55 வயது காதலியை கரம் பிடித்த 61 வயது அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்.. வியந்து பார்த்த வெனிஸ்!

The View, KTTV, Fox உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் தொகுப்பாளராக பணியாற்றினார். ஸ்காட் - ஐ கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
55 வயது காதலியை கரம் பிடித்த 61 வயது அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்.. வியந்து பார்த்த வெனிஸ்!
Published on

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உலக பணக்காரர் பட்டியலில் வரிசையில் இருப்பவர். இந்நிலையில் 61 வயதான ஜெஃப் பெசோஸ் தனது இரண்டாம் திருமணத்தை வெற்றி கரமாக முடித்துள்ளார்.

தனது நீண்ட நாள் காதலியான 55 வயதாகும் தொலைக்காட்சி பிரபலம் லாரன் சான்செஸ் உடன் அவரது திருமணம் இத்தாலியின் வெனிஸ் நகரில் நேற்று நடந்தது.

கடந்த 3 நாட்களாகவே அவர்களின் திருமண கொண்டாட்டங்களில் சூப்பர் ரிச்சாக 200 விருந்தினர்கள் சூழ நடைபெற்றது. திருமண செலவு  ரூ.430 கோடி என்று கூறப்படுகிறது.

The View, KTTV, Fox உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் தொகுப்பாளராக பணியாற்றிய லாரன் சான்செஸ் உடன் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஜெஃப் பெசோஸ் டேட்டிங் செய்து வருகிறார்.

ஜெஃப் பெசோஸ் தனது முதல் மனைவி மெக்கன்சி ஸ்காட் - ஐ கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். விவாகரத்தின்மூலம் ஜெஃப் பெசோஸ் வைத்திருந்த கணிசமான பங்குகளை பெற்று மெக்கன்சி ஸ்காட் பில்லியனர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com