என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meta"

    • இந்தாண்டு தொடக்கத்தில் AI பிரிவில் புதிதாக 50 பேரை பணிக்கு அமர்த்தியது.
    • ஏற்கனவே வருடக் கணக்கில் வேலை செய்து வந்தவர்களை பணிநீக்கம் செய்தனர்.

    இன்றைய காலக்கட்டத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பதால் நன்மை ஏற்பட்டாலும், பெரும்பாலும் தீங்காகவே அமைகிறது. அந்த வகையில், AI தொழில் நுட்பம் வந்த பிறகு பல துறைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை நிறுவனங்கள் பணிநீக்கம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

    அந்த வகையில், மெட்டா நிறுவனம் தற்போது சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

    நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கையாக மெட்டாவில் பணிபுரியும் சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அந்நிறுவனத்தின் AI பிரிவு தலைமை அதிகாரி அலெக்சாண்டர் வாங் தெரிவித்துள்ளார்.

    மெட்டா நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் AI உள்கட்டமைப்பு அலகுகள், அடிப்படை செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி பிரிவு (FAIR) மற்றும் பிற தயாரிப்பு தொடர்பான பதவிகளில் உள்ள ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள்.

    இந்தாண்டு தொடக்கத்தில் AI பிரிவில் புதிதாக 50 பேரை பணிக்கு அமர்த்தி, ஏற்கனவே வருடக் கணக்கில் வேலை செய்து வந்தவர்களை பணிநீக்கம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இன்ஸ்டாகிராமில் Limited Content என்ற வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
    • பெற்றோரின் அனுமதியின்றி இன்ஸ்டாகிராமில் இதற்கான வசதிகளை மாற்ற முடியாது

    இன்றைய டிஜிட்டல் உலகில், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களே இளைஞர்களின் உலகை ஆட்சி செய்கிறது.

    உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த சமூக ஊடகங்களில் தங்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளையும், சம்பவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

    கடந்த சில ஆண்டுகளில், சமூக ஊடக தளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம், உலகளவிலும் இந்திய அளவிலும் மிகப்பெரிய சமூக ஊடகமாகவும், வணிகத் தளமாகவும் உருவாகி வருகிறது.

    18 வயதிற்குட்பட்ட சிறார்கள் இன்ஸ்டாகிராமை அதிகளவில் பயன்படுத்தி வரும் வேளையில் அதில் அபாயகரமான மோசமான உள்ளடக்கங்களை அவர்கள் பார்ப்பதாக விமர்சங்கள் எழுந்தன.

    இந்நிலையில், திரைப்படங்களுக்கு PG-13 ரேட்டிங் இருப்பது போல், இன்ஸ்டாகிராமிலும் புதிய நடைமுறையை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது

    இதன்மூலம் அபாயகரமான மற்றும் பெரியவர்களுக்கு மட்டுமே பொருந்தும் உள்ளடக்கங்களை இனி 18 வயதுக்குக் குறைவானவர்களால் பார்க்க முடியாது. அதன்படி பாலியல் உள்ளடக்கிய காட்சிகள், போதைப் பொருள், அபாயகரமான சண்டை காட்சிகள் அல்லாத வீடியோக்களை காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    பெற்றோரின் அனுமதியின்றி இன்ஸ்டாகிராமில் இதற்கான வசதிகளை மாற்ற முடியாது

    இந்த கட்டுப்பாடுகளை விரும்பும் பெற்றோருக்கு, இன்ஸ்டாகிராமில் Limited Content என்ற வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. சிறார்கள் தங்களை 18 வயதுக்கு மேற்பட்டோர் எனக் கூறினாலும் அதனை கண்டறிய அதற்கான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று மெட்டா தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளில் விரைவில் இந்த நடைமுறை அறிமுகமாகிறது

    • விளம்பரங்கள் இல்லாத சந்தாவின் விலை இணையத்தில், ஆப்களில் தனித்தனி ஆகும்.
    • Account Center இல் இணைக்கப்பட்ட அனைத்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளிலும் விளம்பரங்கள் தோன்றாது.

    பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டிலும் விளம்பரங்களை தவிர்க்க சந்தா முறையை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

    முதலில் இங்கிலாந்தில் அடுத்த சில வாரங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மெட்டா அறிவித்துள்ளது.

    சமீபத்திய இங்கிலாந்து ஒழுங்குமுறை வழிகாட்டுதலுக்கு இணைங்க இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது.

    விளம்பரங்கள் இல்லாத சந்தாவின் விலை இணையத்தில் மாதம் £2.99 மற்றும் iOS மற்றும் Android ஆப்களில் பயன்படுத்துவோருக்கு மாதம் £3.99 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மேலும் Account Center இல் சேர்க்கப்படும் ஒவ்வொரு கூடுதல் கணக்கிற்கும் இணையத்தில் £2 , iOS/Android-இல் £3 கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

    இதன் மூலம் Account Center இல் இணைக்கப்பட்ட அனைத்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளிலும் விளம்பரங்கள் தோன்றாது. இந்த நடைமுறை வருங்காலங்களில் மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

    • பேஸ்புக் கணக்கு 5 முறை முடக்கப்பட்டது.
    • விளம்பர வருவாய் இழப்பு ஏற்பட்டது என முறையிட்டார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவைச் சேர்ந்தவர் மார்க் ஜுகர்பெர்க். இவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில், வழக்கறிஞர் மார்க் மெட்டா நிறுவன சி.இ.ஓ.வான மார்க் ஜுகர்பெர்க் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அதில், ஒரே பெயரைக் கொண்டுள்ளதால் தனது பேஸ்புக் கணக்கு 5 முறை முடக்கப்பட்டது என்றும், கணக்கு முடக்கப்பட்டதால் தனக்கு விளம்பர வருவாய் இழப்பு ஏற்பட்டதால் இழப்பீடு தரவேண்டும் என முறையிட்டுள்ளார்.

    கடந்த 8 ஆண்டுகளில் மெட்டா நிறுவனம் தனது வணிகக் கணக்கை 5 முறையும், தனிப்பட்ட கணக்கை 4 முறையும் முடக்கியது.

    எனக்கூறும் அவர், போலி பெயர் ஆள்மாறாட்டம் குற்றச்சாட்டுகளின் கீழ் தனது பக்கங்களை மூடியதற்காக தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா அலட்சியமாக செயல்பட்டுள்ளது என குற்றம் சாட்டுகிறார்.

    ஒவ்வொரு முறையும் பேஸ்புக் கணக்கை திரும்பப் பெற பல மாதங்கள் ஆனது. கடைசியாக தனது கணக்கைத் திரும்பப் பெற 6 மாதங்கள் ஆனது. பேஸ்புக்கில் இல்லாததால் விளம்பரம் மற்றும் வாடிக்கையாளர் தொடர்பு செலவுகளில் ஆயிரக்கணக்கான டாலர்களை இழந்துள்ளேன்.

    வழக்கறிஞர் மார்க் தனது போராட்டங்களை விவரிக்கும் வகையில் ஒரு வலைதளத்தையும் உருவாக்கியுள்ளார். ஒரே பெயரை கொண்டதால் ஏற்பட்ட இந்தக் குழப்பம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    • கோல்ட்மேன் சாக்ஸ், சோடியாக் ஏரோஸ்பேஸ் மற்றும் டெஸ்லா போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
    • சாட்ஜிபிடியில் `ஏஐ மூளை’ என்ற செல்லமான பட்டப்பெயருடன் அழைக்கப்பட்டார்.

    மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனத்திடமிருந்து வந்த 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 8,757 கோடி) சம்பள வேலை வாய்ப்பை நிராகரித்து கவனம் பெற்றுள்ளார் ஓபன்ஏஐ முன்னாள் ஊழியர் மீரா முராதி (36 வயது)

    அல்பேனியாவை சேர்ந்த மீரா முராதி (Mira Murati) மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்றவர்.

    ஓபன்ஏஐ நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு, அவர் கோல்ட்மேன் சாக்ஸ், சோடியாக் ஏரோஸ்பேஸ் மற்றும் டெஸ்லா போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

    2018 ஆம் ஆண்டு ஓபன்ஏஐ நிறுவனத்தில் சேர்ந்த அவர், குறுகிய காலத்தில் அதன் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக உயர்ந்தார்.

    சாட்ஜிபிடி, டால்-இ மற்றும் கோடெக்ஸ் போன்ற உலகை மாற்றியமைத்த திட்டங்களை வழிநடத்தியதில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு.

    சாம் ஆல்ட்மேன் ஓபன்ஏஐ நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டபோது, மீரா முராதி மூன்று நாட்களுக்கு இடைக்கால தலைமை செயல் அதிகாரியாகவும் பணியாற்றினார்.

    சாட்ஜிபிடியில் `ஏஐ மூளை' என்ற செல்லமான பட்டப்பெயருடன் அழைக்கப்பட்டு வந்த மீரா, சமூகப் பொறுப்புடன் ஏஐ செயலிகளை உருவாக்க வேண்டும் வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    கடந்த ஆண்டு ஓபன்ஏஐ நிறுவனத்திலிருந்து விலகிய மீரா முராதி, தனது "திங்கிங் மெஷின்ஸ் லேப்" Thinking Machines Lab) நிறுவனத்தை தொடங்கினார்.  

    • பல பிரபலங்களுக்கு ED நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தியது.
    • இது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கிறது என்று ED குற்றம் சாட்டியுள்ளது.

    அமலாக்க இயக்குநரகம் (ED) இன்று தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள் மற்றும் மெட்டாவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ஆன்லைன் சூதாட்ட செயலிகள் குறித்து விசாரித்து வரும் ED இதுதொடர்பாக இந்நிறுவங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் செயலிகளை விளம்பரப்படுத்திய பல பிரபலங்களுக்கு ED நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தியது.

    பணமோசடி மற்றும் ஹவாலா போன்ற கடுமையான நிதி குற்றங்கள் கண்டறியப்பட்டுள்ள சூழ்நிலையில் கூகிள் மற்றும் மெட்டா இரண்டும் சூதாட்ட செயலிகளை ஊக்குவிப்பதாக ED குற்றம் சாட்டியுள்ளது.

    இந்த இரண்டு நிறுவனங்களும் தங்கள் வலைத்தளங்களில் சூதாட்ட செயலிகள் தொடர்பான விளம்பரங்களைக் ப்ரோமோட் செய்து வருகின்றன. இது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கிறது என்று ED குற்றம் சாட்டியுள்ளது.

    • AI கண்ணாடி வாட்டர் ப்ரூப் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
    • இந்த கண்ணாடியின் ஆரம்ப விலை ரூ.34,000ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    Oakley என்ற கண்ணாடி விற்பனை நிறுவனத்துடன் இணைந்து Al கண்ணாடியை மெட்டா விற்பனைக்கு களமிறக்க உள்ளது.

    இந்த Al கண்ணாடியில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் வகையிலான கேமரா, மைக், ஸ்பீக்கர் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

    வாட்டர் ப்ரூப் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடியின் ஆரம்ப விலை ரூ.34,000ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    விளையாட்டு வீரர்களுக்காகக் உருவாக்கப்பட்டுள்ள இந்த Al கண்ணாடியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 8 மணிநேரம் வரை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவில் மட்டும் 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.
    • வாட்ஸ் அப் சேனல் என்ற அம்சம் தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

    உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை இயக்கி வருகிறது.

    இந்தியாவில் மட்டும் சுமார் 35 கோடி பேர் பேஸ் புக்கையும், 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.

    வாட்ஸ் அப் வந்த ஆரம்ப காலத்தைவிட தற்போது பல்வேறு அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.

    இந்நிலையில், இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விளம்பரங்கள் வருவதை போல் வாட்ஸ் அப் செயலியிலும் பயனாளர்கள் ஸ்டேட்டஸ் பார்க்கும் போது விளம்பரங்களை வெளியிட மெட்டா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    • இந்தியாவில் மட்டும் 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.
    • வாட்ஸ் அப் சேனல் என்ற அம்சம் தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

    உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை இயக்கி வருகிறது.

    இந்தியாவில் மட்டும் சுமார் 35 கோடி பேர் பேஸ் புக்கையும், 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.

    வாட்ஸ் அப் வந்த ஆரம்ப காலத்தைவிட தற்போது பல்வேறு அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.

    வாட்ஸ் அப் சேனல் என்ற அம்சம் தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வாட்ஸ் அப் சேனலில் விரைவில் Subscription-னை கொண்டு வர மெட்டா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் உங்களுக்கு பிடித்த சேனலில் வரும் பிரத்யேக தகவல்களை பணம் செலுத்தினால் மட்டுமே பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவில் மட்டும் 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.
    • வாட்ஸ்அப் வீடியோ காலில் மேலும் 6 புதிய Effect-கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை இயக்கி வருகிறது.

    இந்தியாவில் மட்டும் சுமார் 35 கோடி பேர் பேஸ் புக்கையும், 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.

    வாட்ஸ் அப் வந்த ஆரம்ப காலத்தைவிட தற்போது பல்வேறு அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.

    இந்நிலையில், வாட்ஸ் அப்பில் வீடியோக்களை நேரடியாக அனிமேஷன் ஸ்டிக்கராக மாற்றிப் பகிரும் அப்டேட்டை மெட்டா வழங்கியுள்ளது.

    மேலும், வாட்ஸ்அப் வீடியோ காலில் மேலும் 6 புதிய Effect-கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில்,

    வாட்ஸ்அப் சேனலில் POLL ஆப்ஷனுக்கும் இனி புகைப்படத்தை பதிவிடும் அப்டேட்டையும் மெட்டா வழங்கியுள்ளது.

    • பயனர்களின் நடமாட்டம், ஆன்லைன் தேடல்கள் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை பல ஆண்டுகளாக கசியவிட்டது.
    • பேஸ்புக்கை நடத்தும் மெட்டா நிறுவனமும் 1.4 பில்லியன் டாலர் அபராதம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

    பயனர்கள் தரவுகளை கசியவிட்டதற்காக கூகிள் நிறுவனம் 1.4 பில்லியன் டாலர்களை (ரூ.11,950 கோடி) அபராதமாக செலுத்த அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    2022 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் இதுதொடர்பாக கூகிளுக்கு எதிராக ஏராளமான வழக்குகளை தொடர்ந்தது. கடந்த சில வாரமாக அவற்றின் விசாரணை தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் கூகுளுக்கு அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    கூகுள் தனது தயாரிப்புகள் மூலம் பயனர்களின் நடமாட்டம், ஆன்லைன் தேடல்கள் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை பல ஆண்டுகளாக கசியவிட்டதற்கு எதிரான போராட்டம் வெற்றி பெற்றதாக டெக்சாஸ் மாகாண அட்டர்னி ஜெனரல் கென் பாக்ஸ்டன் தெரிவித்தார்.

    பழைய தயாரிப்புகள் தொடர்பான சில புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளதாகக் கூகுள் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஜோஸ் காஸ்டனெடா தெரிவித்தார். மேலும் வருங்காலங்களில் தனியுரிமையைப் பாதுகாக்கும் அமைப்பு பலப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். முன்னதாக பயோமெட்ரிக் தரவு கசிவைத் தொடர்ந்து பேஸ்புக்கை நடத்தும் மெட்டா நிறுவனமும் 1.4 பில்லியன் டாலர் அபராதம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.  

    • ஓப்பன் இயர் ஸ்பீக்கர்களும் (Open Ear Speakers) பொருத்தப்பட்டுள்ளது.
    • அமெரிக்க விலை, இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.25,600 ஆக உள்ளது.

    மெட்டா நிறுவனம் தனது சமீபத்திய ஸ்மார்ட் கண்ணாடிகளான ரே-பான் மெட்டாவை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்று அறிவித்துள்ளது.

    உலகளாவிய கண்ணாடி பிராண்டான EssilorLuxottica உடன் இணைந்து தயாரிக்கப்பட்ட இந்த கண்ணாடிகள், மெட்டா AI தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகின்றன.  

    இந்த கண்ணாடிகள், "ஹே மெட்டா" என்று சொல்வதன் மூலம் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ (Hands Free) ஆக பயனர்கள் கேள்விகளைக் கேட்கவும், நேரடியாக மொழிபெயர்க்கவும், இசையைக் கட்டுப்படுத்தவும், செய்திகளை அனுப்பவும் கூட அனுமதிக்கின்றன.

    இதில் 1080பி வீடியோக்களை (1080p Videos) படமாக்கக்கூடிய 12 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளன.  ஓப்பன் இயர் ஸ்பீக்கர்களும் (Open Ear Speakers) பொருத்தப்பட்டுள்ளது.

    இதன்மூலம் புகைப்படங்களைப் எடுக்கவும், வீடியோக்களைப் பதிவு செய்யவும், வாட்ஸ்அப், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பயன்பாடுகளைப் பயன்படுத்தி லைவ் ஸ்ட்ரீமிங் மற்றும் அழைப்புகளைச் செய்யவும் முடியும்.

    இதன் அமெரிக்க விலை, இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.25,600 ஆக உள்ளது. எனவே இதன் இந்திய விலை ரூ.35,000 முதல் 40,000 க்குள் தொடங்கலாம். 

    ×