என் மலர்
நீங்கள் தேடியது "Mark Zuckerberg"
- உலகம் முழுவதும் மெட்டா நிறுவனத்தில் 72 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.
- அடுத்த மாதம் 10-ந் தேதிக்குள் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வாஷிங்டன்:
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை தலைமையிடமாக கொண்டு பிரபல தொழில்நுட்ப நிறுவனமாக 'மெட்டா' இயங்குகிறது. பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற பிரபல சமூக வலைத்தளங்களை இது நிர்வகித்து வருகிறது. உலகம் முழுவதும் மெட்டா நிறுவனத்தில் 72 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்தநிலையில் மெட்டா நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அதன் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். நிறுவனத்தை சீரமைக்கும் வகையில் 5 சதவீதம் அதாவது 3,600 ஊழியர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பட்டியல் தயாராகி வருகிறது.
அடுத்த மாதம் 10-ந் தேதிக்குள் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
- இந்தக் கவனக்குறைவான தவறுக்கு மன்னிப்பு கேட்கிறோம் என மெட்டா நிறுவனம் கூறியது.
- மெட்டா நிறுவனத்திற்கு இந்தியா முக்கியமான நாடு என தெரிவித்தார்.
நியூயார்க்:
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க், ஜோ ரோகனின் போட்காஸ்டில் சமீபத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், 2024-ல் உலகம் முழுவதும் மிகப்பெரிய தேர்தல் ஆண்டாக இருந்தது. இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் தேர்தலைச் சந்தித்தன. ஆனால், ஆட்சியில் இருந்த கட்சிகள் பணவீக்கம், பொருளாதார பிரச்சனை, கோவிட்டை கையாண்டது உள்ளிட்ட ஏதாவது ஒரு விஷயம் காரணமாக ஆட்சியை பறிகொடுத்தன என தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகம் என்ற அடிப்படையில் 2024 ல் இந்தியாவில் நடந்த தேர்தலில் 64 கோடி வாக்காளர்கள் பங்கேற்றனர். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீதான தங்களின் நம்பிக்கையை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
கோவிட்டிற்கு பிறகு 2024 ல் நடந்த தேர்தலில் இந்தியா உள்ளிட்ட அனைத்து அரசுகளும் தோல்வியடைந்தன என்பது தவறான தகவல்.
80 கோடி பேருக்கு இலவச உணவு, 220 கோடி பேருக்கு இலவச தடுப்பூசி, கோவிட் காலத்தில் உலக நாடுகளுக்கு உதவி என வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா முன்னணியில் உள்ளது. பிரதமர் மோடியின் 3-வது வெற்றி என்பது சிறந்த நிர்வாகம் மற்றும் பொது மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த சான்று.
மார்க் ஜூக்கர்பெர்க்கிடம் இருந்து தவறான தகவல்களைப் பார்ப்பது ஏமாற்றம் அளிக்கிறது. உண்மைகளையும், நம்பகத்தன்மையயும் நிலைநிறுத்துவோம் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்திய தேர்தல் குறித்து தவறான தகவல் வெளியிட்டதற்காக மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியது.
இதுதொடர்பாக, மெட்டா நிறுவனத்தின் இந்திய துணைத்தலைவர் ஷிவ்நாத் துக்ரால் வெளியிட்டுள்ள அறிக்கையில், மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, 2024-ல் நடந்த தேர்தல்களில் ஆட்சியில் இருந்த கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை என்ற மார்க் ஜூக்கர்பெர்க்கின் கருத்து பல நாடுகளில் நடந்துள்ளது. இந்தியாவிற்கு இது பொருந்தாது. இந்தக் கவனக்குறைவான தவறுக்கு மன்னிப்பு கேட்கிறோம். மெட்டா நிறுவனத்திற்கு இந்தியா முக்கியமான நாடு. அதன் புதுமையான எதிர்காலத்தின் மையத்தில் இருப்பதை நாங்கள் எதிர்நோக்குகிறோம் என தெரிவித்துள்ளார்.
- அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளார்.
- டிரம்ப் மெட்டா நிறுவனத்தின் மார்க் ஜுகர்பெர்க்கை சந்தித்து பேசினார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளார். அதிபராக தேர்வு ஆகியிருக்கும் டிரம்ப் தற்போது, தனது அமைச்சரவையில் இடம்பெறுவர்களை அறிவித்து வருகிறார். அதேபோல, அமெரிக்க தொழில் அதிபர்களைச் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், டொனால்ட் டிரம்ப் மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக, ஜனாதிபதியின் ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் கூறுகையில், மார்க் ஜுக்கர்பெர்க் டிரம்பின் பொருளாதார திட்டங்களை ஆதரிக்க விரும்புகிறார். எனவே தனது உறவை புதுப்பிக்கும் வகையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது என தெரிவித்தார்.
ஏற்கனவே, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் டிரம்பை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
- வீடியோவின் இறுதியில் அவரது மகள் தனது வண்ணம் தீட்டப்பட்ட நகங்களை காட்டி அழகாக இருப்பதாக கூறுகிறார்.
- வீடியோ இணையத்தில் வெளியாகி ஒரே நாளில் 6½ லட்சம் பேரால் ரசிக்கப்பட்டு காட்டுத்தீபோல் இணையத்தில் பரவுகிறது.
உலக பணக்காரர்களில் ஒருவரும் சமூக வலைத்தளமான 'பேஸ்புக்' நிறுவனத்தின் தலைவருமானவர் மார்க் ஜுக்கர்பெர்க். ஆசிய வம்சாவளியான பிரிசில்லா சான் என்பவருடன் இவருக்கு திருமணமான நிலையில் மாக்சிமா, ஆகஸ்டு, ஆரேலியா என 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
தனது பரபரப்பான அலுவல்களுக்கு மத்தியிலும் புதிய திறன்களை கற்று கொள்வது மட்டுமின்றி குடும்பத்துடனும் நேரத்தை செலவிடுவதை ஜகர்பர்க் வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில் தன்னுடைய மகள்களில் ஒருவரை ஜுக்கர்பெர்க் அழகுப்படுத்துவது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் தனது மகளின் கைவிரல் நகங்களுக்கு வெவ்வெறு வண்ணங்களில் 'நகப்பூச்சு' பூசி அழகுப்படுத்துகிறார். வீடியோவின் இறுதியில் அவரது மகள் தனது வண்ணம் தீட்டப்பட்ட நகங்களை காட்டி அழகாக இருப்பதாக கூறுகிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ஒரே நாளில் 6½ லட்சம் பேரால் ரசிக்கப்பட்டு காட்டுத்தீபோல் இணையத்தில் பரவுகிறது.
- மெட்டா நிறுவனத்தில் 2022 ஆம் ஆண்டு 11,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
- மெட்டா நிறுவனத்தில் கடந்த ஆண்டு 10,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
உலகின் முன்னணி நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக தங்களது ஊழியர்களை தொடர்ச்சியாக பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள துவங்கிவிட்டன. இதன் காரணமாக உலகளவில் பெரும்பாலானோர் தங்களது வேலையை இழந்தனர்.
அவ்வகையில் தொடர்ந்து 3 ஆவது ஆண்டாக மெட்டா பிரிவில் வேலை செய்யும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செலவுகளை குறைக்கும் நோக்கில் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றும் சில ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணிநீக்கம் செய்யவுள்ளது.
மெட்டா நிறுவனத்தில் 2022 ஆம் ஆண்டு 11,000 பேரும் கடந்த ஆண்டு 10,000 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டில் பணிநீக்கம் செய்யப்படவுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.
- உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டது.
- இதில் மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் 2வது இடத்திற்கு முன்னேறினார்.
வாஷிங்டன்:
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் ஒவ்வொரு வாரமும் வெளியிட்டு வருகிறது. கடந்த வாரம் வெளியான பட்டியலில் டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ. எலான் மஸ்க் முதலிடத்தில் இருந்தார்
இந்நிலையில், இந்த வாரம் வெளியான பட்டியலிலும் எலான் மஸ்க் 256 பில்லியன் டாலருடன் முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாவது இடத்திற்கு அமெரிக்காவைச் சேர்ந்த மெட்டா நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. மார்க் ஜுக்கர்பெர்க் முன்னேறினார். அவரது சொத்து மதிப்பு 206 பில்லியன் டாலர்களுடன் உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் , சமூக வலைதளங்களில் அதிகம் வளர்ந்த நிறுவனமாக மெட்டா உருவெடுத்து உள்ளது. மாதந்தோறும் 30 கோடி பேர் இதனை பயன்படுத்தி வருகின்றனர். உலகின் 7 வது பெரிய கார்பரேட்டாக இந்த நிறுவனம் உருவெடுத்து உள்ளது.
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, பின்னர் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகியவற்றை கையகப்படுத்தியது.
ஏற்கனவே 2-வது இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் இம்முறை 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார். அவரது சொத்து மதிப்பு 205 பில்லியன் டாலர்கள். 4வது இடத்தில் பிரான்சின் பெர்னார்ட் அர்னால்ட்- 193 பில்லியன் டாலர் ஆகும்.
5 முதல் 10-வது இடம் வரை அமெரிக்க கோடீஸ்வரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
- அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ், டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கடந்த தேர்தலின்போது தனக்கு எதிராக மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி சதி செய்ததாக டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதலாவது கறுப்பின மற்றும் ஆசிய அமெரிக்க பெண் என்ற வரலாற்று சாதனையை கமலா ஹாரிஸ் படைத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ், டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் மெட்டா மோசடி செய்தால் மார்க் ஜுக்கர்பெர்க் தனது வாழ்க்கையை சிறையில் கழிப்பார் என்று வரவிருக்கும் சேவ் அமெரிக்கா என்ற புத்தகத்தில் டிரம்ப் எழுதி உள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது தனக்கு எதிராக மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் சதி செய்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார்.
இந்த முறை அவர் சட்டவிரோதமாக ஏதாவது செய்தால், 2024 ஜனாதிபதி தேர்தலில் ஏமாற்றும் மற்றவர்களைப் போலவே, அவர் தனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிப்பார் என்று டிரம்ப் தனது வரவிருக்கும் சேவ் அமெரிக்கா என்ற புத்தகத்தில் எழுதி உள்ளார்.
அதில் மார்க் ஜுக்கர்பெர்க் தனக்கு எதிராக பேஸ்புக்கை வழிநடத்தியதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
- மார்க்ஜுக்கர்பெர்க் பேஸ்புக் தளத்தில் முதலில் வந்தவர்.
- 4-வது பழமையான கணக்காக ஜுக்கர்பெர்க்கின் கணக்கு உள்ளது.
பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற செயலிகளின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க்ஜுக்கர்பெர்க் அவ்வப்போது சமூக வலைதளத்தில் பயனர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.
அப்போது ஒரு பயனர் மார்க்ஜூக்கர்பெர்க்கிடம் நீங்கள் முதல் பேஸ்புக் கணக்கை உருவாக்க பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரி எது என்று கேட்டார். அதற்கு மார்க்ஜூக்கர்பெர்க் அளித்த பதிலில், 2004-ம் ஆண்டில் பேஸ்புக்கில் முதல் கணக்கை பதிவு செய்ய 'mzuckerb@fas.harvard.edu' என்ற மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தியதாக கூறினார்.
மார்க்ஜுக்கர்பெர்க் பேஸ்புக் தளத்தில் முதலில் வந்தவர். ஆனால் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கிய முதல் நபர் அல்ல. அவருக்கு முன்பே 3 ஐ.டி.கள் உருவாக்கப்பட்டன. அவை அனைத்தும் சோதனைக்காக ஒதுக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்டன.
இதன்படி பேஸ்புக்கில் 4-வது பழமையான கணக்காக ஜுக்கர்பெர்க்கின் கணக்கு உள்ளது. 5-வது மற்றும் 6-வது கணக்குகள் ஜுக்கர்பெர்க்குடன் இணைந்து பேஸ்புக்கை தொடங்கிய இணை நிறுவனர்களுடையது ஆகும்.
- பீர் குவளையை பிடித்தவாரும் மார்க் கடலில் சர்ஃபிங் செய்து விடுமுறையை கொண்டாடும் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
- மார்க்கை கலாய்த்து எலான் மஸ்க் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பேஸ்புக், வாட்சப், இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்ட சமூக வலிதளங்களை நிர்வகிக்கும் மெட்டா சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் மற்றும் எக்ஸ் [ட்விட்டர்] உரிமையாளரும் ஸ்பேஸ் எக்ஸ் டெஸ்லா உள்ளிட்டவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க்கிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி அமெரிக்க சுதந்திர தினத்தின்போது, கோட் சூட் அணிந்தவாறு ஒரு கையில் அமெரிக்க கோடியை ஏந்தியவாறும், மறு கையில் பீர் குவளையை பிடித்தவாரும் மார்க் கடலில் யாட்ச்சில் சர்ஃபிங் செய்து விடுமுறையை கொண்டாடும் வீடியோவை இன்ஸ்ட்டாகிராமில் பகிரவே அது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
இந்த வீடியோ வைரலாக நிலையில் மார்க்கை கலாய்த்து எலான் மஸ்க் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், அவர் யாட்ச்களில் பொழுதைப்போக்கி கொண்டாட்டங்களில் ஈடுபடட்டும்.அதைவிட நான் வேலை செய்யவே விரும்புகிறேன். I prefer to work என்று தெரிவித்துள்ளார். ப்ளூம்பெர்க் அறிக்கைபடி பணக்காரர் பட்டியலில் மார்க் ஜூகர்பெர்கைவிட எலான் மஸ்க் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- உலகப் பணக்காரரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை விலைக்கு வாங்கி அதற்கு எக்ஸ் என பெயரிட்டதுடன் அதில் பல மாற்றங்களையும் செய்தார்.
- எக்ஸ் பயனர் ஒருவர் தனது பதிவில், வாட்ஸ் அப் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளையும் 'சாட்'களையும் விளம்பர நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.
உலகப் பணக்காரரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை விலைக்கு வாங்கி அதற்கு எக்ஸ் என பெயரிட்டதுடன் அதில் பல மாற்றங்களையும் செய்தார்.பணக்காரராக மட்டும் இல்லாமல் உலகைப் பின்னியிருக்கும் சமூக வலைதளங்களை சொந்தமாக்கிக் கொள்ளும் அதிகார நகர்வாகவே எலான் மஸ்கின் இந்த முடிவு பார்க்கப்பட்டது.
எக்ஸ் தளத்திற்கு போட்டியாக இருக்கும் பேஸ்புக் வாட்சப் உள்ளிட்டவற்றை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க்குடன் அவ்வப்போது உரசல்களில் ஈடுபடுவதை எலான் மஸ்க் வழக்கமாக வைத்துள்ளார். இருவரும் குத்துச்சண்டை போட்டியில் மோத உள்ளதாக அறிவித்தது வரை இந்த உரசல் சென்றது.
இந்நிலையில் வாட்சப் குறித்து எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எக்ஸ் பயனர் ஒருவர் தனது பதிவில், வாட்ஸ் அப் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளையும் 'சாட்'களையும் விளம்பர நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த கருத்தை தனது எக்ஸ் பதிவில் மேற்கோள் காட்டியுள்ள எலான் மஸ்க் , வாட்ஸ் அப் தனது பயனர்களின் தரவை ஒவ்வொரு இரவும் (விளம்பர நிறுவனங்களுக்கு) ஏற்றுமதி செய்கிறது. சிலர் இன்னும் வாட்ஸ் அப் பாதுகாப்பானது என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். எலான் மஸ்க்கின் இந்த குற்றச்சாட்டு குறித்து வாட்ஸ் அப் செயலியை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம் இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- மார்க் ஜுகர்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளார்.
- எலான் மஸ்க்கை தோற்கடித்து இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
வாஷிங்டன்:
உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளார். எலான் மஸ்க்கை தோற்கடித்து இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி மார்க் ஜுகர்பெர்க் 187 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் பணக்காரர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார். எலான் மஸ்க் 181 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் 4-வது இடம் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் பெர்னார்டு அர்னால்டும், 2வது இடத்தில் ஜெப் பசோசும் உள்ளனர்.
டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் மார்ச் மாதம் வரை உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். தற்போது அவர் 4-வது இடத்திற்கு சரிந்துள்ளார். அவரது நிகர மதிப்பு $48.4 பில்லியனாகக் குறைந்துள்ளது. ஜுகர்பெர்க்கின் நிகர மதிப்பு $58.9 பில்லியன் அதிகரித்துள்ளது.
ஜுகர்பெர்க் நவம்பர் 2020க்குப் பிறகு முதன்முறையாக எலான் மஸ்க்கை முந்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மெட்டா நிறுவனத்தின் கீழ் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இயங்குகின்றன
- இன்று அமெரிக்க பங்கு சந்தையில் மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்தது
2004ல் அமெரிக்காவை மையமாக கொண்டு மார்க் ஜூக்கர்பர்க் (Mark Zuckerberg) என்பவர் தனது நண்பர்களுடன் தொடங்கிய நிறுவனம், பேஸ்புக் (Facebook).
உலகெங்கிலும் உள்ள இணையதள பயனர்களுக்கு கருத்து மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைதளமாக பேஸ்புக் முன்னணியில் உள்ளது.
தற்போது மெட்டா (Meta) எனும் நிறுவனத்தின் கீழ் பேஸ்புக், மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் (Instagram) ஆகியவை இயங்கி வருகின்றன. இவற்றை மார்க் ஜூக்கர்பர்க் நிர்வகித்து வருகிறார்.
நேற்று, உலகெங்கும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டு சமூக வலைதளங்களும் முடங்கின.
இதனால், அவற்றை பயன்படுத்தும் பயனர்கள், கருத்து பரிமாற்றம் மற்றும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவேற்றம் உள்ளிட்ட அதன் அனைத்து சேவைகளையும் பெற முடியாமல் தவித்தனர்.
சில மணி நேரங்கள் கடந்ததும் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு 2 தளங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன.
இந்நிலையில், இன்று அமெரிக்க பங்கு சந்தையில், மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்தது.
இதனால் மெட்டா நிறுவன அதிபர் மார்க் ஜூக்கர்பர்க், ரூ.25 ஆயிரம் கோடி ($3 பில்லியன்) சந்தை மதிப்பை இழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.