என் மலர்
நீங்கள் தேடியது "மார்க் ஜுகர்பெர்க்"
- பேஸ்புக் கணக்கு 5 முறை முடக்கப்பட்டது.
- விளம்பர வருவாய் இழப்பு ஏற்பட்டது என முறையிட்டார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவைச் சேர்ந்தவர் மார்க் ஜுகர்பெர்க். இவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், வழக்கறிஞர் மார்க் மெட்டா நிறுவன சி.இ.ஓ.வான மார்க் ஜுகர்பெர்க் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், ஒரே பெயரைக் கொண்டுள்ளதால் தனது பேஸ்புக் கணக்கு 5 முறை முடக்கப்பட்டது என்றும், கணக்கு முடக்கப்பட்டதால் தனக்கு விளம்பர வருவாய் இழப்பு ஏற்பட்டதால் இழப்பீடு தரவேண்டும் என முறையிட்டுள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளில் மெட்டா நிறுவனம் தனது வணிகக் கணக்கை 5 முறையும், தனிப்பட்ட கணக்கை 4 முறையும் முடக்கியது.
எனக்கூறும் அவர், போலி பெயர் ஆள்மாறாட்டம் குற்றச்சாட்டுகளின் கீழ் தனது பக்கங்களை மூடியதற்காக தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா அலட்சியமாக செயல்பட்டுள்ளது என குற்றம் சாட்டுகிறார்.
ஒவ்வொரு முறையும் பேஸ்புக் கணக்கை திரும்பப் பெற பல மாதங்கள் ஆனது. கடைசியாக தனது கணக்கைத் திரும்பப் பெற 6 மாதங்கள் ஆனது. பேஸ்புக்கில் இல்லாததால் விளம்பரம் மற்றும் வாடிக்கையாளர் தொடர்பு செலவுகளில் ஆயிரக்கணக்கான டாலர்களை இழந்துள்ளேன்.
வழக்கறிஞர் மார்க் தனது போராட்டங்களை விவரிக்கும் வகையில் ஒரு வலைதளத்தையும் உருவாக்கியுள்ளார். ஒரே பெயரை கொண்டதால் ஏற்பட்ட இந்தக் குழப்பம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
- மார்க் ஜுகர்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளார்.
- எலான் மஸ்க்கை தோற்கடித்து இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
வாஷிங்டன்:
உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளார். எலான் மஸ்க்கை தோற்கடித்து இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி மார்க் ஜுகர்பெர்க் 187 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் பணக்காரர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார். எலான் மஸ்க் 181 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் 4-வது இடம் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் பெர்னார்டு அர்னால்டும், 2வது இடத்தில் ஜெப் பசோசும் உள்ளனர்.
டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் மார்ச் மாதம் வரை உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். தற்போது அவர் 4-வது இடத்திற்கு சரிந்துள்ளார். அவரது நிகர மதிப்பு $48.4 பில்லியனாகக் குறைந்துள்ளது. ஜுகர்பெர்க்கின் நிகர மதிப்பு $58.9 பில்லியன் அதிகரித்துள்ளது.
ஜுகர்பெர்க் நவம்பர் 2020க்குப் பிறகு முதன்முறையாக எலான் மஸ்க்கை முந்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளார்.
- டிரம்ப் மெட்டா நிறுவனத்தின் மார்க் ஜுகர்பெர்க்கை சந்தித்து பேசினார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளார். அதிபராக தேர்வு ஆகியிருக்கும் டிரம்ப் தற்போது, தனது அமைச்சரவையில் இடம்பெறுவர்களை அறிவித்து வருகிறார். அதேபோல, அமெரிக்க தொழில் அதிபர்களைச் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், டொனால்ட் டிரம்ப் மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக, ஜனாதிபதியின் ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் கூறுகையில், மார்க் ஜுக்கர்பெர்க் டிரம்பின் பொருளாதார திட்டங்களை ஆதரிக்க விரும்புகிறார். எனவே தனது உறவை புதுப்பிக்கும் வகையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது என தெரிவித்தார்.
ஏற்கனவே, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் டிரம்பை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.






