ஸ்டார்லிங்க் சேவையை தவறாகப் பயன்படுத்திய உக்ரைன்: எலான் மஸ்க் குற்றச்சாட்டு

இந்த விவகாரம் குறித்து உக்ரைன் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வமான உடனடி பதிலும் அளிக்கப்படவில்லை.
Elon Musk-Volodymyr Zelenskyy
Published on: 
Summary

சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட எலான் மஸ்க், உக்ரைன் ராணுவம் சேவை ஒப்பந்தங்களை மீறியுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.

உக்ரைனில் செயற்கைக்கோள் இணைய சேவையான ஸ்டார்லிங்க் மற்றும் ஸ்டார்ஷீல்ட் மீண்டும் முழுமையான வேகத்தில் இயங்கத் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, உக்ரைன் ராணுவம் இந்தச் சேவையின் விதிமுறைகளை மீறித் தாக்குதல் டிரோன்களுக்குப் பயன்படுத்தியதாக எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஸ்டார்லிங்க் இணைய சேவையில் ஏற்பட்ட வேகக் கட்டுப்பாடுகள் உக்ரைனின் ராணுவ நடவடிக்கைகளைப் பெரிதும் பாதித்திருந்தன. குறிப்பாக, வினாடிக்கு 160 கி.மீ என்ற அளவில் வேகம் குறைக்கப்பட்டதால், ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதிலும் சில ராணுவத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் சிக்கல்கள் எழுந்ததாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்தச் சேவைகள் வழக்கமான நிலைக்குத் திரும்பியுள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.

மஸ்க் கண்டனம்

சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட எலான் மஸ்க், உக்ரைன் ராணுவம் சேவை ஒப்பந்தங்களை மீறியுள்ளதாகத் தெரிவித்தார். பொதுமக்கள் பயன்பாட்டிற்கான வணிக ரீதியிலான ஸ்டார்லிங்க் வலையமைப்பை, மக்களைக் கொல்வதற்கான ஆக்கிரமிப்பு டிரோன் தாக்குதல்களுக்கு உக்ரைன் பயன்படுத்தியதாகவும், இந்தத் துளை கடந்த வாரமே அடைக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்க அரசால் கட்டுப்படுத்தப்படும் ஸ்டார்ஷீல்ட் என்பது வேறுபட்ட அமைப்பு என்றும், அது தொடர்பான முடிவுகளை அமெரிக்க அரசாங்கமே எடுக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த விவகாரம் குறித்து உக்ரைன் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வமான உடனடி பதிலும் அளிக்கப்படவில்லை. போர்க்களத்தில் அவசியமானதாகக் கருதப்படும் இந்த இணையச் சேவை விவகாரம் தற்போது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com