெஸ்லா காரின் எண்ணிக்கை கடந்த ஓராண்டாக குறைந்து வந்த காரணத்தால் பங்கு சந்தையில் சரிவை கண்டுள்ளது. அதேவேளையில் கொரோனா தொடங்கிய காலத்தில் இருந்து ஆன்லைன் விற்பனையில் அபரித வளர்ச்சியை பெற்றுள்ளது.

    • கடந்த வருடம், புளோரிடா மாநிலத்திற்கு பெசோஸ் குடி பெயர்ந்தார்
    • வாஷிங்டனில் பங்கு விற்கும் வருவாயில் 7 சதவீதம் வரி செலுத்த வேண்டும்

    1994ல் அமெரிக்காவில் ஜெப் பெசோஸ் (Jeff Bezos) உருவாக்கிய நிறுவனம், அமேசான் (Amazon).

    2021ல் இந்நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து ஜெப் பெசோஸ் விலகினார். பெசோஸ் விலகியதை தொடர்ந்து ஆண்டி ஜாசி (Andy Jassy) தலைமை செயல் அதிகாரியாக அமேசானை நிர்வகித்து வருகிறார்.

    இந்நிலையில், தற்போது 60 வயதாகும் ஜெப் பெசோஸ், தன் வசமிருந்த அமேசான் நிறுவன $4 பில்லியன் மதிப்புடைய பங்குகளை விற்று விட்டார்.

    கடந்த வருடம், பெசோஸ், வாஷிங்டன் மாநிலத்திலிருந்து புளோரிடா மாநிலத்திற்கு குடி பெயர்ந்தார்.

    வாஷிங்டன் மாநிலத்தில் $250,000 மதிப்பிற்கு மேல் நிறுவனத்தின் பங்குகளை விற்றால், அதற்கு 7 சதவீதம் மாநில வரி செலுத்த வேண்டும். ஆனால், புளோரிடா மாநிலத்தில் பங்குகள் விற்பனையில் ஈட்டும் வருவாய்க்கு மாநில வரி கட்ட தேவையில்லை.

    இதன் மூலம் $280 மில்லியன் மதிப்பிலான தொகையை பெசோஸ் சேமிக்க முடியும்.

    2021ல் தனது பங்குகளில் கணிசமானவற்றை விற்ற பெசோஸ், தற்போது பெருமளவு மீண்டும் விற்றுள்ளார். தனது பங்குகளை விற்பனை செய்த நிலையிலும் அமேசானின் பிரதான பங்குதாரராக ஜெப் பெசோஸ் உள்ளார். அவரது நிகர மதிப்பு சுமார் $190 பில்லியனுக்கும் மேல் உள்ளது.

    1994ல் நியூயார்க் நகரில் இருந்து சியாட்டில் நகருக்கு செல்லும் ஒரு பயணத்தின் போது பெசோஸ், இணையதளம் வழியாக புத்தகங்களை வாங்கவும், விற்கவும் ஒரு நிறுவனத்தை தொடங்க எண்ணி உடனடியாக செயல்பட தொடங்கினார்.

    அவ்வாறு உருவான அமேசான், இன்று இணையவழி சில்லறை வணிகத்தில் உலகின் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக அமேசான் நிறுவன பங்குகள் அமெரிக்க பங்கு சந்தையில் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • 2.8 ஏக்கர் நிலப்பரப்பில் 9259 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது
    • சில மாதங்களுக்கு முன்பு லாரன் சான்செசுக்கு ரூ.20 கோடி மதிப்பிலான வைர மோதிரம் வழங்கினார்

    உலக பணக்காரர்களில் 3-வது இடத்தில் அமேசான் நிறுவன தலைவர் ஜெப் பெசோஸ் உள்ளார். இவர் தனது மனைவி மெக்கென்சி ஸ்காட்டை கடந்த 2019-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன்பின் லாரன் சான்செஸ் என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

    இந்த நிலையில் ஜெப் பெசோஸ் தனது வருங்கால மனைவிக்காக சொகுசு பங்களா ஒன்றை வாங்கி உள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் இந்தியன் க்ரீக் தீவில் உள்ள பங்களாவை ரூ.564 கோடிக்கு வாங்கினார்.

    1965-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பங்களா 1985-ம் ஆண்டு விரிவுப் படுத்தப்பட்டது. இது 2.8 ஏக்கர் நிலப்பரப்பில் 9259 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது.

    3 படுக்கை அறைகளும், 3 குளியல் அறைகளும் கொண்ட இந்த பங்களாவில் சொகுசு வசதிகள் உள்ளன. மேலும் பங்களாவை புதுப்பித்து புதிய மெகா மாளிகையை ஜெப் பெசோஸ் உருவாக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    சில மாதங்களுக்கு முன்பு லாரன் சான்செசுக்கு ரூ.20 கோடி மதிப்பிலான வைர மோதிரத்தை வழங்கி காதலை வெளிப்படுத்தினார். தற்போது காதலிக்காக சொகுசு பங்களாவை வாங்கி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கன்சி ஸ்காட் தம்பதி 25 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
    • கையில் இதய வடிவ மோதிரம் இருப்பதை தொடர்ந்து, இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரின் தோழி லாரென் சன்செஸ் இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இந்த தம்பதி ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

    கடந்த சில மாதங்களாகவே ஜெஃப் பெசோஸ் மற்றும் லாரென் சன்செஸ் இடையே திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், சன்செஸ் கையில் இதய வடிவம் (ஹார்டின்) மோதிரம் இருப்பதை தொடர்ந்து, இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

     

    முன்னாள் செய்தியாளரான லாரென் சன்செஸ் மற்றும் ஜெஃப் பெசோஸ் ஜோடி, கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் டேட்டிங் செய்து வருகின்றனர். எனினும், இதுபற்றிய தகவல்கள் 2019 ஆண்டு ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கன்சி ஸ்காட் இடையே விவாகரத்து நடக்கும் வரை வெளியில் தெரியாத ரகசியமாக இருந்து வந்தது.

    ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கன்சி ஸ்காட் தம்பதி 25 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். விவாகரத்து வழங்குவதற்காக மெக்கன்சி 38 பில்லியன் டாலர்களை ஜீவனாம்சமாக பெற்றுக் கொண்டார். இதன் மூலம் அவர் உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் என்ற பெருமையை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் உருவாக்கும் புகைப்படங்கள் சமீப காலங்களில் வைரலாகி வருகின்றன.
    • இவ்வாறு ஏஐ நிபுணர் ஒருவர் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கிய டெக் தலைவர்களின் படங்கள் வெளியாகி உள்ளன.

    செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் பயன்பாடு உலகளவில் பெருமளவில் அதிகரித்து வருகிறது. பலர் ஏ.ஐ. தொழில்நுட்பம் கொண்டு தங்களுக்கு தேவையான பல வேலைகளை சுலபமாக முடிக்க கற்றுக் கொண்டு வருகின்றனர். மேலும் பலர் ஏ.ஐ. டூல்களை கொண்டு தங்கள் கற்பனைக்கு தீனிப்போடும் வகையில் வித்தியாசமான படங்களை உருவாக்கி வருகின்றனர்.

    இவ்வாறு சிலர் உருவாக்கிய படங்கள் வைரலானதோடு, சர்ச்சைகளுக்கும் உள்ளானது. டெனால்ட் டிரம்ப் கைது செய்யப்படுவது போன்ற புகைப்படம், போப் பிரான்சிஸ் பஃபர் ஜாக்கெட் அணிந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி அனைவரையும் அதிர செய்தது. இதில் டொனால்ட் டிரம்ப் புகைப்படத்தை வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியது.

    பலர் ஏ.ஐ. உருவாக்கிய படங்கள் உண்மை என்றே நம்பிவிட்டனர். இந்த அளவுக்கு மக்களை குழப்பும் வகையில் ஏ.ஐ. தொழில்நுட்பம் தனது பணியை சிறப்பாக செய்து அசத்துகிறது. இந்த வரிசையில் ஏ.ஐ. நிபுணரான கோகுல் பிள்ளா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கிய டெக் துறை தலைவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

    இவர் உருவாக்கிய புகைப்படங்கள் டெக் துறை தலைவர்கள் ஏழையாக இருந்தால், எப்படி காட்சியளிப்பர் என்பதை தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளன. இவற்றை உருவாக்க கோகுல் பிள்ளா மிட்ஜர்னி (Midjourney) எனும் ஏ.ஐ. மென்பொருளை பயன்படுத்தி இருக்கிறார். இவர் உருவாக்கி இருக்கும் புகைப்படங்கள் டெக் தலைவர்கள் உண்மையில் ஏழையாக இருப்பதை போன்றே காட்சியளிக்கின்றன.

    கோகுல் புள்ளா உருவாக்கிய ஏ.ஐ. புகைப்படங்களை கீழே காணலாம்...

     

    ஏ.ஐ. மூலம் உருவான பில் கேட்ஸ்-இன் படம்
    ஏ.ஐ. மூலம் உருவான பில் கேட்ஸ்-இன் படம்
    ஏ.ஐ. மூலம் உருவான ஜெஃப் பெசோஸ்-இன் படம்

    ஏ.ஐ. மூலம் உருவான ஜெஃப் பெசோஸ்-இன் படம்

    ஏ.ஐ. மூலம் உருவான எலான் மஸ்க்-இன் படம்

    ஏ.ஐ. மூலம் உருவான எலான் மஸ்க்-இன் படம்

    ஏ.ஐ. மூலம் உருவான மார்க் ஜூக்கர்பர்க்-இன் படம்

    ஏ.ஐ. மூலம் உருவான மார்க் ஜூக்கர்பர்க்-இன் படம்

     

     

     

    அமேசான் நிறுவனத்தின் தலைவரின் முன்னாள் மனைவி தனது சொத்தில் இருந்து ரூ.1¼ லட்சம் கோடியை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குகிறார்.
    வாஷிங்டன்:

    உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் (வயது 55).

    இவர், அமேசான் நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பு நாவலாசிரியரான மெக்கின்சியை (48) காதலித்து, திருமணம் செய்துகொண்டார்.

    இந்த தம்பதிக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில், ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர்.

    இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்ந்துவந்த ஜெப் பெசோஸ் மற்றும் மெக்கின்சி ஆகிய இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் முறைப்படி விவாகரத்து பெற்றனர்.

    அதனை தொடர்ந்து, ஜெப் பெசோஸ், தனது சொத்தில் 25 சதவீதத்தை மனைவி மெக்கின்சிக்கு ஜீவனாம்சமாக கொடுக்க முடிவு செய்தார்.

    அதன்படி 35 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி) மெக்கின்சிக்கு வழங்குவதாக அவர் அறிவித்தார்.

    இதன் மூலம் உலகிலேயே அதிக தொகையை மனைவிக்கு ஜீவனாம்சமாக கொடுத்தவர் என்கிற பெருமைக்கு ஜெப் பேசோஸ் சொந்தக்காரர் ஆனார்.

    அதே போல் கணவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி பெற்றதன் மூலம் மெக்கின்சி, உலகின் 3-வது மிகப்பெரிய பெண் பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

    மெக்கின்சியின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 37 பில்லியன் டாலர்களாக (ரூ.2 லட்சத்து 59 ஆயிரம் கோடி) உள்ளது.

    இந்த நிலையில் தனது சொத்தில் சரிபாதி தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குவதாக மெக்கின்சி உறுதிமொழி அளித்துள்ளார்.

    அதவாது 18.5 பில்லியன் டாலர்களை (சுமார் ரூ.1 லட்சத்து 29 ஆயிரம் கோடி) நன்கொடையாக வழங்க இருக்கிறார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் வாழ்வதற்கு தேவையானதை விட கூடுதலாக, பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு அதிகமான சொத்துகள் என்னிடம் உள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அவர் “எனது மனித நேய அணுகுமுறை தொடர்ந்து கொண்டே இருக்கும். அதற்கு சற்று காலம் ஆகும். ஆனால் நான் அதுவரை காத்திருக்க மாட்டேன். என்னிடம் இருப்பது காலியாகும் வரை நான் இதை தொடருவேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

    மெக்கின்சியின் இந்த கொடை உள்ளத்தை அவரது முன்னாள் கணவர் ஜெப் பெசோஸ் பாராட்டி உள்ளார். இது பற்றி அவர் டுவிட்டரில், “மெக்கின்சி, மனநேய அணுகுமுறையில் மிக சிறப்பாகவும், நல்ல சிந்தனையுடனும் செயல்படுகிறார். அவரை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
    உலக பெரும் பணக்காரர் அமேசான் உரிமையாளர் ஜெப் பெசோஸ் மற்றும் மெக்கென்சி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். #Amazon #JeffBezos #MacKenzie #Divorce
    நியூயார்க்:

    உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த பில்கேட்சை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தவர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் (வயது 54). இவரது தற்போதைய சொத்து மதிப்பு 137 பில்லியன் டாலர் ஆகும்.

    இவருடைய மனைவி மெக்கென்சி (48). இவர் நாவலாசிரியர் ஆவார். இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. 3 ஆண் குழந்தைகள் உள்ளன. மேலும் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில், ஜெப் பெசோஸ் மற்றும் மெக்கென்சி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்த தகவலை அவர்கள் இருவரும் நேற்று டுவிட்டரில் தெரிவித்தனர்.

    “நீண்ட கால காதல் வாழ்க்கைக்குப் பிறகு, சோதனை முறையில் பிரிந்து வாழ்ந்த பிறகு, நாங்கள் விவாகரத்து செய்துகொண்டு, நண்பர்களாக இருக்க முடிவு செய்துள்ளோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் அவர்கள், “தனித்தனி வாழ்க்கையை தேர்ந்தெடுத்தாலும், நாங்கள் குடும்பமாக இருப்போம். எதிர்காலத்தில் பெற்றோர்களாக, நண்பர்களாக, பணித் திட்டங்களில் கூட்டாளிகளாக சேர்ந்து செயல்படுவோம்” என்றும் தெரிவித்துள்ளனர்.  #Amazon #JeffBezos #MacKenzie #Divorce
    உலக பணக்காரர்களின் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்திருக்கும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஏழைகளுக்கு உதவ ரூ.14,500 கோடி ஒதுக்கியுள்ளார். #JeffBezos



    அமேசான் நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஜெஃப் பெசோஸ் தனக்கு சொந்தமான சொத்துக்களில் பெருமளவு பங்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு உதவி செய்ய பயன்படுத்தப்படும் என அறிவித்தார். 

    உலக பணக்காரர்களின் டாப்-10 பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ஜெஃப் தொண்டு நிறுவனங்கள் மூலம் 2 பில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.14,500 கோடி செலவிடப்படும் என அறிவித்திருக்கிறார்.

    இது குறித்த அறிவிப்பை தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டார். அதில் தனது அறக்கட்டளை மூலம் வீடு இல்லாதோரின் குடும்பங்களுக்கு ரூ.14 ஆயிரத்து 500 கோடி (2 மில்லியன் டாலர்) நிதி உதவி பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். 



    மேலும் குறைந்த வருவாய் உள்ளோரின் குழந்தைகள் படிக்க மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என அவர் பதிவிட்ட போஸ்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெசோஸ் டே ஒன் ஃபன்ட் (Bezos Day One Fund) என்ற பெயரில் இதற்கென புதிய அமைப்பை ஜெஃப் பெசோஸ் துவங்கி இருக்கிறார்.

    கடந்த ஒருவருடமாத எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பு தற்சமயம் ஜெஃப் ட்வீட் மூலம் வெளியாகியுள்ளது. முன்னதாக 2017-ம் ஆண்டு ட்விட்டரில் அவசர தேவை மற்றும் நீணட காலத்திற்கு அதன் நன்மை நீடிக்கும் படியான யோசனைகளை வழங்குமாறு கேட்டிருந்தார்.

    அவ்வாறு தனக்கு பல்வேறு பதில்கள், யோசனைகள் ஆக்கப்பூர்வமாகவும், உதவிகரமாகவும் இருந்தது என அவர் தெரிவித்து, கருத்துக்களை பாராட்டுவதாக தெரிவித்தார். அந்த வகையில் தனக்கு கிடைத்த பதில்களின் அடிப்படையில் இரண்டு நலத்திட்டங்களை தேர்வு செய்திருக்கிறார்.
    உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் ஜெப்பெசோஸ் முதலிடம் பிடித்துள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு141.9 பில்லியன் டாலர். #Amazon #JeffBezos
    நியூயார்க்:

    உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டது.

    அதில் அமேசான் நிறுவனத்தின் ஜெப்பெசோஸ் முதலிடம் பிடித்துள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு141.9 பில்லியன் டாலர். ஜெப்பெசோஸ் அமேசான் நிறுவனத்தை 1994-ம் ஆண்டு தொடங்கினார்.

    தற்போது இந்த நிறுவனம் உலகின் மிகப்பெரிய வணிக நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். உலகின் மிகப்பெரிய மதிப்பு கொண்ட நிறுவனங்கள் பட்டியலில் ஆப்பிளுக்கு அடுத்த படியாக அமேசான் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

    உலக பணக்காரர்கள் குறித்த போர்ப்ஸ் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இந்த தடவை 2-வது இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 92.9 பில்லியன் டாலர்.


    நீண்ட காலம் உலகின் நம்பர்-1 பணக்காரர் என்ற அந்தஸ்தை பில்கேட்ஸ் பிடித்திருந்தார். தற்போது அவர் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    இவருக்கு அடுத்தப்படியாக பெர்னாட் அர்னால்ட் 3-வது இடத்தை பிடித்துள்ளார். இவரது (சொத்து மதிப்பு 75.7 பில்லியன் டாலர்) வாரன்பப்பெட்4-வது இடத்தை பிடித்துள்ளார். சொத்து மதிப்பு 91.3 பில்லியன் டாலர்.

    பேஸ்புக் நிறுனர் மார்க் ஷுகர்பெர்க் 5-வது இடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 74.6 பில்லியன் டாலர்.

    உலகின் மிகப்பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இந்திய வர்த்தகர் முகேஷ் அம்பானிக்கு 22-வது இடம் கிடைத்துள்ளது. இவர் ரிலையன்ஸ் இண்டர்ட்ரீங் லிமிடெட்டின் தலைவர் மற்றும் மானேஜிங் டைரக்டராக இருக்கிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு 39.6 பில்லியன் டாலர்.

    தற்போது இவர் ஆசியாவின் நம்பர் 1 பணக்காரராக இருக்கிறார். #Amazon #JeffBezos #BillGates
    ×