என் மலர்

  நீங்கள் தேடியது "Elon Musk"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • செர்ஜி மனைவி நிகோலை இரு முறை மட்டும்தான் பார்த்திருக்கிறேன்.
  • செர்ஜியும் நானும் நண்பர்கள்.

  வாஷிங்டன் :

  கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான செர்ஜி பிரின், தனது மனைவி நிக்கோல் ஷனாஹனிடம் இருந்து விவாகரத்து கோரி சில மாதங்களுக்கு முன்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

  இந்த சூழலில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஊடகம் ஒன்று, கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரினின் மனைவி நிக்கோல் ஷனாஹனுக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்குக்கும் தொடர்பு இருப்பதாகவும், இதனால்தான் செர்ஜி பிரின் தனது மனைவியை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்ததாகவும் செய்தி வெளியிட்டது. இந்த செய்தி சர்வதேச அளவில் பேசும் பொருளாக மாறியது.

  இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக எலான் மஸ்க் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "இது ஒரு ஆதாரமற்ற செய்தி. செர்ஜியும் நானும் நண்பர்கள். கடந்த இரவில்கூட இருவரும் விருந்து நிகழ்ச்சியில் ஒன்றாக இருந்தோம். செர்ஜி மனைவி நிகோலை கடந்த 3 ஆண்டுகளில் இரு முறை மட்டும்தான் பார்த்திருக்கிறேன். அந்த இருமுறையிலும் கூட நாங்கள் அனைவரும் இருக்கும்போதுதான் சந்தித்தோம். எங்களுக்குள் எந்தவிதமான தொடர்பும் இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 44 பில்லியன் டாலர்களுக்கு டுவிட்டரை எலான் மஸ்கிடம் விற்க டுவிட்டர் நிர்வாகம் ஒப்பந்தம் செய்தது.
  • டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்டதால் அவர்மீது டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

  வாஷிங்டன்:

  உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சமூகவலைதளமான டுவிட்டரை வாங்க முடிவு செய்தார். இதையடுத்து 44 பில்லியன் டாலர்களுக்கு டுவிட்டரை எலான் மஸ்கிடம் விற்க டுவிட்டர் நிர்வாகம் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு டுவிட்டர் நிறுவன பங்குகளை எலான் மஸ்கிற்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வந்தது.

  இதற்கிடையே, டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள், பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள கணக்குகள் உள்பட சில விவரங்களை தரும்படி டுவிட்டர் நிர்வாக குழுவிடம் எலான் மஸ்க் கோரிக்கை விடுத்தார். ஆனால், 2 மாதமாகியும் எலான் மஸ்க் கேட்ட விவரங்களை தர டுவிட்டர் நிறுவனம் மறுத்து வந்தது. இதனால் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் கடந்த 9-ம் தேதி அதிரடியாக அறிவித்தார்.

  போலி கணக்குகள் தொடர்பாக கேட்ட தகவல்களை டுவிட்டர் நிறுவனம் தரதாலும், ஒப்பந்தப்படி செயல்படாததாலும் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்தார். டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்ட சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

  இதையடுத்து, டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்ட நிலையில் அவர்மீது டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் கட்டாயம் நிறைவு செய்யவேண்டுமென டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

  இந்நிலையில், இந்த வழக்கு டெல்லவிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரிக்குமாறு எலான் மஸ்க் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், இந்த வழக்கு விசாரணை வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விண்வெளியை ஆய்வு செய்வதற்காக 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கியை உருவாக்கியுள்ளன.
  • 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.

  வாஷிங்டன்

  அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்கள் ஆகியவை இணைந்து விண்வெளியை ஆய்வு செய்வதற்காக 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கியை உருவாக்கியுள்ளன. இந்த தொலைநோக்கி சூரியனை சுற்றிய புவி வட்டப்பாதையில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

  இந்த 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த புகைப்படங்களை அண்மையில் நாசா வெளியிட்டது. பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த ரகசியங்களை அறிவதற்கான தேடலில், இந்த புகைப்படங்கள் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள அறிவியலாளர்கள் இந்த சாதனையை பாராட்டி வருகின்றனர்.

  அதே சமயம் மீம் கிரியேட்டர்கள் பலர் இந்த புகைப்படங்களை பல்வேறு விஷயங்களுடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தும் வருகின்றனர். அந்த வகையில், உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

  நாசா வெளியிட்ட நட்சத்திர மண்டலத்தின் புகைப்படத்தை சமையல் அறையில் இருக்கும் டைல்ஸ் டிசைனுடன் ஒப்பிட்டு அவர் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் 'நல்ல முயற்சி நாசா' என்று கூறப்பட்டுள்ளது. எலான் மஸ்கின் இந்த பதிவு டுவிட்டரில் வைரலாக பரவி வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒப்பந்தத்தின்படி செயல்படாததால் எலான் மஸ்க் மீது வழக்கு தொடரப்படும் என்று டுவிட்டர் நிர்வாகம் அறிவித்தது.
  • அதன்படி அமெரிக்காவின் டெலவர் கோர்ட்டில் எலான் மஸ்க் மீது டுவிட்டர் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது.

  வாஷிங்டன்:

  உலகின் பெறும் பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான டுவிட்டரை வாங்குவதாக அறிவித்தார்.

  இதையடுத்து 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (ரூ.3.4 லட்சம் கோடி) எலான் மஸ்க்-டுவிட்டர் நிர்வாகம் இடையே கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் ஏற்பட்டது.

  இதற்கிடையே டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள், பயன்படுத்தப்படாத கணக்குகள் உள்ளிட்ட சில விவரங்களை டுவிட்டரிடம் எலான் மஸ்க் தரும்படி கேட்டார். ஆனால் அந்த விவரங்களை தர மறுத்ததால் டுவிட்டர் நிர்வாகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கைவிடுவதாக கடந்த 9-ந்தேதி எலான் மஸ்க் அறிவித்தார்.

  ஒப்பந்தத்தின்படி செயல்படாததால் எலான் மஸ்க் மீது வழக்கு தொடரப்படும் என்று டுவிட்டர் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி அமெரிக்காவின் டெலவர் கோர்ட்டில் எலான் மஸ்க் மீது டுவிட்டர் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது.

  அதில், ஒப்பந்தத்தில் தெரிவித்த தொகைக்கு டுவிட்டரை வாங்க எலான் மஸ்க்குக்கு உத்தரவிடுமாறும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் கட்டாயம் நிறைவு செய்ய வேண்டும் என்றும் கோரி உள்ளது.

  மேலும் டுவிட்டர் மற்றும் அதன் பங்குதாரர்களுக்கான கடமைகளை மதிக்க எலான் மஸ்க் மறுத்து உள்ளார். அவர் கையெழுத்திட்ட ஒப்பந்தம் இனி அவரது தனிப்பட்ட நலன்களுக்கு சேவை செய்யாது.

  டுவிட்டர் நிறுவனம் மற்றும் அதன் செயல்பாடுகளை சீர்குலைத்து பங்குதாரர் மதிப்பை அழித்து விட்டு எலான் மஸ்க் விலகி செல்கிறார் என்று டுவிட்டர் நிர்வாகம் தனது மனுவில் தெரிவித்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போலி கணக்குகள் குறித்து சரியான தகவலை தராததால் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ரத்து செய்துள்ளார்.
  • எலான் மஸ்க் மீது வழக்கு தொடரப்போவதாக டுவிட்டர் நிறுவனமும் அறிவித்துள்ளது.

  டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், உலகின் பணக்காரருமான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3 லட்சத்து 37 ஆயிரத்து 465 கோடி கொடுத்து வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. எலான் மஸ்கிற்கு டுவிட்டர் நிறுவனத்தை மேற்கண்ட தொகைக்கு விற்பனை செய்ய டுவிட்டர் நிர்வாக குழு ஒப்புதல் அளித்தது.

  ஆனால் டுவிட்டரில் 20 - 50 சதவீதம் போலி கணக்குகள் இருப்பதாகவும், அதன் கணக்குகளை முடக்க உள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். ஆனால், 5 சதவீதத்திற்கும் குறைவான போலி கணக்குகளே உள்ளதாக டுவிட்டர் நிறுவனம தெரிவித்து வந்தது.

  இந்நிலையில், டுவிட்டர் சமூக வலைதள நிறுவனத்தை வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ரத்து செய்துள்ளார். போலி கணக்குகள் குறித்து சரியான தகவலை தராததால் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ரத்து செய்துள்ளார்.

  தனது பல்வேறு கேள்விகள், சந்தேகங்களுக்கும் டுவிட்டர் நிர்வாகம் சரியான விளக்கம் அளிக்கவில்லை என்று மஸ்க் புகார் தெரிவித்துள்ளார்.

  ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவு செய்ய எலான் மஸ்க் மீது வழக்கு தொடரப்போவதாக டுவிட்டர் நிறுவனமும் அறிவித்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முதல் மனைவி மூலம் எலாஸ் மஸ்க் ஐந்து குழந்தைகளை பெற்றுள்ளார்.
  • கனடாவை சேர்ந்த பாடகி கிரிமிஸ் மூலம் இரு குழந்தைகளை பெற்றுள்ளார்.

  சான் பிரான்சிஸ்கோ :

  உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண் அதிகாரியுடன் உறவில் இருந்து இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார். அவருடைய முதல் மனைவியான கனடாவை சேர்ந்த எழுத்தாளர் ஜஸ்டின் வில்சன், எலாஸ் மஸ்க்கின் மூலம் ஐந்து குழந்தைகளை பெற்றுள்ளார்.

  பின்னர் கனடாவை சேர்ந்த பாடகி கிரிமிஸ் மூலம் இரு குழந்தைகளை பெற்றுள்ளார். இந்த நிலையில், இந்த தம்பதியினருக்கு கடந்த நவம்பர் மாதம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த இரட்டையர்களையும் சேர்த்து எலான் மஸ்க்கிற்கு மொத்தம் தற்போது 9 குழந்தைகள் உள்ளன.

  இது குறித்து பலர் அவரிடம் சமூகவலைத்தளங்கள் வாயிலாக பல கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்த நிலையில் அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக எலான் மஸ்க் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "குறைந்த மக்கள்தொகை நெருக்கடிக்கு உதவ என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன். பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைவது நாகரிகம் இதுவரை எதிர்கொள்ளாத மிகப்பெரிய ஆபத்து" என தெரிவித்து உள்ளார்.

  ஏற்கனவே இவர் சீனாவின் மக்கள்தொகை வீழ்ச்சி குறித்து எச்சரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த ஏப்ரல் மாதம் உக்ரைனுக்கு 10000 இணையதள கருவிகளை எலான் மஸ்கின் ஸ்டார் லைட் நிறுவனம் அனுப்பியது.
  • தற்போது உக்ரைனுக்கு சுமார் 15000 இணையதள கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன.

  கீவ்:

  உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 100 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு உதவும் வகையில் நிதி மற்றும் ஆயுத உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.

  இதேபோல் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டிற்கு தனது ஸ்டார்லிங்க் நிறுவனம் மூலம் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவைகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது உக்ரைன் ராணுவம் பயன்படுத்தும் வகையில் அவர் மேலும் சில ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையதள கருவிகளை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் உக்ரைனுக்கு சுமார் 15000 இணையதள கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 10000 கருவிகள் அனுப்பப்பட்டது. இத்துடன் சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் பெறும் டெஸ்லா கருவிகளையும் உக்ரைன் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக அனுப்பியுள்ளோம் என கூறியுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெஸ்லா மோட்டார்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் டெஸ்லா கார்களின் இந்திய வெளியீடு குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். #ElonMusk #TeslaModel3  டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் விற்பனையை அமெரிக்காவைத் தொடர்ந்து வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா உள்ளிட்ட சந்தைகளில் விரிவுப்படுத்த இருப்பதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். 

  சீனாவில் டெஸ்லா மாடல் 3 கார்களின் உற்பத்தி துவங்கப்படுவதாகவும், அங்கு 7000 யூனிட்கள் உற்பத்தி திறன் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் எலான் மஸ்க் ட்விட்டர் பதிவில் தனது சர்வீஸ் குழுவினரை வட அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பகுதிகளுக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் விரிவுப்படுத்த கேட்டுக் கொண்டுள்ளார்.  இதைத் தொடர்ந்து இந்தியா, ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த ஆண்டு இறுதியிலும், 2020ம் ஆண்டு வாக்கில் பெரும்பாலான பகுதிகளில் வியாபாரத்தை விரிவுப்படுத்த இருப்பதாக அவர் தெரிவித்தார்.

  2015ம் ஆண்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெஸ்லா மோட்டார்ஸ் உருவாக்கி வரும் தொழில்நுட்பங்கள் குறித்து ட்விட்டரில் தனது வியப்பை தெரிவித்திருந்தார். முன்னதாக எலான் மஸ்க் டெஸ்லா தொழில்நுட்பங்கள் மற்றும் இவை இந்தியா போன்ற நாடுகளில் மாற்றத்தக்க எரிசக்தி எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது குறித்து எலான் பிரதர் மோடிக்கு விளக்கி இருந்தார்.

  இதைத் தொடர்ந்து டெஸ்லா நிறுவனம் 2017ம் ஆண்டிலேயே களமிறங்கலாம் என கூறப்பட்டது. டெஸ்லா இந்திய வருகை தற்சமயம் உறுதி செய்யப்பட்டுள்ளது, எனினும் மாடல் 3 கார்களின் இந்திய முன்பதிவு எப்போது துவங்கும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தவறான தகவல்களை வெளியிட்டு பங்கு சந்தையில் குழப்பம் ஏற்படுத்தியதற்காக டெஸ்லா நிறுவனத்திற்கு ரூ.290 கோடி அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Tesla #ElonMusk
  வாஷிங்டன் :

  அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா எலக்ட்ரிக் கார்கள் வடிவமைப்பு, உற்பத்தி, விற்பனை என அனைத்திலும் உலகளவில் முன்னிலை வகித்து வருகிறது. மேலும், ஸ்பேஸ் எக்ஸ் எனும் நிறுவனம் நாசாவிற்கு போட்டியாக விண்வெளியில் பல்வேறு ஆராய்சிகளையும் செய்து வருகிறது.

  இதற்கிடையே டெஸ்லா நிறுவனத்தை முழுவதும் தனதாக்கிக்கொள்ள போவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி அதன் தலைவர் எலன் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

  அதில், பங்குதாரர்களிடமிருந்து, அனைத்து பங்குகளையும் தானே திரும்பப் பெற்றுக் கொண்டு நிறுவனத்தை முழுவதும் தனதாக்கிக்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், முதலீட்டாளர்கள் ஒன்று நிறுவனத்திலேயே தொடரலாம் அல்லது ஒரு பங்குக்கு தலா 420 டாலர்களை பெற்றுக்கொண்டு விற்றுவிடலாம் என்றும் அறிவித்திருந்தார்.
  அவரது இந்த முடிவு அந்நிறுவனத்தின் இயக்குனர்கள், முதலீட்டாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தனது முடிவுக்கு பின்னர் கிடைத்த எதிர்மறையான கருத்துக்களை அடுத்து டெஸ்லா நிறுவனத்தின் அனைத்து தரப்பினரிடமும் எலான் மஸ்க் கடந்த ஒரு வார காலமாக ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் நிறுவனத்தை முழுவதுமாக வாங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார்.

  இதற்கிடையே, எலான் மஸ்க் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட முயன்றதாக, அவர் மீது மன்ஹாட்டனில் உள்ள நீதிமன்றத்தில் அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை கழகம் வழக்கு தொடர்ந்தது.

  பங்குகளை திரும்ப வாங்குவதற்காக தன்னிடம் உள்ள நிதி ஆதாரங்கள் என்னென்ன என்பது குறித்த விவரங்களை தெரிவிக்கமல் எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பினால் பங்கு சந்தையில் குழப்பம் மற்றும் முதலீட்டாலர்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது என வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.

  இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்திற்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர்(ரூ.290 கோடி) தொகையை நீதிமன்றம் அபராதமாக விதித்துள்ளது. இந்த தொகையை செலுத்த எலன் மஸ்க்கும் ஒப்புக்கொண்டுள்ளார்.  மேலும், அடுத்த 45 நாட்களுக்குள் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து மஸ்க் விலக வேண்டும் எனவும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் நிறுவனத்தின் தலைவராக இருக்க கூடாது எனவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

  ஆனால், நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தொடர்வதற்கு தடை ஏதும் இல்லை. இரண்டு இயக்குனர்களை நியமித்து தலைவர் பொறுப்பை கவனித்துக்கொள்ளலாம் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  இதனால், டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விலக எலன் மஸ்க் முடிவு செய்துள்ளார். சமீபத்தில் ஜப்பானை சேர்ந்த தொழிலதிபரை  நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை பற்றி எலன் மஸ்கின் மற்றொரு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. #Tesla #ElonMusk
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்களில் 10 பேர் இதுவரை மீட்கப்பட்டு இருக்கும் நிலையில், எஞ்சியிருக்கும் 3 பேரை மீட்க எலான் மஸ்க் சிறியரக நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பியுள்ளார்.  தாய்லாந்து நாட்டில் தாம்லுவாங் என்ற குகைக்குள் சாகச பயணம் மேற்கொண்ட 12 சிறுவர்கள், அவர்களது கால்பந்து பயிற்சியாளர்கள் சிக்கிக் கொண்டனர். அங்கு பெய்த பலத்த மழை காரணமாக வெள்ளம் குகைக்குள் புகுந்ததால் அவர்களால் வெளியே வர முடியவில்லை.

  எனவே கடந்த மாதம் 23-ந் தேதி முதல் குகைக்குள் சிக்கி தவித்த இவர்கள் 16 நாட்களாக வாழ்வா? சாவா? என்ற நிலையில் இருந்தனர். இந்தநிலையில் உள்நாட்டு குழுவுடன் இங்கிலாந்தை சேர்ந்த நீச்சல் வீரர்கள் இணைந்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

  மாயமாகி 9 நாட்களுக்கு பின் அவர்கள் உயிருடன் இருப்பதை 2 இங்கிலாந்து வீரர்கள் கண்டுபிடித்தனர். பின்னர் மீட்பு நடவடிக்கை தொடங்கியது. 18 நீர்மூழ்கி வீரர்கள் (டைவர்கள்) நியமிக்கப்பட்டனர். இதுவரை குகைக்களுள் சிக்கியிருந்த 10 பேர் மீட்கப்பட்டு விட்ட நிலையில் 3 பேர் மட்டுமே குகைக்குள் உள்ளனர். 

  அவர்களையும் மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே குகைக்குள் தேங்கி நிற்கும் தண்ணீரை ‘பம்ப்’ மூலம் வெளியேற்றும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது.  இந்நிலையில் குகைக்குள் சிக்கியிருக்கும் சிறுவர்கள் மற்றும் கால்பந்து பயிற்சியாளரை மீட்க சிறிய ரக நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பி உதவுவதாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து சிறிய ரக நீர்மூழ்கி கப்பல்கள் தாய்லாந்து சென்றடைந்தது. 

  "சிறிய ரக நீர்மூழ்கி கப்பல்கள் தயார் நிலையில் இருக்கிறது. ராக்கெட் பாகங்களால் இது தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது தேவைப்படும் என்பதால் இதனை இங்கேயே விட்டுச் செல்கிறேன். தாய்லாந்து மிகவும் அழகிய நாடு." என எலான் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெஸ்லா நிறுவனத்தின் புதிய தானியங்கி சரக்கு வாகனத்தில் 'மேட் மேக்ஸ் மோட்' வழங்கப்பட இருப்பதை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி உறுதி செய்திருக்கிறார்.
  டெஸ்லா நிறுவன எலெக்ட்ரிக் வாகனங்களில் வழங்கப்படும் அம்சங்கள் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். இதேபோன்று அந்நிறுவன வாகனங்களின் ஆற்றல் மற்றும் செயல்திறன் வியப்படையும் வகையில் வழங்கப்படும்.

  இந்நிலையில், டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் டெஸ்லாவின் புதிய தானியங்கி சரக்கு வாகனத்தில் சேர்க்கப்பட இருக்கும் புதிய வசதி குறித்த தகவலை தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். அதன்படி புதிய மாடலில் மேட் மேக்ஸ் மோட் சேர்க்கப்பட இருக்கிறது.

  டெஸ்லா சரக்கு வாகனத்தின் தானியங்கி அமைப்பின் ஒரு அம்சமாக மேட் மேக்ஸ் மோட் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் குறித்து சில ட்விட்களில் மேட் மேக்ஸ் மோட் ஒரு ஆப்ஷனாக இருக்கும் என தெரியவந்துள்ளது. டெஸ்லா ஆட்டோபைலட் பிளைன்ட் ஸ்பாட் திரெஷோல்டு சிஸ்டத்தில் இந்த மோட் சேர்க்கப்படுகிறது.  ஆட்டோபைலட் மோடில் சாலை தடம் சரியாக மாற்றிக் கொள்ளும் பிளைன்ட் ஸ்பாட் சிஸ்டம் ஸ்டான்டர்டு, அக்ரெசிவ் மற்றும் மேட் மேக்ஸ் என மூன்று வித மோட்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. 

  டெஸ்லா செமி டிரக் வாகனத்தின் மேட் மேக்ஸ் மோட் ஆட்டோபைலட் சிஸ்டம் மிக சிறப்பாக வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் மூலம் ஓட்டுநரின் டிரைவிங் ஸ்டைல்களை டெஸ்லா செமி புரிந்து கொள்ளும். எதிர்காலத்தில் மேனுவல் ஓவர் ரைட் எனும் அம்சத்தை சேர்க்கவும் டெஸ்லா திட்டமிட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.

  புதிய மோட் குறித்த முழு விவரங்கள் மற்றும் இந்த மென்பொருள் எவ்வாறு இயங்கும் என்ற முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை. தற்போதைய டெஸ்லா கார்களில் இந்த அம்சம் இன்னும் சேர்க்கப்படவில்லை. ஆகஸ்டு மாத வாக்கில் ஆட்டோபைலட் சிஸ்டம் அப்டேட் செய்யப்படுவதாக டெஸ்லா தெரிவித்துள்ளார்.
  ×